E=MC^2 – சில பதில்கள்

//‘கடவுள்’ என்பது simplified solution என்றால், ‘கடவுள் = கற்பனை’ என்பதும் simplified repurcussion தானே.// Sridhar Narayanan

நிச்சயமாய் simplifiedதான். கற்பனை எனும் சொல்லுக்குள் நான் சுருக்கியிருக்கும் கருத்தாக்கங்கள் பல, கடவுள் எனும் சொல்லுக்குள் இருக்கும் கருத்தாக்கங்களைப் போலவே.

கடவுள் கருத்தாக்கம்(concept) உலகின் உண்மைகளை எளிதாக்கிச் சொல்கிறது. it simplyfies the truths that otherwise might have been understood differently, matter-of-factly. இது தேவையற்றது என நான் சொல்லவேயில்லை. தேவையானது. ஆனால் கற்பனையில் விளைந்தது. சிந்தனையில் உதித்தது. திடமான ஒன்றை முன்வைத்த, சோதனை மூலம் தெளிவுபடுத்தக் கூடிய அறிவியல் அல்ல இது.

ஒரு சோதனையில் நோயாளிகளுக்கு நோய்க்கான மருந்தைக் கொடுப்பதாகச் சொல்லி வேறு விட்டமின் மாத்திரைகளைத் தந்தார்களாம். அவர்களுக்கும் குணமாயிடுச்சாம். கடவுள் என்பது இந்த விட்டமிந்தான். நோய்க்கான மருந்து கிடைக்கலைண்ணா இந்த விட்டமின் மருந்தக் குடுத்துப் பாக்கலாம். ஆனால் அது உண்மையான மருந்து அல்ல. அது மருந்து. அது குணமாக்குகிறது. ‘இயேசுவின் பெயரால் குணமாக்குகிறேன்’ என போதகர் ஊக்கமளிக்கும்போதும், ‘இனி எல்லாம் நல்லா நடக்கும்’ என ஜோஸ்யர் சொல்லும்போதும் ஒரு ஊக்கம் கிடைத்து குணமும் கிடைக்கிறதே. அது நிச்சயமா ஒரு phenomenon.

யோசித்துப் பார்த்தால் அதில் அறிவியல் பின்னணியும் இருக்குது. ஆனால் Pure science என அதை சொல்ல முடியாது. அது சில வேளைகளில் வேல செய்யும் சில வேளைகளில் செய்யாது. It cannot be experimented and proven to work every time.

//இந்தக் காலத்தில் அறிவியலை கரைத்துக் குடித்துவிட்டு, சமய மெய்யியலுக்கு அறிவியல் விளக்கங்கள் கொடுத்து, அறிவியல் எட்டாத தூரத்தையும் மெய்யியலால் எட்டும் காலம்.// – ஜீவா

இதையும் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். மதவாதிகள் வருந்திச் சென்று அறிவியலை ஆன்மீகமாக்கவும் ஆன்மீகத்தை அறிவியலாக்கவும் பார்க்கிறார்கள்.

மதம் என்பது அறிவு சம்பந்தப்பட்டதாய் ஆகத் தேவையில்லை. மதம், அறிவியல் எட்டாத தூரங்களையும் எட்டிவிட்டதை மறுக்க முடியாது. ஏண்ணா அது எல்லாத்தையும் உள்ளடக்கியதாக நம்புகிறது. கடவுள் ஆரம்பம் துவக்கம் முடிவு என எல்லைகளே இல்லாத கான்சப்ட். மெய்யியல் என்பது தூய அறிவியல் இல்லை. அது வெறும் சிந்தனைத் தொகுப்புத்தான். இன்னொருவிதமான கற்பனை (சிந்தனையில் மட்டுமே உணர முடிவதால்).

மெய்யியல் சிந்தனையால் பாட்டி வடை சுட்ட கதையை இலக்கியமாக்கிடலாம்(நம்ம ஆசிஃப், ஜெகத் செஞ்சிருக்காங்க), ஆன்மீகமாகவும் பார்க்கலாம். ‘ஒளி உண்டாகட்டும்’ என்பதை big bang எனலாம். நடராஜரை பிரபஞ்ச நடனத்தோடு ஒப்பிடலாம். அவதாரங்களை பரிணாமக் கொள்கையாக்கலாம். மேலும் மேலும் கற்பனைகள், லாஜிக்கல் சிந்தனைகள்.

