ரஜினி – காந்தமா? மெழுகா?

லண்டனில் உள்ள மேடம் டுசா(வ்)ட் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சிலையையும் வைக்க வேண்டி ஒரு விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. rajinifans.com வழியாகக் கண்டடைந்தேன்.

உங்கள் விருப்பத்தையும் சேர்த்து, ஒரு குறிப்போடு கையெழுத்திட விண்ணப்பத்தில் வசதியுள்ளது. இங்கே சென்று காணுங்கள். இங்கே சென்று கையெழுத்திடுங்கள். பல இந்தியர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்வதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ விஷயம் என்னண்ணா அந்த விண்ணப்பத்தில் நான் எனது குறிப்பாக A great personality that has touched many generations of Indians என பதித்தேன். மற்ற சிலர் என்னென்ன பதித்திருக்கிறார்கள் எனப் பார்த்ததில் சில குறிப்பிடத் தகுந்தவை. (தமிழில் இருப்பது என் குறும்பு)

My son loves him, My grand children love him, My neighbourhood loves him, the whole state loves him, and if you know him well, the whole world would love him. Why is this delay in wax statue? – உங்க வீட்ல களிமண் சிலையாவது வச்சிருக்கீங்களா?

Actor Mr.Rajinikanth is great man.he is a role model for lot of youngsters,very simple and humlble,honest,frankly and boldly speaking, and so on… – இவரப் பாத்துதான் என் பையன் சிகரெட்லேந்து சூவிங்கம்முக்கு மாறினான்

silence is more powerfull weapon – இது பஞ்ச் டையலாக்கா?

He is the one and only superstar for the whole india. – இது அவருக்குத் தெரியுமா?

we worship him as god…. – அடக் கடவுளே!

he is the only super star in the world – இத இப்டி எழுதியிருக்கலாம் if you ask any small baby in the whole world who is the superstar they will simply tell.

thala thalathan – ம்யூசியம் ஆட்கள் இத head is head only என மொழி பெயர்த்துக் குழம்பிட்டாங்க.

Our Indian Super Star is an Internation Super Star!!- Pls authorize it – எந்தெந்த நாடுகளுக்கிடையேண்ணு சொல்லல

i think , he deserve to be in madam tussaradsம்ம்ம்… எங்கேயோ இடிக்குதே.

u took soo long dont waste time – அடடா. ரீல் வரக் காத்திருக்கும் ரசிகர்போல.

Pls do erect the WAX Statue of our Leader, because we are not Just Fans, we are Followers. – பாப்பராசியா இருப்பாரோ?

i really do not understand. u people can do it for that women Aiswarya Rai. who does nothing for the film industry. she is only reconized by people because she is pretty. but OUR SUPERTAR is a mindblowing actor & human being & u all take so long to decide shame on u all…go & eat crow la. – ரெம்பவே ஃபீல் ஆயிட்டாங்க. அடுத்த படத்துல டையலாக் எழுதலாம்

they should do it. because he is a onderful human being & an actor. HE IS THE MAN..! its a disgrace that they until now haven decide, – இப்படி சூடா எழுதினா மெழுகு உருகிடும்.

He is the only man who is honest to everyone,more popular than anyone,he is the only actor having more fan clubs around the world, highest paid actor in Asia next to Jacky chan and never the less Good Human being because he helps more people than others the most important is that without telling to others. – ரஜினி குறித்து கட்டுரை வரைக என கேட்டிருப்பாங்களோ?

பலரும் குறிப்பிட்டிருப்பது ரஜினி சமூக சேவகர் ஆனால் அது வெளியில் தெரியாது என்று. A real Paradox.

Popularity: 13% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....20 மறுமொழிகள் to “ரஜினி – காந்தமா? மெழுகா?”

 1. ila சொல்கிறார்:

  இடுகை நகைச்சுவையில வருதுங்களா? எங்க ஊட்டுல அடுப்பு எரியறதே இவர்னாலதான்னு யாரும் சொல்லலியா? இதப் பாக்க 22.5 பவுண்ட் வேற(22.5*80=INR)

 2. urumparai சொல்கிறார்:

  புகுந்து விளையாடி கலக்கிட்டீங்கள் Boss

 3. TBCD சொல்கிறார்:

  இது வேற எந்த பதிவிலாவது போட வேண்டிய மேட்டரா புதசெவி (உள்குத்து உலகனாதனை துணைக்கழையுங்கோ)

  ரஜினிக்கு(மூன்றாம் சிவாஜி) வைப்பதைவிட, சிவாஜிக்கு (இரண்டாம்) வைப்பதை நான் ஆதரிக்கிறேன்…அதுக்கு யாராச்சும் ஒரு விண்ணப்பம் வையுங்கப்பா…

 4. ஜோ சொல்கிறார்:

  என்ன கொடுமை இது சிறில் அலெக்ஸ்?

 5. நகைச்சுவையேதான்.

