E=MC^2 அல்லது Oh! My God!

அறிவியல் கடவுளின் இருப்பை நிரூபிக்கிறது எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தோடு நம் நட்சத்திரம் கண்ணபிரான் ஒரு சீரியல் பதிவப் போட்டு சில சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது நகைச்சுவைப் பதிவாகவும் உள்ளவர்களுக்கு அது ஆன்மீகப் பதிவாகவும் தோன்றி, அவ்வாறே வகைப்படுத்தப்பட வாய்ப்புக்கள் உண்டு. (ச்சும்மா அப்பப்ப நக்கல எடுத்து விடுவேன் கண்டுக்காதீங்க. ப்ளாக்ல எதிர்வினைகளெல்லாம் நக்கலோடத்தான் இருக்கணுமாம்.)

இந்த இடத்துல ஒரு டிஸ்கி :அதாவது கீழே சொல்லப்படுபவை அனைத்தும் நம்ம சொந்தக் கருத்துங்க(Unless expressly stated). மண்டபத்துல யாரோ சொன்னதுங்க அப்பப்போ வரும். ஏன் சொல்றேண்ணா நான் சொல்வதுதான் தீர்க்கமான முடிவுண்ணு நீங்க நெனைக்கக் கூடாது அதுபோல நான் எழுதும்போது அங்கங்கே ‘என நினைக்கிறேன்’, ‘என கருதுகிறேன்’ அப்படீன்னு போடுறத தவிர்க்கலாம் பாருங்க.

முதலில், அறிவியலும் ஆன்மீகமும் ஒரே அடிப்படையில்தான் இயங்குகின்றன என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம். அந்த அடிப்படை என்ன? மனிதன் இந்த உலகை, சூழலை, வாழ்வைப் புரிந்துகொள்ள முயல்கிறான். பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலேண்ணு வாத்தியார் சொல்லியிருக்கார்ல. மனுசன் எழுந்து நின்னான் பாருங்க அதுக்கப்புறமா ஒலகத்த முழுசா பார்க்க ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் அவன் மூளை வளர வளர, கேள்விகளும் வளர ஆரம்பிடுச்சு. கேள்விகள், கேள்விகள், கேள்விகள். மூன்று வயது துவங்கி ஆறு வயது வரைக்கும் குழந்தைகள் எரிச்சலூட்டுறமாதிரி கேட்குமே அதுபோலவே கேள்விகள்.

‘அம்மா எதிர்வீட்டு நாயும் நம்மவீட்டு நாயும் அங்க நின்னு ஏன் சண்ட போடுது?’
‘அது சண்ட போடலடா!’
‘அப்புறம்.’
‘வெளையாடுது!’
‘ஆனா அதப் பாத்தா..?’
‘டி.வில ராமாயணம் போட்டிருக்கான் போய் பாருடா.’

அந்தச் சிறுவனின் நிலமையிலேயே நம் ஆரம்ப காலங்கள் இருந்திருக்கும். [இதற்கு அடிப்படையில் மனிதன் விலங்கிலிருந்து வந்தான் என்பதை நம்பவில்லையென்றாலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான துவக்கமே மனித இனத்தின் துவக்கமாயிருந்திருக்கும் என்பதை நம்பவேண்டும். இல்ல மனித இனம் தோன்றும்போதே பேச மொழியும், மவுண்ட்ரோடு ஃப்ளை ஓவரும், டாய்லெட் பேப்பரும் இருந்ததென்று நீங்க நம்புனீங்கண்ணா. தொடர்ந்து படிக்க வேண்டாம் என்றே சொல்வேன்.]

அப்படி தலையைக் குடைந்தெடுக்கும் கேள்விகளுக்கு அவன் ஏதேனும் விடைகளைத் தெரிந்தே ஆகவேண்டும். ஏண்ணா மனிதனின் புலன்கள் தாங்கள் புரிந்து கொள்ளாத சூழலில் ஒழுங்காக வேலை செய்வதில்லை. முற்றிலும் புரிந்துகொள்ள இயலாத, புலப்படாத சூழல்களில் அவனால் எதுவும் ஒழுங்கா செய்ய முடியாது. அதனால ஏதேனும் ஒரு விளக்கத்தை அவன் மனம் தேடுது, the mind needs a reference to understand things. அப்படி விளக்கமில்லைண்ணா நம் புலன்கள் சரியா செயல்படாது. நம் புலன்கள் மூளையால் செயல்படுகின்றன.

இப்படி தொடர்ந்து எழும் கேள்விகள்ளுக்கான விடைகளத் தெரிய மனிதன் நாடுவது இரண்டு விதயங்கள். ஒன்று அறிவியல் இன்னொன்று கற்பனை. நமக்கு சூழல் குறித்த ஒரு புரிதல் வேண்டும் அது தவறானதாயிருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாய் மாயத் தோற்றங்கள்(illuusions). எடுத்த எடுப்பிலேயே நமக்கு ஒரு பிம்பத்தை மூளை தந்துவிடுகிறது. இதுதான்பா இந்த படத்துக்கான அடிப்படை புரிதல். நாமளும் சரிண்ணு பக்கத்த திருப்பி விடையப் பார்த்தா அத வேறு மாதிரி பாக்கச் சொல்றான். அப்படித் திரும்ப நீங்க அந்த ஆப்டிக்கல் இல்லூஷன் படத்தை சரியான முறையில் பார்த்தபின்னர் உங்க மூளைக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு. திரும்ப நீங்க அந்தப் படத்த பார்க்கும்போது உங்க மூளை சரியான பிம்பத்த தருது.

ஒரு புரியாத கேள்விக்கு விடையாக கற்பனையான ஒன்றின் மீது நம்பிக்கை வைத்தாலும் மனிதனுக்குப் போதுமானது. அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒரு விடை. ஓரளவுக்கேனும் நம்பும்படியான விடை. ஒரு லாஜிக்கல் விடை. அந்த லாஜிக் அவரவர் அறிவுத் திறனுக்கேற்ப இருந்தால் போதுமானது. (இதனாலேயே படித்த, சிந்திக்கிற ஆன்மீகவாதிக்கும் படிக்காத ஆன்மீகவாதிக்கும்/பக்தனுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன).

