என் தாய்மதம் என்ன?

புதிதாக ஒரு பதம் கண்ணில் பட்டது. ‘தாய்மதம்’. இப்போது சில கிறீத்துவர்கள் மதம் மாறி இந்து தருமத்தை தழுவ ஆரம்பித்துள்ளனர். நிறைந்த ஆன்மீக, மனிதப் பண்புகளை மக்கள் பெற வேண்டி வாழ்த்துகிறேன். சீரிய ஆன்மீகத் தேடலின் வாயிலாக மக்கள் மதம் மாறுவது வரவேற்கத்தக்கதே.

எனக்கு வருத்தமளிப்பது மதமாற்றம் அல்ல. ஆனால் பத்திரிகைகள் உட்பட பலரும் இவர்கள் தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள் எனச் சொல்வதுதான் தவறாகப்படுகிறது. ஒருவருக்கு எது தாய்மதம்? முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா? அப்படியென்றால் தாய்மொழியைப் போன்றதாய் அது இருக்குமென்றே எடுத்துக்கொள்ளலாம். தற்போது மதம் மாறியிருப்பவர்கள் தங்கள் தாய் மதத்திற்கு மாறியிருப்பதாகச் சொல்வது அவர்கள் முதல் தலைமுறை கிறீத்துவர்களாயிருந்தால் மட்டுமே சரியானதாயிருக்கும். இல்லையென்றால் இந்தியாவில் பிறந்த எல்லோருக்குமே அடிப்படையில் ‘தாய்மதம்’ இந்து மதம்தான் என்பதுபோலாகிவிடும்.

ஞானியின் ‘ஓ’ கட்டுரையிலும் ‘திரும்புகிறார்கள்’ எனும் வார்த்தையை உபயோகித்துள்ளார். இப்போது மதம் மாறியவர்களைப் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தாய் மதம் இந்து மதம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்து தர்மத்தின் மீது மிகுந்த நன்மதிப்பு எனக்கு உண்டு அதில் என் முன்னோர்களின் பங்களிப்பு ஒரு துளியேனும் இருக்கும் என்பதில் மிகுந்த பெருமையுடையவன். ஆனால் இந்து தர்மத்தில் நான் மிகவும் இரசிப்பதும் மதிப்பதும் அதன் மதமற்ற ஆன்மீகத் தன்மையைத்தான்.

‘தாய்மதம் திரும்புதல்’ என்பது ‘மதமாற்றம்’ என்பதற்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

விவாதத்திற்கான கேள்வி : இந்தியாவின் தாய்மதம் ஏதேனும் உள்ளதா? அது என்ன?

பி.கு: நண்பர் அரவிந்தன் நீலகண்டன் பதிவில் இட்ட பின்னூட்டம் போய்ச் சேரவில்லை அல்லது இன்னும் வெளியிடப்படவில்லையாதலால் இந்தப் பதிவு.

Popularity: 16% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....86 மறுமொழிகள் to “என் தாய்மதம் என்ன?”

 1. தாய்மதம்னு ஒன்னு கெடையாது. மதமும் மொழியும் மனிதன் தேர்ந்தெடுப்பது. தேர்ந்தெடுக்க உரிமையுடையது. எனக்குத் தெரிஞ்ச ஒரு தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்துல பிள்ளைங்க சர்ட்டிபிகேட்ல தாய்மொழி தமிழ்னு போட்டிருக்காங்க. அவங்க மொழி மாறுன மாதிரி..இவங்க மதம் மாறீட்டாங்கன்னு வெச்சுக்கலாம்னு தோணுது.

 2. தாய்வழி மொழி தாய்மொழி என்றால் தாய்வழி மதம்தானே தாய்மதமாயிருக்க முடியும். அதாவது தாய்மதம் என ஒருத்தருக்கு ஒண்னு இருந்தே ஆகணும் என்கிறபட்சத்தில்?

 3. மன்னிக்கவும் சிறில் அலெக்ஸ்.
  நான் அதை கவனிக்கவில்லை. ஊருக்கு சென்று திரும்பியதும் நண்பர் ஒருவரின் மின்னஞ்சல் பார்த்தேன். என் மின்னஞ்சல் பெட்டியில் வராமல் உங்கள் கமெண்ட் ப்ளாக்கரின் கமெண்ட் மாடரேஷனில் இருந்தது. பப்ளிஷ் செய்துவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நிற்க.
  இங்கு தாய் மதம் என்பதில் தாய் என்பது முன்னோர்கள் என்பதன் ஆகுபெயராக விளங்குகிறது. அவ்வளவே. பாரதத்தின் தாய் தர்மம் (மதம் என்கிற இஸம் என்கிற ப்ராட்டஸ்டண்ட் மானுடவியல் பதத்தை நீக்கிப் பார்த்தால்) அது நிச்சயமாக இந்து தருமம்தான். உதாரணமாக, போப் பெனிடிக்ட் விலக்கும் ஆண்டனி டி மெல்லாவை சிறில் அலெக்ஸ் நேசிக்கவைக்கும் காரணி சிறில் அலெக்ஸின் மனமண்டலத்தில் இன்னமும் நிறைந்திருக்கும் இன்னமும் கிறிஸ்தவத்தால் அழிக்கப்படாத இந்துத்துவம் தான். அண்டானி டி மெல்லாவும், குமாரப்பாவும் எதனால் பாரதமக்கள் மீது திணிக்கப்பட்ட கிறிஸ்தவத்திலிருந்து உருவானார்கள் என சிறிது சிந்தித்தால் பாரதத்தின் தாய் ‘மதம்’ எது என்னும் கேள்விக்கு விடை கிடைக்கும். தனது மூதாதையராக ஆடம்-ஈவ் என ஒரு அன்னிய தொன்மத்தையும், தனது பாவத்துக்கு ஈடாக இஸ்ரேலிய மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொறாமை கொண்ட தேவனின் ஒரே குமாரன் உயிர் மரித்து மீண்டார் என்கிற கற்பிதத்தையும் நீக்கிவிட்டு உள்ளூர் தொன்மங்களை தங்கள் மூதாதையரின் பாரம்பரிய தொன்மங்களை மீண்டும் சுவீகரித்துக்கொள்ளும் உரிமை கிட்டும் என்பதையும் இந்த ‘தாய்மதம் திரும்புதல்’ எனும் சொல்லாடல் கணக்கிலெடுத்துக்கொள்கிறது. மீண்டும் தங்கள் கமெண்ட் எனது வலைப்பதிவில் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அந்த தாமதம் இண்டெண்ஷனலாதல்ல என்பதனை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 4. அரவிந்த்,
  என்னுடைய தொன்மங்கள் என நான் நினைப்பது மனித வரலாற்றிற்கும் முந்தையது. மனித இனத்தின் துவக்கத்திலிருந்தே தற்போதைய மதங்கள் இருந்ததில்லை. இடைப்பட்ட தொன்மங்கள் எதுவாயிருந்தாலும் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுபோலவே மனிதனாலேயே உருவாக்கப்பட்டது இதில் ஒன்றிற்கு ஒன்று சளைத்ததுமல்ல இளைத்ததுமல்ல.

  எங்கேயோ இஸ்ரேயல் மண்ணில் உதித்த பொறாமை கொண்ட தேவன் நம் மக்களுக்கு அன்னியராக இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை ஏனென்றால் நம் மண்ணில் பிறந்து நம் மண்ணாலேயே செய்யப்பட்ட நம் தெய்வங்களே நம்மவர்களுக்கு அன்னியர்களாயிருக்கும்போது அது பெரிய விஷயமா என்ன?

  இந்து மதம் இந்தியாவில் எப்படி உருவானது? எந்த நாள் முதலாய் இந்தியர் அனைவருக்கும் அது தாய்மதமானது என்பதையும் விளக்கியிருக்கலாம்.

  மெய்மறை என மிஷனரிகள் சொல்வதுபோலவே தாய்மதம் என ஒரு தரப்பு சொல்லிவருகிறது என்றே நினைக்கிறேன்.

  கமெண்ட் வெளியிடாதது பெரிய விஷயமே அல்ல :) எப்படியும் பதிவிடவேண்டும் என நினைத்திருந்தேன்… ஞானியை படித்தபின்னர் எழுதிவிட்டேன்.

 5. லெமூரிய‌ன் சொல்கிறார்:

  சிறில்,

  மதம் என்று அழைக்கப்படும் எல்லாவற்றிற்கும் ஒரு பெயர்க்காரணம் அல்லது அர்த்தம் உண்டு.

  உலகின் மிகப் பழமையான மதமான யூதத்திற்கு ஈபுரு மொழியில் “கொண்டாடப்படுவது” என்ற அர்த்தமும் யாகோபின் நான்காவது மகனான யூதாவின் வழிவந்தவர்கள் என்ற பெயர்க்காரணமும் உண்டு.

  கிருஸ்துவத்திற்கு இயேசு கிருஸ்துவின் வழி வந்தவர்கள் என்கிற அர்த்தமும், இஸ்லாமிற்கு சரணடைதல் என்கிற அர்த்தமும் உண்டு. பௌத்த, ஜைன மதங்களுக்கும் உரிய‌ பெயர்க்காரணங்களும் உண்டு.

  ஆனால் இந்து என்கிற சொல் சிந்து என்கிற சொல்லில் இருந்து மறுவி வந்தது என்கிற பின்னணி மட்டும்தான் இருக்கிறது. ஆனால் வேதங்களிலோ, புராணங்களிலோ, மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. இந்து என்கிற சொல்லிற்கு பாரசீக மொழியில் இந்திய கண்டத்தைச் சேர்ந்தவன். அடிமை மற்றும் பெரியார், கலைஞர் கூறிய அர்த்தமும் உண்டு. 5000 ஆண்டு தொன்மையுடையது என்று கூறப்படும் ஒரு சமயத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்த பாரசீகர்கள்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  இந்து மதம்தான் இந்தியாவின் தொன்மையான மத நம்பிக்கை என்கிற வாதமே பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?. ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட‌ சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து என்கிற சொல்லை கடன் வாங்கி இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகிறது.

  மேலும் ஹிந்து, ஹரி, ஹரன் என்கிற சொற்களில் உள்ள வடமொழி ஆதிக்கமே தமிழருக்கு அது அன்னியமானது என்பதற்கு கட்டியம் கூறும்.

  Hinduism is only a congloromation of paganic faiths which were spread all over the sub continent before the conquest of Aliens.

  ஆகவே இன்று இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்க்கு தாய் மதம் ஒன்று இருக்குமானால் அது அய்யனார், விருமாண்டி, முனியாண்டி போன்ற நாட்டார் தெய்வங்களை தொழுது வந்த திராவிட பழங்குடியின சமயமாகவே இருக்க வேண்டும். இந்து மதம் என்பதே இந்திய நாடு என்பதைப் போன்ற So called Federal System ஒரு ஆகும்

 6. இந்துமதவெறியர்கள் தொடர்ந்து சொல்லிவரும் இந்தியா, இந்து, இந்தி போன்ற தேசிய வாதச் சொல்லாடல் தான் ‘தாய்மதம்’ என்று இந்துமதத்தை அடையாளப்படுத்தப்படுவதும், இந்து என்ற மதப்பெயரைத் தவிர்த்து அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கான பொதுத்தன்மை என்ற ஒன்று இல்லை.

  200 ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற ஒரே சொல்லில் இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சமயங்களும் பொதுவாக வெளிநாட்டினரால் சொல்லப்பட்டு, தற்போது பிச்சைக்காரனின் வாந்தியைப் போன்று ஒருங்கிணைக்கப்பட்டு வெளியில் தெய்வீக பிரசாதாமாக காட்டபடுகிறது. தாய்மதம் இந்து மதம் என்று சொல்வதன் மூலம் கிறித்துவ இஸ்லாமிய சமூகத்தினரை மன அளவில் தாக்க முடியும் என்றே கருதுகின்றனர். தலித்துகள் தாய்மதம் திரும்புகிறார்கள் என்று சொன்னால் புத்தமதத்திற்கு திரும்பினால் தான் அவ்வாறு சொல்ல முடியும், இந்துமதம் தாய்மதம் இல்லை, அது ஒரு மாயச் சொல்லாடல், பார்பன பனியா, இந்துவெறி கும்பல்கள் ( நன்றி பாரி.அரசு) தங்களுக்கு சேவை செய்ய தலித்துக்களை இந்துக்களாக அவர்களின் சம்மதமின்றியே அறிவித்துக் கொண்டன.

  மாற்று மதத்தினரை தொடர்ந்து இழிவு படுத்துவிதமாக இந்துமதம் தாய் மதம் என்று சொல்லப்படுவது கடும் கண்டனத்துக்குறியது. இந்துமதத்தை ஏற்றுக் கொள்பவன் வருண பேதத்தையும் ஏற்றுக் கொள்கிறான், போற்றுகிறான் என்றே பொருள். இந்தியாவில் வருண பேதம் ஒழியவேண்டுமென்றால் அது இந்துமதம் சிதைந்தால் மட்டுமே சாத்தியம்.

 7. லெமூரிய‌ன் சொல்கிறார்:

  மேலும் பாரசீகர்களின் படையெடுப்பிற்கு முந்தைய யாத்திரீகர்களான மெகஸ்தனீஸ் மற்றும் யுவான் சுவாங் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளில் இந்து என்கிற சொல் இடம்பெற்றிருக்கிறது என்று யாரவது ஒரு இந்துத்துவாவாதியை தக்க சான்றுகளுடன் நிரூபிக்க சொல்லுங்களேன் பார்ப்போம்.

 8. Anonymous சொல்கிறார்:

  ஏம்பா இந்த பிரமாணங்க பிழைப்பே மதத்தை சொல்லி சாப்பிடுறது தான். அந்த வயித்து பிழைப்பில ஒண்ணு தான் இந்த தாய் மதம் புரூடா. இவங்க சொல்ற மதத்திற்கும், இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கிறிஸ்தவம் ஒரு மதம். இந்து மதம் பிராமணர்களின் ஒரு மோசடி. இந்த நாட்டின் உண்மையான மக்களுக்கும், இந்த பிராமணர்களின் மதத்திற்கும் என்ன தொடர்பு. பல நூற்றாண்டுகளாக மண்ணில் வியர்வை சிந்தாமலே மதம் பெயரில் சோறு தின்னும் கூட்டமும் அதன் வழி வந்த நீல கண்டன்களும் இன்னும் தமிழர்களை ஏமாற்ற நினைத்தால் அது முட்டாள்தனம் தான்.

 9. க‌ழுகு சொல்கிறார்:

  இந்து என்ற ஒரு கட்டமைப்பு இல்லாவிட்டால் பார்ப்பனர்கள் அனாதைகளாகிவிடுவார்கள் என்ற அச்சத்திலும் அந்த கட்டமைப்பை வைத்து ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க வேன்டிய ஆசையிலும் அப்படி இல்லாத ஆட்சி முறையில் வாழ்வது சனாதன தருமப்படி மிகப்பெரும் பாவம் என்பதாலுமே ஒரு உருவாக்கல் தேவைப்பட்டது.

  இந்த காரனத்தினாலேயே யார் இந்து என்று அரசியல் சாசனத்தில் வரையறுக்கும் போது யாரெல்லாம் இஸ்லாமியன் இல்லையோ, கிறித்துவன் இல்லையோ, ஆங்கிலோ இந்தியன் இல்லையோ, பெர்சியன் இல்லையோ அவர்களெல்லாம் இந்து என்று கூறினார்கள்.

  இதை தான்டி ஒரு மனிதன் இந்த மன்னில் பிறக்க முடியுமா? ஆடு எது என்று கேட்டால் அதை பற்றி சொல்லாமல் எதுவெல்லாம் மாடு இல்லையோ, குதிரை இல்லையோ, கழுதையில்லையோ அதுதான் ஆடு என்று கூறுவது போல் உள்ளது பார்ப்பனீய திருவிளையாடல்கள்.

  இங்கே இந்து என்ற‌ ஒரு இழிவை யாரும் தேடிச்சென்று ஏற்ப‌டுத்திக்கொன்ட‌தில்லை, அனைவ‌ரின் த‌லை மீதும் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ தினிக்க‌ப்ப‌ட்ட‌து.

 10. குமரி நாட்டான் சொல்கிறார்:

  #
  //லெமூரிய‌ன் on 26.04.2008 at 05:28 (Reply)

  மேலும் பாரசீகர்களின் படையெடுப்பிற்கு முந்தைய யாத்திரீகர்களான மெகஸ்தனீஸ் மற்றும் யுவான் சுவாங் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளில் இந்து என்கிற சொல் இடம்பெற்றிருக்கிறது என்று யாரவது ஒரு இந்துத்துவாவாதியை தக்க சான்றுகளுடன் நிரூபிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். //

  பண்டிட் ஜவகர்லால் நேரு வும் இதைதான் சொல்லி இருக்கிறார் என்று ஏதோ ஒரு குறிப்பில் படித்து இருப்பது நினைவு வருதுங்கோ!

  லெமூரியன் ஐயா கேட்ட கேள்விக்கு மதத்தலைவர்கள் என்று அலட்டிக்கொள்வர்கள் பதில் சொல்வார்களா?

  குமரி நாட்டான்

 11. க‌ழுகு சொல்கிறார்:

  தாய் மதம், பாரதம், ஹிந்து என்ற சொல்லாடல்கள் எல்லாம் பார்ப்பனியத்தை மற்ற மக்கள் மீது தினிப்பதற்க்காக சொல்லப்படும் வார்த்தை விளையாட்டுகள். பாரதத்தின் பெருமை என்பது ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி பாஞ்சாலியின் நாகரீகம். இந்த நாகரீகத்தை ஏற்றுக்கொன்டோர் எத்தனை பேர். சூதாட்டமும் காம விளையாட்டுக்களும் நிகழ்ந்தாக கூறும் மகா பாரத்ததை பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அழங்கோல தகாத உறவா திராவிட சமுதாயத்தில் இருந்தது.

 12. தேவையில்லை சிறில். இப்ப தாய்ய்மொழின்னா என்ன? அம்மா பேசுற மொழிதானே? அந்த அம்மாவே யார்னு தெரியாதவங்களுக்கு என்னது தாய்மொழி..எது தாய்மதம்னு சொல்ல முடியும்? நான் சொன்ன தெலுங்குக் குடும்பத்துல அம்மா பேசுன மொழி தெலுங்குதானே..அப்புறம் எப்படி பேரப்பிள்ளைங்க சர்ட்டிபிகேட் தமிழாச்சு? ஆக ஒருவன் எதை தன்னுடைய மொழியென்றோ மதமென்றோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறானோ அதுதான் அவனுடைய மொழி அல்லது மதம்.

  இப்படி வைத்துக் கொள்வோம். ஒருவேளை ஒருவன் ஒரு மதத்தில் பிறந்து அவனே விரும்பி வேறொரு மதத்திற்கு மாறி… பிறகு திரும்பவும் பழைய மதத்திற்கே போகிறான் என்றால் வேண்டுமானால் தாய்மதம் திரும்புகிறான் என்று சொல்லலாம்.

