தேன்கூடு: பின்தொடரும் வதந்தியின் கதை
வதந்திகள் எப்படி உருவாகி வளர்கின்றன என்பது குறித்த ஆய்வேதேனும் இருப்பின் நிச்சயம் சுவாரஸ்யமானதாகவே இருக்கும். நீங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்றால் உங்களைப்பர்றிய உண்மைகளை விட வதந்திகளே அதிகம் நிலவ வேண்டும். எவ்வளவு அதிகம் வதந்திகளும், அவதூறுகளும் நிலவுகின்றனவோ அவ்வளவு தூரம் நீங்கள் பிரபலம் எனலாம்.
நான் தேன்கூட்டை நிர்வகிக்கிறேன் என ஒரு வதந்தி நிலவி வருகிறது. தேன்கூடு நிர்வாகத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. தற்போது தேன்கூடு யார் கையில் இருக்கிறது என்பதைத் தெரிந்தவர்களைக்கூட எனக்குத் தெரியாது. சரி விடுவோம் என்று பார்த்தால் நேற்று ஜெயமோகனேகூட நான் தேன்கூட்டை நிர்வகிப்பவர் என எழுதப்போக… இந்தப் பதிவு தேவையாகிவிட்டது.
நான் தேன்கூடு தளத்திற்குச் சாதாரணமாக நேரடியாகச் செல்வதுமில்லை அதை பயன்படுத்துவதுமில்லை. டெலிஷியஸ் சேவையை பயன்படுத்தி வந்தபோது தேன்கூடு பெட்டகத்தைக் கல்யாண் காண்பித்துக் கருத்து கேட்டபோது ஒரு பதிவிட்டேன். அவ்வளவுதான். அவர் மறைவுக்குப் பின் பெட்டகம் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன்.
கொஞ்ச நாள் முன்புவரை தமிழ்மணம் திரட்டி மட்டுமே பயன்படுத்தி வந்தேன். தமிழ்மணத்துக்கும் வெளியேயும் இருக்கும் பதிவுகளை அடைய தற்போது தமிழ் கணிமை தளத்தையும் பயன்படுத்துகிறேன். டெக்தமிழ் பயனர் கணக்குடன் செயல்படும் திரட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது அதை பிய்த்து மேயலாம் என எண்ணம்.
தேன்கூடு தளத்தை நிர்வகிப்பவர்கள் கேட்டுக்கொண்டால் அதில் இணைவதில் எனக்கு முழு சம்மதமே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பங்குவகிக்கும் மற்ற இணையதளங்கள்/பதிவுகள்
மாற்று – பெயருக்குத்தான் நான் இங்கு உறுப்பினர். இதுவரைக்கும் எதையும் செய்ததில்லை.
சற்றுமுன் – தள மேலாளர்களில் ஒருவர்
தமிழோவியம் – எப்பவாவது பங்களிப்பு
பதிவர் உதவிக் குழு - உதவி செய்து ரெம்ப நாள் ஆகிறது
ஜெயமோகன்.இன் – தள மேலாண்மை
தமிழ்ச் சங்கம் – பங்களித்து நாளாகிறது
பயனாளர் என்பதைத் தவிர வேறெந்த திரட்டியுடனும் தளத்தினோடும் எனக்குத் தொடர்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வதந்திகளை மறுப்பதன் மூலமும் பிரபலம் ஆகலாமோ?
Popularity: 7% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....
March 24th, 2008 at 3:18 pm
என்னமோ, கிளறி விடறத பார்த்தா பெரிசா ஏதோ நடக்குது போல..
March 24th, 2008 at 3:21 pm
இல்ல இளா. பெருசா ஏதும் நடந்துடக் கூடாதுண்ணுதான்
March 24th, 2008 at 4:48 pm
:-))
March 24th, 2008 at 6:23 pm
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமோ தெரியலியே தமிழச்சி?
March 24th, 2008 at 7:49 pm
என்னுடைய வதந்தியை நினைத்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை. இதை சொல்வதற்கு கூட ஆள் வைத்து தட்டச்சு செய்கின்றேன்! =
March 24th, 2008 at 8:25 pm
உங்க மேல இருக்கிற வதந்தி அவ்ளோதானா? நான் கேள்விப்பட்டதைச் சொல்றேன்.
1. சர்வேசன்’ல் நீங்களும் ஒருவர்
2. தேன் கூட்டைப் பத்தி நீங்களே சொல்லிட்டீங்க
3. வவ்வாலும் நீங்கதானாம்
March 24th, 2008 at 9:03 pm
இளா,
(அடங்குடா!!!)
நான் நினைக்கிறதவிட நான் பிரபலமாயிருக்கிறது மகிழ்ச்சியே தருது
1. எனக்குத் தெரிந்தவரை சர்வேசன் ஒரு தனி ஆள். அவருக்கு நான் அனுப்பிய மடல்களுக்கு வந்த பதில்களை வைத்தும் எனக்கு அவரிட்ட பின்னூட்டங்களை என்னால் இதை சொல்ல முடிகிறது. எனக்கு நானே மின்னஞ்சல் செய்யும் பழக்கமில்லாததால் சர்வேசன் நானில்லை எனச் சொல்லலாம்.