நாம சின்ன வயசிலேர்ந்து பல விஷயங்களுக்கு இந்த லாஜிக்கல் கற்பனை விடைகள் வச்சிருக்க வாய்ப்பிருக்கு. வளர்ந்த பிறகு அவற்றிற்கு நாம் வேறு சரியான விடைகளை, அல்லது புதிய, வயதுக்கேற்ற லாஜிக்கல் கற்பனை விஷயங்களை விடைகளாக்குகிறோம். பிறப்பிலிருந்து ஒரு குழந்தையின் வளர்ச்சியை அப்படியே மனித இனத்தின் வளர்ச்சிக்கு ஒப்பிடலாம்.

இயற்கை குறித்த பயமே, (அது அறிவின்மையில், கேள்விகளுக்கு விடையின்மையில் வந்த பயம் என இப்போ நமக்குத் தெரியுது) கடவுளை கற்பனை செய்வதற்கான முகாந்திரம். மழை குறித்த பயத்திற்கு அறிவியல் குடிசை அல்லது கூடாரம் அமைக்கச் சொல்லித் தந்தது. இன்னும் மழை குறித்த பயம் போகவில்லை. அது மாபெரும் சக்தியாக மனிதனை அலைக்கழித்தது. அதை ஒண்ணுமே செய்ய முடியாதுப்பா அது கடவுள் என ஒரு விடை கிடைத்தபோது. Oh Yeah! அது லாஜிக்கா இருக்குதேண்ணு ஒத்துக்கிடத் தோணுது. அடுத்து நீர் நெருப்பு, வானம், நடத்திரம், பிறப்பு இறப்பு என எல்லாத்துக்கும் இதுபோல லாஜிக்கா ஒரு விடை.

பைபிளில் பழைய ஏற்பாட்டின்படி மேல ஒரு டேங்ல தண்ணி நிறைஞ்சிருக்குது அதுதான் மழையா பெய்யுதுண்ணு சொல்லியிருக்குது. அதுதான் அப்போதைக்கான லாஜிக்கல் கற்பனை விடை.

கடவுள் எனும் விடையில் உள்ள ஒரு மாபெரும் சூட்சுமம், அல்லது தந்திரம் (Positively saying) என்னண்ணா? அது அசைக்க முடியாத ஒரு லாஜிக். அதற்கு எதிரான ஆர்க்யூமெண்டே வைக்க முடியாது. அப்படி எல்லா சக்திகளையும், எல்லா அறிவையும், கொண்டுள்ளதாயிருக்கும் ஒரு கான்செப்ட். The ultimate concept. பார்த்தா ரெம்ப சிம்பிளாயிருக்கும். (ஏண்ணா மதங்கள் அத சிம்பிளாக்கிடுச்சுங்க) ஆனா உண்மையில் கடவுள் என்பதை define பண்ண முடியாது. கடவுள் எனும் கருத்தாக்கத்திற்குள்ளால் எல்லாவற்றையும் அடக்கிவிடலாம். அத்தனை சூப்பரான ஒரு கண்டுபிடிப்பு அது. It is the ultimate answer. இல்லைண்ணா இத்தனை காலம் நிலைத்து நின்றிருக்க முடியாது (இதுவும் மதங்களின் தந்திரமும்).

மனிதனின் எந்தக் கேள்விக்கெல்லாம் அறிவியலில் விடையில்லையோ அந்தக் கேள்விக்கெல்லாம் விடை ‘கடவுள்’. இதுதான் கடவுள் குறித்த ஒரு லாஜிக்கல் definitionஆக இருக்கும். அல்லது எந்தக் கேள்விக்கெல்லாம் அறிவியலின் விடை இல்லையோ, அல்லது விடை இருப்பது எனக்குத் தெரியலியோ, புரியலியோ, நான் நம்பலியோ அந்தக் கேள்விக்கெல்லாம் விடை கடவுள்.

மனிதனுக்கு விடைகள் தெரியாத கேள்விகள் இருக்கும்வரைக்கும் கடவுள் எனும் கற்பனை நிவாரணி தேவைப்படுகிறது. இதனால்தான் எவ்வளவோ படித்த அறிஞனும், கண்டுபிடிப்புக்களை செய்தவர்களாலும்கூட கடவுளை நிராகரிக்க இயலவில்லை. ஏனெனில் எல்லா கேள்விகளுக்கும் மனிதனிடம் விடை இல்லை. இன்னொன்று ஒரு 100 வருட வாழ்வில் ஒரு மனிதனால் எல்லா கேள்விகளுக்குமான விடைகளையும் பெற இயலவில்லை (அது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும்)

அப்ப நாத்திகம் என்பது என்ன? நாத்திகம் என்பது ‘கடவுள் = கற்பனை’ என்கிற நிலை.

அப்ப இவங்களுக்கு எல்லா கேள்விக்கும் விடை தெரியுமா? இல்ல. ஆனா எல்லா கேள்விக்கும் ஏதேனும் ஒரு அறிவியல் விளக்கம் இருக்குது எனும் நம்பிக்கை இருக்குது. ஏதோ ஒண்ணு. அறிவுபூர்வமா இருக்குது. அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் இல்ல படாமலிருக்கலாம், இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம் இல்லாமல் போகலாம். ஆனா ஒரு அறிவுபூர்வமான விளக்கம் நிச்சயம் இருக்குது என்பதுதான் நாத்திகம் the so called பகுத்தறிவு.

இப்ப ‘மாயாஜாலம்’ எங்கிற சன் டி.வி மாஜிக் ஷோ பாக்குறீங்க. சாதாரண மக்களுக்கு அது ஒரு அபூர்வ அனுபவம். ஆனா இன்னொரு மஜீஷியனுக்கு அது ஒண்ணுமே இல்லை. அந்த மஜீஷியனவிட சிறந்த இன்னொருவருக்கு இது குப்ப. எனக்கு? என்னால மாஜிக்க விளக்க முடியலைண்ணாலும் ஏதேனும் ஒரு லாஜிக்கல் விளக்கம் அதுல இருக்குது என்பதே போதுமானது. அது skillful deception. சாதுர்யமான மாயச்செய்கை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்குது. அறிவியலால் லாஜிக்கல் விளக்கம் அளிக்க முடியும் என நம்புகிறவன் பகுத்தறிவாளன்.