  ஆகக்க்கூடி…. வயது வந்த ஒருத்தர் சுய நினைவோடும் விருப்பத்தோடும் தான் இன்ன மதத்தான் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால்… முதன்முதலில் அப்படி அடையாளப் படுத்தும் மதத்தை வேண்டுமானால் தாய்மதம் எனலாம்.

 13. // பாரதத்தின் பெருமை என்பது ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி பாஞ்சாலியின் நாகரீகம். இந்த நாகரீகத்தை ஏற்றுக்கொன்டோர் எத்தனை பேர். சூதாட்டமும் காம விளையாட்டுக்களும் நிகழ்ந்தாக கூறும் மகா பாரத்ததை பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அழங்கோல தகாத உறவா திராவிட சமுதாயத்தில் இருந்தது. //

  கழுகு, நான் உங்க பின்னூட்டத்தை பெண்ணீய வழியில் எதிர்க்கிறேன். ஐவருக்குப் பத்தினி பாஞ்சாலி என்பதெல்லாம் சரி. கற்பு என்றால் இருப்பாலாருக்கும் பொதுவாக வைத்த ஏதாவது ஒரு மானமுள்ள மதத்தைக் காட்டுங்களேன். எல்லா மதங்களும் இந்த விஷயத்தில் ஒரு ஆண் ஏன் பல பெண்களை மணக்கலாம் என்பதற்கு பலப்பல காரணங்களைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் எந்த மதமும் நடுநிலையானதில்லை.

 14. தாய்மதம் திரும்புதல் என்பது ஒரு ஊடக அம்பு. திட்டமிட்டுப் பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகம். மதம் மாறுதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே உண்மையில் இருக்க முடியும். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி ஒரு மதத்திற்குள் அடைக்கும் யதேச்சாதிகாரச் சூழலில் இன்று இந்தியா இல்லை என்பதே உண்மை. ஆக, மதம் மாறுவது என்பது தனிமனித விருப்பம். கட்டாய மதமாற்றம் என்ற வார்த்தைப் பிரயோகம் வெகு காலமாக ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதை நாம் எதிர்க்காமல் இருந்து விட்டதால், இன்றைக்கு தாய்மதம் திரும்புதல் என்ற ஊடக அம்பு எறியப்படுகிறது. இந்து மதத்திலிருந்து கிறித்துவத்துக்கோ இஸ்லாத்திற்கோ மதம் மாறுவதாகட்டும் அல்லது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறுவதாகட்டும், அது தனி மனித உரிமை. அதை விமர்சனத்திற்கோ, விசாரணைக்கோ உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் கொண்டாடவேண்டிய அவசியமுமில்லை.

 15. இந்து மதத்தை/தர்மத்தை விமர்சிப்பது இந்தப்பதிவின் நோக்கமல்ல. அந்த ரீதியில் பின்னூட்டங்களை தவிர்க்க நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

  என்னுடைய ஆதங்கமெல்லாம் மற்றவர்கள் செய்யும்போது இது ‘கட்டாய மதமாற்றமாகவும்’ சிலர் செய்யும்போது ‘தாய்மதம் (அவர்களாகவே) திரும்புதலாகவும்’ எப்படி காட்டப்படுகிறது என்பதுதன். இதையும் மதமாற்றம் என்றே அழைக்கவேண்டும்.

  மனித இனத்துக்கு ஏது தாய் மதம்? இந்தியாவில் எத்தனையோ மதங்கள் வாழ்ந்தும் வீழ்ந்தும் சென்றன. பல தலைமுறைகளாக ‘தாய் மதங்கள்’ இருந்தும் இல்லாமலும் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் மொத்தமாய் மறந்துவிடக்கூடாது.

 16. dharumi சொல்கிறார்:

  நீலகண்டன்,
  ஒரு சந்தேகம். //ஒரு பொறாமை கொண்ட தேவனின் ஒரே குமாரன்..// – இது புரியவில்லை.

 17. நன்றி சிறில்,
  அவரவருக்குப் பிடித்த கொள்கைகளைப் பின்பற்றுவது,மத வழி நடப்பது, அந்தக் கொள்கைகளை மதித்து மற்றவரிடம் அன்பு செலுத்துவது இவையே நல்லதொரு மதமாக இருக்க
  வழிகள். திரும்புவது என்ற வார்த்தை வேண்டாம். இப்படித்தான் நாகரீகம் பலவிதத்தில் மாறி வந்து இருக்கிறது என்று நம்புகிறேன். மதப் பெரியவர்களே எல்லோரும் எந்த ஒரு இறை சக்தியையாவது வழிபடுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

  எங்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்த சொல்லிக் கொடுக்கப் பட்ட வழி அகிம்சையும்,அன்பும்தான்.

 18. raghunathan சொல்கிறார்:

  Dear cyril, you start any honest debate and there will be atleast two persons waiting on the wings to pounce on things like “parppaneeyam, panchali” etc etc. Living in todays ethos, people find fault with what jesus did, rama didnot do, was panchali chaste or not etc. Even assuming these are mere stories, they can be true only to the times the characters belonged to and there is nothing called universal rule which is now followed and which should have been followed all the thousands of years of past. every major religion is a beautiful flower, only with different colours, different flavour and different tasting honey. They are beautiful in their contrast only and i would die of sheer monotony if a single religion with a single rule book is thrown upon the entire mankind. My god, like my father used to say, eat the laddoo in hand, dont keep counting the boondhis. My god bless us.

 19. சீனு சொல்கிறார்:

  //Dear cyril, you start any honest debate and there will be atleast two persons waiting on the wings to pounce on things like “parppaneeyam, panchali” etc etc.//

  :))

 20. dharumi சொல்கிறார்:

  சிறில்,
  ஒரு சின்ன விளம்பரம் இங்கே.
  இப்பதிவோடு கொஞ்சம் தொடர்புள்ள என் பதிவு ஒன்று காண்க.

 21. //என்னுடைய தொன்மங்கள் என நான் நினைப்பது மனித வரலாற்றிற்கும் முந்தையது. மனித இனத்தின் துவக்கத்திலிருந்தே தற்போதைய மதங்கள் இருந்ததில்லை. இடைப்பட்ட தொன்மங்கள் எதுவாயிருந்தாலும் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுபோலவே மனிதனாலேயே உருவாக்கப்பட்டது இதில் ஒன்றிற்கு ஒன்று சளைத்ததுமல்ல இளைத்ததுமல்ல//
  தொன்மம் என்றால் mythology என்பதற்கான தமிழ் வார்த்தை. எல்லா தொன்மங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். என்னைப் பொறுத்தவரையில் ஏசு என்பது இங்கே திணிக்கப்பட்ட தொன்மம். ஆனால் சாமக்கொடைக்கார சாமி இந்த மண்ணின் தொன்மம்.
  //நீலகண்டன்,
  ஒரு சந்தேகம். //ஒரு பொறாமை கொண்ட தேவனின் ஒரே குமாரன்..// – இது புரியவில்லை.//

  தருமி : பொறாமையுள்ள தேவன் – பார்க்கவும் யாத்திராகமம் 20:4-5 ; அந்த தேவனின் ஒரே குமாரன் பார்க்கவும்: யோவான் 1:14

  அடுத்ததாக கழுகு கூறியதை எடுத்துக்கொள்ளலாம்: இந்த காரனத்தினாலேயே யார் இந்து என்று அரசியல் சாசனத்தில் வரையறுக்கும் போது யாரெல்லாம் இஸ்லாமியன் இல்லையோ, கிறித்துவன் இல்லையோ, ஆங்கிலோ இந்தியன் இல்லையோ, பெர்சியன் இல்லையோ அவர்களெல்லாம் இந்து என்று கூறினார்கள்.

  உண்மையில் அரசியல் சாசனம் சொன்னது என்ன என்பதையும் பார்க்கலாம்:
  (a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
  (b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
  (c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion

  (a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
  (b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
  (c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion.

  இது ஒன்றும் இந்துக்களல்லாதவரை இந்து தருமத்துக்குள் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியல்ல. இது குறித்து எழும்பிய கேள்விக்கு விடையளித்த அண்ணல் அம்பேத்கர் கூறினார்: ” புத்தர் வைதீக பிராம்மணர்களிலிருந்து மாறுபட்ட போது தத்துவங்களில் மட்டுமே மாறுபட்டாரேயன்றி இந்து சட்ட அமைப்பினை தொடவில்லை. தம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் புதிய சட்ட அமைப்பினை அளித்திடவில்லை. மகாவீரர் மற்றும் சீக்கிய குருக்களுக்கும் இது பொருந்தும்.” (Times of India, 7-2-1951)

  மட்டுமல்ல ஏதோ இருநூறு ஆண்டுகளாகத்தான் இந்து தருமம் என்பது உருவானது இந்து – உணர்வு உருவானது என்பதும் தவறான கருதலாகும். இந்தியவியலாளரும் நிச்சயமாக இந்துத்துவ ஆதரவாளரல்லாதவருமான டேவிட் லாரன்ஸென் இந்து தருமம் உருவானதைக் குறித்து கூறுகையில் ‘இது இந்து தேசிய வாதிகளுக்கு ஆதரவாகிவிடும் என்றாலும் கூட இதனை நாம் சொல்ல வேண்டியுள்ளது’ என பீடிகையுடன் சொல்கிறார்: “இந்துயிசம் என்பதனை ஒரு கட்டமைப்பாகவோ அல்லது கண்டுபிடிப்பாகவோ கருதித்தான் ஆக வேண்டும் என்றால் அது நிச்சயம் காலனிய கட்டமைப்பல்ல,அது ஐரோப்பிய கட்டமைப்பல்ல அது இந்திய கட்டமைப்பு கூட அல்ல. …அது பெரும் வரலாற்று நிகழ்வுகளாலும், முடிவற்றதும் சிக்கலாக அமைந்ததுமான சமூக-நம்பிக்கைகளும் சடங்குகளும், தனிமனித மற்றும் சிறுக்குழுக்களென அவர்களின் தினசரி வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளும் சில அடிப்படையான கருத்தாக்கங்களுடன் தொடர்ந்து நிகழ்த்திய இயக்கங்களிலிருந்து உருவானதாகும்.” (Who invented Hinduism, p.36) சுருக்கமாக சொன்னால் சாதி அமைப்பு அல்ல இந்து தருமத்தின் அடிப்படை. எனில் இன்றைக்கு கிறிஸ்தவ இறையியலில் அகஸ்டைனுக்கு இருப்பதைக்காட்டிலும் மனு ஸ்மிருதிக்கு இந்து தருமத்தில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. பாணர்களை சர்ச்சுக்குள் விடக்கூடாது அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லிய அகஸ்டைனை- உடலுழைப்பு என்பதே பாவத்தின் அடையாளம் என்று சொல்லிய அகஸ்டைனை இன்றைக்கும் கத்தோலிக்க இறையியல் சொல்லிக் கொடுப்பதால் சாதியமே கத்தோலிக்கத்தின் அடிப்படை அடையாளம் என்று சொல்வது எத்தனை தவறோ, அத்தனை தவறுதான் இந்து தருமத்தின் அடிப்படை சாதியம் என்பது. மற்றபடி அய்யனாரும் விருமாண்டியும் இந்து தெய்வங்கள் அல்ல என்பது மடத்தனமான கூற்று. இன்றைய தேதியில் என்னிடம் 2004 முதல் 2007 வரைக்குமாக குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவர்களால் உடைக்கப்பட்ட கோவில்களின் தொகுப்பு இருக்கிறது. அவற்றில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டவை எல்லாமே சாஸ்தா, அம்மன் மற்றும் நாகர் சிலைகள்தாம். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மிசிநரிகள் எழுதிய ஆவணங்களும் உள்ளன அவையும் இந்த கோவில்கள் எப்படி மிசிநரிகளால் உடைக்கப்பட்டன என்பதனை விலாவாரியாக விவரிக்கின்றன. ஆனால் அன்று முதல் இன்று வரை இந்த ‘நாட்டார் தெய்வங்கள்’ என கிறிஸ்தவ மானுடவியலால் வரையறுக்கப்படுகிற தெய்வங்களை காப்பாற்றி அவற்றுக்காக போராடி வருவது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தினர்தாம். இந்து இயக்கங்கள்தாம். எனவே இந்த ‘பழங்குடி தெய்வ’ ஜல்லி அடிப்பவர்கள் முதலில் இந்த தெய்வங்களுக்கு உண்மையில் ஆபத்தினை விளைவிப்பவர்கள் யார் என்பதனை பார்த்துவிட்டு வந்து பேசவேண்டும். ஏற்கனவே காலாவதியாகிபோன ஆரிய-திராவிட கதையளப்புகளை வைத்துக்கொண்டு மக்களை துண்டு போடுவதை விட்டுவிடுவது மன ஆரோக்கியத்துக்கு நல்லது. நிச்சயமாக இந்துஸ்தானத்தின் தாய் தருமம் இந்து தருமமே – நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என கலிலியோ போப்பின் எதேச்சாதிகாரத்துக்கு பதில் சொன்னது போல- நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துஸ்தானத்தின் தாய்தர்மம் இந்து தருமம்தான்.

 22. இதனை இன்னும் விரிவாக சிந்திக்கலாம். ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை ‘நான் ஒருவனே தேவன் என்னை அன்றி வேறு தேவன்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்பது. அதுவே ஏசுவில் ‘நித்திய நரகமாக’ விரிவடைந்து இஸ்லாமில் காஃபிர்களை போராடி மதமாற்றும் வரை தொடரும் புனித யுத்தமாக மிளிர்கிறது. இந்து தருமத்தில் ‘சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பலவாறு அறிகிறார்கள்’ என்பதே அடிப்படையாக அமைகிறது. ஆபிரகாமிய மத மரபுகளில் எப்போதாவது ஒரு பிரான்ஸிஸ் ஆஃப் அஸிஸியோ அல்லது மன்சூரோ அல்லது எக்கார்ட்டோ அல்லது அண்டனி டி மெல்லாவோ வரலாம். இந்து மரபிலும் பிற தெய்வங்களை பழிப்பவர் வரலாம். ஆனால் அவை எப்போதும் மைய நீரோட்டம் ஆனதில்லை. ஹரியா சிவனா என்கிற ஆழ்வார்க்கடியான்களை ‘ஹரியும் சிவனும் ஒன்ணு அறியாதவன் வாயில் மண்ணு’ என சொல்லி நகரும் மண்ணின் ஞானத்தை ‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி’ எனும் பதத்திலிருந்து அடியெடுக்க முடியும். இதுதான் இந்த மண்ணின் தருமங்களை ஆபிரகாமிய மதங்களிலிருந்து மாறுபடுத்துகிறது. எப்போது ‘என் தேவனே உண்மை தேவன்’ என்கிற ஆபிரகாமிய தேற்றத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறானோ அவன் இயல்பாகவே இந்துஸ்தானத்தில் இந்து மரபுக்குள் வந்துவிடுகிறான்.

 23. லெமூரிய‌ன் சொல்கிறார்:

  ஐயா அரவிந்த நீலகண்டன் அவர்களே,

  என்னுடைய வாதங்களுக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே!

 24. இந்தியன் சொல்கிறார்:

  /* ஆனால் வேதங்களிலோ, புராணங்களிலோ, மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. */

  என் பிறப்பு சான்றிதழில் என் பெயர் இல்லை. ஆனாலும் நான் பிறந்தேன் என்பது உண்மை. என் ஊரில்(நாட்டில்/உலகில்) நான் மட்டுமே வசிக்கும்பட்சத்தில் எனக்கு எந்த பெயரும் தேவையில்லை. என்ன செய்வது, என் வீட்டிலேயே நான் பிறக்கும் போது 3 பேர் இருந்தனர்? பிற்பாடு எனக்கு ஒரு பெயரும் வைக்கபட்டது.

  கடைசியாக, உங்கள் பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயர் உள்ளதா?

  /*என்னுடைய தொன்மங்கள் என நான் நினைப்பது மனித வரலாற்றிற்கும் முந்தையது. மனித இனத்தின் துவக்கத்திலிருந்தே தற்போதைய மதங்கள் இருந்ததில்லை. இடைப்பட்ட தொன்மங்கள் எதுவாயிருந்தாலும் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுபோலவே மனிதனாலேயே உருவாக்கப்பட்டது இதில் ஒன்றிற்கு ஒன்று சளைத்ததுமல்ல இளைத்ததுமல்ல.*/

  இல்லை சிறில். எல்லா மக்களுக்கும் ஒரே விதமான சுற்று சூழல் கிடைத்தாலும் ஒவ்வொருவரும் வேறு வேறு குணாதிசியங்களை பெறுவது எப்படி? அவரவரின் அனுபவங்களையும் அதன் மூலம் ஒருவர் ஏற்படுத்தி கொள்ளும் மதிப்பீடுகளும் தான் அதற்க்கு காரணமாக இருக்க முடியும்.

  மேலும், மதங்கள்/தொன்மங்கள் ஆகியவற்றின் இடையே இருக்கும் மற்றொரு வித்தியாசம் அவற்றில் காணப்படும் “இளகியதன்மை”. எல்லா மதமும் இதை அனுமதிப்பதில்லை. பிற பின்.

 25. //கற்பு என்றால் இருப்பாலாருக்கும் பொதுவாக வைத்த ஏதாவது ஒரு மானமுள்ள மதத்தைக் காட்டுங்களேன். //

  ஜிரா,

  இஸ்லாமிய மதத்தில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எத்தனை பேரை திருமணம் செய்துகொள்வது என்பதில் சம உரிமை வழங்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். விதவை மறுமணம், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு மறுமணம் போன்ற சுதந்திரங்கள் இஸ்லாமிய மதத்தில் இருக்கின்றது.

