புதுக்கவிதை முயற்சி – 1

வலையுலக நண்பர்களின் சீரியஸ் கவிதைகளைப் படிக்கும்போது இளம் மீசையை முறுக்கிப் பார்க்கும் பதின்ம வயசுப் பையனைப் போல எனக்கும் முறுக்கும் ஆசை வருவதுண்டு. சரி எழுதித்தான் பார்ப்போமே என இரு கவிதைகள் எழுதினேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.

புரியலைண்ணா சூப்பர் புதுக் கவிதண்ணு அர்த்தம். புரிஞ்சிடுச்சுண்ணா இன்னும் நிறைய வாசிக்கணும், பழகணும்னு அர்த்தம். :)

சுவர்கள்
ஒழுக்கத்தின்
அஸ்திவாரங்களில்
முளைத்த
சுவர்களாய்
என் மேல் சிகிரெட் நாற்றம்
அவர் மேல் சாராய வாடை.
பேசிக்கொண்டிருந்தோம்
சுவர்களைத் தாண்டாமலே.

========================

காலம்-1
எங்கெங்கோ மரணித்தவர்களுக்கு
வாய்க்கப்படாத காலத்துளியொன்று
கரைந்த இழப்பை
நினைந்துருகுமுன்
அடுத்தடுத்தொன்றென்று
முளைகள் விதையைக் கிழிக்கும்
துல்லிய கணங்களாய்
நிரம்பும் கடல்

============= 
மேலேயுள்ளது
நண்பர்
ஒருவர் திருத்திய
வடிவம்
கீழேயுள்ளது நான் எழுதியது. (இது கவிதை வடிவில் எழுதப்பட்ட அறிவிப்பு :) )
=============

காலம்-2
முளைகள்
விதையைக் கிழிக்கும்
துல்லிய கணமொன்றைப்போல,
இந்நொடியில் உலகில்
எங்கெங்கோ மரணித்தவர்களுக்கு
வாய்க்கப்படாத
காலத்தின் சிறு துளியொன்று
கடலில் விழுந்து கரைந்தது.
அதன் இழப்பை நினைந்துருகுமுன்
இன்னொன்று,
அடுத்தொன்று
வேறொன்றாய்
கடல் நிரம்பிக்கொண்டிருந்தது.

Popularity: 11% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....11 மறுமொழிகள் to “புதுக்கவிதை முயற்சி – 1”

 1. Cheena ( சீனா) சொல்கிறார்:

  ஒழுக்கத்தின் அடிப்படையில் எழும்பிய சுவர்களைத் தாண்டாமலேயெ ஒரு கட்டுப்பாட்டுக்குள் பேசுவது தான் சிறப்பு. கவிதை புரிகிறது – அருமை. புரிந்ததும் எழுதியவர் நினைத்ததும் ஒன்று தானா ? யாருக்குத் தெரியும்

 2. Cheena ( சீனா) சொல்கிறார்:

  காலம் இரண்டின் கருத்து மாறாமல் சுருக்கிய காலம் ஒன்று அருமையான கவிதை. வாய்ப்புகள் கிட்டாமல் இறந்தவர்களின் இயலாமையை என்ணி வருந்தும் முன் அடுத்தடுத்து நிகழும் வாய்ப்புகளின் இறப்புகள்.

 3. வடுவூர் குமார் சொல்கிறார்:

  சுவர்கள் – நன்றாக இருக்கு.

 4. நன்றி சீனா. உங்கள் வீளக்கம் என்னுடைய எண்ணத்துக்கு ஒப்பவில்லை :(

  நன்றி வடுவூர்குமார்.

 5. SP.VR.Subbiah சொல்கிறார்:

  ////ஒழுக்கத்தின்
  அஸ்திவாரங்களில்
  முளைத்த
  சுவர்களாய்////

  ”ஒழுக்கத்தின்
  அஸ்திவாரத்தில்
  சிதைந்த
  சுவர்களாய்”

  என்று இருந்தால் இன்னும் சிறப்புறும்!

 6. thamizachi சொல்கிறார்:

  test

 7. தமிழச்சி என்ன டெஸ்ட்டுங்க கடினமான கேள்வியெல்லாம் கேட்டுராதீங்க :)

 8. thamizachi சொல்கிறார்:

  அறச்சீற்றம் குறித்த அறச்சீற்றம் என்ற பதிவுக்கு 2 பக்க அளவில் பின்னூட்டம் எழுதி போட்டால் ஏற்றுக் கொள்ளவில்லை? என்னாச்சு. எனக்குத் தடாவா?

 9. இல்லியே..
  கமெண்ட் பாக்சில் பிரச்சனை என நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்யுங்கள் பதிவிலேயே போட்டிரலாம். இல்லை உங்கள் பதிவில் போட்டாலும் சரி. ஒரு Plugin போட்டிருக்கிறேன் அது பெரிய கமெண்ட்களை எடுத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

 10. thamizachi சொல்கிறார்:

  /// சிறில் அலெக்ஸ் …

  தமிழச்சி என்ன டெஸ்ட்டுங்க கடினமான கேள்வியெல்லாம் கேட்டுராதீங்க ///

  அதெல்லாம் இல்லைங்க! கமெண்ட் பாக்ஸ் இங்க வேலை செய்யுதான்னு பார்த்தேன்.

  /// வலையுலக நண்பர்களின் சீரியஸ் கவிதைகளைப் படிக்கும்போது இளம் மீசையை முறுக்கிப் பார்க்கும் பதின்ம வயசுப் பையனைப் போல எனக்கும் முறுக்கும் ஆசை வருவதுண்டு. சரி எழுதித்தான் பார்ப்போமே என இரு கவிதைகள் எழுதினேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.///

  அட எனக்கும் உங்களைப் போல் தான். கவிதை என்றால் இயல்பு மீறிய தன்மைக்குட்பட்டது என்ற எண்ணம் எனக்குண்டு. அதிலும் காதல் கவிதைகளை பார்த்தாலே எரிச்சலாக இருக்கும். நாட்டுல அவனவனுக்கும் 1008 பிரச்சனைகள் இருக்கு. இதுல காதல் மண்ணாங்கட்டின்னு புலம்பல் கவிதைகளான்னு தோனும்.

  ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

  http://thamizachikirukkalkal.blogspot.com/

  உங்களுடைய கிறுக்கல்களும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்…

 11. அருமையாக உள்ளது

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்