பொதுவாகவே நாத்திகர்களுக்கு கடவுள் குறித்த எந்த பிரச்சனையும் இல்லை. மதங்கள் குறித்த பிரச்சனைதான் உண்டு. கடவுள் எனும் பெரும் கான்சப்ட் ஒரு விடை, ஒரு நம்பிக்கை, ஒரு கைத்தடி, ஒரு லாஜிக்கல் விளக்கம், அது வேண்டியவங்க வச்சிக்கலாம். ஆனால் மதங்கள் இந்த கான்செப்டையும் மத்த பல கான்செப்ட்களையும் மிகவும் எளிமைப்படுத்திவிட்டன. அதோடு நிக்காம அப்படி எளிமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களும், கற்பனை விடைகளும்தான் உண்மை எனச் சொல்லிவிட்டன. அதக் கேள்வி கேட்பதே தெய்வ நிந்தனை என்றும் பாவமென்றும் கட்டுப்போடுகின்றன.

உலகை கடவுள்தான் உருவாக்கினார். என்பது மிகவும் எளிமைப்படுத்தல். ஜீ.பூம்பா, அல்லது ஒளி உண்டாகட்டும் எனத் துவங்கி ஏழாம் நாள் ஓய்வெடுக்கிற வரைக்கும் ஏதோ ஒரு கதை. உலகம் எப்படி உருவாச்சு எனும் கேள்விக்கு ஒரு over-simplified answer. கடவுள் சுடக்கு போட்டார், நாட்டியமாடினார், களிமன்ணை பிசைந்தார் எனப் பல கதைகள். இந்த விடை யாருக்கு போதுமானது என்றால் ஒரு over-simplified மனிதருக்குப் போதுமானது. போதுமானது மட்டுமல்ல தேவையானதும் கூட. அவர்கிட்ட போயி big bang, evolution, gravity, e=mc^2 சொல்லிக்கொண்டிருப்பது ஒரு குழந்தையிடம் ப்ளாக் எழுதச் சொல்வது போல (என்னது? Bad exampleஆ)

விவேகானந்தர் ஆன்மீகத்தை ஒரு குழந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிடுகிறார். அதாவது ஒரு குழந்தை வளர்வதைப்போல. சடங்குகளில், தொழுகையில் துவங்குகிற ஆன்மீகம், சடங்குகளைத் துறந்த, தாண்டிய ஒரு தேடலாக வளர்ந்து அடல்டாக(Adult) வேண்டும் என்பது அவர் கருத்து.

இதையே நான் என்ன சொல்றேண்ணா, சடங்கிலேயும் மதத்திலேயும் துவங்கி அறிவு பூர்வமா தேடலை மேற்கொண்டா கடவுளை விலக்கிவிடலாம்.

முன்பு சொன்னதப்போல விடை தெரியாத கேள்விகளுக்கான விடை கடவுள் என்றால். எத்தனை கேள்விகளுக்கு நமக்கு அறிவியல்பூர்வமாய் விடை தெரியுதோ அத்தனை கேள்விகளை கடவுள் எனும் பெரும் கான்சப்ட்டிலிருந்து கழித்து விடலாம். Big bangல் நம்பிக்கை வந்தால் கடவுள் உலகைப் படைத்தார் எனும் விடையை தூக்கிரலாம், தன்னிம்பிக்கையில் நம்பிக்கை வைத்தால் விதியை தூக்கிரலாம், சகோதரத்துவத்தில் நம்பிக்கை வைத்தால் பாவம்+தண்டனை போன்றவற்றை தூக்கிடலாம்.

இந்த நீக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உதாரணம். ஆதாம் ஏவாளை கடவுள் படைத்தார் அது வழியா நாம வந்தோம் என்பதை நம்பிய கத்தோலிக்கம், இப்ப பரிணாம வளர்ச்சி உண்மை ஆனால் அந்த வளர்ச்சியை கடவுள்தான் நிகழ்த்தினார். அதாவது ஒரு செல் உயிர் உருவாகி வளர்ந்து ஆதாம் ஏவாள் எனும் மனித வடிவில் வருவதற்கு கடவுளே காரணி என நம்பிக்கை வளர்ந்துள்ளது. ஜீபூம்பா சொல்லி கடவுள் உலகை உருவாக்கினார் எனும் விடை மாயாஜாலக் காயின் போல மறைந்தே விட்டது. இருந்தும் திருச்சபை பரிணாமக் கொள்கையை எல்லோருக்கும் போதிக்காது ஏனென்றால் அந்த விடையை எல்லாராலேயும் புரிந்துகொள்ள முடிவதில்லை. அப்படி ஒரு விடை சிலரை புதிய குழப்பத்துக்கு ஆளாக்கிவிடலாம்.

நம்ம ஊர்ல முன்னாலெல்லாம் நீளக்கால்சட்ட – Pant – போட்டுட்டுப் போனா பாத்து சிரிப்பாங்க. இப்ப ரசிக்கிறாங்க. Pant போடுவது குறித்த அறிவு வளர்ந்திருக்கு அதனால Pant போடுவது சகஜமாயிருக்கு. யாருக்கெல்லாம் Evolution புரிகிறதோ, ஜீரணமாகுதோ அவங்களுக்கெல்லாம் இந்த புதிய இறையியலை சொல்லித்தரலாம்.

அறிவியலே ஒண்ணுக்கொண்டு முரணான கோட்பாடுகளைக் கொண்டிருக்குதே? எல்லாத்தையும் நிரூபிக்க இயலாதே?

நிச்சயமா. ஆனால் அப்படி நிரூபிக்கப்படாததெல்லம் கடவுள் எனச் சொல்லுவதை மட்டும் நிரூபிக்க முடியுமா என்ன? அப்ப உங்களுக்குத் தேவை நிரூபணம் அல்ல. நம்பிக்கையற்றவனுக்கும் நிரூபணம் தேவையில்லை. ஆனால் எல்லாத்தையும் நிரூபிக்க முடியும் அல்லது எல்லாமே இயற்கையாகவே இருக்குது எனும் நம்பிக்கைதான் அவனுடைய விடை. நிரூபணம் இன்றைக்கு வரலாம், நாளைக்கு வரலாம், முந்தா நேத்து வந்திருந்து நமக்கு தெரியாமலிருக்கலாம். நாத்திகன் தேடுவது நிரூபணம் அல்ல. அப்படி அவன் தேடினால் அவனுக்கு ஏமாற்றமே கிடைக்கும். ஏனென்றால் நிரூபணம் மெதுவா லோக்கல் பஸ்லத்தான் வந்திட்டிருக்குது. நாம நூறு வருஷத்துல போயிடுவோம் அதுக்குள்ள எல்லாத்தையும் நிரூபித்துப் பார்ப்பது இயலாதது.