 26. லெமூரியன் இதில் பதில் சொல்ல என்ன இருக்கிறது? எப்படி ஆபிரகாமிய மதங்கள் வரையறை செய்யப்படுகின்றனவோ அப்படியே இந்து தருமமும் வரையறை செய்யப்பட வேண்டும் என நீங்கள் சொன்னால் அது எப்படி வாதம் ஆகும்? ஆரியர்கள் என்கிறீர்கள், கோசாம்பி போன்ற ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட வரலாற்றறிஞர்கள் கூட சாதி அமைப்பு ஆரியர் வருவதற்கு முன்னர் இருந்தது என்கிறார்கள். ஆரிய படையெடுப்பு நிகழவே இல்லை என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரசீகர்கள் இந்துக்களின் வர்ணாஸ்ரம அமைப்பையே இழிவாக விளித்தார்கள் என நீங்கள் சொல்வது நல்ல நகைச்சுவை. இந்து பக்தி இயக்க சாது சன்னியாசிகள் சாதியை விமர்சித்த அளவு கூட இஸ்லாமியர்கள் சாதிய அமைப்பினை எதிர்க்கவில்லை என சொல்வது ஏதோ இந்துத்துவ வாதி அல்ல: இர்பான் ஹபீப். அவர் எழுதுகிறார்: “மத்திய கால இஸ்லாமிய இலக்கியங்களிலெல்லாம் இந்துக்கள் காஃபிர்கள் என கூறப்படுகிறார்கள்.அவர்களது பல தெய்வ வழிபாடும் விக்கிரக வழிபாடும் கண்டிக்கப்படுகிறதே அல்லாமல் சாதி அமைப்போ அல்லது தீண்டாமையோ அல்ல” (இண்டியன் எக்ஸ்பிரஸ், 27-12-1992). மொத்த இஸ்லாமிய இலக்கியத்திலும் அல்ப்ரூணி மட்டுமே சாதி அமைப்பினை சிறிது கண்டிக்கிறார் – அதுவும் போகிற போக்கில். ஆனால் இஸ்லாமிய மன்னர்கள் சாதியத்தை வளர்க்கவே செய்தார்கள்,. அதுவும் உலேமாவின் ஆதரவுடன். இன்னும் சொன்னால் பாரசீக சமுதாயத்திலும் சாதி அமைப்பு இருந்தது (De Lacy O’Leary, Arabic Thought and Its Place in History, பக்.103) சாதி அமைப்பு என்பது சமுதாயத்தில் உருவான ஒரு அமைப்பு அது காலனிய காரணங்களால் இறுக்கமடைந்தது. ஆனால் அதுவே இந்து தருமத்தின் வரையறை என நீங்களாகவெ சொல்லிக்கொள்வீர்கள். உங்கள் வாதத்தின் குளறுபடி புரியவேண்டுமானால் இதோ ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன்: “ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து என்கிற சொல் ” என்பது உங்கள் வாதம். இல்லை என்கிறேன். இதற்கு பொருள் என்ன? பாரசீகர்கள் இந்திய வர்ணாஸிரம அமைப்பு பிறப்படிப்படையில் மக்களை இழிவாக நடத்தப்படுவதை பார்த்து அதில் வெறுப்பு கொண்டு அத்தகைய முறை கொண்டிருந்தவர்களை இந்து என அழைத்தார்கள் என்கிறீர்கள் அல்லவா? ஆனால் இந்து என்கிற பதத்திற்கு அவர்களது அகராதிகளில் என்ன பொருள் இருக்கிறது என பார்க்கலாமா? (பொதுவாக உங்களைப் போன்றவர்களுக்கு பிடித்த விளையாட்டல்லவா அது?) பொதுவாக அவை ‘கறுப்பு’ , ‘அடிமை’, ‘திருடன்’ என்பதாக உள்ளன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது எளிது. ஆபிரகாமிய மத தொன்மங்களில் கறுப்பு என்பது அடிமை இனத்தவரின், தீயவர்களின் நிறம். ஆக, ஒரு ஆபிரகாமிய இனவாத அடைமொழியாக மாற்றப்பட்ட ஒரு பதத்தினை (அதுவும் சிந்து என்கிற வேதத்தில் காணப்படுகிற சமஸ்கிருத பதத்திலிருந்து எடுத்து உருவாக்கப்பட்ட பதத்தினை) மீட்டெடுத்து அதனை பெருமை மிக்க பதமாக இந்துக்கள் மாற்றியுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமே ஆகும். ஆக உங்கள் வாதங்களே புனைவுகளின் மீது அமர்ந்திருக்கையில் நான் அவற்றை உடைப்பது எப்படி?

 27. லெமூரிய‌ன் சொல்கிறார்:

  ஐயா அரவிந்தன் நீலகண்டன் அவர்களே,

  காசு வாங்கிக்கொண்டு ஒரு குற்றவாளியை நிரபராதி என்று வாதாடும் வழக்கறிஞரின் சாதுர்யம்தான் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.

  //பாரசீகர்கள் இந்திய வர்ணாஸிரம அமைப்பு பிறப்படிப்படையில் மக்களை இழிவாக நடத்தப்படுவதை பார்த்து அதில் வெறுப்பு கொண்டு அத்தகைய முறை கொண்டிருந்தவர்களை இந்து என அழைத்தார்கள் என்கிறீர்கள் அல்லவா? //

  ஆரியர்கள் எப்படி சூத்திரனையும் பஞ்சமனையும் தன்னை விட தாழ்ந்தவனாக கருதினார்களோ/கருதுகிறார்களோ அதைப் போன்று பாரசீகர்கள் இந்தியாவில் வாழ்ந்த அனைவரையும் (ஆரிய, திராவிட இன வேறுபாடுகள் இன்றி) இந்து என்று பொதுவாக இழிவாக அழைத்தார்கள். பாரசீகர்கள் வர்ணாசிரமத்தை எதிர்த்தார்கள்/வெறுத்தார்கள் என்று நான் குறிப்பிடவே இல்லையே. சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயத்தை தங்கள் ஆளுமைக்கு கீழ் கொண்டுவர அவர்களுக்கு வர்ணாசிரம் உதவிதான் புரிந்திருக்கும். சூத்திரன் ஆளும் நாட்டில் இருப்பதைவிட வேறு எங்காவது வாழலாம் என்று 80களில் பார்ப்பனர்கள் அமேரிக்காவிற்கு போனது போல உயர்சாதியினர் ஆளுகைக்கு கீழ் இருப்பதை விட அந்நியர்களில் ஆளுகைக்கு கீழ் வாழ்வது மேல் என்று இந்திய கண்டத்தின் பழங்குடியினர்களான சூத்திரர்கள் பஞ்சமர்களின் ஆதரவு கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

  அய்யா அ.மார்க்ஸ் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

  http://www.keetru.com/anicha/Nov05/marx_9.php

  ‘ஸ’ எப்படி ‘ஹ’ ஆனது என்று விளங்கும்.

  மெகஸ்தனீஸ் மற்றும் யுவான் சுவாங் ஆகியோரின் பயணக் குறிப்புகளில் இந்து என்கிற சொல்லே இடம் பெறாதது பற்றிய என்னுடைய கருத்துக்கும் தாங்கள் பதில்ளிக்கவில்லை!

 28. லெமூரியன் ஏதோ 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பாரசீகர்கள் இந்து என்கிற பதத்தை பயன்படுத்தியதாக கூறியது கூட தவறான தரவேயாகும். “குறைந்தபட்சம் கிமு ஆறாம் நூற்றாண்டு முதல் பாரசீகத்தின் டாரியஸ் காலத்திலிருந்தாவது இந்து எனும் பதம் பிராந்திய, மத மற்றும் பண்பாட்டு ரீதியிலான அடையாளப்படுத்துதலை குறித்தாகவே அமைந்திருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அது சில சூழல்களில் தேசியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.” *(Brian K. Pennington,Was Hinduism Invented?: Britons, Indians, and the Colonial Construction பக். 168)
  நிற்க
  திருவாளர். லெமூரியன், “ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட‌ சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து ” என்கிற தங்கள் வார்த்தைகளுக்கு பின்னர் எப்படி பொருள் கொள்வது?
  நிற்க.
  //ஆரியர்கள் எப்படி சூத்திரனையும் பஞ்சமனையும் தன்னை விட தாழ்ந்தவனாக கருதினார்களோ/கருதுகிறார்களோ அதைப் போன்று பாரசீகர்கள் இந்தியாவில் வாழ்ந்த அனைவரையும் (ஆரிய, திராவிட இன வேறுபாடுகள் இன்றி) இந்து என்று பொதுவாக இழிவாக அழைத்தார்கள். //

  முதலில் ஆரியர்கள் சூத்திரனை தன்னை விட தாழ்ந்தவனாக கருதினார்கள் என்பதே மடத்தனமான வாதம். நீங்கள் சொல்லுகிற ஹுவான் சுவாங்கே சூத்திரன் அரசாண்டதை சொல்லியிருக்கிறது. மகாபாரதமும் சூத்திரர்கள் அரசவையில் இடம்பெற்றிருந்ததை சொல்லுகிறது (அண்ணல் அம்பேத்கரின் சூத்திரர்கள் யார் என்கிற நூலில் இதற்கான சான்றாதாரங்களை காணலாம்.) சூத்திரன் என்பதும் பிராம்மணன் என்பதும் தொழிலடிப்படையிலான பிரிவாக தோன்றி பின்னர் பிறப்படிப்படையிலாக இறுக்கமடைந்தன. இதனையும் அம்பேத்கரே தெளிவாக நிலைநாட்டுகிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இன்று கருதப்படும் பலர் வேதங்களை இயற்றியவர்களாகவும் இருந்துள்ளனர். எனவே வெளியே இருந்து வந்த ஆரியர்கள் இங்குள்ள திராவிடர்களை அடிமைப்படுத்தி சாதி அமைப்பை உருவாக்கினார்கள் என்பது எவ்வித ஆதாரமும் இல்லாத கதை. அம்பேத்கர் முதல் சங்கமித்ரா வரை நொறுக்கி போட்ட இந்த கதையை தூக்கி எறிந்துவிட்டு சாதியம் எனும் சமுதாய பிரச்சனையை தக்க அறிவியல் தரவுகளுடன் ஆராய முன்வாருங்கள். மற்றப்படி சாதியமே இந்து தருமம் என்கிற உங்களைப் போன்றவர்களின் கூற்றை ஏற்கனவே தவிடு பொடியாக்கியுள்ளார்கள் நெல்லையில் தாய் தருமம் திரும்பிய தலித்துகள்.

 29. அரவிந்தன்,
  தொன்மம் என்பது பழமையை அல்லது முந்தைய வரலாற்றை குறிக்கிறது என்றே நினைக்கிறேன். Myth என்பதற்கு கட்டுக்கதை என்று பொருள். போகிற போக்கில் இயேசுவையையும் கட்டுக்கதை எனச் சொல்லிவிட்டீர்கள். பரவாயில்லை அதற்கும் சில புத்தகங்களை படித்திருக்கலாம்.

  4ஆம் நூற்றாண்டில் புனித அகஸ்டின் பல்வேறு இறையியல் கொள்கைகளை எழுதியது உண்மை. திருச்சபை அவற்றை இன்றைக்கும் முழுமையாக பிடித்துக்கொண்டிருக்கவில்லை. பல எதிர் கருத்துக்களையும் மறுப்புக்களையும் அதிகாரபூர்வமாக செய்துள்ளது. மீண்டும் மீண்டும் தன்னுடைய இறையியலையே அலசி ஆராய்ந்து மாற்றங்களைச் செய்துவர்ருகிறது. இதனால் உங்களுக்குப் ‘பொறாமை’ ஒன்றுமில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் மனுவை அதிகாரபூர்வமாக நிராகரித்து மனுவால் ஒடுக்கப்பட்டு வதைக்கப்பட்டவர்களுக்காக மன்னிப்புக் கேட்க இங்கே யாருமில்லை. நீங்கள் முன்வந்தால் நலம்.

  சிலைகளை, கோவில்களை அழிப்பது கண்டிக்கத்தக்க குற்றம், அதை சட்டப்படி எதிர்கொள்ளலாம் ஆனால் அத் தெய்வங்களின் பழமையை அதன் தொன்மத்தை, அந்த மண்ணுக்கும் அதற்குமானத் தொடர்பையே அழிப்பதென்பது..?

  //நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துஸ்தானத்தின் தாய்தர்மம் இந்து தருமம்தான்//

  :)
  மூக்குக்குக் கீழே ஒரு இஞ்ச் மீசை வளர்த்துக்கொண்டு நீங்கள் இந்தியாவின் சர்வாதிகாரியாகும்போது அப்படி ஒரு சட்டத்தை எதிர்பார்க்கிறேன்.

 30. //காசு வாங்கிக்கொண்டு ஒரு குற்றவாளியை நிரபராதி என்று வாதாடும் வழக்கறிஞரின் சாதுர்யம்தான் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. //

  சூப்பர். எத்தனை படித்தாலும் முன்முடிவோடு படிக்கும்போது எப்படி உண்மை தெரியும்..

  நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்களை “இந்து” என்று எப்படி கூறலாம் என்பதற்கு நேரிடையாக பதில் சொல்லாமல்.. அவர்கள் கோவில்களை இடித்தது யார் என்று ஆதாரம் கொடுப்பது என்ன டெக்னிக்?

 31. Mythology என்பது கட்டுக்கதை அல்ல. அது தெய்வீகத்தன்மை நிரம்பிய கதையாடல். இளங்கலை இலக்கிய மாணவன் கூட இந்த வேறுப்பாட்டினை கூறிவிடுவான். ஆனால் உங்களுக்கு ஐயமிருப்பின் சிறந்த இலக்கியவாதியான ஜெயமோகனையே கேட்டுக்கொள்ளலாம். உங்கையோ காம்பெல்லையோ உங்கள் இறையியல் வகுப்புகளில் கற்றுக்கொடுக்காதது வருத்தமான விஷயமே.

  //4ஆம் நூற்றாண்டில் புனித அகஸ்டின் பல்வேறு இறையியல் கொள்கைகளை எழுதியது உண்மை. திருச்சபை அவற்றை இன்றைக்கும் முழுமையாக பிடித்துக்கொண்டிருக்கவில்லை. பல எதிர் கருத்துக்களையும் மறுப்புக்களையும் அதிகாரபூர்வமாக செய்துள்ளது. மீண்டும் மீண்டும் தன்னுடைய இறையியலையே அலசி ஆராய்ந்து மாற்றங்களைச் செய்துவர்ருகிறது. இதனால் உங்களுக்குப் ‘பொறாமை’ ஒன்றுமில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் மனுவை அதிகாரபூர்வமாக நிராகரித்து மனுவால் ஒடுக்கப்பட்டு வதைக்கப்பட்டவர்களுக்காக மன்னிப்புக் கேட்க இங்கே யாருமில்லை. நீங்கள் முன்வந்தால் நலம்.//

  நல்லது சிறில் அலெக்ஸ். இன்றைய தேதி வரை அகஸ்டினின் இந்த கோட்பாடுகளை கத்தோலிக்க சபை எங்கே மறுதலித்துள்ளது என சொல்லுகிறீர்களா? தீண்டாமை உட்பட கத்தோலிக்க சமுதாயங்களில் இருந்தது. காலப்போக்கில் காலனிய விரிவாதிக்கத்தினாலும் சமுதாய மாற்றங்களினாலும் உதிர்ந்ததே தவிர இறையியல் மாற்றங்களால் அல்ல. ஏசு சபை உட்பட பிறப்படிப்படையிலான உறுப்பினர் தகுதியை கோண்டதாகத்தான் இருநதது. இந்து சமுதாயத்தை பொறுத்தவரையில் மனுவாதத்திற்கு எதிராக நெடிதான போராட்டத்தை இந்து இறையியல் நடத்தியுள்ளது. ஆனால் சாதியை இங்கே இனத்துடன் முடிச்சு போட்டு 200க்கும் மேற்பட்ட சாதிகளை குற்ற சாதிகள் என அடையாளப்படுத்தி வதைத்த ஆங்கிலேய அரசையும் அந்த ஆங்கிலேய அரசின் ஆதரவில் வளர்ந்த கிறிஸ்தவ சபையையும் குற்றசாதி எனும் கருத்தாக்கத்துக்கு துணை போன விவிலியத்துக்குமாக (பெற்றோர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்கு போகும் என்பது கிறிஸ்தவ கருத்தாக்கம் அல்லவா? அதைச் சொல்லிதானே யூதர்களை கிறிஸ்தவநாடுகள் கொடுமைப்படுத்தி வந்தன! ஆனால் இங்கே கதை வேறு இரணியனின் மகனாக பிரகலாதன் பிறக்கலாம்) இந்திய தலித்துகளிடம் உண்மையில் மன்னிப்பு கேட்க வேண்டியது கிறுஸ்தவம்தான்.
  //மூக்குக்குக் கீழே ஒரு இஞ்ச் மீசை வளர்த்துக்கொண்டு நீங்கள் இந்தியாவின் சர்வாதிகாரியாகும்போது //
  எனக்கு அந்த நிலை வராது சிறில். ஏனெனில் நான் இந்து. ஹிட்லரைப் போல கிறிஸ்தவ இனவாத மரபில் நான் வரவில்லை. மேலும் என்பெயர் சிறில் அல்ல அரவிந்தன். ஸ்ரீ அரவிந்தர் ஹிட்லரை அசுர சக்தி என பிரகடனப்படுத்தியவர். ஆனால் தங்கள் பெயரான சிறில் எனும் பெயரில் உள்ளவரோ…இங்கே பார்த்துக்கொள்ளுங்கள்
  http://medievalhistory.suite101.com/article.cfm/st__cyril_of_alexandria :)

 32. mythology என்பது கட்டுக்கதை என நான் சொல்லவில்லை myth என்பதைத்தான் சொல்கிறேன். சிலர் நம்புகின்ற கதை என்றே அதைக் கொள்ளலாம்.

  // மேலும் என்பெயர் சிறில் அல்ல அரவிந்தன். ஸ்ரீ அரவிந்தர் ஹிட்லரை அசுர சக்தி என பிரகடனப்படுத்தியவர். ஆனால் தங்கள் பெயரான சிறில் எனும் பெயரில் உள்ளவரோ//

  உங்கள் வாதம் அனைத்துமே பொதுவாக இந்த ரீதியிலேயே இருப்பதுதான் வருத்தமளிக்கிறது. சிறிலை போற்றிப் புகழும் சுட்டிகள் நூற்றுக்கணக்கில் நான் தரமுடியும் என்பதுவும் அரவிந்தரைக் குறித்து மோசமான செய்திகளை சேகரிப்பதும் எளிதாயிருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

  //தீண்டாமை உட்பட கத்தோலிக்க சமுதாயங்களில் இருந்தது. //

  இருந்தது என கடந்தகாலத்தை சுட்டிச் சொல்கிறீர்கள். இங்கே நீங்களே அகஸ்டினை மறுத்துவிட்டீர்கள் என்று கொள்கிறேன்.

  //200க்கும் மேற்பட்ட சாதிகளை குற்ற சாதிகள் என அடையாளப்படுத்தி//

  அப்போது இந்துமதக் காவலர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? வழக்கம்போல அரசு உயர்பதவிகளையும், சர் பட்டங்களையும் இன்னபிற அங்கீகாரங்களையும் வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தார்கள்.
  ஆங்கிலேயென் போனபின்பு ஏன் இவர்களை சரிசமமான மனிதனாக உங்கள் தலைவர்கள் பிரகடனப்படுத்தவில்லை? விட்டால் ஆங்கிலேயந்தான் மனுவையும் வேதத்தையும் எழுதிவைத்தான் எனச் சொல்லுவீர்கள்போல. ம்ம். அதையும் மலர்மன்னன் எங்கோ சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.

  ரெம்ப நல்லது. ஆங்கிலேயனும் கிறீத்துவமும் இந்து மதத்தை நாசம் செய்துவிட்டன என்றே எடுத்துக்கொள்வோம் அதை சரி செய்துவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள். செய்துவிடுங்களேன்.