லாஜிக் சரியாத்தான் இருக்குது ஆனால் பிரபஞ்சம் பற்றிய முழு உண்மையும் அரிவியலுக்குத் தெரியவில்லை எனும்போது நடராஜரின் நடனத்தை தற்போதுள்ள அறிவியலுடந்தான் ஒப்பிட முடியும். சில காலம் தாண்டி பிரபஞ்சம் என நாம் அறிவது ஒரு உருண்டைக்குள் இயங்கிக்கொண்டிருக்குது என அறிவியல் சொல்லுமானால் அப்பவும் நடராஜரைப் பொருத்திப் பார்க்க முயலும் மதம்.

நடராஜர் பிரபஞ்சத்தின் வடிவம் என்பதை பிரபஞ்சத்தின் வடிவத்தை வைத்துதான் சொல்ல முடியுமே தவிர நடராஜரின் வடிவை வைத்து சொல்ல முடிவதில்லை. இனிமேல் பிரபஞ்சத்தைப் படிக்க நடராஜரைப் படியுங்கள் எனவோ, உலகின் ஆரம்பத்தை ஜெனசிஸ் முதல் அதிகாரத்தை ஆராய்ந்தால் தெரிந்துவிடும் என்றோ சொல்லிவிட முடியாது.

நம் முன்னோர்களின் சிந்தனையெல்லாம் ஹம்பக் எனச் சொல்லிவிடவில்லை. நிச்சயமாய் அதன் உள் புகுந்து பல உணர்வுகளைப் பெறலாம். அவர்கள் தந்துள்ளது சூப்பர் விட்டமின்கள். அதுதான் மருந்தென நினைத்தால் குணம் நிச்சயம். ஆனால் இவை உண்மையில்லை, நோய்க்கான நேரடி மருந்துகளில்லை.

அறிவியல், மதம் இரண்டில் மதம்தான் முதலில் வலர்ச்சி பெற்றது. மதம் பல அடிப்படை சிந்தனைகளைக் கொண்டதாயிருக்கிறது. All basics are covered. அறிவியல்பூர்வமாக அல்ல. நடராஜர் பிரபஞ்ச இயக்கத்தின் வடிவம் என்பதை முன்னமே மனிதன் அறிந்திருப்பானாயின் அப்படியே எழுதிவிட்டுப் போகலாமே. நாட்டியம் என்பது அடிப்படை படிமம். அதை இயக்கமுள்ள எதற்கும் ஒப்பிடலாம். சென்னையின் ட்ராஃபிக் நடராஜரின் நாட்டியம் போல இருக்கிறது எனும் ஒரு உணர்வை மெய்யியல் மூலம் பெறலாம். ஒரு மனிதனின் உடலில் செல்கள் பெருகுவதும் அழிவதுமான வளர்ச்சி இயக்கம் நடராஜரின் நாட்டியத்துக்கு ஒப்பிடலாம். இதுபோலவே ‘ஒளி உண்டாகட்டும்’ என்பதில் ஒளி என்பது அடிப்படை படிமம்.

நடராஜரின் நாட்டியம் பிரபஞ்சத்தின் வடிவம் என்றால், நடராஜர் என்கிற பிம்பம் தேவையில்லையே. நேரே பிரபஞ்சத்தையே வணங்கலாமே? ஏன் இடையில் கடவுள் எனும் ஒரு உருவகம்? ஏண்ணா மனிதனின் ஈகோ அதுக்கு இடம் கொடுக்காது. அறிவார்ந்த மனிதனின் சர்வைவலுக்கு ஈகோ முக்கியமானது. கோள்களையும் அண்டவெளிகளையும் அவன் வணங்கப்போவதில்லை. ஆனால் தெய்வத்தை வணங்குவான். சந்திரனை நிலா என்றால் அவன் வணங்கப்போவதில்லை தெய்வமென்றால்தான்.

நடராஜரைத் தொழுகையில் பிரபஞ்சத்தைத்தான் தொழுகிறேன் எனும் உணர்வு உங்களுக்கு எழுமாயின் ஆன்மிகத்தின் பல படிக்கற்களை கடந்துவிட்டீர்கள் எனக் கொள்ளலாம்.

இந்திய தத்துவ ஞான மரபில் இதற்கு இடம் இருக்குது. அங்கே ஆன்மீகம் தனிப்பட்ட விஷயம். பிரபஞ்சம் இந்தக் கடவுள் வடிவினைவிடப் பெரியது என உணர்ந்து நானும் பல அடிப்படை எலெமெண்ட்களாலான பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என உணரும்போது கடவுளை தூக்கி வைத்துவிடலாம். (இதைத்தான் ஜீவாத்மாவும் பராமாத்மாவும் ஒன்றே என்கிறார்கள் என மெய்யியல் சொல்லலாம்.)