போதாததுக்கு மதம் மனிதன் அறிவியல் விடைகளைத் தெரிந்து கொள்வதை தடை செய்யுது. கத்தோலிக்க மதம் வேரூன்றிப் பரவி உலக நாகரீகங்களின் ஆதாரமாகத் திகழ்ந்த பகுதிகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தியபின் அறிவியல் கண்டுபிடிப்புக்களை வெளியிடுவதற்கு அதன் அனுமதி தேவைப்பட்டது. இதனால் பல அறிவியல் முயற்சிகளே இல்லாமல் போனது. கிரேக்கர்களும் ரோமர்களும் முன்வைத்த சில அரிய தத்துவங்களும், அறிவியல் கோட்பாடுகளும் தொடர் சிந்தனைகளுக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் போயின. ‘அதான் கடவுள் என்கிற விடை இருக்குதே அப்புறம் என்ன’ என இருந்தது. இது அகல பல நூற்றாண்டுகள் ஆனது. சிந்தனையாளர்கள் மீது மதம் செய்திருக்கும் ஆதிக்கம் இந்தியாவில் வேறு வடிவில் இருந்தது.

அரசனையெல்லாம் கோவில் கட்டுங்கள் எனச் சொல்லி ஊக்குவித்த நம் முன்னோர்கள் சிந்தனையாளர்களை தத்துவ ஞானிகளாகவே கண்டனர். தத்துவம் தத்துவம் தத்துவமாய் எழுதி வைத்தனர். எல்லாமே சூப்பர் தத்துவங்கள் எல்லாமே மதப் பின்னணியில் எழுதப்பட்டன. சில கலைகளும் அறிவியலும் (சமயம் சார்ந்தே) வளர்ந்தன. ஒரு சில இனத்தவரே சிந்திக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது மதம். இதனால் நாம் இழந்திருக்கும் சிந்தனைகளும் படைப்புக்களும் எத்தனை எனக் கணக்கெடுக்க முடியாது.

அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறது (கடவுள் பயப்படல). மதவாதிகள் பயப்படுறாங்க. எப்படியாவது வருந்தி அறிவியலை ஆன்மிகமாக்கிடணும் என முயல்வதும், அதை நிராகரிக்கவேண்டும் என அறிவியலின் வீக்னஸ்களை முன்னிறுத்துவதும் மதம் எனும் அமைப்பை கட்டிக்காக்க அதன் அதிகார வர்கத்தினர் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சிகள். அல்லது எங்கே வெறுமைக்குள் சென்றுவிடுவேனோ என பக்தன் நினைப்பதிலும், கண்ணக் குத்திடுமோ எனும் பயத்திலும் (மதம் ஊட்டியது) சவம் இப்படியே இருந்துட்டுப் போயிரலாம் என விடுவது

சாதாரண மனிதன் தேடலுடையவனாக இருத்தல் நலம். தேடல் இல்லாத மனிதன் ஒரு சின்னக் குட்டை (குளம்) போல. ஒரே இடத்தில் தேங்கி நின்று விடுகிறான். கிணற்றுத் தவளைக்கு ஒப்பிடலாம். கிணற்றில்தான் எனக்கு எல்லாம் இருக்குதே அப்புறம் ஏன் நான் வெளியுலகுக்குப் போகணும்? வெளியே உள்ளதை தெரிஞ்சுக்கணும்? அவனைப் பொறுத்தவரை நியாயமான வாதம். நூறு வருட வாழ்கைக்கு இந்த நம்பிக்கை போதுமானது.

தேடலுள்ளவன். தன் கேள்விகளுக்குத் தானே விடை தேடுபவன், ஓடும் நதியைப் போல. மலரை நுகர்ந்து, பாறைகளை உடைத்து மணலாய் கரைத்து, வெட்ட வெளிகளைக் கடந்து ஆகாயத்தை அண்ணாந்து நோக்கி, இன்னும் புதிதாய், புதிதாய், புதிதாய் வாழ்க்கையின் கணங்களைத் தேடலின் அனுபவமாக்கி அறிவுபூர்வமாகிறான். இதன் கடைசியில் அவன் கடவுளை ‘ஒன்றுமில்லை’ எனக் கண்டுகொள்ளும்போது… (அவனே கடவுளாகிறான்?)

Faith is a continuous search for the turth. எனச் சொல்வார் டி மெலோ. தேடல் இல்லாத வாழ்க்கையில் எதுவுமே இல்லை. இதாண்டா கடவுள் இதிலேயே நின்று பூஜை செய்துகொண்டிருப்பேன் என நினத்தால் வாழ்க்கையில் என்ன இருக்கிறது. சாதாரண மக்கள் யாருமே அப்படிப்பட்ட கடவுள் எனும் மாபெரும் உண்மையை பூமியில் கண்டடையவில்லை. அப்படி ஒரு எல்லாம் வல்ல உண்மையை கண்டு கொண்டவன், உணர்ந்தவன் மற்றவர் கண்களில் பைத்தியக்காரனாகவும், பித்தனாகவுமே தெரிவான், அல்லது மிகவும் அமைதியாகிவிடுவான். லௌகீக வாழ்க்கைக்கு அதற்குப் பின் அங்கு இடமில்லை. அப்படி சர்வ வல்லமை பொருந்திய ஒரு உண்மைய நினைத்திருக்காமல், அதனோடு பேசிக்கொண்டிருக்காமல், அதனைப் புகழ்ந்து கொண்டிருக்காமல் ஆஃபீசில் சாஃப்ட்வேர் செய்துகொண்டிருப்பவனை என்ன சொல்வது?

கட்டுரை இப்போதைக்கு நிறைவு பெறுகிறது. சிந்தனைகள் தொடர்கின்றன.

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....30 மறுமொழிகள் to “E=MC^2 அல்லது Oh! My God!”

 1. தேடல் தொடர்கிறது.