  ஹிட்லர் மதத்தை முன்வைத்து மதம் பிடித்து அலைந்தான். அப்படிப்பட்டவராக நீங்கள் இருப்பீர்களோ எனும் சந்தேகத்தில் அப்படி எழுதிவிட்டேன் :)

  //“இந்துயிசம் என்பதனை ஒரு கட்டமைப்பாகவோ அல்லது கண்டுபிடிப்பாகவோ கருதித்தான் ஆக வேண்டும் என்றால் அது நிச்சயம் காலனிய கட்டமைப்பல்ல,அது ஐரோப்பிய கட்டமைப்பல்ல அது இந்திய கட்டமைப்பு கூட அல்ல. …அது பெரும் வரலாற்று நிகழ்வுகளாலும், முடிவற்றதும் சிக்கலாக அமைந்ததுமான சமூக-நம்பிக்கைகளும் சடங்குகளும், தனிமனித மற்றும் சிறுக்குழுக்களென அவர்களின் தினசரி வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளும் சில அடிப்படையான கருத்தாக்கங்களுடன் தொடர்ந்து நிகழ்த்திய இயக்கங்களிலிருந்து உருவானதாகும்.” (Who invented Hinduism, p.36)//

  இது ராக்கெட் சித்தரை நம்பும் சாதாரண மக்களுக்குப் பொருந்தலாம் ஆனால் தங்களுக்கென ஒரு கட்டுக்கோப்பை வைத்துக்கொண்டு மற்றவர்களை உழ்நுழையவிடாமல் மறுக்கும் ஒருவகை இந்துக்களின் மதம் காலனிய, ஐரோப்பிய, இந்திய கட்டமைப்புக்களைவிட இறுக்கமானது.

  //பொறாமை பிடித்த தேவன்//
  mythologyகளின் உள்ளாடும் நற்பண்பை உங்களால் உணர முடிகிறது ஆனால் தன் மக்கள் தனக்கே சொந்தமானவர்கள், தன்னையே வணங்கவேண்டும் என கடவுள் பொறாமமப்படுகிறான் என்பதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்ததை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அதையும் ஏதேனும் இளங்கலை மாணவனோடுதான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

  ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என நக்கீரன் ஈசனுக்குச் சொனதுபோல மீண்டும் சொல்கிறேன் நடந்தது மதமாற்றம். இதை மாறியவர்கள் தாமாகவே செய்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இருப்பினும் அதை தாய்மதம் திரும்புதல் என அழைப்பது முழு பூசணிக்காயை தண்டச் சோற்றில் மறைப்பதற்குச் சமம். அப்படிச் செய்யவே தேவையில்லை. call a spade a spade, a conversion as such.

 33. அன்புள்ள சிறில்,
  மித் என்பதற்கும் மித்தாலஜி என்பதற்கும் ஆறுவித்தியாசங்கள் கண்டுபிடிக்க நான் போகவில்லை, ஆனால் நான் தொடர்ந்து மித்தாலஜி என்பதையே பயன்படுத்தி வந்துள்ளேன். சந்தேகமிருந்தால் மேலே இழையில் பார்த்துக்கொள்ளவும். நான் அகஸ்டினை ஏற்கிறேனா மறுக்கிறேனா என்பது காசு பெறாத விசயம். ஆனால் பிறப்படிப்படையிலான ஏற்றதாழ்வுகள் தீண்டாமை உட்பட கத்தோலிக்க சமுதாயத்தில் நிலவி வந்ததும் அத்தகைய சமுதாய ஏற்றதாழ்வுகள் எந்த கிறிஸ்தவ சமுதாய சீர்திருத்தவாதியாலும் கண்டிக்கப்படாததையும் பின்னர் ஏற்பட்ட சமுதாய பொருளாதார மாற்றங்களினால் தன்னாலேயே உதிர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளேன். அப்புறம் இங்கே அப்படி வெள்ளைக்காரர்கள் செய்த போது இந்து சமுதாய தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேட்கிறீர்கள். அய்யாவைகுண்டரும், சுவாமி தயானந்த சரஸ்வதியும் விவேகானந்தரும், அய்யன் காளியும் லாலா லஜ்பதிராயும் பிர்ஸா பகவானும், வீர சாவர்க்கரும் அதனை எதிர்த்து போராடியுள்ளார்கள். ஆனால் இல்லாத இனவாதங்களை இந்தியாவுக்குள் புகுத்தியதில் ஆரிய-திராவிட இனவாதங்களை புகுத்தியதில் மிசிநரிகளின் பங்கு அபாரமானதல்லவா?

  //ஆனால் தன் மக்கள் தனக்கே சொந்தமானவர்கள், தன்னையே வணங்கவேண்டும் என கடவுள் பொறாமமப்படுகிறான் என்பதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்ததை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?//
  அது ஒரு குறிப்பிட்டமக்களின் தொன்மமாக மட்டுமே இருந்தால் – ஒரு வட்டார வழக்காக இருந்தால் -அதாவது யூத புராணமாக இருந்தால்- புரிந்து கொள்ளமுடியும். ஆனால் அது உலகம் முழுமைக்குமான இறையியலாக மாற்றப்படும் போது -கிறிஸ்தவம் செய்தது போல- அது அபாயகரமான சித்தாந்தமாகிவிடுகிறது, சிறில் நீங்கள் செய்யும் வாதம் மீண்டும் மீண்டும் சாதியமே இந்து தருமத்தின் அடிப்படை என எவ்விதத்திலாவது முடிச்சு போட முயல்கிறீர்கள். சாதியத்தை இந்து அமைப்புகள் எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. இதையே மாற்றி இனவாதமே கிறிஸ்தவத்தின் அடிப்படை என வாதாடினால் எப்படி இருக்கும்? இன்றைக்கும் white only congregation churches அமெரிக்காவில் இருக்கின்றன. இங்கிலாந்தில் இருக்கின்றன. அங்கெல்லாம் ஒரு கறுப்பினமக்களின் நுழைவு போராட்டம் நடத்தக் கூட இந்து சமுதாயத்தை விட வலிமையாக நிறுவனப்படுத்தப்பட்ட சர்ச்சால் முடியவில்லை அல்லவா? அப்படியென்றால் கிறிஸ்தவத்தை விட இந்து சமுதாயத்தில் சமத்துவ பார்வை அதிகமாக உள்ளது என எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? (அப்புறம் அய்யப்பன் குறித்து ஜாடைமாடையாக ஈவெரா ஸ்டைலில் குறிப்பிட்டுள்ளீர்கள் இதற்காக இறைத்தூதர் ஒருவர் தன் மகளை புணர்ந்ததாக கூறப்படுகிற இடத்தில் புனித மடாலயம் எழுப்பியுள்ள கிறிஸ்தவ பண்பாட்டு தன்மையை குறித்து நான் குறிப்பிடப்போவதில்லை.)

 34. //மூக்குக்குக் கீழே ஒரு இஞ்ச் மீசை வளர்த்துக்கொண்டு நீங்கள் இந்தியாவின் சர்வாதிகாரியாகும்போது அப்படி ஒரு சட்டத்தை எதிர்பார்க்கிறேன்//
  தேவையில்லை. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டத்தின் வரையறையே இந்து தருமமே பாரதத்தின் தாய் தருமம் என்பதனை implicit ஆக உணர்த்தி நிற்கிறது, எனவேதானே அதனையும் மேலே வைதிருக்கிறார்கள்.

 35. //எந்த கிறிஸ்தவ சமுதாய சீர்திருத்தவாதியாலும் கண்டிக்கப்படாததையும்//
  எப்படி இப்படியான ஸ்டேட்மெண்ட்களை விடுறீங்கண்ணே தெரியல. சும்மா அடிச்சு விடக்கூடாது. கிறீத்துவம் அடிமைத்தனத்தை அங்கீகரித்ததென்றால் அதே கிறீத்துவம் மக்களை அதிலிருந்து விடுவித்த கதைகளும் பல. மார்ட்டின் லூத்தர் கிங் உதாரணமில்லையா?

  கிறீத்துவத்தில் சமூகப் புரட்சி என்பதைவிட அதற்குள்ளேயேயான போராட்டமே மிகுந்து நின்றது. எதிர் குரல்கள் உள்ளேயே ஒலித்துக்கொண்டிருந்தன. ஒரே இறையியலைக் கொண்டு கிறீத்துவம் இயங்கவில்லை அதற்கும் பன்முகத் தன்மையும் பல்வகை இறையியலும் உண்டு. அப்படி ஒன்றை ஒன்று அவை எதிர்த்துக்கொண்டே இருந்திருக்கினன என்பதுவும் உண்மை.

  //ஆனால் அது உலகம் முழுமைக்குமான இறையியலாக மாற்றப்படும் போது -கிறிஸ்தவம் செய்தது போல- அது அபாயகரமான சித்தாந்தமாகிவிடுகிறது//

  இதில் என்ன அபாயம் இருக்கிறது? கடவுள் தன் பக்தர்களுக்காக அடுத்தவர்களை அழிப்பது எல்லா மதத்திலும் உள்ளதே?

  //சிறில் நீங்கள் செய்யும் வாதம் மீண்டும் மீண்டும் சாதியமே இந்து தருமத்தின் அடிப்படை என எவ்விதத்திலாவது முடிச்சு போட முயல்கிறீர்கள். //

  இதை துவக்கி வைத்ததே நீங்கள்தான். என்னுடைய பதிவுக்குப் பின்னூட்டுகையில் பொறாமை பிடித்த தேவனையும்,இன்னும் கிறீத்துவத்தின் தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டிப் பேசி இதை துவக்கிவிட்டீர்கள். நானும் அவ்வழியேயே பேசவேண்டியாகிவிட்டது.

  ஐயப்பன் குறித்த செய்தியை புண்படுத்த வைக்கவில்லை.. அதுபோன்றதொரு கடினமான, எளிதில் புரிந்துகொள்ள இயலாத கருத்தாக்கத்தை புரிந்துகொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு ‘நம் தேவன் பொறாமை பிடித்த தேவன்’ எனும் ஒரு எளிய கருத்தை புரிந்துகொள்ள இயலவில்லையே என்றுதான் கேட்டேன். அதை நீக்கிவிட்டேன் …

 36. //ஆனால் இல்லாத இனவாதங்களை இந்தியாவுக்குள் புகுத்தியதில் ஆரிய-திராவிட இனவாதங்களை புகுத்தியதில் மிசிநரிகளின் பங்கு அபாரமானதல்லவா? //

  அடடா என்ன இனும் ‘மிசிநரிகளை’ உள்ளே கொண்டுவரவேயில்லையே எஅ நினைத்தேன்.

  மிசிநரிகளின் சூழ்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் இன்றும் என் கண்முன்னாலேயே அப்படி ஒரு சூஉழ்ச்சி நடப்பதைக் காண்கிறேன். மதமாற்றத்தை தாய்மதம் திரும்புதல் எனப் பெயர் சூட்டுவது. அதையும் கண்டிக்கிறேன். இதுதான் என் பதிவிலும் உள்ளது. இதை மட்டுமே விவாதித்தால் நல்லது. :)

 37. பொறாமை பிடித்த தேவன் என்பது எளிய கருத்தாக்கம் அல்ல. தமிழ்நாட்டின் முன்னணி எவாஞ்சலிஸ்டுகளான மோகன் ஸி லாஸரசையும், ஆலன்பாலையும் கேட்டால் நீங்கள் இப்படி சொல்ல மாட்டீர்கள். இந்த ‘பொறாமை பிடித்த தேவன்’ ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்’ என்கிற கருத்தாக்கங்களே கடந்த மூன்று நூற்றாண்டுகளின் மிக மோசமான இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளது. விவிலியத்தை வரலாறாக ஆப்பிரிக்க சமுதாயத்தில் ரோமன் கத்தோலிக்க சபை திணித்து மக்களை இன ரீதியில் பிரித்ததே ருவாண்டாவின் மிக மோசமான இனப்படுகொலைக்கு காரணமாயிற்று இந்நிலையில் ‘பொறாமை கொண்ட தேவனை’ எப்படி எளிய கருத்தாக்கம் என கருத முடியும்? குறிப்பாக இன்றைய கத்தோலிக்க மதத்தலைமை தென்னமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட வன்முறை மதமாற்றங்களை நியாயப்படுத்தும் சூழ்நிலையில். கடவுள் தன் பக்தர்களுக்காக கெட்டவர்களை அழிப்பது வேறு எவ்விததவறும் செய்யாத ஒரு மக்கள் கூட்டத்தையே தன்னை வழிபடாதவர்கள் என்பதற்காக அழிப்பதும் அடிமை கொள்வதும் வேறு. விவிலியத்தில் நடந்தேறுவது அதுதான். இராவணனோ துரியோதனனோ வேறு கடவுளை வணங்கினார்கள் என்பதற்காக தண்டிக்கப்படவில்லை. டேவிட் மாற்றான் மனைவியை இச்சித்ததற்காக தண்டிக்கப்பட்டது போலவே தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் எண்ணாகமம் 31:17-18 சொல்வது என்ன? தென்னமரிக்காவிலும் , ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடத்தப்பட்ட இனஒழிப்புகளில் இந்த விவிலிய சித்தரிப்பே blue print ஆக பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கும் பாப்டிஸ்ட் சர்ச்சினால் இந்த வசனங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பழங்குடி மக்களினை கிறிஸ்தவத்துக்கு துப்பாக்கி முனையில் மதமாற்ற பயன்படுத்தப்படுகின்றன.
  அடிமைத்தனத்தையும் சாதியத்தையும் குழப்பியுள்ளீர்கள்.
  ஐரோப்பிய கத்தோலிக்க சமுதாயத்தில் நிலவிய ஏற்றதாழ்வுகளை எந்த கத்தோலிக்க துறவியும் எதிர்த்து போராடியதாக நான் அறியவில்லை. மாறாக அந்த அமைப்பு ஏறக்குறைய தானாகவே உதிர்ந்தது. அதற்கு காரணம் ஐரோப்பியருக்கு மூன்று கண்டங்கள் விரிவாதிக்கத்திற்கு கிடைத்ததும் மூலதன உள்ளிறக்கமும் தொழிற் புரட்சி அதன் மூலம் சாத்தியமானதும். அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் சாதிய அமைப்பு இறுக்கமடைந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி ஒரு அம்சமாக்கப்பட்டது. அது போக மக்களின் மூக்கு அளவுகள் கணக்கெடுக்கப்பட்டன. ரிஸ்லேயின் இந்த ‘அறிவியலுக்கு’ பின்னால் கிறிஸ்தவ போதகரான மாக்ஸ்முல்லரின் தத்துவ அறிவு இருந்தது. இதனை எதிர்த்தவர்கள் இந்திய மானுடவியலாளர்கள். ஹிட்லரின் மூலம் இனவாதத்தின் மோசமான விளைவுகளை மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் புரிந்துகொண்டு இனவாதத்தை மறுதலிப்பதற்கு குறைந்தது அரை நூற்றாண்டுக்கு முன்னதாகவே இந்திய சாது சன்னியாசிகளிலிருந்து மானுடவியலாளர்கள் வரை இந்த இனவாதம் அறிவியல் தன்மையற்றதென கூறினார்கள். ஆனால் நானறிய ஏறக்குறைய 1970 வரைக்குமான மேற்கத்திய கிறிஸ்தவ பிரச்சார நூல்களிலும் சரி இன்றைக்கும் குமரி மாவட்ட டயோஸிசன் நூல் நிலையத்தில் விற்பனையாகும் கிறிஸ்தவ பிரச்சார நூல்களிலும் சரி இனவாதக் கோட்பாடுகளை காண்கிறேன். ஏன் இப்படி இனவாதக் கோட்பாடுகளின் மூலம் தன் மதத்தை பரப்ப வேண்டிய நிர்ப்பந்தம்? காரணம் இந்த ‘பொறாமை பிடித்த இறைவன்’ என்கிற கருத்தாக்கம்தான். அதுவே ஒரு defining characterஆக விளங்குகிறது கிறிஸ்தவ இறையியலில். ஆனால் மார்ட்டின் லூதர் கிங் போராடியது இனவாதத்தை எதிர்த்து. எப்போதிலிருந்து கிறிஸ்தவ குரல்கள் அடிமைமுறையை எதிர்த்தன என பாருங்கள். எப்போது நீராவி இயந்திரங்களாலும் தொழிற்புரட்சியாலும் அடிமை உழைப்பு தேவையில்லை என்ற நிலை வந்ததோ அப்போதுதான். They started talking about liberating the blacks when they could economically afford it. அதிலும் கூட கறுப்பின மக்கள் தங்கள் பாரம்பரிய மதங்களை விட்டு முழுமையாக கிறிஸ்தவர்களாகியிருக்க வேண்டும் என்கிற முன்நிபந்தனையோடுதான். அதற்கு பிறகும் அவர்களது சமுதாய சமத்துவத்துக்கு போராட மார்ட்டின் லூதர் கிங் தேவைப்படுகிறார். ஆனால் அதற்கு பிறகும் white only congregation churches இருக்கத்தான் செய்கின்றன. ‘வெள்ளையரல்லாத போர்வீரர்களை இத்தாலிக்குள் அனுமதிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பண்பாடற்ற அவர்கள் நம் வெள்ளையின பெண்களை பலாத்காரம் செய்துவிடுவார்கள்’ என போப் நேசப்படையினரிடம் கோரிக்கை வைத்த அதே காலகட்டத்தில் தான் மகாத்மா காந்தியும் வினோபாவும் அந்தணர்கள் என கருதப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என கருதப்பட்டவர்கள் உட்பட பயன்படுத்திய கழிவறைகளை தங்கள் ஆசிரமத்தில் சுத்தம் செய்ய பணித்தனர்.

 38. //எனவே வெளியே இருந்து வந்த ஆரியர்கள் இங்குள்ள திராவிடர்களை அடிமைப்படுத்தி சாதி அமைப்பை உருவாக்கினார்கள் என்பது எவ்வித ஆதாரமும் இல்லாத கதை//

  இந்த கதையை படிக்காத எங்கள் மூதாதையரிடம் சொல்லியிருந்தால் “அய்யோ சாமி சொல்லிடுச்சு! சாதியெல்லாம் வெள்ளகாரன் கொண்டு வந்ததாம்ல” என்று பகுத்தறிவை புறந்தள்ளி நீங்கள் சொல்லுவதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். எங்களுடையது கல்வி கற்ற தலைமுறை ஐயா.இந்த பருப்பெல்லாம் இங்கு வேகாது.

  ஆரிய படையெடுப்பு நடக்காமல்தானா இந்திய உயர்சாதியினரின் மரபனுவும் ஐரோப்பியர்களின் மரபனுவும் ஒத்துப் போகிறது.

  http://jorde-lab.genetics.utah.edu/elibrary/Bamshad_2001a.pdf

  இதற்கும் ஒரு பதில் வைத்திருப்பீர்கள். ஆரியர்கள் படையெடுத்து வரவில்லை. இடம் பெயர்ந்துதான் வந்தார்கள். இங்குள்ள பழங்குடியினர்தான் எங்களை வழிநடத்தவும், ஆளவும், எங்கள் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் எங்களுக்கு உங்களை விட்டால் வேறு நாதியில்லை என்று அறுப்புக்கு வந்த ஆடுகளைப் போல தலைகளை தானாகவே கொடுத்தார்கள் என்றுக் கூடச் சொல்லுவீர்கள்.

