சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்

சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் சமூகம் பல்வேறு அவலங்களை சந்தித்துள்ளது. லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் ஆப்பீசர்கள், ஆயுதம் தாங்கிய கைக்கூலிகள், மக்களை ஏமாற்றும் மதபோதகர்கள், சாமியார்களுக்கு அடுத்தபடியாக சமூகத்தை சீரழிப்பது சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்தான் என அண்மையில் அடிதடிக்குப்பின் மூடப்பட்ட சில கருத்துக் கணிப்புக்கள் சொல்லியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் தொடர்ந்து பாதிப்பில் உள்ளாகிவரும் சிலர் பதிவுலகிலும் பல உபயோகமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இனி வரப்போகும் நாட்களில் எத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கலாம் என யோசித்ததில்..

சாஃப்ட்வேர் எஞ்சினியர்களால்…

…எங்க ஊர் தெப்பக்குளம் மோசமாகிவிட்டது
எங்க ஊரில் அழகிய தெப்பக்குளம் ஒன்று இருந்துவந்தது. அதில் வழக்கம்போல அவ்வப்போது குளித்து வந்தோம் (நாங்கள் அவ்வப்போதுதான் குளிப்போம் – நகைச்சுவையில் தெரியும் மேட்டிமைத்தனம் இது – இதுவும் நகைச்சுவயாத்தான் சொல்றேன்-விளக்கம் போதுமடா தொடர்ந்து எழுது). எங்கள் ஊரில் படித்தவர்களெல்லாம் சாஃட்வேர் இஞ்சினியர்களாகிவிட்டதால் குளிப்பதற்கு யாருமில்லை. ஊருக்கு திரும்பி வரும் சா.இக்கள் வாட் நான்சென்ஸ் இதுலே குளிக்கிறதா? வெயர் ஈஸ் த ஸ்விம்மிங் பூல் எனச் சொல்லிவிடுவதால் தெப்பக்குளத்தில் யாரும் இப்போது குளிப்பதில்லை. எனவே அது மோசமாகிவிட்டது.

…கிளி ஜோசியம் வியாபாரம் சரிவு
மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாதையிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மூன்றாம் நம்பர் அறையில் பிரதி வியாழன் காலை 6மணி முதல் மாலை பார் மூடும் வரையில் ஜோஸ்யம் பார்க்கும் பெயர் வெளியிட விரும்பாத ஜோசியர் (கணிக்காமல்) சொன்னது,”முன்னாலெல்லாம் பசங்க படிச்சு முடிச்சதும் எங்ககிட்ட வந்து மலேரியா இன்ஸ்பெக்டர் ஆகலாமா, அல்லது சினிமா நடிக்கப் போலாமா, அல்லது போஸ்ட் மேன் ஆகலாமாண்ணு ஜோஸ்யம் பாப்பாங்க. இப்ப அதெல்லாம் இல்ல. இப்ப எல்லாவனும் இண்டர்நெட்லேயே ஜோஸ்யம் பாத்துக்கிறான்.”

…சைட் அடிப்பது குறைந்தது:பெண்கள் வருத்தம்
பல பெண்களின் தற்போதைய கவலை இதுவாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் இளைஞர்கள் ‘டே மச்சான் சைட் பாத்தியா?’ என எங்களை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் ப்ளாக், மற்றும் இண்டர்நெட் சைட்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சைட் அடிப்பது சங்ககால வழக்கம். ஆனால் வெப்சைட் படிப்பது சங்கர் கால பழக்கம்தான் என கடிந்து கொண்டார்கள்.

…கழுதைகளுக்கு முதுகு வலி அதிகரிப்பு
சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் பேச்சிலர்களாகத் தங்குவதால் அவர்களின் துணிகளை அடிக்கடி வெளுக்கப் போட்டு காசை விரையம் செய்கிறார்கள். இதனால் க்ழுதைகளின் பொதி அதிகமாகிவிட்டதாக சில கழுதைகள் சோகமாகச் சொல்லியுள்ளன. இது குறித்து சா.இ ஒருவரைக் கேட்டதற்கு ‘எந்தக் கழுத அப்படி சொன்னது?’. என்றார்.

…சாஃப்ட்வேர் துறை சீரழிகிறது.
சாஃப்ட்வேர் இஞ்ஜினியர்களால் அந்தத் துறையே சீரழியும் நிலையில் உள்ளது. இது குறித்த பெரும் கவலை இதுவரை சாஃப்ட்வேர் இஞ்சினியர்களை நம்பி காலம் தள்ளியவர்களுக்கு வந்துள்ளது. இது குறித்து Systems Hardwares Informatics Technology Solutions கம்பெனி மேனேஜர் ஒருவரைக் கேட்டபோது சாஃப்ட்வேர் துறையை சாஃப்ட்வேர் இஞ்சினியர் அல்லாது வேறு யாராலும் சீரழிக்க முடியாதே என வழக்கமான சா.இக்கே உரிய கேணத்தனமான பதிலைத் தந்தார்.

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்”

 1. chinnappaiyan சொல்கிறார்:

  ஹாஹா. இது நல்லாயிருக்கே…. :-)

 2. நல்ல நகைச்சுவை.

 3. Vino சொல்கிறார்:

  //இது குறித்து Systems Hardwares Informatics Technology Solutions கம்பெனி மேனேஜர் ஒருவரைக் கேட்டபோது சாஃப்ட்வேர் துறையை சாஃப்ட்வேர் இஞ்சினியர் அல்லாது வேறு யாராலும் சீரழிக்க முடியாதே என வழக்கமான சா.இக்கே உரிய கேணத்தனமான பதிலைத் தந்தார்.//
  Unga damager melai romba kovamaa?