 2. Sridhar Narayanan சொல்கிறார்:

  மிக அருமையான பதிவு. நிறைய இடங்களில் ஒத்துபோகிறேன். நல்ல தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

  ‘கடவுள்’ என்பது simplified solution என்றால், ‘கடவுள் = கற்பனை’ என்பதும் simplified repurcussion தானே :-)

  இதில் இன்னும் நிறைய படிமங்கள் பார்க்கலாம்.

  //Faith is a search for the turth. எனச் சொல்வார் டி மெலோ. தேடல் இல்லாத வாழ்க்கையில் எதுவுமே இல்லை. இதாண்டா கடவுள் இதிலேயே நின்று பூஜை செய்துகொண்டிருப்பேன் என நினத்தால் வாழ்க்கையில் என்ன இருக்கிறது. சாதாரண மக்கள் யாருமே அப்படிப்பட்ட கடவுள் எனும் மாபெரும் உண்மையை பூமியில் கண்டடையவில்லை. அப்படி ஒரு எல்லாம் வல்ல உண்மையை கண்டு கொண்டவன், உணர்ந்தவன் மற்றவர் கண்களில் பைத்தியக்காரனாகவும், பித்தனாகவுமே தெரிவான், அல்லது மிகவும் அமைதியாகிவிடுவான். லௌகீக வாழ்க்கைக்கு அதற்குப் பின் அங்கு இடமில்லை. அப்படி சர்வ வல்லமை பொருந்திய ஒரு உண்மைய நினைத்திருக்காமல், அதனோடு பேசிக்கொண்டிருக்காமல், அதனைப் புகழ்ந்து கொண்டிருக்காமல் ஆஃபீசில் சாஃப்ட்வேர் செய்துகொண்டிருப்பவனை என்ன சொல்வது?
  //

  மிகச் சரி. இந்த மாதிரி நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை நாம் ஆண்டவனாகவோ, அவதாரமாகவோ, அடியாராகவோ போற்றி கொண்டுதான் இருக்கிறோம்.

 3. அறிவு சொல்கிறார்:

  நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.
  கடவுள் ஒரு பிரச்சினையே இல்லை.
  இருக்கிறது என்று சொன்னால் ‘அது’மகிழப்பொவதும் இல்லை.
  இல்லை என்று சொன்னாலும் ‘அது’சண்டைக்கு வரப் போவதும் இல்லை.
  பிரச்சினை எல்லாம் மதங்களால்தான்.

 4. மொதல்ல 400ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

  E=mc^2 :-)
  (அட, ஓம் அப்படிங்கறதை இனிமே இப்படி E=mc^2 ன்னு சொல்லலாம்-னு இருக்கேன்! :-)))

 5. Balaji சொல்கிறார்:

  ஸ்ரீதர் நாரயணனை வழிமொழிகிறேன்… குறிப்பாக இந்தப் பகுதி மிகவும் பிடித்திருந்தது & கவனித்து கருத்தில் ஏற்றிக் கொள்ளவேண்டியது

  அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறது (கடவுள் பயப்படல). மதவாதிகள் பயப்படுறாங்க. எப்படியாவது வருந்தி அறிவியலை ஆன்மிகமாக்கிடணும் என முயல்வதும், அதை நிராகரிக்கவேண்டும் என அறிவியலின் வீக்னஸ்களை முன்னிறுத்துவதும் மதம் எனும் அமைப்பை கட்டிக்காக்க அதன் அதிகார வர்கத்தினர் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சிகள்.

  அல்லது எங்கே வெறுமைக்குள் சென்றுவிடுவேனோ என பக்தன் நினைப்பதிலும், கண்ணக் குத்திடுமோ எனும் பயத்திலும் (மதம் ஊட்டியது) சவம் இப்படியே இருந்துட்டுப் போயிரலாம் என விடுவது

 6. //(என்னது? Bad exampleஆ)//

  of course it is! :-))

  //over-simplified மனிதருக்குப் போதுமானது. போதுமானது மட்டுமல்ல தேவையானதும் கூட. அவர்கிட்ட போயி big bang, evolution, gravity, e=mc^2 சொல்லிக்கொண்டிருப்பது ஒரு குழந்தையிடம் ப்ளாக் எழுதச் சொல்வது போல//

  ஆக ஒரு over-simplified மனிதருக்கு எதைச் சொல்ல வேண்டும் என்பதை நீங்க தான் தீர்மானிக்கறீங்க! அவருக்கு எது வேண்டும் என்று அவர் தீர்மானிக்கத் தேவையில்லை! அதான் அவரை over-simplified என்று சொல்லி விட்டீர்களே!

  அப்படியே அவர் over-simplified ஆக இருந்தாலும், இது போன்ற சில அறிவியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதை ரசிக்கத் தொடங்கி, அவர் தேடல் அங்கிருந்தும் தொடங்கலாம் அல்லவா? அதை வேண்டாம் என்று ஏன் நினைக்கிறீங்க?
  over-simplified மனிதர் கடைசி வரை over-simplified மனிதராகவே இருக்கட்டுமே என்ற அலட்சியமா? :-))

 7. அறிவியலை என் பதிவில் குறை சொல்லவில்லையே சிறில்!
  அறிவியலின் துணை கொண்டு தானே தன் கருத்துக்களை வலியுறுத்தி அப்துல்லாவும் பேசுகிறான்?

  ஒரு வேளை ஆன்மீகம் அறிவியலைத் துணைக்கழைத்து தன் கருத்துக்களை நிலைநாட்டக் கூடாது என்கிறீர்களா?

  எப்படி அறிவியல் தன் சாதக பாதகங்களை உணர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ, அதே வழியைத் தான் மெய்யியலும், மெய்யான ஆன்மீகமும் செய்கின்றன!
  I would say both are NOT contradictory but complementary!

 8. ஜீவா சொல்கிறார்:

  //Big bangல் நம்பிக்கை வந்தால் கடவுள் உலகைப் படைத்தார் எனும் விடையை தூக்கிரலாம், //
  இப்படியும் ஆகலாம் – Big Bang என்பது தவறு. இழைக்கொள்கை தான் சரி. இந்து மெய்யியல் சொல்லுவதுபோல் அண்ட பிரபஞ்சமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. நாம் பார்ப்பது ஒரு சில பரிமாணங்களைத்தான் என்பது புரிந்தால் – இன்னமும் புரியாத புதிர்கள் அவிழ்க்கப்படலாம்.