 39. மனு ஸ்மிருதியை பொறுத்தவரையில் அது ஒரு சட்டநூல் அவ்வளவுதான். அது ஸ்மிருதி – மாற்றத்துக்கு உட்பட்டது. ஒப்பிட வேண்டுமானால் கத்தோலிக்க சர்ச்சின் Malleus Maleficarum துடன் ஒப்பிடலாம். இன்றைக்கு வரைக்கும் கத்தோலிக்க சர்ச் Malleus Maleficarum த்தினால் நடத்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு எவ்வித மன்னிப்பும் கேட்டதில்லை என்பதையும் கணக்கில் கொள்க. உலகிலேயே அதிக காலகட்டம் இன்க்விஷன் நடத்தப்பட்ட கோவா இன்க்விஷனுக்கும் சர்ச் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டது என்பதையும் நினைவில் கொள்க. சர்ச் எங்கேயாவது மன்னிப்பு கேட்டுள்ளது என்றால் அது ஊடக அழுத்தத்தினாலேயே அன்றி உள்-விசாரணையால் அல்ல. சரி விஷயத்துக்கு வருகிறேன். ஒரு கிறிஸ்தவன் இந்து தருமத்துக்கு திரும்பும் போது அவனால் இந்த மண்ணின் சாமிகளை வணங்கமுடிகிறது அல்லவா? எது இந்த மண்ணின் சாமி என்கிறீர்களா? சுடலைமாடன் வரை சுடலை பூசிய சிவன் வரை அனைத்து சாமிகளையும் அவனால் வணங்க முடிகிறதல்லவா? எனவே தான் தாய்மதம் திரும்புதல் என்கிறோம். தென்னமெரிக்காவில் கத்தோலிக்க மதத்தை விட்டு போகிறவர்களை விமர்சிக்கிற போப் பெனிடிக்ட் என்ன சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா? மதம் மாறுவதாக சொல்லவில்லை. Benedict also added that return to the indigenous religions would be a great setback. பாரதத்தின் indigenous religionsக்கு-சாக்தம் வைணவம் சைவம் சீக்கியம் பௌத்தம் ஜைனம் கௌமாரம் காணாபத்யம் என இருக்கிற indigenous religions க்கு ஒரு கூட்டுப்பெயர் இந்து தருமம். எனவே அது போப்பின் வார்த்தைகளிலேயே கூட தாய்மதம் திரும்புவதுதான். தென்னமெரிக்கர்கள் கிறிஸ்தவத்தை தழுவியது தாய்மதம் திரும்பிய தலித் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை தழுவியதைக் காட்டிலும் காலம் பலவானாலும் – அது தாய்மதம் திரும்புவதுதான். எனவே சிறில் அலெக்ஸ் முதலில் போப்புக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

 40. அரவிந்தன்,
  மதங்களின் அடிப்படை நம்பிக்கைகளிலிருந்து, அவற்றின் போதனைகளிலிருந்து தனிமனிதனும் சமூகமும் தங்களுக்குத் தேவையானவற்றை தேவையானபடிக்கு எடுத்துக்கொண்டு செயல்படுத்தும் என்பதற்கு எந்த மதமும் விதிவிலக்காகவில்லை என்பதைத்தான் நம் வாதங்களால் உறுதி செய்ய முடியும். இதைத்தான் முதலிலேயே ‘மனிதனால் உருவாக்கப்பட்ட்வை’ எனச் சொன்னேன்.

  கிறீத்துவத்தின் சீர்கேடுகளை நான் மறுக்க இயலாது. மறுக்கத் தேவையுமில்லை. மனிதன் முழுமை நோக்கியப் பயணமொன்றை மேற்கொள்வதாய் எடுத்துக்கொண்டால் இன்று என்பது நாளை என்பதை விட மோசமானதாகவே இருக்கிறது. நேற்று என்பது இன்று என்பதைவிட மோசமாகவே இருக்கிறது.

  அடிமைமுறை மாட்டுமல்ல இனப்பாகுபாடும்கூட பொருளாதார, அரசியல் அடிப்படையிலேயே உருவாகியதும் அதனாலேயே அழிந்தும் அல்லது மறுவடிவம் பெறுவதும் உண்டு. இனப்பாகுபாடு என நான் குறிப்பிடுவது உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் எனும் பாகுபாடு வெறும் சாதி அமைப்பை மட்டுமல்ல. இதே அடிப்படையில்தான் கிறீத்துவம் அடிமைத்தனத்தை அங்கீகரித்தது.

  ‘வெள்ளையர் மட்டும்’ திருச்சபைகள் அவமானச் சின்னங்கள். காந்தி ஆப்ரிக்காவில் ஒரு சர்ச்சுக்குச் செல்ல விரும்பினாராம். கறுப்பினத்தவருக்கான சர்ச் அங்கே என திருப்பியனுப்பப்பட்டு வருத்ததுடன் திரும்ப்பினாராம். ஆயினும் கிறீத்துவை நேசிக்கிறேன் (கிறீத்துவர்களை அல்ல) என அவர் சொன்னதும் எப்படி மதம் ஒரே நேரத்தில் ஆக்கத்தையும் அழிவையும் தரவல்லதாக இருப்பது என்பதை உணர்த்துகிறது.

  வெள்ளையர் மட்டும் எனும் திருச்சபைகள் இயேசுவின் போதனைகளுக்கு எதிரானவை என்பதை என்னால் ஆதாரத்துடன், அடிமைத்தனத்தை அங்கீகரிக்க எங்கிருந்து மேற்கோள் எடுக்கப்பட்டதோ அதே புத்தகத்திலிருந்து மேற்கோள் எடுத்து வாதிட முடியும். அதே வாதத்தை ஒரு பிரிவினர் மட்டும் வழிபடவோ, பூசை நடத்தவோ முடியும் எனக் கூறும் இந்துக் கோவில்களுக்கெதிராய் நேரடி ஆதாரங்களுடன் வைக்க இயலுமா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

  எப்படியோ உங்கள் விவாதங்கள் எங்கள் மீது வைக்க்ப்படும் குற்றச்சாட்டுகள் உங்களுக்கும் பொருந்துமே எனும் வகையில்தான் உள்ளன. உங்கள் தரப்பை நியாபப்படுத்த அடுத்தவர் தரப்பை குறை சொல்வது நாம் இரண்டுபேருமே மோசமானவர்கள்தான் என்பதில்தான் சமநிலையைத் தேட முடியும்.

  காந்தியை ஆன்மீகத் தலைவராக்கிவிட்டீர்கள்.

  //They started talking about liberating the blacks when they could economically afford it.//
  இது ஒரு கோணல் பார்வை என்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் மார்ட்டின் லூத்தரின் காலத்தில் மட்டுமல்ல இப்போதும்கூட அடித்தட்டு வேலைக்கு ஆட்களின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.

  //அதிலும் கூட கறுப்பின மக்கள் தங்கள் பாரம்பரிய மதங்களை விட்டு முழுமையாக கிறிஸ்தவர்களாகியிருக்க வேண்டும் என்கிற முன்நிபந்தனையோடுதான்//
  அப்படி ஒரு முன்நிபந்தனை எதுவும் இல்லை. மார்ட்டின் லூத்தர் கிங்கின் காலத்துக்கு வெகுகாலம் முன்பே கறுப்பினத்தவர் தங்கள் தொன்மங்களை தொலைத்துவிட்டனர். வேறு வழியில்லாமல் கிறீத்துவர்களாகிவிட்டனர். மார்ட்டினின் காலத்தில் பலரும் இஸ்லாமுக்கு மாற ஆரம்பித்துவிட்டனர் என்றே நினைக்கிறேன்.

  We hold these truths to be self-evident; that all men are created equal and independent; that from that equal creation they derive rights inherent and inalienable, among which are the preservation of life, and liberty, and the pursuit of happiness;

  இதை எழுதி வைக்கவும் பைபிள்தான் துணையாய் இருந்தது. அடிமைகளைப் பிடிக்கவும் அதுதான் துணையாக இருந்தது என்பது பைபிளின் மீதுள்ள தவறாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

 41. ‘மதமாற்றம்’ எனும் சொல் sentimental value உள்ளதாக உள்ள இந்தியாவில் அந்தச் சொல்லை பயன்படுத்தாமல் புதிய சொல் ஒன்றை கண்டுபிடிப்பதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்றே உணர்கிறேன்.

  “return to the indigenous religions” இதில் போப் அவற்றை லோக்கல் மதம் என திட்டாமல் திட்டிவிடுகிறார். அவர் இதிலெல்லாம் கில்லாடி. அதையே நீங்களும் பின்பற்ற வேண்டும் எனச்சொல்லவில்லை. indigenous religions என நீங்கள் சொல்லியிருந்தாலும் அது பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

  உங்கள் தரப்பு நியாயங்களை அறியப்பெற்றேன். நன்றி.
  மீண்டும் இன்னொரு பதிவில் பிறகு சந்திப்போம். :)

 42. //வெள்ளையர் மட்டும் எனும் திருச்சபைகள் இயேசுவின் போதனைகளுக்கு எதிரானவை என்பதை என்னால் ஆதாரத்துடன், அடிமைத்தனத்தை அங்கீகரிக்க எங்கிருந்து மேற்கோள் எடுக்கப்பட்டதோ அதே புத்தகத்திலிருந்து மேற்கோள் எடுத்து வாதிட முடியும். அதே வாதத்தை ஒரு பிரிவினர் மட்டும் வழிபடவோ, பூசை நடத்தவோ முடியும் எனக் கூறும் இந்துக் கோவில்களுக்கெதிராய் நேரடி ஆதாரங்களுடன் வைக்க இயலுமா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். //

  நிச்சயமாக முடியும். வேதங்களின் அடிப்படையிலும் நடைமுறை வரலாற்றின் அடிப்படையிலுமே இதற்கான ஆதாரங்களை காட்டமுடியும். உதாரணமாக மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களாக கருதப்படும் நம்பூதிரிகளும் சித்பவன்களும் கடந்த சில நூற்றாண்டுகளில் பிராம்மணர்களாக உயர்வு பெற்றதையும், துளு பட்டர்கள் எனும் பிராம்மண வகுப்பினர் தீண்டத்தகாதவர்களாக நம்பூதிரிகளால் ஒடுக்கப்பட்டதையும் பாருங்கள். வேதங்களில் எந்த இடத்திலும் பிறப்படிப்படையிலான சாதி சொல்லப்படவில்லை, ஏறக்குறைய வேதகாலங்களிலிருந்து பல நூற்றாண்டுகளாக வர்ண அமைப்பு பிறப்படிப்படையில் இல்லாது தகுதி அடிப்படையில் இயங்கிவந்ததாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். வேத மகரிஷிகள் பலரும் இன்று தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் வகுப்புகளை சேர்ந்தவர்கள். கொங்கரப்பள்ளி சிவன் கோவில் அர்ச்சகராக தாழ்த்தப்பட்டவரை நியமிக்க ஆர்.எஸ்.எஸ் போராடியதை பாருங்கள் (Caste no bar to be Hindu priest?, Times of India, 8-12-1995.)
  ஆனால் இந்து தருமம் என்றாலே சாதியம் என்கிற ரீதியில் பேசும் போது அந்த லாஜிக்கையே கிறிஸ்தவத்துக்கும் பொருத்தினால் எப்படி இருக்கும் என காட்டினேன் அவ்வளவுதான்.

 43. அன்புள்ள லெமூரியன்,

  நீங்கள் மெத்த படித்த அறிவாளியாக இருப்பது குறித்து சந்தோஷம்,இந்த 2001 ஆராய்ச்சி முடிவு குறித்து நான் எழுதிய கட்டுரை இந்த உரலில் உள்ளது காணவும்:
  http://www.thinnai.com/?module=displaystory&story_id=20210272&format=html
  2002 இல் எழுதிய இக்கட்டுரையில் இந்த ஆராய்ச்சி முடிவினைக் குறித்து “இந்நிலையில் கேள்விக்குரிய அடிப்படையில், மிகச்சிறிய மாதிரி அளவுகளுடனானதோர் ஆய்வின் முதல் நிலை முடிவுகளின் அடிப்படையில் ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தின் சமுதாய அமைப்பினையும் அதன் தொல் வரலாற்றினையும் இனரீதியில் விளக்க மேற்கத்திய ஊடகங்களும் எவ்வித தயக்கமும் இன்றி முன்வந்ததும் அதற்கு சில அறிவுலக ஆதரவு கூட இருந்ததும், அதிசயமானது.” என குறிப்பிட்டிருந்தேன். 2006 இல் Proccedings of the National Academy of Science இதழில் ஒரு விரிவான ஆராய்ச்சி கட்டுரை வெளியானது அதில் பின்வருமாறு கண்டிருந்தது: “The Y-chromosomal data consistently suggest a largely South Asian origin for Indian caste communities and therefore argue against any major influx, from regions north and west of India, of people associated either with the development of agriculture or the spread of the Indo-Aryan language family” அதே ஆண்டு The American Journal of Human Genetics உலகின் தலைசிறந்த மானுடகண மரபணுவியல் (population genetics) ஆராய்ச்சியாளரான L. Luca Cavalli-Sforza உட்பட 15 அறிவியலாளர்கள் இணைந்து வெளியிட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த ஆராய்ச்சி முடிவில் மத்திய ஆசியாவிலிருந்து இங்கு மரபணு வந்ததற்கான ஆதாரம் எதுவும் பெரிய அளவில் இல்லை என்று கூறியதுடன் திராவிட இன மக்கள் சிந்து சமவெளியிலிருந்து தெற்கே ஆரிய படையெடுப்பாளர்களால் விரட்டப்பட்டார்கள் என்பதற்கும் ஆதாரமில்லை என கூறியது, அது மட்டுமல்ல நீங்கள் சுட்டியுள்ள 2001 பாம்ஷாட் மரபணு ஆராய்ச்சியைக் குறித்தும் அது வகையாக கூறியுள்ளது: “ethnically ill-defined populations, limited geographic sampling, inadequate molecular resolution,” என்பதுடன் “inappropriate statistical methods” பயன்படுத்தப்பட்டதாகவும் அது கூறியது.

 44. vajra சொல்கிறார்:

  அரவிந்தன், நீங்கள் சிறிலுடன் மட்டுமே வாதிடுவது சாலச்சிறந்தது. மற்ற லெமூரியன், கொரில்லாவியன், சிம்பன்சீவியன் போன்ற நியாண்டர்தால் காலத்து முன் தோன்றி இன்னும் மாறாமல் இருக்கும் மூத்தக்குடிமக்களுடன் பேச்சுவார்த்தையை கட் செய்யவும். அவர்கள் குரங்குப் பிடி வாதமெல்லாம் இந்த விவாதத்ததை திசைதிருப்ப நடக்கும் முயற்சியாகவே உள்ளது.

 45. வஜ்ரா,
  எல்லோருக்கும் தங்கள் கருத்தை சொல்ல உரிமை உள்ளது. அரவிந்தனைப்போல, உங்களைப்போல என்னைப்போல மற்றவர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டவற்றை, தேடிப்பெற்றவற்றை அலசி ஆராய்ந்தே நம்பிக்கை கொள்கிறார்கள்.

  ஆரோக்கியமான விவாதங்களை, தனிமனித வெறுப்பைக் காட்டாமல் நம்மால் எப்போதுதான் செய்ய இயலுமோ தெரியல.

  முதலில் நம் சில கருத்துக்கள் வேறாயிருந்தாலும் நாம் ஒன்றுசேரும் புள்ளிகள் பல உள்ளன.

 46. க‌ழுகு சொல்கிறார்:

  //இந்து தருமம் என்றாலே சாதியம் என்கிற ரீதியில் பேசும் போது அந்த லாஜிக்கையே கிறிஸ்தவத்துக்கும் பொருத்தினால் எப்படி இருக்கும் என காட்டினேன் அவ்வளவுதான்.//

  இந்து மதத்தை தூக்கி நிறுவதற்க்காக மற்ற மதங்கள் மீது பழிபோடுவது ஒன்றுதான் வழி என்றால் அதை செய்து கொள்ளலாம். ஆனால் சாதிக்கொடுமைக‌ள் என்றால் என்ன‌ என்று இன்றைய‌ அர‌விந்த‌னுக்கு தெரியாம‌ல் போய்விட்ட‌து. 1930 வரை புர‌த‌வ‌ன்னான் என்ற‌ சாதியினர் மாலை 6 ம‌னி வ‌ரை வீட்டை விட்டு வெளியே வ‌ர‌ முடியாது. 6 ம‌னிக்கு மேல் ஒவ்வொரு சாதி இந்துக்க‌ளின் வீடுக‌ளுக்கும் சென்று அழுக்கு துனிக‌ளை எடுத்து விடிவ‌த‌ற்க்குள் துவைத்துவிட்டு மீன்டும் த‌ங்க‌ள் வீடுக‌ளுக்கு சென்று விட‌ வேன்டும்.

  பசு மாட்டை அறுத்த‌த‌ற்க்காக‌ உபியில் 5 தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை உயிரோடு கொளுத்திய‌துதான் இந்த‌ இந்து த‌ரும‌ம். கொளுத்துப‌வ‌னும் இந்துவாம் சாகிற‌வ‌னும் இந்துவாம். ஆனால் ப‌சுமாடு ஒரு குறிப்ப‌ட்ட‌வ‌ருக்குத்தான் தெய்வ‌மாம்.

  சாதி என்றால் என்ன‌வென்று தெரியாம‌ல் பித‌ற்றாம‌ல் நீல‌க‌ன்ட‌ன் இன்றைய‌ த‌ட்ஸ்த‌மிழ் இனைய‌த்தில் வெளிவ‌ந்துள்ள‌ இர‌ட்டை ட‌ம்ள‌ர் டீக‌டை செய்தியை போய் ப‌டிக்க‌வும். தாய் ம‌த‌ம் திரும்பிய‌வ‌ர்க‌ளை ச‌ற்று அந்த‌ டீக‌டைக‌ளுக்கு அழைத்து சென்று சாதி இந்துக்க‌ளுட‌ன் ஒரே ட‌ம்ள‌ரில் டீ வாங்கி குடுக்க‌வும். பிற‌கு பார்ப்போம் தாய் ம‌த‌த்தின் த‌ரும‌த்தை….

 47. vajra சொல்கிறார்:

  வந்து ஏறிய ஆரியர்கள், வராமல் இறங்கிய திராவிடர்கள் என்ற கட்டமைப்பை உடைத்தெரிந்தாலே விவாதங்கள் பன்மடங்கு ஆரோக்கியம் அடைந்துவிடும்.

 48. vajra சொல்கிறார்:

  நான் தனி “மனிதத்” தாக்குதல் நடத்தவே இல்லை. கூ கிளக்ஸ் கிளான் காரர்கள் போல் நியோ நாஜிக்கள் போல் இன்னும் இன அடிப்படைவாதத்தை தூக்கிப் பிடித்து வரும் பரிணாமத்தில் பின் தங்கிய சில ஜந்துக்களுடன் செய்யப்படும் வீண் வாதத்தைத் தவிற்கும் படி அரவிந்தரைக் கேட்டுக் கொண்டேன்.