3. வவ்வால்? பாவம் அவர். சர்வேசனுக்காவது மின்னஞ்சல் செய்துள்ளேன் வவ்வால் யார் எனத் தெரியவே தெரியாது. நல்ல பதிவர். பாவம் அவர் பெயரைக் கெடுக்கவேண்டாம்.
Seriously I am glad to know that someone somewhere is thinking seriously about what Cyril Alex is doing and Who Cyril Alex, so much so they come up with some theories. Does this mean anything?
March 24th, 2008 at 9:05 pm
புரியுது. சிரிப்பான் போடவா அழுவான் போடவா தெரியலையே!
March 24th, 2008 at 10:51 pm
ஒருமுறை நான் சென்னை போனபோது, தேன்கூட்டுக்கு ஆதரவு திரட்டத்தான் போனேன்னு ஒரு வதந்தீ ஒரு கிசுகிசு மேட்டரா ஒரு பதிவில் வந்துச்சு!
நான் பிரபலமா இல்லையா? :-)))))
March 24th, 2008 at 11:42 pm
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்….
March 25th, 2008 at 12:21 am
???????
//ஜெயமோகனேகூட//
March 25th, 2008 at 4:13 am
He had written then removed after I updated him. Hope that was your question.
March 25th, 2008 at 4:32 am
ஜெயமோகனே கூட என்றால் என்ன அர்த்தம்..
ஜெயமோகன் உங்களை நன்கு அறிந்தவர் என்று அர்த்தமா
அல்லது வதந்திகளை அவர் நம்பவே மாட்டார் ரொம்ப தெளிவானவர் என்ற அர்த்தமா..
அல்லது வதந்திகளை அவர் கிளப்பவே மாட்டார்..ரொம்ப நல்லவர் என்ற அர்த்தமா..
என்றுக் குழம்பிப் போய்… ????????? போட்டேன்.. :))))))
பு.த.செ.வி.
March 25th, 2008 at 4:33 am
இப்படி எல்லாம் தன்னிலை விளக்கம் கொடுத்தால் நம்பிடுவோமா? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதுன்னு போஸ்ட் போட மாட்டோம்
March 25th, 2008 at 4:41 am
இப்படி ஒரு வதந்தி இருந்ததே எனக்குத் தெரியாது
இப்போது தெரிந்து விட்டது!!!
March 25th, 2008 at 5:52 am
சிறில் ஸார்..
அப்போ அது நீங்க இல்லையா..?
நானும் இத்தனை நாள் ‘தேன்கூட்டுல’ நீங்கதான் ‘தேன்’ எடுத்துக்கிட்டு வர்றதா நினைச்சிட்டிருந்தேன்..
இப்ப புரியுது.. நீங்களும் ‘தேன்’ அப்படின்னு வலைத்தளம் வைச்சிருக்கீங்களா.. அதான் பிரச்சினை..
நமீதா வீட்டுக்கு கூரியர் கொடுக்க வர்றவன், நல்லா வாட்டசாட்டமா ஹேண்ட்ஸம்மா வந்து தொலைஞ்சுட்டான்னா போதும்.. அவன்தான் நமக்கு ‘சகல’ போல இருக்குன்னு, ‘அக்கா’ வீட்டுக்கு எதுத்தாப்புல இருக்குற ஆட்டோ டிரைவர்லாம்கூட முறைச்சு, முறைச்சுப் பாக்குறாங்களாம்..
இப்படி கேள்விப்பட்ட மாதிரியிருக்கு உங்க சோகம்..
March 25th, 2008 at 2:18 pm
ஜெயமோகன் பதிவுலகுத்துப் புதியவர் அவர் காதுக்கே இந்த வதந்தி போயிருக்குதே என்பதுவும், அவர் பதிவுக்கு தினம் 5000 முதல் 6500 வரை ஹிட்கள் வந்துகொண்டிருப்பதால் பலருக்கும் தவறான தகவல் போய் சேரும் என்பதாலும்…
March 25th, 2008 at 2:21 pm
உங்களையெல்லாம் திருத்த நூறு தமிழச்சி வந்தாலும் முடியாதுப்பா
(தமிழச்சி – Hope you take it sportively)
March 25th, 2008 at 2:22 pm
அதுசரி. நம்மளப் பத்திய வதந்திக்கு நாமளே விளம்பரம் தரவேண்டியிருக்குது. தெரிஞ்சுகிட்டீங்கல்ல? சந்தோஷந்தானே?
March 25th, 2008 at 2:24 pm
தல உ.தமிழன். இப்பத்தான் விஷயம் புரியுது. தேன் என பதிவின் பெயர் இருக்கப்போய்தான் இந்த பிரச்சனையா.
March 26th, 2008 at 5:54 pm
ஏறக்குறைய ஒரு கிரிக்கெட் டீமுக்கு தேறும் அளவிற்கு சிலர் இங்கு இருக்கிறோம்…அதற்குள்தான் எத்தனை வதந்தி, சண்டை சச்சரவு…வேடிக்கைதான் போங்கள்!
March 27th, 2008 at 1:26 am
ஓ…. பிரபலம் ஆவுறத்துக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா?

மக்கா…டிப்பு குடுத்ததுக்கு டாங்ஸு …