 9. ஜீவா சொல்கிறார்:

  //அப்ப நாத்திகம் என்பது என்ன? நாத்திகம் என்பது ‘கடவுள் = கற்பனை’ என்கிற நிலை.//
  சரி. ஆனால் நாத்திகமோ, so (mis)called பகுத்தறிவோ, அறிவியல் அல்ல.
  //அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறது//
  அது அந்தக்காலம். இந்தக் காலத்தில் அறிவியலை கரைத்துக் குடித்துவிட்டு, சமய மெய்யியலுக்கு அறிவியல் விளக்கங்கள் கொடுத்து, அறிவியல் எட்டாத தூரத்தையும் மெய்யியலால் எட்டும் காலம்.
  //இதாண்டா கடவுள் இதிலேயே நின்று பூஜை செய்துகொண்டிருப்பேன் என நினத்தால் வாழ்க்கையில் என்ன இருக்கிறது.//
  அதிலும் இன்பம் இருக்கிறது. சாதாரண இன்பமில்லை, பேரின்பம்.
  ஆனால் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டேன்.
  அவரவர் தேடலில் எது சரியெனத் தெரிகிறதோ, அதுவே அவரவர்க்கு சரி. சமயம் – பல பாதைகளைக் காட்டுகிறது. தேர்ந்தெடுப்பது அவரவர் தெளிவினைப் பொறுத்தது.

 10. //Faith is a continuous search for the turth. எனச் சொல்வார் டி மெலோ. தேடல் இல்லாத வாழ்க்கையில் எதுவுமே இல்லை. இதாண்டா கடவுள் இதிலேயே நின்று பூஜை செய்துகொண்டிருப்பேன் என நினத்தால் வாழ்க்கையில் என்ன இருக்கிறது//

  அருமையான வாசகம்!
  அதைத் தான் அடியேன் பதிவிலும் சொல்லியுள்ளேன்!
  //அதாச்சும்
  மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைப்பே அதே நம்பிக்கை தான்!
  ஆன்மீகத்தால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்!
  அந்த நம்பிக்கை தான் சார் மனிதர்களை அன்றாடம் உயிர்ப்புடன் நடத்திக் கொண்டிருக்கு!”//

  அப்புறம் சிறில்,
  நான் ஆன்மீகம்-ன்னு சொல்லும் போது எல்லாம் குறிப்பது not religion but spirituality!
  நான் மதத்தைக் குறிக்கவில்லை!

 11. அப்பறம் அறிவியல் கருத்துக்களை ஆன்மீகமும், ஆன்மீகப் பொருளார்த்தங்களை சில நேரங்களில் அறிவியலும்…இப்படிக் கொடுக்கல் வாங்கல்கள் செய்து கொள்வது நல்லது தான்!
  காட்டாக:
  Infinity is already expressed in math as “tending to”!
  tending to infinity ன்னு தான் சொல்வார்களே அன்றி, equal to infinity என்று சொல்லவே மாட்டார்கள்!
  இறை நிலையும் அதே போல் tending to என்பதை வைத்தே பல சமயங்களும் விளக்குகின்றன!

  சிறில் அண்ணாச்சி
  I am glad you took the தேடல் in my post to the next level!
  Really having great time! :-))

 12. Thamizhan சொல்கிறார்:

  ந்ம்புங்கள் நடக்கும்–ஆத்திகம்,மதம்
  நடக்கட்டும் நம்புகிறோம்–நாத்திகம்,அறிவியல்.

  கடவுள்–மதங்களின் மூலதனம்,மனிதனின் படைப்பு.
  ஆன்மிகம் மதமில்லை என்பது இன்னொரு படைப்பு.ஆத்மா தானே ஆன்மிகம்.

  உலகம் உருண்டையல்ல-தட்டை என்று தண்டனை கொடுத்தது மதம்.உலகத்தைப் பாயாய்ச் சுருட்டியது மதம்.சந்திரனைக் கடவுள் என்றது மதம்,அங்கே காலூன்றியது அறிவியல்.

  தன்னம்பிக்கை–நாத்திகம்.
  மூடநம்பிக்கை–மதம்.

 13. சிறில்,

  நன்றாக எழுதி இருக்கிங்க,
  கடவுள் இருப்பு குறித்து பேசுபவர்கள், மதம் தொட்டே, அதில் சொல்லி இருப்பதை வைத்து கடவுளுக்கு டெபனேசன் கொடுப்பது சரியான வாதம் அல்ல. கற்பனை அல்லது நம்பப்படுவதைப் பற்றி பேசும் போது உதாரணம் கொடுக்க முடியாது என்பது பலருக்கு தெரிவிதில்லை, பாலில் நெய் இருப்பது போன்றாம், பாலில் திரியும் சக்தியும் தான் இருக்கிறது. பாட்டுக்கு சுவை சேர்க்க பாலை சேர்த்த அப்பரை இழுத்துவந்து அவர்கள் வாதாத்தில் கூறுவது பொருந்திவரவில்லை.

 14. @பாபா

  ரொம்ப நல்லாவே கற்பனை பண்ணறீங்க! Kudos!
  //அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறது (கடவுள் பயப்படல)//

  கடவுள் பயப்படல!
  ஆன்மீகமும் பயப்படல!
  மதம் பயப்படுது-ன்னு நீங்களும் பயப்படலை தானே? :-))

  //மதவாதிகள் பயப்படுறாங்க. எப்படியாவது வருந்தி அறிவியலை ஆன்மிகமாக்கிடணும் என முயல்வதும்//

  மதவாதிகள் அறிவியலால் கிடைக்கும் வசதிகளையும் சுகங்களையும் ஏற்றுக் கொண்டு அறிவியலுக்கு ஆப்படிப்பாங்க!

  ஆனால் ஆன்மீகவாதிகள் அறிவியலின் lateral thinking முறையையே இதற்கும் பயன்படுத்தி, விஞ்ஞானம்-மெய்ஞானம் இரண்டுக்கும் இணைப்புப் பாலமாக இருப்பாங்க (காட்டு: அப்துல் கலாம், சுகி சிவம், ஜேகே, இன்னும் பலப்பலர்)

 15. @கோவி
  //பாலில் நெய் இருப்பது போன்றாம், பாலில் திரியும் சக்தியும் தான் இருக்கிறது//

  யப்பா! பாலில் “சக்தி” இருக்கு-ன்னு ஒத்துகிட்டீங்களே! சூப்பர் கோவி அண்ணா!