 4. இப்படி உக்காந்து யோசிச்சு யோசிச்சு மூளை பெருசாகிப்போகும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்களால்
  உலகத்துலே தலைக்கனம் கூடிப்போய்விடுதுன்னு மூளையில்லாதோர் சங்கம் அறிக்கை விட்டதைப் பார்க்கலையா? :-))))))

 5. Veerasundar சொல்கிறார்:

  ஹா.ஹா.ஹா. எதோ சீரியஸான மேட்டருன்னு நெனச்சு உள்ள வந்தேன். நல்லா சிரிக்க வச்சிட்டீங்க. :-)

 6. ஹாஹா.. ரொம்ப நல்லா இருக்கு.. நானும் கூட ஏதோ மகா சீரியசான விஷயம் போலன்னு நினைச்சேன்.. வந்த இடத்துல இப்படியா.. :-)

 7. சாஃப்ட்வேர் இஞ்சினியர்களை நிறைய வருத்துட்டாங்க… புதுசா ஒருதரு கொளம்பிட்டாருனு வந்தா…
  நல்லாஆஆஆ போதை ஏத்துராங்க்கப்பா…

 8. velarasi சொல்கிறார்:

  நிறைய ஊர்ல இந்த மாதிரி தெப்பக்குளம் சும்மா கிடக்குது.

 9. இந்த தீவிரமான பிரச்சினைகளை நகைச்சுவை நையாண்டி என வகைப்படுத்தி இருக்கும் உங்கள் நகைச்சுவைக்குள் பதுங்கும் மென்பொருள்தனம் பல்லிளிக்கிறது.

  மேலும் மென்பொருள் தொழிலாளர்களால் இட்லித் தொழிலாளர்கள் படும் கஷ்டம் (எல்லாரும் ப்ரெட்டே சாப்பிடுவதால்) எல்லாம் உங்களுக்குத் தெரியாததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. உங்களிடம் எதிர்பார்த்ததுதான்.

 10. சிறில் ஸார்..

  நிஜமாகவே, உண்மையாகவே, சத்தியமாகவே இந்த ‘வெள்ளையுடை வேந்தர்களால்’ அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

  அவர்களால் எனக்கு ஏற்பட்ட சோகத்தை எழுதவதற்கு குறைந்தபட்சம் 20 பக்கங்களாவது ஆகும்..

  மெதுவாக எழுதிப் போடலாம் என்று இருந்தேன்.

  இந்தப் பதிவைப் படித்தவுடன் இந்த வார ஞாயிற்றுக்கிழமை இதுதான் வேலை என்று முடிவு செய்துவிட்டேன்..

  வருகிறேன்.. காத்திருங்கள்..

 11. நல்லதொரு பகடி.

  ///சிறில் ஸார்..

  ///நிஜமாகவே, உண்மையாகவே, சத்தியமாகவே இந்த ‘வெள்ளையுடை வேந்தர்களால்’ அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.///

  உண்மைதமிழன்,

  ஸாஃப்ட்வேர் / ஹார்ட்வேர் வளர்ந்தால்தான் இன்டெர்னெட், எலெக்ட்ரானிக் டைப்பிங் மற்றும் பல உபயோகமான விசியங்கள் உருவாகி, மிகவும் மலிவாகவும் ஆகின. உங்கள் அலுவலக வேலைகளும் 1980களாஇ விட இன்று மிக மிக எளிது ; துரிதமாகவும் செய்ய முடியும். அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. (ஜாலியான பதிவுல சீரியாஸா பேச வச்சுட்டீங்களே…:))) )

 12. murali சொல்கிறார்:

  ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.. :) நடக்கட்டும் நடக்கட்டும்..

 13. பின்னூட்டங்களுக்கு நன்றி.

 14. சங்கத்து சிங்கங்கள்தான் சொல்லணும் இதப்பத்தி :)

 15. //நிறைய ஊர்ல இந்த மாதிரி தெப்பக்குளம் சும்மா கிடக்குது.//

  சூப்பர் பின்னூட்டம் பரிசை தட்டிச் செல்கிறீர்கள் :) வாழ்த்துக்கள்

 16. பெனாத்தலாரே ஒரு ஸ்மைலியப் போட்டுத் தொலைங்கையா. இதுமாதிரி எதிர்வினைகளப் பாத்தா வயித்தக் கலக்குது.

  :)

 17. உண்மைத்தமிழன் சார்,
  நீங்க எத எழுதினாலும் 20 பக்கத்துக்கு குறையாம வேணுமே :)
  யாரெல்லாமோ எழுதிட்டாங்க நீங்க எழுதக் கூடாதா. எழுதுங்க. :)

 18. Ramya Ramani சொல்கிறார்:

  Ada Rama ippadi ellam kooda s/w engg mela pazhi podalama? engeyavadhu poi room pottu yosichingalo..adade..good read ;)

 19. கண்மணி சொல்கிறார்:

  :))))))))

  ம்ம் நீங்களும் இப்படி சூடான இடுகைக்கு மேட்டர்
  தேத்த ஆரம்பிச்சிடீங்க போலும்..
  விலைவாசி ஏறிப்போனதும் பீஸா நாறிப்போனதும் இவங்களால தான்னு கூட தலைப்பு வரலாம்.

 20. Anonymous சொல்கிறார்:

  nalla erukuu

 21. Shobi சொல்கிறார்:

  Super. :)

 22. gprabhu9477 சொல்கிறார்:

  வாய்விட்டு சிரிக்க முடிகிறது…(அலெக்ஸ்ங்க்ற பெயரில் முட்டத்திலிருந்து(சிவந்த மண்)எங்களுக்கு பிரியமான ஆசிரியர் ஒருவர் உண்டு.)

 23. பிரபு
  அவர் என் தந்தைதான்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்