 49. க‌ழுகு சொல்கிறார்:

  //மனு ஸ்மிருதியை பொறுத்தவரையில் அது ஒரு சட்டநூல் அவ்வளவுதான். அது ஸ்மிருதி – மாற்றத்துக்கு உட்பட்டது.//

  இது ஒரு சட்ட நூலாகவே இருக்கட்டும். யாருக்கான சட்ட நூல் என்பதுதான் இங்கே விவாதம். பிராமனர்களுக்கான தன்டனை என்ன சூத்திரர்களுக்கான தன்டனை என்ன. அது ஏன் அனைவருமே ஹிந்துக்கள் தானே எதற்க்கு ஒவ்வொரு பிரிவினருக்குஒவ்வொரு விதமான தன்டனைகள். இதற்க்கெல்லாம் பதில் இருக்காது ஆரிய மதமாற்றத்தில் ஈடுபடும் அல்லது ஆதரிக்கும் ஆரியர்களிடம். ஆரிய மனுஸ்மிருதிகள், திராவிட சமுதாயத்தை நசுக்குவதற்க்காக ஆரிய ஆதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது. மிகவும் தெளிவாக ஒவ்வொரு அடுக்காக மக்களை பிரிக்கும் நூலுக்கு இங்கே ஆதரவான சூழல் நிலவுவது மிகவும் கவலைப்படவேன்டிய விஷயமாக இருக்கிறது.

  வேதங்களை கேட்கும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்து, சூத்திரன் ஆட்சி செய்யும் ஊரில் குடியிருக்காதே, தெருவில் நடமாட விடாதே என்பது போன்ற குறைந்த பட்ச தன்டனைகளை குறிப்பிடும் போதே ஆரியர்களுடைய திராவிடர்கள் மீதான‌ அடக்குமுறை தெரிகிறது. எப்படி திராவிட தொல் சமுதாயங்கள் அழிக்கப்பட்டன என்ப‌த‌ற்க்கு மனு ஸ்மிருதிகளே மிகப்பெரிய ஆதாரங்கள்.

  தாய் ம‌த‌த்திற்க்கு திரும்பும் போது காவிரி நீரையும் சேர்த்து தெளிக்கிறார்க‌ளாம். கேட்ப‌வ‌ர்க‌ளெல்லாம் எப்ப‌டி சிரித்திருப்பார்க‌ள். கர்நாட‌க‌ இந்து ய‌டியூர‌ப்பா த‌மிழ‌க‌ ஹிந்து இல‌.க‌னேச‌னுக்கு குடிக்க‌ த‌ன்னீர் த‌ர‌ ம‌றுக்கிறார். தாய் ம‌த‌த்தின் பெருமைக‌ளை சொல்லி கொன்டே செல்ல‌லாம்.

 50. நன்றி லக்கி. இஸ்லாம் முன்னிறுத்தும் கைம்பெண் மறுமண உரிமை மிகவும் வரவேற்கப் படுவது. ஏற்றுக்கோள்ளப்பட வேண்டியது.

  ஆனா நான் கேட்ட கேள்வியே அதில்லையே. ஒரே நேரத்துல ஒருத்தன் ஒன்னுக்கு மேல கட்டிக்கிறதும் வச்சிக்கிறதுக்கும் சமூகத்துல அனுமதிக்கிற மதங்கள்…அதே பெண்ணுக்கு வர்ரப்போ மட்டும்… அது கூடாதுன்னு நூறு விளக்கங்களை வெச்சு…ஆண் மட்டும் ஏன் வெச்சிக்கிறலாம்னு ஆயிரம் வெளக்கங்களை வெக்குதேய்யா…. எந்த மதத்துல இது இல்லைங்குறீங்க?

 51. //மற்றப்படி சாதியமே இந்து தருமம் என்கிற உங்களைப் போன்றவர்களின் கூற்றை ஏற்கனவே தவிடு பொடியாக்கியுள்ளார்கள் நெல்லையில் தாய் தருமம் திரும்பிய தலித்துகள்//

  சனாதானம் இன்னும் சாதியக் சாக்கடையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு தங்களின் மேற்கண்ட வாக்கியமே ஆதாரமாக இருக்கிறது.

  “தாய்மதம் திரும்பிய இந்துக்கள்” என்றுச் சொல்ல மனம் வராமல் “தாய்மதம் திரும்பிய தலித்துகள்” என்று திரும்ப திரும்ப அவர்களை சாதிய சாக்கடையில்தான் அவர்களை அழுத்த முயற்சிக்கிறீர்கள்.

  அவர்கள் அவர்களின் So called தாய்மதத்திற்கு திரும்பியபின் எந்த சாதியில் இணைவார்கள்? அவர்கள் அவர்களின் So called தாய்மதம் திரும்பியது போல மற்றவர்களும் அவர்களின் So called தாய்மதம் திரும்ப அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தாய் மதம் திரும்பிய தலித்துகளின் குடும்பங்களுடன் இராம. கோபாலன், இல. கணேசன் வகையறாக்கள் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளலாமே.

 52. அரவிந்தன் ஐயா,

  //சூத்திரன் என்பதும் பிராம்மணன் என்பதும் தொழிலடிப்படையிலான பிரிவாக தோன்றி பின்னர் பிறப்படிப்படையிலாக இறுக்கமடைந்தன. இதனையும் அம்பேத்கரே தெளிவாக நிலைநாட்டுகிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இன்று கருதப்படும் பலர் வேதங்களை இயற்றியவர்களாகவும் இருந்துள்ளனர்.//

  ஒரு வாதத்திற்காக இதை நாம் ஒப்புக் கொள்வதாக இருந்தாலும். “அனைவரும் அர்ச்சகராகலாம்” என்கிற அரசாணையை உயர்சாதியினர் மற்றும் இந்த்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது இதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறதே!. சூத்திரனாகப் பிறந்த ஒருவன், வேதம் கற்று அர்ச்சகர் (பிராமணன்) ஆவதை ஏன் இன்றைய நவீன யுகத்திலும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்க்க வேண்டும்?.

 53. கழுகு,

  சாதி கொடுமை என்றால் என்ன என்று உங்களைப் போல அல்லது உங்களைவிட நன்றாகவே எனக்கு தெரியும். மேலும் கிறிஸ்தவத்தின் தீமைகளை வைத்து இந்து தருமத்தின் பெருமையை நான் நிறுவவும் முயலவில்லை. எப்படி அகஸ்டைனின் சமுதாய கோட்பாடு கிறிஸ்தவம் இல்லையோ எப்படி மின்ஹஜ் சீரஜ், ஸியா பரானி போன்ற மத்திய கால இஸ்லாமிய சுல்தானேட்களில் மிக முக்கிய அதிகார நீதி பரிபாலன இஸ்லாமிய அறிஞர்களால் பிறப்படிப்படையிலான சாதி வேறுபாடுகளை நியாயப்படுத்தியது இஸ்லாமின் அடிப்படை இல்லையோ அது போலவே மனு ஸ்மிருதியும் இந்து தருமத்தின் அடிப்படை அல்ல. சமுதாய தேக்கநிலையால் ஏற்பட்டவை என்பது என் நிலைபாடு. ஆரிய பிராம்மணர்களால் ஏற்பட்டது என்றால் (இந்த ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வே ஒரு புனைகதை என்பதை எத்தனை முறை நிரூபித்தாலும் அது காஸிரங்கா வனபூங்காவின் சிறப்புத்தன்மையை தோலில் காட்டி செல்வது ஒரு புறமிருக்க) சாதி முறை எப்படி உலகெங்கும் இருந்திருக்கிறது என்பதனை நீங்கள்தான் விளக்க வேண்டும். ஒருவேளை அகஸ்டைனும் மனுவை போல ஆரிய அடிவருடியா? பாரசீக சச்னாமாவை எழுதியவர் ஆரிய வந்தேறியா? மருத்துவ கல்லூரியில் பிணங்களை வெட்டி மாணவர்களுக்கு காட்ட மட்டுமே நாவிதர்களுக்கு அனுமதி தங்களை மருத்துவர் என அழைக்க அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மேல் சாதியை சேர்ந்தவர்கள் பிணங்களை தொட்டால் அதற்கு பரிகாரமாக ஜெருசேலத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்வதுடன் சர்ச்சுக்கு கொளுத்த பணங்களை பரிகாரமாக தரவேண்டும் என சட்டம் எழுதி வைத்த ஐரோப்பியர்கள் எல்லாம் ஆரிய வந்தேறிகளா? சாதியம் என்பது நிச்சயம் அழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்கு இனவாத பூச்சு போடும் பகுத்தறிவற்ற மடத்தனத்தைதான் கண்டிக்கிறேன். அத்துடன் அதுதான் இந்து தருமம் என முடிச்சு போடுவதையும்.

 54. //தாய் ம‌த‌த்திற்க்கு திரும்பும் போது காவிரி நீரையும் சேர்த்து தெளிக்கிறார்க‌ளாம். கேட்ப‌வ‌ர்க‌ளெல்லாம் எப்ப‌டி சிரித்திருப்பார்க‌ள். கர்நாட‌க‌ இந்து ய‌டியூர‌ப்பா த‌மிழ‌க‌ ஹிந்து இல‌.க‌னேச‌னுக்கு குடிக்க‌ த‌ன்னீர் த‌ர‌ ம‌றுக்கிறார். தாய் ம‌த‌த்தின் பெருமைக‌ளை சொல்லி கொன்டே செல்ல‌லாம்.//

  திராவிட கர்நாடகம் திராவிட தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பதாகவும் பார்க்கலாம் இல்லையா. எங்கே போனது இன்பத்திராவிடம்? இது வெறும் திசை திருப்பும் வேலை. இந்து தருமம் என்பது ஆரிய இனம் (அப்படி ஒன்று இருந்தால்) உருவாக்கிய சாதி என்பதுதான் என்கிற வாதம் தவறு என்கிறேன் நான். அதற்கான தரவுகளையும் வைத்துள்ளேன். அத்துடன் பாரதத்தின் தாய் தருமம் இந்து தருமமே என்பது என்னுடைய நிலைபாடு. இதற்கு நான் முன்வைத்துள்ள நிலைபாடுகளை முதலில் எதிர்கொள்ளுங்கள் அப்புறம் பேசலாம்.

 55. லெமூரியன் அய்யா,

  தலித்துகள் என்பது சாதிய பதம் அல்ல என்பது தங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்பதனை காட்டும் பதம். இதனை பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புகள் இருக்கின்றன. என்ற போதிலும் இப்பதத்தினை பயன்படுத்துவதை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் தலித் விடுதலை என்பது அவசியமான ஒன்று என நான் கருதுகிறேன். நான் ஒன்றும் அவர்கள் இன்றைக்கு தாய் தருமம் திரும்பியதால் அவர்கள் வாழ்க்கையில் பாலும் தேனும் பொங்கும் என சொல்லவில்லை. இந்துத்துவ இயக்கங்களும் அவர்களும் சமுதாய தேக்க நிலையால் சாக்கடையாகி இருக்கும் சமுதாய மனநிலையில் நிச்சயமாக பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த சூழலில் தலித் எனும் பதமே அவர்களுக்கு போராட்ட உணர்வினை வலியுறுத்தும் பதமாக இருக்கும் என்பதும் நீங்கள் அறியாததல்ல. ஆனாலும் இந்த தலித் என்பது கூட தற்காலிக ஒரு நிலைதான் விரைவில் சாஸ்வதமாக அனைவரும் சமத்துவ நல்வாழ்க்கை வரும் நிலை வரும் என்றே நான் நம்புகிறேன். அவ்வாறே இந்த தேசத்தின் அரசியல் சாசனமும் நம்புகிறது. இதெல்லாம் உங்களுக்கு தெரியாத விசயங்கள் என உங்களிடம் சொல்லி உங்கள் அறிவை நான் அவமதிக்கப் போவதில்லை. பாரதத்தில் முதன் முதலாக தலித்-மேம்பாட்டு மாநாடு என நடத்தியது ஆரிய சமாஜத்தினர் என்பதாலும், இந்து சமுதாயத்தில் சாதியத்தை அழிப்பதில் முனைப்பு காட்டியதில் மற்றொரு புத்தருக்கு ஒப்பானவர் என அம்பேத்கரின் ஜனதா இதழாலேயே போற்றப்பட்ட சாவர்க்கரின் பாரம்பரியத்தையும் கொண்டவர் என்பதால் அந்த பதத்தினை பயன்படுத்த இந்து தேசியவாதிகளால் மட்டுமே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் முடியும் என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பிராம்மணரல்லாதவர்களை விடுங்கள், தலித்துகளையே கோவில் அர்ச்சகர்களாக்கிய அமைப்பு எங்களுடையது என்பது தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்தின் போது வீர சாவர்க்கர் அவரை ஆதரித்து ரத்னகிரி சிறையிலிருந்து அனுப்பிய கடிதம் அங்கு பிரசுரித்து வெளியிடப்பட்டதும் தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கயாவில் உள்ள புகழ்பெற்ற ஜகன்னாத கோவிலில் தலித் பூசாரியை நியமிக்கப்பட்டதும் அதனை ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ஆதரித்து அங்கு பூஜைகளில் கலந்து கொண்டதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். Gaya, Feb 15: A dalit has been appointed the chief priest at the Jagannath temple at Gaya in Bihar which took this bold initiative as performing rituals is considered a strict prerogative of the Brahmins. The Rashtriya Swayamsevak Sangh (RSS) Chief K.S. Sudarshan graced the ceremony kicking off the renovation of the temple under the guidance of the new head priest Deepak Das. அத்துடன் விஸ்வ இந்து பரிஷத் ஏப்ரல் 2006 இலேயே தன் ஈரோடு மாநாட்டில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது: “எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் பூஜைக்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றக்கூடிய எவரும் கோவில்களில் பூஜை செய்யலாம் என்ற நிலை உருவாக வேண்டும்.” (விஜயபாரதம் ஏப்ரல் 2006) எனவே திமுக அரசே என்றாலும் கூட இந்த அரசாணையை பிறப்பித்த போது விஸ்வ இந்து பரிஷத் அதனை ஆதரித்தது (பார்க்கவும் தி இண்டு, மே 18 2006) மேலும் அனைத்து முக்கிய இந்து புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ள இந்து கோவில்களிலும் கூட த்லித்துகளை அர்ச்சகர்களாக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்துள்ளது.

  இனியாவது தங்கள் தரவுகளை சரி பார்த்து உரையாட வாருங்கள். நம் இருவருக்குமே உபயோகமானதாக இருக்கும். நன்றி.

  அன்புடன்
  அரவிந்தன் நீலகண்டன்

 56. ஆர்.எஸ்.எஸ் என்றதும் ஒன்று நினைவிற்கு வருகிறது. இதுவரை ஆர்.எஸ்.எஸ் சின் சர்சங்சாலக் ஆக இருந்தவர்கள் முறையே, கேசவ் பலிராம் ஹெக்டேவர், மாதவ்ராவ் சதாசிவராவ் கோவல்கர், மதுகர் தத்த‌த்ராய தேவ்ராஸ், ராஜேந்திர சிங், குப்பமஹள்ளி சீதாராமய்ய சுதர்ஷன்.

  இதில் ராஜேந்திர சிங் ஐ தவிர அனைவருமே பார்ப்பனர்கள். அந்த ராஜேந்திர சிங் கூட க்ஷத்திரியர். ஏன் ஒரு தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு இந்துவிற்கு ஆர்.எஸ்.எஸ் சின் தலைமைப் பொறுப்பிற்கு வர தகுதியில்லையா?.முதலில் சமத்துவத்தை உங்கள் அமைப்பிலிருந்து தொடங்குகள்.

  அதுவரை நீங்கள் வாய்ச் சொல்லில் வீரர்தான்.

 57. இதென்ன மடத்தனமான பேச்சு? சங்கத்துக்குள் பார்ப்பனர் என்றோ பார்ப்பனரல்லாதவர் என்றோ பார்ப்பது இல்லை. இதே லாஜிக்கை திகவுக்கு பொருத்தி பார்க்கலாமா? இந்த அளவுகோலை எடுத்துக்கொண்டால் எந்த கட்சியையும் விட பாஜகவும் எந்த இயக்கத்தைவிட ஆர்.எஸ்.எஸ்ஸுமே தாழ்த்தப்பட்டவர்களை தன் உயரதிகார குழுக்களில் கொண்டிருப்பதில் தேறும். ஆர்.எஸ்.எஸ்ஸின் மூளை என கருதப்படும் கார்யகாரி மண்டலில் எத்தனையோ தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். ரமேஷ் பதங்கே , பிக்கு இதாதே ஆகியவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இவர்களே ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாட்டின் கருத்தியலை நிர்ணயித்தவர்க்ள் ஆவர். பாரத அரசின் ஷெட்யூல்ட் வகுப்புக்கான தேசிய குழுவின் தலைவர்களாக இரண்டு ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அமர்ந்திருந்திருக்கிறார்கள். எனவே உண்மையாக தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கமாக எவ்வித பாகுபாடு உணர்ச்சியும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்து வருகிறது. அதன் தலைவராகவும் ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரர் அமரும் நாள் அதிக தொலைவில் இல்லை. ஏன் நீங்களே கூட உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவராக இருந்தால் அதில் இணைந்து அதன் தலைவராக வரமுடியும் அதற்கான வாய்ப்புகள் வேறெந்த முற்போக்கு அமைப்பைக் காட்டிலும் ஆர்.எஸ்.எஸ்ஸில் அதிகம். ஏன் முற்போக்கு பேசுகிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் பட்டாச்சாரிகளும் பாஸுக்களும் நம்பூதிரிபாடுகளும் நாயினார்க்ளும் மட்டுமே மேலே வரமுடிகிறது. காங்கிரஸிலும் திமுகவிலுமோ ஒரு குடும்பத்தில் நீங்கள் பிறந்தாலோ அல்லது மண உறவு வைத்துக்கொண்டாலோ மட்டும்தான் மேலே வரமுடிகிறது. ஈவெராவுக்கு கூட தனக்கு பின்னர் மேலே வர தாழ்த்தப்பட்ட தலித் சாதியை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை அல்லவா? இரண்டாவது திருமணத்துக்கு வயதில் காட்டிய ‘புரட்சியை’ அதே அளவில் சாதியில் காட்டமுடியவில்லை அல்லவா? இந்நிலையில் நீங்கள் இதையெல்லாம் விட எவ்வளவோ சிறப்பாக தீண்டாமையையும் சாதியத்தையும் ஒழித்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸில் கேள்விகளை கேட்காமல் இந்த இயக்கங்களிடமெல்லாம் கேள்விக் கேட்டுக்கொண்டு பிறகு எங்களிடம் வந்து கேளுங்கள் அது வரை நீங்கள் வெறும் வாய்சவடால் விடுக்கும் முகமூடி ஆசாமிமட்டுமே. உங்களிடம் வெளிப்படுவது சமுதாய அக்கறை அல்ல. இந்து தருமத்தின் மீதும் சமுதாயத்தின் மீதும் இருக்கும் வெறுப்பினை உமிழ சாதியத்தை பயன்படுத்தும் ஒரு மோசமான தந்திர உக்தி மட்டுமே. ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டில் வலுவாக இல்லாத போதும் அது வலுபெற்றால் எத்தகைய சமுதாய மாற்றம் நிகழும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடுக்கு ஆறு கிமீ தூரத்தில் உள்ள பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்துக்கு சொந்தமான ஜோகிப்பட்டி கிராமத்தை சென்று பாருங்கள். 1980களுக்கு முன்னர் அந்த ஊர் தலித்துகள் பப்பாரபட்டி கீரிப்பட்டியைக் காட்டிலும் மோசமான நிலையில் ஒடுக்கப்பட்டு வாழ்ந்தார்கள். இன்று அதே கிராமத்தில் தலித்துகள் சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். அவர்களை கொடுமைப்படுத்திய சமுதாயத்தினர் சமத்துவ சகோதர உணர்வுடன் தம் குற்றங்களை துறந்தும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் அவற்றினை மன்னித்தும் இன்று சமுதாய நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தருமபுரி ஆட்சியர் இந்த கிராமத்துக்கு சமுதாய நல்லிணக்கத்துக்கான விருதினை வழங்கியுள்ளார். இந்த மாற்றத்துக்கு பின்னால் தீண்டாமையையும் சாதியத்தையும் எதிர்த்த அந்த ஊர் ஆர்.எஸ்.எஸ் இளைஞர்கள் ஊரிலிருந்து விலக்கப்பட்ட, அபராதம் விதிக்கப்பட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்ட தியாகங்கள் வெளியே இன்றைக்கும் சொல்லப்படாமல் உள்ளன. இப்படி பாரதமெங்கும் மௌனமாக சமுதாய நல்லிணக்கத்தை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் தவறான தரவுகள், கோணல் பார்வைகளுடன் குற்றம் சொல்லவேண்டும் என்கிற ஒற்றைப்பார்வையை தவிர சமுதாயநல்லிணக்கம் சாதிய அழிப்பு ஆகியவை குறித்து எதையும் சிந்திக்காமல் இந்து வெறுப்பாளர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு நல்ல உதாரணத்தை கொடுத்துள்ளீர்கள் லெமூரியன். அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி. மேலும் உங்களால் மற்றொருவரின் புனித பிம்பமும் கலைந்துள்ளது. திருவாளர் தருமியினுடையது. நான் சிலகாலமாகவே ஐயுற்றது போல தருமியின் நாத்திக முகமூடியின் பின்னால் ஒரு கிறிஸ்தவ-திராவிட இனவாத வெறியர் ஒளிந்திருப்பதனை இந்த இழையின் மூலம் ஐயந்திரிபற அறிந்திட முடிந்தது. Spit and run என்பார்கள். கருத்தியல் கோழைகள் ஒரு குற்றச்சாட்டை தூக்கி போடுவார்கள். ஆனால் அது எதிர்கொள்ளப்பட்டால் படு அமைதியாக அது நடக்காதது போல செயல்படுவார்கள். தருமியும் அதே வகையறா என்பது அவர் தம் வலைப்பதிவில் லெமூரியனின் வெறுப்பியல் பார்வையை மட்டும் பதிப்பித்ததிலிருந்து தெளிவானது. தருமி அத்தகைய கருத்தியல் நேர்மைக்கேட்டினை பறைசாற்றிக்கொள்வது அவருடைய தனிமனித சுதந்திரம் அதில் தலையிட நான் யார்? எதுவானாலும் அவரை குறித்த எனது மதிப்பீட்டினை இப்போது நான் நிர்ணயிக்க இந்த இழை உதவியது. அவ்விதத்தில் தருமி, லெமூரியன் மற்றும் சிறில் அலெக்ஸுக்கு மீண்டும் நன்றி.