  //பாட்டுக்கு சுவை சேர்க்க பாலை சேர்த்த அப்பரை//

  சுவை சேர்க்க பாலை எதுக்கு இழுக்கனும்? பலாப்பழத்தை இழுத்திருக்கலாமே? :-)

  //இழுத்துவந்து அவர்கள் வாதாத்தில் கூறுவது பொருந்திவரவில்லை//

  ஏன் பொருந்தி வரவில்லை என்று கூறாமல், வெறுமனே சுவைக்குச் சொன்னது தான், பொருந்தி வரவில்லை என்று நீங்கள் கூறுவதும் சுத்தமாகப் பொருந்தி வரவில்லை!

 16. Anonymous சொல்கிறார்:

  E=mc^2 :-)
  (அட, ஓம் அப்படிங்கறதை இனிமே இப்படி E=mc^2 ன்னு சொல்லலாம்-னு இருக்கேன்! :-)))

  ohm= 6+8+4=18 =9
  e=mc^2 =5+(4+3)^2=54 =9

  :-)

 17. seenivasan சொல்கிறார்:

  கடவுள் நம்பிக்கையில் பல அறிவியல் உண்மைகளை
  கேள்விக்குள்ளாக்குவது வரவேற்கத்தக்கது.அதுவே மெய்யியல் என்ற பெயரில் அறிவியலை கேலிப்பொருளாக சித்தரிப்பது மதபோதகர்கள் வரலாற்றில் நிறைய உண்டு.வாதத்திற்காக எதுவும் பேசலாம் என்ற நிலை சரியானது அல்ல.அது ஒரு மோசடி கூட.இதை சரியாக உண்ர்ந்து நல்ல கருத்துகளை எழுதி உள்ளீர்கள்.

 18. மணியன் சொல்கிறார்:

  சிறில், எங்கேயோ போய்ட்டீங்க, பிடியுங்க வாழ்த்துகளை !!

 19. Raveendran Chinnasamy சொல்கிறார்:

  Simply Superb. Always you scored above all . Please write more often , as Thamizmanam lost glory for last 2 months bcoz of popular bloggers like you and Boston bala not writing frequently .

  Kudos again .

 20. மாஹிர் சொல்கிறார்:

  //இதனாலேயே படித்த, சிந்திக்கிற ஆன்மீகவாதிக்கும் படிக்காத ஆன்மீகவாதிக்கும்/பக்தனுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன//

  நானும் ஓரு கேள்விய கேட்டுக்கறேன்.

  ஏன் படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் சிந்திக்கும் வித்தியாசங்கள் மாறுபடுகின்றன?

 21. //அரசனையெல்லாம் கோவில் கட்டுங்கள் எனச் சொல்லி ஊக்குவித்த நம் முன்னோர்கள் சிந்தனையாளர்களை தத்துவ ஞானிகளாகவே கண்டனர். தத்துவம் தத்துவம் தத்துவமாய் எழுதி வைத்தனர். எல்லாமே சூப்பர் தத்துவங்கள் எல்லாமே மதப் பின்னணியில் எழுதப்பட்டன. சில கலைகளும் அறிவியலும் (சமயம் சார்ந்தே) வளர்ந்தன. ஒரு சில இனத்தவரே சிந்திக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது மதம். இதனால் நாம் இழந்திருக்கும் சிந்தனைகளும் படைப்புக்களும் எத்தனை எனக் கணக்கெடுக்க முடியாது.//

  திரா”விட” சிந்தனைக்குள் நீங்களும் விழுந்துவிட்டீர்களா என்ன? :-))

  கோவில் கட்ட ஊக்குவித்த முன்னோர்களின் நோக்கம் கட்டிடக்கலையை வளர்ப்பது மட்டுமல்ல.புத்த,சமண மதங்களின் வளர்ச்சியை அழிப்பதற்காகவும் தான்.

  மொத்தத்தில் சிறந்த பதிவு.தருமி அய்யாவின் சிஷ்யப்பிள்ளை எழுதியது போல் உள்ளது.

 22. சிறில்,

  உங்கள் கட்டுரைக்கு ஒத்து ஊத, ஜிங்க்சா போட மேலும் ஒன்று தனிப்பதிவாக எழுதி இருக்கிறேன்.

  :)

  http://govikannan.blogspot.com/2008/03/blog-post.html

 23. //அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறது//
  அது அந்தக்காலம். இந்தக் காலத்தில் அறிவியலை கரைத்துக் குடித்துவிட்டு, சமய மெய்யியலுக்கு அறிவியல் விளக்கங்கள் கொடுத்து, அறிவியல் எட்டாத தூரத்தையும் மெய்யியலால் எட்டும் காலம்//

  ஜீவா
  அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறதோ இல்லையோ…
  ஆன்மீகம் (மதம் அல்ல) அறிவியலைத் துணைக் கொள்வதைக் கண்டு, மதம் அல்லாத சிலர் ரொம்பவே பயப்படுகிறார்கள்! :-)))

  அதாச்சும் என்னன்னா, அறிவியலை இவர்கள் மட்டும் தான் துணைக் கொள்ள வேண்டும். அறிவியல் உத்திகளை ஆன்மிகம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! அதான் ஆன்மீகம் ரொம்ப பெருசாச்சே! அது கிட்டயே நிறைய இருக்குமே! எதுக்கு எங்க அறிவியல் கிட்ட இருந்து எடுத்துக்கணும் என்று “அறிவியல்” பூர்வமாகச் சிந்தனை செய்பவர்களும் உண்டு! :-))

  இங்கே கருத்தாக்கங்கள் உண்மையான அறிவியலுக்கும் உண்மையான ஆன்மீகத்துக்கும் எளிதாக நடக்கும்! ஏனென்றால் இரண்டும் ஒரே தளத்தில் இருப்பவை!

  பிரச்சனை உண்மையான அறிவியலுக்கும் உண்மையான ஆன்மீகத்துக்கும் இல்லை!

  போலியாக அறிவியலைக் கைகொள்பவர்களுக்கும், மதத்தில் மாட்டிக் கொண்டு போலியாக ஆன்மீகத்தைக் கைகொள்பவர்களுக்கும் தான்!

