இரண்டாமவன் – இரண்டு நாள் முதல்வன்

காட்சி: டி.வி நேர்காணல்

அர்ஜுன்: வணக்கம் இன்றைக்கு நம்கூடப் பேசப் போறவருக்கு அறிமுகமே தேவையில்லை.
முதல்வர்: இருந்தாலும் சொல்லிடுங்க.
அர்ஜுன்: நம்ம முதல்வர். ஐயா தமிழ்நாட்ல…
முதல்வர்: ஏ..ஏ.. நீ என்ன சொல்லப் போறேண்ணு தெரியும். அதே பழைய இண்டர்வ்யூ, அதே ம்யூசிக்.. சுத்தி வர்ற செட்.. அதே கேள்வி.. நானும் உனக்கு அதே சவால் விடுறேன்.. ரெண்டு.. ரெண்டு நாள் என் சீட்ல உக்காந்து பாரு அப்ப தெரியும்? (அர்ஜுன் எந்திரிக்கிறார்)
முதல்வர்: யோவ் இந்த சீட்ல இல்லைய்யா.. முதல்வர் சீட்ல.
அர்ஜுன்: அது வந்து.. வந்துயா.. (மனதுக்குள்: ரெண்டு நாள்தானா?) சரிய்யா.
தொலைக்காட்சியின் தீம் ம்யூசிக்கான ‘டண்டணக்கா டண்டனக்கா’வுடன் காட்சி முடிகிறது.

முதல் நாள்: முதல்வர் ஆட்டோவில் வந்து இறங்குகிறார். இறங்கியதுமே ஆட்டோவை தூக்கி ஸ்டேஷனில் போடச் சொல்கிறார்.
ஆட்டோக்காரர்: சார் சார் சார்.
அர்ஜுன்: எங்கிட்டயே மீட்டருக்கு மேல கேக்குறியா.

மீட்டிங் ரூம்:
அர்ஜூன்: தமிழ் நாட்ல லஞ்சம் வாங்குகிற, குடுக்கிற எல்லாருடைய பெயரும் இன்னும் ரெண்டு மணி நேரத்துல எனக்கு வந்து சேரணும்.
IAS1: இந்தாங்க.
அர்ஜூன்: என்னது அதுக்குள்ள எப்டி? என்ன லிஸ்ட் இது?
IAS1: தமிழகத்து வாக்காளர் பட்டியல்.
அர்ஜூன்: அப்ப என் பேரும் இதுல…
IAS1: சார் நீங்க முதல்வர இண்டர்வீயூ செய்யுறதுக்கு வாய்ப்பு கேட்டு உங்க மேனேஜருக்கு பத்தாயிரம் லஞ்சம் தந்திருக்கீங்க. கூடவே கம்பெனி உங்களுக்கு குடுத்த பார்க்கிங் ஸ்பாட்ட விட்டுக் குடுத்துருக்கீங்க. 1998 உங்க வீட்டுல ஃபீயூஸ் புடுக்க வந்த இபி அதிகாரிக்கு டீ குடுத்திருக்கீங்க. பாஸ்போர்ட் வெரிபிக்கேஷன் வந்த போலீசுக்கு வடை குடுத்துருக்கீங்க.
IAS2: சீப் மினிஸ்டர் இவ்வளவு சீப்பா இருபாருண்ணு நினைக்கல.
அர்ஜுன்: சரி சரி சாதாரண மக்கள விடுங்க. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாரெல்லாம் கணிசமா வாங்குறாங்களோ அவங்கள மட்டும் லிஸ்ட் போடுங்க.
IAS3: இந்தாங்க.
அர்ஜுன்: இவ்வளவு சீக்கிரமா குடுத்தீங்கண்ணா படம் சீக்கிரம் முடிஞ்சுரும்யா.
IAS3: எல்லா முதல்வர்களும் முதல் நாள்ல இதத்தான கேக்குறீங்க. எல்லாம் ரெடியா இருக்குது.
அர்ஜுன்: இவங்கெளையெல்லாம் வேலைநீக்கம் செஞ்சுருங்க.
IAS எல்லோரும் ஆவென விழிக்க… கா கி கூ கா கீ கீ மா கா டாண் டி டூடா டடங்டடா – முதல்வன் தீம் ம்யூசிக் பறக்குது.

இரண்டாம் நாள்:
IAS1: சார் தமிழ்நாட்ல எல்லா அரசு அலுவலகமும் மூடிக் கிடக்குது. ரேஷன் கடை, டிராஃபிக் கண்ட்ரோல், சாக்கடை க்ளீனிங், குப்பை அள்ளிங், பப்ளிக் டிரான்ஸ்போர்ட் எல்லாமே ஸ்தம்பிச்சிடுச்சு.
அர்ஜுன்: அதானே வேணும். முதல்ல அந்த சஸ்பெண்ட் ஆனவெங்களையெல்லாம் சிவாஜி ஸ்டைல்ல ஒவ்வொரு மாவட்டத் தலைநகர்லேயும் ஒவ்வொரு ஹால்ல போட்டு பூட்டி எல்லா ஹாலுக்கும் வீடியோ கான்ஃபரென்சிங் அரேஞ்ச் பண்ணுங்க. கூடவே இணைய இணைப்போட பத்து கணினியும் இருக்கட்டும். கம் ஆன் க்விக்.
IAS1: எஸ் சார்.