 58. இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள், கிருஸ்துவர்கள் என்றால் மதப் பிரச்சாரர்கள் என்கிற திரிபுவாதங்களின் வரிசையில் சங் பரிவாரத்தின் முரண்பாடுகளை கேள்வி கேட்பவர்கள் பித்தலாட்டக்காரர்கள் என்கிற புதிய கற்பிதம். ஷாகாவிற்கு செல்வதைப் புனிதப் பயணமாக நினைப்பவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

  காங்கிரசும் திமுகவும் அரசியல் கட்சிகள் அவை அரசியல் சாக்கடையில் ஊறியவை. அதனால் தலைமைப் பீடத்தை அவரகளது குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ் சோ இந்து ஓற்றுமைக்காக பாடுபடும் கலாச்சார அமைப்பு என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் ஒரு அமைப்பு. கடந்த 83 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் சில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்டாத அங்கீகாரம் இனிமேல்தான் அளிக்கப்பட போகிறதா?.

  மெக்கா, மதினா ஆகிய இருநகரங்களுக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் செல்ல சவுதி வகாபிய அரசு அனுமதி அளிப்பது எந்த அளவிற்கு சாத்தியமோ, போப்பாண்டவராக ஒரு பெண் தேர்ந்தடுக்கப்படுவது எவ்வளவு சாத்தியமோ அதே அளவு சாத்தியக்கூறுகள்தான் ஆர்.எஸ்.எஸ் தலைமைப் பொறுப்பிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வருவதற்கும் இருக்கிறது.

  மீண்டும் சொல்கிறேன் “காசு வாங்கிக்கொண்டு ஒரு குற்றவாளியை நிரபராதி என்று வாதாடும் வழக்கறிஞரின் சாதுர்யம்தான் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது”. உங்க‌ள் விட‌ய‌த்தில் காசுக்குப் ப‌திலாக‌ ம‌த‌வாத‌ போதை. ஆயினும் த‌ங்க‌ள‌து வாத‌த் திற‌மையை பாராட்ட‌க் க‌ட‌மைப் ப‌ட்டிருக்கிறேன்.

 59. //மெக்கா, மதினா ஆகிய இருநகரங்களுக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் செல்ல சவுதி வகாபிய அரசு அனுமதி அளிப்பது எந்த அளவிற்கு சாத்தியமோ, போப்பாண்டவராக ஒரு பெண் தேர்ந்தடுக்கப்படுவது எவ்வளவு சாத்தியமோ அதே அளவு சாத்தியக்கூறுகள்தான் ஆர்.எஸ்.எஸ் தலைமைப் பொறுப்பிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வருவதற்கும் இருக்கிறது.//
  அன்புள்ள லெமூரியன், நீங்கள் கூறியுள்ள இரண்டுமே (சவூதி வத்திகான்) தெள்ளத்தெளிவாக சட்டபூர்வதடைகள் ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸில் அத்தகைய தடைகள் ஏதுமில்லை என்பதுடன் ஒவ்வொரு முறை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான நிலையையே ஆர்.எஸ்.எஸ் எடுத்து வருகிறது. நிச்சயமாக தாழ்த்தப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் விளங்கும் காலமும் வரும். அதற்கு முன் நாடக பாணியில் மாநாட்டு கொடியேற்ற மட்டும் தலித்துகளை பயன்படுத்திவிட்டு தலைமையை தன் குடும்பத்திடமே தக்க வைக்கும் திராவிட முக மாய்மாலம் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் கிடையாது. நீங்கள் கேட்டுள்ள கேள்விகளையே வரிசைப்படுத்தி பாருங்கள்…1. கோவிலில் தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பதாக சொன்னீர்கள். ஆனால் அது உண்மை அல்ல என்பதுடன் அதற்கு நேர் எதிராக கோவிலில் தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை ஆர்.எஸ்.எஸ் வரவேற்றுள்ளது என்பதுடன் அதற்கான பயிற்சியையும் அது அளித்து அவ்வாறு நியமிக்கப்படவேண்டும் என கோரிக்கையையும் அது முன்வைத்துள்ளதை காட்டினேன். அடுத்ததாக வேறு ஒரு பழி அதுவும் இல்லையா இன்னும் புதிதாக யோசித்து ஒரு பழி தாழ்த்தப்பட்டவர் தலைவராக இருந்திருந்தால் அப்போதும் கூட அவர் மேல்சாதி காரர்களின்கைப்பாவை என பழி சொல்லலாம். சரி ஐயா திமுகவும் காங்கிரசும் அரசியல் கட்சிகள். ஈவெராவின் திக வின் கதை என்ன? இன்று திகவில் எத்தனை சதவிகித இடங்கள் தலித்துகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன? எத்தனை தலித்துகளுக்கு ஈவெரா அறக்கட்டளையில் எத்தனை சதவிகித பங்கு இருக்கிறது? ஏன் ஈவெரா தன்னை பராமரிக்கவும் தன் சொத்து நிர்வாகத்துக்காகவும் ஒரு தலித் பெண்ணை தேர்ந்தெடுத்து தன் நிர்வாகத்தை வழி நடத்த செய்யவில்லை? ஏன் நிலவுடமை சமுதாயத்தை சேர்ந்த வீரமணி? ஏன் தலித்துகளை தேர்ந்தெடுக்கவில்லை? இந்த ஏன்கள் எல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்றால் மட்டும் ஏன் வந்துவிடுகிறதல்லவா? பெரியார் திக சில வருடங்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ் கேள்விகளுக்கு அதிரடி பதில்கள் என ஒரு நூல் பிரசுரித்திருந்தார்கள். அப்போது தேவரஸ் ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்தார். அந்த நூலில் ஒரு ஹேஷ்யம் சொல்லியிருந்தார்கள்: அதாவது ஆர்.எஸ்.எஸ்ஸில் அடுத்த தலைவராக ராஜேந்திரசிங்கை நியமிக்க வேண்டும் ஆனால் நியமிக்கமாட்டார்கள் ஏனெனில் அவர் பார்ப்பனர் அல்ல மாராட்டிய பார்ப்பனரைதான் நியமிப்பார்கள் என்று. ஆனால் அடுத்த தலைவராக ராஜேந்திர சிங் நியமிக்கப்பட்டார். உடனே அவர் நிலவுடமை சமுதாயக்காரர் என்றார்கள். அதே போல வடநாட்டு காரர்கள்தான் அதிலும் சித்பவன் பிராம்மணர்கள்தான் (இவர்களே மீனவர்களாக இருந்து பிராம்மணர்கள் ஆக்கப்பட்டவர்கள்தான் என்பது வேறுவிஷயம்) ஆர்.எஸ்.எஸ் தலைவராக முடியும் என பல ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு பிரச்சார நூல்களில் படித்திருக்கிறேன். ஆனால் தென்மாநில சுதர்ஷன் தலைவராக்கப்பட்டார். இதற்கு உடனே அவர் பார்ப்பனர் என்பார்கள். எனவே உங்களது வாதங்கள் வழக்கம் போல தன் தவறினை ஏற்க மனமற்ற கண்ணை மூடிக்கொள்ளும் வாதங்களாகவே உள்ளன. ஆனால் இதிலும் வேடிக்கை என்னவென்றால் மனு என்றீர்கள் ஆரிய படையெடுப்பு என்றீர்கள். அது தவறென நிரூபித்தேன். உடனே கோவில் அர்ச்சகர் என்றீர்கள் அதில் பிராம்மணர்களை இந்துத்துவ அமைப்புகள் ஆதரிப்பதாக சொன்னீர்கள். அதுவும் தவறென நிரூபித்தவுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்கிறீர்கள். இப்போது யாருடைய வாதம் உண்மையை புறந்தள்ளி வக்கீல் வாதம் போல இருக்கிறது என்பது அறிவுடைய எவருக்கும் புரியும்.மீண்டும் எப்போதாவது சந்திக்கலாம் லெமூரியன். வந்தனங்கள்.

 60. அப்புறம் மறந்துவிட்டேனே! இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்கள் என்றால் மதப்பிரச்சாரகர்கள் என நான் இந்த இழையில் எங்கே சொல்லியிருக்கிறேன் லெமூரியன்? இன்னும் சொன்னால் கிறிஸ்தவத்தின் பன்முகத்தன்மையை இந்த இழையில் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன். இதோ: “ஆண்டனி டி மெல்லாவை சிறில் அலெக்ஸ் நேசிக்கவைக்கும் காரணி சிறில் அலெக்ஸின் மனமண்டலத்தில் இன்னமும் நிறைந்திருக்கும் இன்னமும் கிறிஸ்தவத்தால் அழிக்கப்படாத இந்துத்துவம் தான். அண்டானி டி மெல்லாவும், குமாரப்பாவும் எதனால் பாரதமக்கள் மீது திணிக்கப்பட்ட கிறிஸ்தவத்திலிருந்து உருவானார்கள் என சிறிது சிந்தித்தால் பாரதத்தின் தாய் ‘மதம்’ எது என்னும் கேள்விக்கு விடை கிடைக்கும்.”

 61. PARAMA PITHA சொல்கிறார்:

  Cyril,

  You are not qualified enough to open up such sensitive topic, let alone talk about it. I would advise you to close it rather than making you a fool of yourself by opening up a forum for hate mongering fascists.

  Params

 62. Paramapitha,
  Thanks for the advice. While I have no certificates of qualification I am not one who stands down on any issue until the other guy (or I) falls dead. I approach Arguments expecting no results. Everyone has their own justifications. If I want mine respected I would have to respect the others.

  So if you had meant by ‘Qualification’ the ability to thrash the other guy into pieces and belittle his being his faith and ideas I am not qualified enough. And I do not desire such qualifications.

  I know for sure that his ideas, like mine have been generated through the various sources we have access to. While my opinions are right and just for me, they need not be so for the other person. If that were the case all human beings will be thinking like Paramapitha… I am sure even you would not desire that.

  Thanks for the feedback.

 63. அரவிந்தன்,
  ஆண்டனி டி மெலோவை நேசிக்க இந்துதுதுவம் என நீங்கள் சொல்வதற்கும் என் கடவுளே இறைவன் என ஆபிரகாமிய மதங்கள் சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை.

  ஆபிர்காமிய சிந்தனை அல்லாத எல்லாமே இந்து சிந்தனைதான் எனச் சொல்கிறீர்கள். மனிதனின் இயல்பான இறையியல், தத்துவத் தேடல்களையெல்லாம் இந்துத்துவம் என்று கூறிவிடுகிறீர்கள். இதே நோக்கில்தான் தாய்மதம் எனும் பதமும் உருவாக்கப்படுகிறது.

  ஆந்தனி டி மெலோவை பின்பற்றுபவர்கள் எல்லோரும் கிறீத்துவத்தை எதிர்ப்பவர்களல்ல. கிறீத்துவ சிந்தனையில் ஆந்தனி டி மெலோ போன்ற சிந்தனையாளர்களுக்கு இடம் இருந்துகொண்டிருக்கிறது. கத்தோலிக்கத்திலுமேகூட.

  முதலில் இந்து மதம் என்பது வேறெந்த மத அடையாளமும் அற்றவர்களின் மதம் எனும் வரையறையிலுள்ள் குறையை பாருங்கள். அது ஒரு செல்லுபடியாகாத கணக்கு. இதபடி சாமி சிலையை உடைத்து இழிவுசெய்தவரையும் உங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்கிறீர்கள். உண்மையில் நீங்கள் கிறீத்துவர். ஏனென்றால் பகைவருக்கும் (இந்த விஷயத்தில்) அன்பு காட்டிவிட்டீர்கள் என்றே சொல்வேன். :)

 64. // hate mongering fascists//
  Hope you are not referring to me :)

 65. அரவிந்தன் ஒரு கேள்வி.

  சாதீயம் இந்து மதத்தின் பிள்ளையில்லை என ஒருபக்கம் மறுக்கிறீர்கள் ஆனால் சாதி ஒழிப்பு அல்லது சமநீதி என்பது இந்துத்துவ அமைப்புகளின் சாதனையும்கூட என்று பெருமை கொள்கிறீர்கள் இது முரணாகத் தெரியவில்லையா?

 66. aathirai சொல்கிறார்:

  //திராவிட கர்நாடகம் திராவிட தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பதாகவும் பார்க்கலாம் இல்லையா. எங்கே போனது இன்பத்திராவிடம்? இது வெறும் திசை திருப்பும் வேலை.//

  vaatal nagaraj solvadhu pola karnatakavudan erode,dharmapuri, madras,tiruchi , madurai, rameswaram ellam inaichutta kaveriyil thanni prachnayum theendhudum. dhravidamum kedaichudum.

  indhiya dhesiyathaal kaveri thanni vandhadhaa enna?

 67. //ஆந்தனி டி மெலோவை பின்பற்றுபவர்கள் எல்லோரும் கிறீத்துவத்தை எதிர்ப்பவர்களல்ல. கிறீத்துவ சிந்தனையில் ஆந்தனி டி மெலோ போன்ற சிந்தனையாளர்களுக்கு இடம் இருந்துகொண்டிருக்கிறது. கத்தோலிக்கத்திலுமேகூட. முதலில் இந்து மதம் என்பது வேறெந்த மத அடையாளமும் அற்றவர்களின் மதம் எனும் வரையறையிலுள்ள் குறையை பாருங்கள். அது ஒரு செல்லுபடியாகாத கணக்கு. இதபடி சாமி சிலையை உடைத்து இழிவுசெய்தவரையும் உங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்கிறீர்கள். உண்மையில் நீங்கள் கிறீத்துவர். ஏனென்றால் பகைவருக்கும் (இந்த விஷயத்தில்) அன்பு காட்டிவிட்டீர்கள் என்றே சொல்வேன்.//

