நாஞ்சில் நாடன் + சிவாஜி த பாஸ்

‘வார்த்தை’ சிற்றிதழ் ஒரு வழியாய் (ஆகாய வழியாய்) வந்து சேர்ந்தது. என் வாசிப்பில் இணையத்திலல்லாது “செத்த மரத்தில் செதுக்கப்பட்ட” முதல் சிற்றிதழ் ‘வார்த்தை’.

நண்பர்கள், பதிவர்கள் பி.கே.சிவகுமாருக்கும் ஹரன் பிரசன்னாவிற்கும் வார்த்தை குழுவுக்கும் வாழ்த்துகள்.

இதில் இன்னொரு ‘முதன்முதலாக’ என்னெவென்றால் நான் முதன் முதலாக வாசித்த நாஞ்சில் நாடன் கதை வார்த்தையில் வந்திருக்கும் ‘ஐயம் இட்டு உண்’ எனும் சிறுகதைதான். இந்த அவசர காலத்தில் நம் ‘ஐயம்’ இடுதல் எப்படி இருக்கிறது என்பதை எடைபோடும் ஒரு கதை.

நாஞ்சில் நாடன் தன் எழுத்தில் தகவல் பிழை வந்துவிடக் கூடாது என்பதில் கருத்தாயிருப்பார் எனக் கேள்விப்பட்டதுண்டு. ஐயம் இட்டு உண்ணில் அமெரிக்காவில் ஒருவர் இந்திய மதிப்பில் மாதம் ரூ 40 லட்சம் சம்பாதிப்பதாக எழுதியிருந்தார். அதுவும் ஒரு வன்பொருள் பொறியாளர். அதாவது இன்றைய டாலர் மதிப்பில் மாதம் 1,00,000 அமெரிக்க வெள்ளிகள்.

இதே போன்று சிவாஜி திரைப்படத்திலும் அமெரிக்காவிலிருந்து திரும்புபவர் கோடி கோடியாக தனக்கும், கோடி கோடியாக அடுத்தவருக்கும் வழங்குவதற்குமாய் சேர்த்து வைத்திருப்பதாகக் காட்டினார்கள்.

இவை சாத்தியமே அல்ல எனச் சொல்ல வரவில்லை ஆனால் வெறும் மென்/வன் பொருள் பொறியாளராய் இருந்தால் இது சாத்தியமில்லை.

இப்படி பொருள் சேர்க்க ஒரு தொழில் முனைவரால் இயலலாம், அல்லது ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடினால் செய்யலாம். ஆனால் அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் ஆயிரக்கணக்கான சினிமா, சிறுகதை கதாபாத்திரங்களல்லாதவர்களுக்கு ஒரு வருடம் 1,00,000 டாலர் கிடைத்தாலே பெரிய விஷயம்.

இங்கே அதிகபட்ச சம்பளம் வாங்குபவர்கள் இண்டிப்பெண்டன் கன்சல்டண்ட் வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் சம்பளம் ஒருமணி நேரத்திற்கு இவ்வளவு என நிர்ணயிக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்து சில ஜாம்பவான்களுக்கு அதிகபட்சம் மணிக்கு $150 கிடைக்கிறது. அதாவது பழம் தின்று கொட்டை போட்டு கொட்டை முளைத்து மரமாகியிருந்தால் மட்டுமே இத்தகைய ரேட் கிடைக்கும். இல்லையென்றால் 65 அல்லது 75 அல்லது 40 என பழத்தின், கொட்டையின் தரத்திற்கேற்ப கிடைக்கும். அதுவும் சில ‘உயர்சாதி’ மென்பொருள்களில் வேலை தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி ஜாம்பவான்களாயில்லாமல் ஏதேனும் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள், இந்தியாவிலிருந்து மாற்றலாகி வருபவர்களுக்கு வருடத்திற்கு 50,000 துவங்கி (அதுக்கு கீழேயும் துவங்கலாம்) 1,00,000 வரைக்கும் கிடைக்கும். சராசரியாக 60 அல்லது 70ஆயிரம் சொல்லலாம் என நினைக்கிறேன். 30% வரிக்கு முந்தி இது.

இங்கே ஒரு சராசரி பட்டியல் தரப்பட்டுள்ளது படியுங்கள்.

மணிக்கு 150 வாங்குபவருக்கு பொதுவாக எல்லா நாட்களிலும் வேலை இருக்காது. இரண்டு மூன்று மாதங்கள் பெஞ்சில் இருக்க நேரிடும். அப்படி இல்லாமல் போனாலும் 30% வரி பிடித்தம் போக ஒரு கணக்கு போட்டு பார்த்ததில் வருடத்துக்கு ரூ80,64,000 இந்திய மதிப்பில் வருகிறது. (அடடா. கன்சல்டிங்குக்கே போயிருக்கலாம்!!)

இதெல்லாம் எதுக்குச் சொல்றேண்ணா ஊருக்கு வரும்போது என் மாமனார் என்னை சந்தேகப்படக்கூடாது பாருங்க. :)

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “நாஞ்சில் நாடன் + சிவாஜி த பாஸ்”

 1. Sridhar Narayanan சொல்கிறார்:

  //ஊருக்கு வரும்போது என் மாமனார் என்னை சந்தேகப்படக்கூடாது பாருங்க.//

  :-)) Anticipitory Bail வாங்கிக்கறீங்களா என்ன?

  அப்படி 200 கோடி சம்பாதித்த ஒருவருக்கு ஒரு தொழில் தொடங்கும் ‘நெளிவு / சுளிவு’ கூட தெரியாதாம். கைப்புள்ள ரேஞ்சுக்கு காமெடி பண்ணியிருப்பாங்க.

  இந்தியாவில் சில C.E.O -க்களின் சம்பளம் மாதம் 40 இலட்சத்திற்க்கு கிட்ட வருகிறது (வருடத்திற்க்கு 4 கோடி). ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :((((

 2. வடுவூர் குமார் சொல்கிறார்:

  மாமனார் பின்னூட்டம் இடுவாரா? :-))

 3. இணையத்தில் வார்த்தை இதழ் கிடைக்கிறதா ?!

 4. //மாமனார் பின்னூட்டம் இடுவாரா? :-))//

  ‘பின்னாடிதான்’ தெரியும்

 5. இன்னும் இல்லை

 6. Balaji சொல்கிறார்:

  வாசகர் கடிதமாக ‘வார்த்தை’ மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாமே!?

 7. Prabhu Rajadurai சொல்கிறார்:

  :-)) Anticipitory Bail வாங்கிக்கறீங்களா என்ன?

  caveat னா பொருத்தமாயிருக்காதா ஸ்ரீதர்?

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்