ஒகேனக்கல்லில் காந்தி

ஒகேனக்கல் குறித்து பல காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதற்கிடையில் பதிவர் கார்த்திக் முருகன் காந்தீய வழி ஒன்றை முன்வைத்துள்ளார்.

கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அரசியல் சதிகளை முறியடிக்க பொதுமக்கள் இது போன்ற வழிகளைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது.

கேரளாவில் திருட்டை கண்டுபிடிக்கத் தன்னையே அடித்துக்கொண்ட ஆசிரியை நினைவுக்கு வருகிறார். உலகில் அன்பை போதித்து அதற்காக உயிரைவிட்ட உன்னதத் தலைவர்கள் அனைவரின் ஒரே உருவமாக இவர் தெரியவில்லையா?

பழிக்குப் பழி, எதிர்ப்புக்கு எதிர்ப்பென்றில்லாமல் அகிம்சையின் வலிமையை உலகத்திற்குணத்திய மக்கள் நாம் என்பதை வாழ்ந்து காட்டினால்தான் என்ன? கன்னடாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி வன்முறையை விரும்புபவர்களை விட விரும்பாதவர்களே அதிகம் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஒன்றும் செய்யாமல் இருப்பதால்தான் சமூக விரோதக் கும்பல்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்பது நம் பண்பாட்டில் இல்லாமலா போயிற்று?

அருமையான யோசனைகள் சென்று படிக்கவும். இவற்றை செய்வதன் மூலம் கர்நாடகாவில் இருக்கும் நல்லவர்களைத் தூண்ட முடியுமானால் அதைவிட வேறு அரசியல் பலம் என்ன வேண்டும்?

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “ஒகேனக்கல்லில் காந்தி”

  1. Samykkootathu Mayan சொல்கிறார்:

    இன்னொரு அருமையான ஒறுத்தல் யோசனை. கன்னடர் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பது. இதை கன்னடரோடு சுருக்கிக் கொள்ளாமல், முல்லைப்பெரியாற்றுக்காக மலையாளிகளையும், பாலாற்றிற்காக ஆந்திரர்களையுமாக, ஒறுத்தலை விரிவுபடுத்துவது. அடப்போங்கப்பா. அது சரி…கன்னடப் படங்களைத் திரையிடுவது மஞ்சி யோசனைதான், யார் போய்ப் பார்ப்பதாம்? ‘அஞ்சாதே’ படமே எங்கள் ஊரில் ஈயடிக்கிறது. கன்னடப்படம் போட்டால் நம்மூர் உடுப்பி ஓட்டல்காரன்கூட போய் பார்க்கமாட்டானய்யா..?! எப்பிடியப்பூ இந்த மாதிரி.. ரூம் போட்டு உக்காந்து யோசிப்பிங்களோ? (காந்தியாரை உபதேசிப்பதற்கு முன் அவரின் அஹிம்சை பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி கிழவனாரின் அபிப்பிராயத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டால் உத்தமம்.)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்