//ஆனால் ஆன்மீகவாதிகள் அறிவியலின் lateral thinking முறையையே இதற்கும் பயன்படுத்தி, விஞ்ஞானம்-மெய்ஞானம் இரண்டுக்கும் இணைப்புப் பாலமாக இருப்பாங்க (காட்டு: அப்துல் கலாம், சுகி சிவம், ஜேகே, இன்னும் பலப்பலர்)// Krs

இந்தப் பாலம் ரெம்ப நாள் இருக்காது என்றே தோன்றுது. ஆன்மீகம் முதலில் வளர்ந்தது, அறிவியல் இரண்டாவதாகவே வளர்ந்தது. இவை இரண்டிலுமே நாம இப்ப வளர்ச்சியின் நடுப்புள்ளியில் நிற்பதாக எடுத்துக் கொள்வோம். அதாவது அறிவியல் வளர்ச்சி ஆன்மீகத் தளர்ச்சி. இந்த நடுப் புள்ளியில் சமரசங்கள் இணைப்புப் பாலங்கள் தேவைப்படுது. இன்னும் சில நூற்றாண்டுகள் கூட நாம் இந்த நடுப்புள்ளியில் நிலைக்க வாய்ப்பிருக்குது. மேலும் அறிவியல் வளர வளர ஆன்மீகம் தளருமானால் இணைப்புப் பாலங்கள் தேவையே இல்லை.

//ஏன் படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் சிந்திக்கும் வித்தியாசங்கள் மாறுபடுகின்றன?// மாஹிர்,
நீங்க ஐ.டி ஆள் என்பதால்… ஒரே மாதிரியாக Data Process செய்யும் ரெண்டு கம்ப்யூட்டர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒண்ணுல Data அதிகமாயிருக்குது இன்னொண்னுல குறைவாயிருக்குது. சாதாரண எடுத்துக்காட்டுதான்.

மனித சிந்தனை என்பது ‘கல்வி’ என்பதோடு மட்டுமே ஒப்பிட முடியாது. அறிவு என்பதோடு ஒப்பிடலாம். மொழி மூலம் மட்டும் மனிதன் அறிவைப் பெறுவதில்லை. உணர்தல் மூலமும் பெருகிறான். சொல்லப்போனால் உணர்தல் மூலம் மனிதன் பெறும் அறிவு உலகளவில் ஒப்பிடத் தக்கதாகவே இருக்கும். இன்னும் எழுதலாம்… சிந்தனை ஓடல :)

முன்பே சொன்னதுபோல இவையெல்லாமே சிந்தனை ஓட்டங்களின் பதிவுகள்தான். Absolute truth எல்லாம் இல்ல. இவற்றின் அடிப்படையில் மேலும் சிந்திக்கத் தோன்றினால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “E=MC^2 – சில பதில்கள்”

 1. விடுவதாக இல்லையா ?
  :)

  விளக்கங்கள் அருமை, இந்த சிந்தனையை உங்களுக்கு தந்தது அறிவியலா ? ஆன்மிகமா ?

 2. //இந்த சிந்தனையை உங்களுக்கு தந்தது அறிவியலா ? ஆன்மிகமா ?//

  அநியாயத்துக்கு free time(இப்ப இல்ல முன்னால), தண்ணி பார்ட்டி வித் some thinkers. இதெல்லாம் ஆன்மிகமா அறிவியலா? :)

  தெரியல.

 3. அப்படியே இதுக்கும் பதில் சொல்லிருங்க அண்ணாச்சி
  //அப்படியே அவர் over-simplified ஆக இருந்தாலும், இது போன்ற சில அறிவியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதை ரசிக்கத் தொடங்கி, அவர் தேடல் அங்கிருந்தும் தொடங்கலாம் அல்லவா? அதை வேண்டாம் என்று ஏன் நினைக்கிறீங்க?
  over-simplified மனிதர் கடைசி வரை over-simplified மனிதராகவே இருக்கட்டுமே என்ற அலட்சியமா? :-))//

 4. //இந்த சிந்தனையை உங்களுக்கு தந்தது அறிவியலா ? ஆன்மிகமா ?//

  அநியாயத்துக்கு free time(இப்ப இல்ல முன்னால), தண்ணி பார்ட்டி வித் some thinkers. இதெல்லாம் ஆன்மிகமா அறிவியலா?//

  என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க கோவி!
  தண்ணி பார்ட்டின்னு சொல்லிட்டாரு அண்ணாச்சி! அப்பவே ஆன்மீகம்-ன்னு ஒங்களுக்குப் புரிய வேணாம்? என்னமோ போங்க! சோம பானம், சுரா பானம் பத்தி எல்லாம் போஸ்ட் போடும் நீங்களே இப்படிக் குழம்பினா, தகுமா? :-))

 5. dharumi சொல்கிறார்:

  தொடருமென நினைக்கிறேன் .. காத்திருக்கிறேன்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்