  சிறில் அண்ணாச்சியிடமும் இதையே இன்று காலையில் சொன்னேன்!
  someone not knowing science may have a seemingly fake spirituality – very true!
  the same way,
  someone not knowing spiritualty may have a seemingly fake scientific temparament
  :-)))

 24. dvas சொல்கிறார்:

  “நாத்திகம் என்பது ‘கடவுள் = கற்பனை’ என்கிற நிலை.அப்ப இவங்களுக்கு எல்லா கேள்விக்கும் விடை தெரியுமா? இல்ல. ஆனா எல்லா கேள்விக்கும் ஏதேனும் ஒரு அறிவியல் விளக்கம் இருக்குது எனும் நம்பிக்கை இருக்குது.”

  Aathikan aanalum sari naathikan aanalum sari nambikkai than aatharam.athu kadavul metho ariviyal metho. ethan methu nambikkai enbathu avar avargalai poruthu ullathu.
  I totally agree with the

  “எப்படி அறிவியல் தன் சாதக பாதகங்களை உணர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ, அதே வழியைத் தான் மெய்யியலும், மெய்யான ஆன்மீகமும் செய்கின்றன!
  I would say both are NOT contradictory but complementary!”

  In the sense spiriutality is complement of science.aanmigamum mathamum ondru alla(indraya kalkattathil). aanmigam brahma pathiyo,vishnu pathiyo,alla pathiyo peasala. aanmigam nambikkai pathi,thannambikkai pathi peasukirathu.It tells you how to live in harmony with yourself,with nature,with science.

  Science is not 100% true. In the sense,for example..when Einstein proposed his theory, a group of renowed scientist accept that most probabilty it might be true.yarume speed of light la travel panninathu kedaiyathu.antha speed la travel pannina size diminish agalam,mass increase agalam.nobody can say it will for sure.same with big bang and all theories.Science has lot of assumptions too.So nalaike someother person might come and disprove existing ones and propose new theories.So science is also all about faith.

  Athai than aanmiam aarambathil irunthe solkirathu.

  Matham enbathu oru simplified form of aanmigam,when it started.but in course of time it has lost its originality,fell in wrong hands and now it totally deviates from its origin.so unmaiyana thedal ullavargal nada vendiyathu matham alla,aanmigam,spirituality if they want to take this path.

 25. dharumi சொல்கிறார்:

  பின்னீட்டீங்க சிறில். ரொம்ம்ம்ம்ம்ம்பவே நல்லா இருக்கு. ரொம்ப ஆழமான சிந்தனைகள். நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். சில இடங்களில் என்னைப்பற்றி, என் கருத்துக்களைப் பற்றி எனக்கே தெரியாததை எனக்கே வெளிச்சம் போட்டு காண்பித்தது போன்று உணர்ந்தேன்.

  //அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறது (கடவுள் பயப்படல). மதவாதிகள் பயப்படுறாங்க. எப்படியாவது வருந்தி அறிவியலை ஆன்மிகமாக்கிடணும் என முயல்வதும், அதை நிராகரிக்கவேண்டும் என அறிவியலின் வீக்னஸ்களை முன்னிறுத்துவதும் மதம் எனும் அமைப்பை கட்டிக்காக்க அதன் அதிகார வர்கத்தினர் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சிகள்.//

  இது ரொம்ப பிடிச்ச விவாதப் புள்ளி.

  ஆனாலும் சில குறைகள்: ( ஒருவேளை ஒரே ஒரு தடவை வாசித்து விட்டு இதை எழுதுவதால்கூட இருக்கலாம். சேமித்து வைத்து இன்னும் சில தடவைகள் பகுதி பகுதியாக வாசிக்க நினைத்துள்ளேன்)

  கோர்வையாக இல்லையோ என்று நினைத்தேன் – ஒரு வாசிப்பில். (ஒரு வாசிப்பிலேயே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது என் மொடாக்குத்தனத்தாலும் இருக்கலாம்னு இப்போ மனசில தோணுது)

  அடுத்து,
  //Faith is a continuous search for the truth. எனச் சொல்வார் டி மெலோ. //

  இது எனக்குச் சரியாகப் படவில்லையே! Faith-க்கு அடுத்து ஒரு முற்றுப் புள்ளிதானே வரும்; அரைப்புள்ளி (கமா) வராதல்லவா? இல்லையா? Faith இருப்பவர்களிடமா “தேடல்” இருக்கிறது. இல்லையே. “எல்லாம் அவன் (அவள் அல்ல!!)” என்பதோடு முடிவதல்லவா Faith.

  பாசிட்டிவான விஷயங்கள் நிறைய சொல்லலாம். மறுபடி ‘படித்துவிட்டு’ வருகிறேன்.

  மிக நல்ல பதிவுக்கு மிக்க நன்றி

 26. dharumi சொல்கிறார்:

  Oh! God படம் பார்த்திருக்கீங்களா?

  பாத்திட்டு, வரும்போது ஒரு நகல் எடுத்துக் கொண்டாங்க… :)

 27. dharumi சொல்கிறார்:

  இன்னொன்று:

  //கடைசியில் அவன் கடவுளை ‘ஒன்றுமில்லை’ எனக் கண்டுகொள்ளும்போது… (அவனே கடவுளாகிறான்?)//

  அவனே கடவுளாகிறான் — இது எப்படி? ஏன்? தனக்கு, தானே எல்லாமுமாக்கிக் கொள்கிறான் என்பதாலா?

 28. […] E=MC^2 அல்லது Oh! My God! […]

 29. pligg.com சொல்கிறார்:

  E=MC^2 அல்லது Oh! My God!…

  அறிவியல் கடவுளின் இருப்பை நிரூபிக்கிறது எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தோடு நம் நட்சத்திரம…

 30. arunmullai சொல்கிறார்:

  அறியாமை,ஆசை,அச்சம்,வியப்பு ஆகியவையே மதவாத
  மாளிகையின் தூண்கள்.சமூகக் குற்றவாளிக்கு, எதிரே நிற்கும்
  கல்கூட கண்ணால் கண்ட சாட்சிபோல் தோற்றமளிக்கும்.
  உழைக்க மறுக்கும் ஒரு கூட்டமே புரோகிதர்,பூசாரி,என்பதாக
  தாங்கள் கடவுளின் தொண்டர்களாக கூறிக்கொண்டு பிழைப்பு
  நடத்திக்கொண்டு சிந்தனையாளர்களையும் நிந்தித்து
  பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்