 6. நன்றி பாஸ் :)

 7. வேறெந்த பதிவு. புதசெவி :)

  ஆமா. இந்த சிவாஜி வந்து அந்த சிவாஜிய மறக்கடிச்சுட்டாரு. ஜெயமோகன் இல்லைண்ணா அவர யாரும் நியாபகம் வச்சிருக்கமாட்டாங்க :)

 8. என்னக் கொடுமை இது ஜோ? :)

 9. dharumi சொல்கிறார்:

  யாரோ ஆங்கில வகுப்பு எடுக்க ஆரம்பிச்சாங்களே .. அது நீங்கதான?
  ஒண்ணுமில்லை .. சும்மா திடீர்னு ஞாபகம் வந்திச்சி. இங்க நீங்க போட்டுருக்கதைப் பார்த்தா நீங்க அந்தப் பாடத்திட்டத்தைத் தொடருணும்னு தோணலையா?

  வாசிச்சதும் நெறைய கேள்வி’ங்க .. உதாரணமா ஒண்ணே ஒண்ணு: go & eat crow la. – அப்டின்னா என்னாங்க?

 10. என்ன தருமி சார் இப்படி சொல்லிட்டீங்க? Rajini can talk இங்கிலீஸ், walk இங்கிலீஸ், sleep இங்கிலீஸ், eat இங்கிலீஸ். :)

 11. dharumi சொல்கிறார்:

  go & eat crow la. – அப்டின்னா என்னாங்க?

 12. ப்போய் காக்காயச் சாப்பிடுன்னு அர்த்தம் (என நினைக்கிறேன்) :)

 13. dharumi சொல்கிறார்:

  cyril,
  வேற ஏதாவது idiotic-ஆ .. sorry, idiomatic-ஆ சொல்லியிருக்கப் போறாரு…

 14. Balaji சொல்கிறார்:

  தூள் :)

  –thala thalathan & ரீல் வரக் காத்திருக்கும் ரசிகர்போல–

  இது இரண்டும் சூப்பர் தூள் :D

 15. மங்கை சொல்கிறார்:

  தருமி ஐயா பின்னூட்டமும் உங்க பதிலும் தான் ஹைலைட்..:-))

 16. கையேந்தி பவன் காக்காய் பிரியாணியைப் பத்தி எழுதி இருக்கார் போல:-)))

 17. Edwin சொல்கிறார்:

  Dear Cyril,

  Why you are degreading yourself by made a request for a wax statue for Rajini. so many half boiled (ara vattu) fans are here to do such.

  Please don’t do such

 18. Dear Edwin
  I am a simple movie fan. If I say that I have not enjoyed Rajini films at all that would be a lie. Having said that if I saw such a request for bonda mani I would have recommended that too.

 19. invincible2 சொல்கிறார்:

  வணக்கம், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்திலிருந்து இவன், இரஜினியும் இங்கு வந்து வாழ்ந்தவர்தான். ஆனால் அது புரியாமல் ஆட்டு மந்தைகள் போல கிடைத்தவனைய்யெல்லாம் ‘தலைவன்’ என்று கூறி வருகிறோம். இங்கு இரஜினி தமிழனா? என்பது முக்கியமல்ல… அவர் படங்களில் எங்கோ ஒரு காட்சி மட்டும் வரும் ‘நான் தமிழண்டா (இல்லையென்றால்) ஏதாவது ஒரு பசப்பு வார்த்தை ‘தமிழனைப் பற்றி’… இதற்க்கே பாமர மக்கள் முதல் படித்த ம(மா)க்கள் வரை, தூக்கி வைத்து கொண்டு பேசுகிறார்கள். ஆனால் மிச்சம் உள்ள 99% படத்தில் அவரது மூடகருத்துக்களும், பெண் அடிமைத்தனமும் தான் இருக்கிறது. இது புரியாமல் (அ) புரிந்தும் எடுத்துரைக்காமல் இவரை ஜாக்கி ஜான் (Jackie john) னோடு ஒப்பிடுவது. அடி முட்டாள் தனம். இந்த கருத்துகள் அனைத்தும் அடுத்தவனை புகழ்தே, முட்டாள் ஆகும் (சில) தமிழ் மக்களுக்கு…

 20. vinu சொல்கிறார்:

  ரஜினி தமிழன் இல்லை என்றாலும் அவர் தமிழனின் கருத்துக்களை தயங்காமல் சொல்பவர்.
  எனவே தான் தமிழர்கள் அனைவரும் அவர் பின்னால் இருக்கிறார்கள்.அவர் படத்தில் கூறிய கருத்துக்கள் பெண்களை அடிமை படுத்துவதாக இல்லை.தமிழ் பெண்களின் குணங்களை பட்டியலிடுவதாகவே இருக்கிறது.ஆனாலும் சிலர் அவர் பற்றி குறை சொல்வதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள் எதுவும் நமக்குத் தேவைஇல்லை. நம் தலைவர் எப்பொழுதும் நமக்கு நல்லதே செய்வார் .

  -அவரின் அன்பு ரசிகன்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்