E=MC^2: ஆந்தனி டி மெலோ

KRS எழுதிய பதிவின் உந்துதலில் எழுதிய மூன்று பதிவுகளுமே ஓரளவுக்கு மதம், ஆன்மீகம், அறிவியல் குறித்து சில வருடங்களாக தனிமையிலும், நண்பர்களோடான விவாதங்களிலும் எழுந்த பல சிந்தனைகளின் தொகுப்பே. இதையே கோவி. கண்ணனுக்கான பின்னூட்ட பதிலாயும் சொல்லியிருந்தேன்.

ஆனால் ஒரு முக்கியமான தகவலைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். என்னுடைய ஆன்மீகப்பார்வையை திறந்து விட்டவர் ஆந்தனி டி மெலோ. அப்படி திறந்தபின்பு நான் பெரிய சன்னியாசியெல்லாம் ஆகிவிடவில்லையாயினும் அடிப்படையில் கேள்விகளைக் கேட்கவும் நமக்கான நம்பிக்கைகளை நாமே தேர்ந்தெடுக்கவுமான ஒரு சுதந்திரத்தை அடைய முடிந்தது.

ஆந்தனி டி மெலோ ஒரு இந்தியர். இயேசு சபை பாதிரியார். அவர் பல உரைகளையும் நிகழ்த்தியுள்ளார் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே பல்சமய ஆன்மீகத் தேடல்களின் தொகுப்பிலிருந்து உருவானவை. டி மெலோவின் ஆன்மீகம் தனிமனிதனுக்கும் கடவுளுக்குமான உறவை முன்னிறுத்துகிறது. மதம் ஒரு வழி காட்டிப்பலகை மட்டுமே அதுவே முடிவல்ல, இலக்கல்ல என்பது அவரின் ஆன்மீகத்தின் அடிப்படை புரிதல். ஜென், இந்திய மரபுகளிலிருந்து பெறப்பட்ட ஆன்மீக வழியே இது இயேசுவின் போதனனகளிலும் இவை பொருந்தியிருப்பதை டி மெலோ உணர்த்துகிறார். இயேசுவை விட புத்தரையும், இந்து புராணக் கதைகளையும், ஜென், சுஃபி கதைகளையும் அதிகம் மேற்கோள் காட்டி பேசுவது, எழுதுவது டிமெலோ ஸ்டைல். இவற்றின் காரணமாய் கத்தோலிக்க திருச்சபை இவரது எழுத்துக்கு இடையில் தடை வித்தித்தது. பின்னர் இவை பல்சம்யப் பின்னணியில் படிக்கப்படவேண்டியவை (கிறீத்துவப் பின்னணியில் அல்ல) எனும் மறுப்பறிவிப்புடன்(Disclaimer) மீண்டும் புத்தகங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

மதங்கள், ஆன்மீகம் குறித்த இவரின் புத்தகம் ‘The Song of the Bird’. தமிழில் பறவையின் பாடல் என வெளிவந்ததாக நியாபகம். என்னுடைய தனிப்பட்ட ஆன்மீகத் தேடல்களை துவக்கி வைத்தது இந்தப் புத்தகமே. இந்தப் புத்தகத்தை டி மெலோவே ஒரு அபாயகரமான புத்தகம் எனக் கூறியுள்ளார். நம் நம்பிக்கைகளை அதிரடியாகக் கேள்வி கேட்கும். நம்மையே நாம் நகைப்புக்குள்ளாக்க வைக்கும். தைரியமிருந்தால் வாங்கிப்படியுங்கள்.

டி மெலோ கதைகளின் மூலம் ஆழ்ந்த கருத்துக்களை பதிப்பதில் வல்லவர். ஒரு சிறிய கதையைச் சொல்லி சிந்தனைக்கு ஒரு வரியைத் தந்து புத்தகத்தின் பக்கங்களை நீங்களே எழுதிவிடும்படி செய்துவிடுவார். எனவே படிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் சிந்தனைக்கு வித்தாகவும் இவரது எழுத்து அமைந்துள்ளது.

இவரின் Prayer of the Frog புத்தக வரிசையும் எனக்கு மிகவும் பிடித்தமானது. St. Paul’s Publication இவரின் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். Amazon.com இலும் வாங்கக் கிடைக்கிறன. One Minute Wisdom, One Minute Nonsense போன்ற புத்தகங்களும் பிரபலம்.

விக்கி பக்கம்

பறவையின் பாடல் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதிய இரண்டு கதைகளின் சுட்டிகள் கீழே.

ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்
கடவுள் 100 கி.மீ

அமெரிக்க தொலைக்காட்சியில் முன்பு வெளியான அவரது ‘விழித்தெழு’ பேச்சு வீடியோக்கள். நாத்திகர்களும் கேட்கலாம்.

How to Pray?

How to be Real?

How to Love?

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “E=MC^2: ஆந்தனி டி மெலோ”

 1. ஜோ சொல்கிறார்:

  மிக்க நன்றி!

 2. TBCD சொல்கிறார்:

  பொட்டி வரலிங்களா..

  படத்தை எப்ப வெளியிடுவீங்க… :P

 3. TBCD,
  Please search for Anthony De Mello in videos.google.com

  You will have three videos named ‘Wake Up’ each one is about 30mnts. So be prepared to relax and spend some time.

  I assure you that there will be at least a small spark, if not a major fire.

 4. dharumi சொல்கிறார்:

  //தைரியமிருந்தால் வாங்கிப்படியுங்கள்.//
  இதுக்கெல்லாம் தைரியம் உண்டு! இங்கே இப்போது கிடைப்பதில்லை என்று உறவினர் cum சாமியார் ஒருவர் கூறினார். அவர்கள் ‘வீட்டு’ நூலகத்தில் இருக்கும்; எடுத்துத் தருகிறேன் என்று சொல்லியுள்ளார். வாசித்து விட்டு சொல்கிறேன்.

 5. அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்:

  வாழ்க்கையில் சந்திக்க முடியாமல் போயிற்றே என நினைக்கும் போது மனதில் வருபவர்களில் ஒருவர் அந்தோனி டி மெல்லோ. நன்றி சிறில். மெத்த நன்றி.

 6. அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்:

  தருமி நாகர்கோவில் வந்தால் முழு செட்டும் வீட்டில் இருந்து படித்து விட்டு போகலாம். :)

 7. dharumi சொல்கிறார்:

  அ.நீலகண்டன்,
  என்னை மாதிரி சோம்பேறியை இப்படிக் கூப்பிட்டா, ஒரு மாசம் சாப்பாடுமல்லவா போடவேண்டியதிருக்கும்.
  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்