மதியம் 2 மணி: வீடியோ கான்ஃபெரன்சிங்ல அர்ஜுன் எல்லார்கிட்டேயும் பேசுகிறார்

அர்ஜுன்: நாந்தான் ரெண்டுநாள் முதல்வர் பேசுறேன். தமிழ்நாட்ல எத்தன டிப்பார்ட்மெண்ட் இருக்குது, எத்தன அதிகாரிங்க இருக்கிறாங்க, எத்தன குப்பத்தொட்டி இருக்குது, அதுல எத்தனை கிலோ பழைய சோறு வீணக் கிடக்குது எல்லா விபரமும் உங்களுக்குத் தெரியும். இல்லைண்ணாலும் பரவாயில்ல. அந்த டையலாக் பேச எனக்கு நேரமில்ல. நீங்க இருக்கிற ஹாலுக்கு பக்கத்து ஹால்ல டைப்பிஸ்ட்டெல்லாம் ரெடியா இருக்காங்க. உங்க வேலையெல்லாம் திரும்பக் கிடைக்கணும்னா அங்கே ப்ளாக் போர்ட்ல எழுதியிருக்கிற ஸ்விஸ் பேங்க் அக்கவுண்டுக்கு இதுவரை நீங்க வாங்கியிருக்கிற லஞ்சத்துல பாதிய ஒயர் ட்ரான்ஸ்ஃபர் பண்ணணும். அதுக்கு வசதியா கணிணிகள் இருக்குது. டிரான்ஸ்ஃபர் கண்ஃபர்ம் ஆனதும் உங்க புதிய அப்பாயிண்ட்மண்ட் லெட்டர வாங்கிக்கலாம்.
IAS1: ரெண்டே நாள்ல இந்திய அரசியல கச்சிதமா புரிஞ்சிட்டீங்க.
(கா கி கூ கா கீ கீ மா கா டாண் டி டூடா டடங்டடா – முதல்வன் தீம் ம்யூசிக் பறக்குது)

இரண்டு போட்டிக்கு இரண்டு நாளா யோசிச்சதுல…

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “இரண்டாமவன் – இரண்டு நாள் முதல்வன்”

 1. இராம் சொல்கிறார்:

  :) :)

 2. கலக்கிட்டீங்க…

 3. கலக்கல் சிறில்.

  பாதின்னு சொல்றதை விட..

  ஒவ்வொருத்தருக்கும் வந்திருக்கும் லஞ்சப்பணத்தை ரெண்டாப்பிரிக்கணும் னு சொன்னா ஈன்னும் ஒரு ரெண்டு வராது? ;)

 4. ila சொல்கிறார்:

  :)

 5. //ரெண்டாப்பிரிக்கணும்//
  அட இன்னொரு ரெண்டப் போட்டிருக்கலாமே. :)

 6. பாசமலர் சொல்கிறார்:

  கலக்கல்..

 7. நன்றி இராம், புபட்டியன், பினாத்தல், இளா, பாசமலர். (இயக்குநர் ஷங்கர் :) )

 8. RaviA சொல்கிறார்:

  :)

 9. Test

 10. thamizhparavai சொல்கிறார்:

  adada… ithuvaraikkum shankar aduthu puthussa(…?) enna kathaiyai padama edukkalamnu ninaichuttirunthar.. nalla velai neenga thiraikathai,vasanathoda koduthiteenga… avvalvuthaan ini ethachum ilichavaai producer a pudichu,neenga potta pathivaiyae 100 kodikku pirammanda padama eduthuruvaaru..

 11. Anonymous சொல்கிறார்:

  just

 12. இரண்டு நாள்தான் யோசிச்சீங்களா.:)
  எனக்கென்னவோ ரெண்டு மணி நேரம்னு நினைப்பு.

  ரெண்டு வரி எழுதிட்டேன்.அதைச் சொல்ல நாலு வரி ஆகிவிட்டது:)

 13. ஐடியா கிடைக்க ரெண்டு நாளாச்சு.. இந்தப் பதிவு எழுத அவ்வளவு நேரம் ஆகல. ரெண்டு போடு போடாம விடமாட்டீங்களே..

  :)

 14. KRP சொல்கிறார்:

  nalla irunthathu

  anbudan
  krp

  http://visitmiletus.blogspot.com/

 15. ashok சொல்கிறார்:

  votukku kaasu vangaradhu, kodukkara tv, fridge, aadu, maadu, panni yellaam vangikkaradhu, use panra edhukkum kasu kodukkama irukkaradhu, idhu yellaamum lanjam vangaradhu dhaan. indha azhagula politician pathi comment vera. anna hazare mudhalla free item lanjatha edirthu porada sollunga. avar paattukku jollya arasiyalvadhiyai mattum thaakki pesi popular aayittar.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்