  சிறில்,

  முதலில் ஆண்டனி டி மெல்லா எப்படி ஆண்டனி டி மெல்லாவாக மாறினார் என பாருங்கள். அதிலுள்ள இந்து தத்துவத்தை நீங்கள் மறுதலிக்க முடியாதல்லவா? அவருடைய கதை தொகுப்புகளை ஒரு கணக்கெடுங்கள் (prayer of the frog, Well springs இத்யாதி) வேறெந்த மரபினைக் காட்டிலும் அதில் இந்து மரபே அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை காண்பீர்கள். அவரது ‘சாதனா’ உருவாக காரணமாக இருந்தது எது? ஆண்டனி டி மெல்லாவை பின்பற்றுபவர்களெல்லாம் கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் போப் பெனிடிக்ட்டும் (பழைய கார்டினல் ராட்ஸிங்கர்) சரி போப் ஜான் பால் II ம் (கார்டினல் ராட்ஸிங்கர் மூலமாக) சரி மிக அருமையாக தங்கள் காலங்களில் ஆண்டனி டி மெல்லாவை கண்டித்திருக்கிறார்கள். அவரது போதனைகள் ‘கிழக்கத்திய வெற்றிடத்துக்கு’ அழைத்து செல்வதாகவும் கிறிஸ்தவத்தின் தனித்தன்மையை மறுக்கும் தப்பிதங்கள் உடையதாகவும் தெள்ளத்தெளிவாக அறிக்கை விட்டிருக்கிறார்கள். எனவே கிறிஸ்தவத்தின் இன்றியமையாத ஏதோ ஒரு அம்சம் ஆண்டனி டி மெல்லாவில் பொருந்தாமல் போகிறது என்பது தெளிவு. ஆக, ஆண்டனி டி மெல்லாவை ஒரு ஆன்மிக தெளிவு கொண்ட ஞானியாக (நான் அப்படித்தான் உணர்கிறேன்) கருதுகிறவர்கள் போப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இறையியல் அடிப்படை கோளாறு உள்ளதாகத்தான் உணரவேண்டும். இந்த ஞானம் என்னை பொறுத்தவரையில் ஆண்டனி டி மெல்லாவுக்கு இந்த மண்ணின் ஆன்மிக மரபு மூலமாகவே கிட்டியது. இந்த மண்ணின் ஆன்மிக மரபு எத்தனையோ படையெடுப்புகள் இன்க்விஷன்கள் சமுதாய மாற்றங்கள் ஆகியவற்றினிடையே காப்பாற்றி வைக்கப்பட்டுள்ளது இந்து என்கிற பெயரில்தான். சாதியத்துக்கு எதிராக போராடிய ஏகநாதர் போன்றவர்களும் தங்களை இந்து என்றுதான் அடையாளப்படுத்தியுள்ளார்கள் என்பதையும் கவனியுங்கள். இன்னும் சொன்னால் தீவிர சாதிய ஆதரவாளர்கள் இந்த இந்து என்கிற அடையாளத்தை எதிர்த்த தரவுகளும் இருக்கின்றது. எனவே நான் இந்து என கூறியது தவறில்லை. அடுத்ததாக பகைவனுக்கு அருளுதல் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை என நீங்கள் கருதினால் சந்தோஷமே. ஆனால் ஒருவன் பகைவனுக்கு அன்பு செய்வதாலேயே அவன் கிறிஸ்தவன் ஆகிவிட மாட்டான் என கருதுகிறேன். இந்த அன்பு என்பது loaded term. Your concept of love may be my concept of hate. எந்த சபையும் கத்தோலிக்க சர்ச் உட்பட ஏற்றுக்கொள்ளாத வரையறை இது. ஆனால் நான் இந்து என்பதற்கு கூறிய வரையறைகள் அனைத்துமே இந்து சமுதாய தலைவர்கள், ஆன்மிக வழிகாட்டிகள், இந்திய அரசியல் நிர்ணய சட்டம் கூறுகின்றதே ஆகும். நானாக ஒரு வரையறையை உருவாக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது ஒரு வாதத்துக்காக நீங்களே ஒரு வரையறையை உருவாக்க முனைகிறீர்கள். இதனை நடைமுறைப்படுத்த உங்களாலேயே ஆகாது. ஆனால் விவிலியத்தால் இறைஅனுபவம் பெற்றேன் என்கிற மலர்மன்னனை போற்ற எங்களால் முடிகிறது. பகவத் கீதையால் இறை அனுபவம் பெற்றேன் என்று நீங்கள் சொல்லியபடி நீங்கள் செமினரியில் இருந்தால் போப் ஆசிர்வாதப்பர் உங்களுக்கு எப்படிப்பட்ட ஆசிர்வாதத்தை அருளியிருப்பார் என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். :)

 68. //சாதீயம் இந்து மதத்தின் பிள்ளையில்லை என ஒருபக்கம் மறுக்கிறீர்கள் ஆனால் சாதி ஒழிப்பு அல்லது சமநீதி என்பது இந்துத்துவ அமைப்புகளின் சாதனையும்கூட என்று பெருமை கொள்கிறீர்கள் இது முரணாகத் தெரியவில்லையா?//

  சாதீயம் இந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் வியாதி. மனித சமுதாயங்கள் அனைத்தையும் பீடித்திருக்கும் வியாதிதான் இது. ஆனால் ஐரோப்பிய சமுதாயம் தன் சமுதாய சாதிய அமைப்பை அழிக்க மாற்றினங்களை அடிமை கொண்டது ; இன அழிப்பு செய்தது. ஒவ்வொரு கண்டத்தையும் ‘இறைவன் தங்களுக்கு வாக்களித்த பூமி’ என பிரகடனப்படுத்தி அங்கு வாழ்ந்த மக்களை கனானியர் என முத்திரை குத்தி ஒன்று அடிமைப் படுத்தியது அல்லது அழித்தொழித்தது. ஆனால் இந்து தருமம் இன்றளவும் இந்த சாதிய சமுதாய தீமையை தன் ஆன்மபலத்தினால் மட்டுமே எதிர்த்து போராடி வருகிறது. எனவே சாதியம் சமுதாய பிறழ்ச்சி என்றால் இந்து தருமம் அதற்கான மருந்தாக இருக்கிறது. ஐரோப்பாவின் சாதி அமைப்பு அழிந்ததற்கு எவ்வித ஆன்மிக கருத்தியல் பங்களிப்பும் நான் அறிய இல்லை. ஐரோப்பாவில் சாதி அழிந்ததற்கு உலகம் கொடுத்த விலை மிகக் கொடுமையானது. அத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சாதி அழிய நாம் மட்டுமே மனமுவந்து அதற்கான சாதகபாதகங்களை ஏற்கிறோம். இதனையே நான் இந்துத்துவ சாதனையாக பார்க்கிறேன். சாதியத்துக்கு இந்து தருமத்தில் இடமில்லை. ஆனால் அது இந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி அதனை இந்து தரும கருத்தியலை கொண்டு அழிப்பதில் நான் பெருமை அடைகிறேன். இதில் இடையில் புகுத்தப்பட்ட மேற்கத்திய பிரச்சாரமான சாதியமே இந்து மதம் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்து தருமம் சாதியத்தை வெற்றி கொள்வதில் எனக்கு ஏற்படும் சந்தோஷம் இருமடங்காகிறது. இதில் எனக்கு முரண்பாடு ஒன்றும் தெரியவில்லை.

 69. அப்புறம் இங்கே நாட்டார் ஜல்லி அடிப்பவர்களுக்காக நேசகுமார் எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கான ஒரு சுட்டியை இங்கே இடலாமா சிறில். ஒரு விதத்தில் இது நம் அனைவருக்குமே முக்கியமான கேள்விதான்.
  http://islaamicinfo.blogspot.com/2008/04/blog-post_28.html

 70. க‌ழுகு சொல்கிறார்:

  ///சாதீயம் இந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் வியாதி.///

  இதுதான் உன்மையென்றால் மனு சாஸ்திரம் முதல் வியாதி. மனுவை யாருங்க இப்ப நம்புறா அதெல்லாம் திராவிட திம்மிகளுடைய பொய் பிரச்சாரம் என்று சொல்லும் ஆரிய ஆர்.எஸ்.எஸ், விஹெஷ்பி யின் ஊர்வலங்களில் தங்களுடைய தலைக்கு மேல் மனு நூல்களை உயர்த்திபிடித்துக்கொன்டு செல்வதெல்லாம் எதற்க்காக என்று தெரியவில்லை. ஒரு வேளை திராவிட சூழ்ச்சியாக இருக்கலாம்.

  வருனாசிரமம் என்பது இந்து சனாதன தருமமே இல்லையாம். சரி இதையே உன்மையென்றால் வருனாசிரமத்தை உருவாக்கியவன் நானே என்று சொல்லும் கன்னன் ஒரு வியாதி.

  தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மனிதர்களை படைத்த பிரம்மன் ஒரு வியாதி.

  தாழ்த்தப்பட்டவர்களை உயிரோடு எரித்த விஹெச்பியினர் ஒரு வியாதி.

  ம‌ல‌ம் அள்ளுவ‌த‌ன் மூல‌ம் தெய்வீக‌ம் அடைய‌முடியும் என்று கூறிய‌ மோடியும் அதை எதிரொலித்த‌ இல‌.க‌னேச‌ன்க‌ளும் வியாதிக‌ள்.

 71. அரவிந்தன்,
  உங்கள் பார்வையில் நடுநிலைமையே இல்லை. இந்து சமுதாயத்தை பொறுத்தமட்டிலும் சாதீயம் ஒரு சமூக நிகழ்வாகவும் கிறீத்துவத்தில் அது ஏதோ அடிப்படை இறையியலிலிருந்து தோன்றியதாகவும் கூறுகிறீர்கள்.

  முதலில் அடிமைத்தனம் என்பது கிறீத்துவத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை மறைத்துவிடுகிறீர்கள். இயேசு பிறப்பிற்கும் 1800 வருடங்களுக்கும் முன்னரே அடிமைத்தனத்தின் வரலாறு துவங்குகிறது. கிரேக்க, ரோம கலாச்சாரங்கள் அடிமை முறையை உருவாக்கி வைத்திருந்தன.

  ஜாதியத்துக்கு ஒரு இறையியல் விளக்கம் இருப்பதுபோல அடிமைத்தனத்துக்கு இறையியல் வழியாக ஒரு justification தரப்பட்டதே தவிர பைபிள்தான் அடிமை முறையை உருவாக்கியது என்று சொல்லுவது சரியல்ல.

  ஆங்கிலேயர் உலகெல்லாம் சென்று அடிமைப்படுத்தியதும் அரசியல், சமூக நிகழ்வுகளே. அதற்கு ஏதேனும் இறையியல் விளக்கமும், காரணமும் தேவைப்பட்டபோது பைபிளைப் புரட்டி நம் பதிவர்கள் இப்போது “பைபிள் பின்பக்க புணர்ச்சியை கற்றுத்தருகிறது” என பதிவிடுகிறார்களே அதுபோல தங்களுக்குத் தேவையான அர்த்தத்தை, விளக்கத்த ஏற்படுத்திக்கொண்டனர்.

  உங்களின் இரட்டைநிலை இன்னொரு இடத்திலும் தெரிகிறது. அதாவது அடிமைத்தன ஒழிப்புக்கும் கிறீத்துவ இறையியலுக்கும் சம்மந்தமே இல்லை என்பது. இதுதான் முழுப்பூசணிக்காயை… என்பது.

  அடிமைத்தனத்துக்கு எதிரான இறையில் கிறீத்துவத்தின் ஆரம்பத்திலேகூட இருந்திருக்கிறது. கான்ஸ்டாண்டி நோபிள் அடிமைகளை விடுவிக்கும் அதிகாரத்தை சாமியார்களுக்கு வழங்கினார்… பல ஆதி கிறீத்துவர்கள் தங்கள் அடிமைகளை விடுவித்தனர்…நீங்கள் சொல்லும் அகஸ்டின் கூட அடிமைகள் நல்ல முறையில் நடத்தப்படவேஎண்டும் எனச் சொன்னவர்தான்.(அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் எனச் சொல்லவில்லைதான்).

  எப்படி Curse of Sham அடிமை அமைப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்ட இறையியலோ அதுபோலவே இயேசுவின் அன்பு குறித்த போதனைகளும், எல்லா மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன் எனும் இறையியலும் சேர்ந்துதான் அடிமைகளை விடுவித்தது.

  முற்றிலும் கிறீத்துவ இறையியலிலாலேயே அடிமைத்தனம் அழிந்தது எனச் சொல்லவில்லை… ஆனால் அடிமைத்தனம் எப்படி பைபிள் வார்த்தையால் நியாயப்படுத்தப்பட்டதோ அதேபோல அடிமைத்தன ஒழிப்பும் பைபிளால், கிறீத்துவ இறையியலால் நியாயப்படுத்தப்பட்டது. பின்னர் கிறீத்துவ/கத்தோலிக்க சட்டமாகவே இயற்றப்பட்டுவிட்டது.

 72. இதுதான் உன்மையென்றால் மனு சாஸ்திரம் முதல் வியாதி. மனுவை யாருங்க இப்ப நம்புறா அதெல்லாம் திராவிட திம்மிகளுடைய பொய் பிரச்சாரம் என்று சொல்லும் ஆரிய ஆர்.எஸ்.எஸ், விஹெஷ்பி யின் ஊர்வலங்களில் தங்களுடைய தலைக்கு மேல் மனு நூல்களை உயர்த்திபிடித்துக்கொன்டு செல்வதெல்லாம் எதற்க்காக என்று தெரியவில்லை. ஒரு வேளை திராவிட சூழ்ச்சியாக இருக்கலாம்.

  1. முதலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களை பார்க்கிற எவர்க்கும் அதில் எந்த புனித நூலோ புனிதமல்லாத நூலோ எடுத்துச்செல்லப்படாது என்பது தெரிந்திருக்கும். எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் யாரோ அவ்வாறு எடுத்துச்சென்றாதாக கேள்விப்பட்டதாக எழுதியதை இப்படி ஆதாரமாக மாற்றி கதைவிடுபவர்களிடம் என்ன சொல்ல.
  //வருனாசிரமம் என்பது இந்து சனாதன தருமமே இல்லையாம். சரி இதையே உன்மையென்றால் வருனாசிரமத்தை உருவாக்கியவன் நானே என்று சொல்லும் கன்னன் ஒரு வியாதி.//
  பகவத் கீதை எந்த இடத்தில் பிறப்படிப்படையிலான சாதியை வலியுறுத்துகிறது என காட்ட முடியுமா? வர்ணத்தை பொறுத்தவரையில் பல நூற்றாண்டுகளுக்கு அது பிறப்படிப்படையில் கடைபிடிக்கப் படவில்லை என அம்பேத்கர் எழுதியிருப்பது உங்களுக்கு தெரியுமா?
  //தாழ்த்தப்பட்டவர்களை உயிரோடு எரித்த விஹெச்பியினர் ஒரு வியாதி.//
  பொய் கதைகளை இப்படி விடுவதுதான் வாதமா?
  //ம‌ல‌ம் அள்ளுவ‌த‌ன் மூல‌ம் தெய்வீக‌ம் அடைய‌முடியும் என்று கூறிய‌ மோடியும் அதை எதிரொலித்த‌ இல‌.க‌னேச‌ன்க‌ளும் வியாதிக‌ள்.//
  ஒருவர் சொன்னதை எப்படியெல்லாம் திரிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஏறக்குறைய இதே போல ஒரு மேற்கோளை மார்ட்டின் லூதர் கிங் சொல்லியிருக்கிறார் அப்போது அவரும் வியாதியா? தேவையில்லாமல் கிளப்பிவிடப்பட்ட இந்த குஜராத் தேர்தல் வெடி அங்கேயே புஸ்வாணமாகிவிட்டதே அதைவைத்து இங்கும் வாணவேடிக்கை செய்து அசிங்கமாக வேண்டுமா?
  //உங்கள் பார்வையில் நடுநிலைமையே இல்லை. இந்து சமுதாயத்தை பொறுத்தமட்டிலும் சாதீயம் ஒரு சமூக நிகழ்வாகவும் கிறீத்துவத்தில் அது ஏதோ அடிப்படை இறையியலிலிருந்து தோன்றியதாகவும் கூறுகிறீர்கள்.//
  யார் பார்வையில் நடுநிலைமை இல்லை சிறில்? முதலிலிலிருந்தே மிகவும் நளினமான சாமர்த்தியமான வாதங்களால் சாதியத்தை இந்து தருமத்துடன் முடிச்சு போட மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என வாதிட்ட உங்களிடமா? அல்லது அதே விதத்தில் கிறிஸ்தவத்தை பார்த்தால் எப்படி இருக்கும் என்று அதனை திருப்பி சுட்டிய என்னிடமா?

  ////They started talking about liberating the blacks when they could economically afford it.//
  இது ஒரு கோணல் பார்வை என்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் மார்ட்டின் லூத்தரின் காலத்தில் மட்டுமல்ல இப்போதும்கூட அடித்தட்டு வேலைக்கு ஆட்களின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.//
  இப்படியெல்லாம் நீங்கள் சொல்லும் போது எனக்கு அதிசயமாகவே இருந்தது. Economic affordability என நான் கூறுவது என்ன என்பதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா இல்லை வாதமிடவேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறீர்களா தெரியவில்லை. பெரும் பண்ணைகளில் நடத்தப்பட்ட கறுப்படிமை முறையே அமெரிக்க சந்தைகளில் பெரிய அளவில் செல்வத்தை உருவாக்கப் பயன்பட்டது. இயந்திரங்களின் கண்டு பிடிப்புகள் அந்த அடிமைத்தன்மையை தேவையில்லாமல் ஆக்கியபிறகே கிறிஸ்தவ மனசாட்சி அடிமைகளின் நிலை குறித்து விழிப்படைந்தது.
  //முதலில் அடிமைத்தனம் என்பது கிறீத்துவத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை மறைத்துவிடுகிறீர்கள். இயேசு பிறப்பிற்கும் 1800 வருடங்களுக்கும் முன்னரே அடிமைத்தனத்தின் வரலாறு துவங்குகிறது. கிரேக்க, ரோம கலாச்சாரங்கள் அடிமை முறையை உருவாக்கி வைத்திருந்தன.//
  உண்மை. ஆனால் பாகனிய தத்துவவாதிகளும் அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதே போல ஆதி கிறிஸ்தவ சபையை உருவாக்கியவர்களும் அடிமை முறையை ஆதரித்தனர்.

  //ஆங்கிலேயர் உலகெல்லாம் சென்று அடிமைப்படுத்தியதும் அரசியல், சமூக நிகழ்வுகளே. அதற்கு ஏதேனும் இறையியல் விளக்கமும், காரணமும் தேவைப்பட்டபோது பைபிளைப் புரட்டி நம் பதிவர்கள் இப்போது “பைபிள் பின்பக்க புணர்ச்சியை கற்றுத்தருகிறது” என பதிவிடுகிறார்களே அதுபோல தங்களுக்குத் தேவையான அர்த்தத்தை, விளக்கத்த ஏற்படுத்திக்கொண்டனர்.

  உங்களின் இரட்டைநிலை இன்னொரு இடத்திலும் தெரிகிறது. அதாவது அடிமைத்தன ஒழிப்புக்கும் கிறீத்துவ இறையியலுக்கும் சம்மந்தமே இல்லை என்பது. இதுதான் முழுப்பூசணிக்காயை… என்பது.

  அடிமைத்தனத்துக்கு எதிரான இறையில் கிறீத்துவத்தின் ஆரம்பத்திலேகூட இருந்திருக்கிறது. கான்ஸ்டாண்டி நோபிள் அடிமைகளை விடுவிக்கும் அதிகாரத்தை சாமியார்களுக்கு வழங்கினார்… பல ஆதி கிறீத்துவர்கள் தங்கள் அடிமைகளை விடுவித்தனர்…நீங்கள் சொல்லும் அகஸ்டின் கூட அடிமைகள் நல்ல முறையில் நடத்தப்படவேஎண்டும் எனச் சொன்னவர்தான்.(அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் எனச் சொல்லவில்லைதான்).

  எப்படி Curse of Sham அடிமை அமைப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்ட இறையியலோ அதுபோலவே இயேசுவின் அன்பு குறித்த போதனைகளும், எல்லா மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன் எனும் இறையியலும் சேர்ந்துதான் அடிமைகளை விடுவித்தது.//

  முதலில் படைப்பாகமத்தின் அடிப்படையில்தான் கறுப்பின மனிதன் மனிதனே இல்லை என வாதிக்கப்பட்டது. பின்னர் காமின் சாபம் எனும் அடிப்படையில் கறுப்பின மக்கள் குறித்து பல எதிர்மறை சித்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஏன் இன்றைய இணைய கிறிஸ்தவம் வரை அந்த கற்பிதங்கள் வாழுகின்றன. ஆண்டனி ரவீந்திரன் என்கிற செந்தழல் ரவி ‘கிருஷ்ணர் நீக்ரோ அவருக்கு அது பெரிசு’ என்று எழுதுவதன் பின்னால் ‘காமின் சந்ததியான நீக்ரோ சபிக்கப்பட்டவன் அவனுக்கு காமவேட்கை அதிகம்’ என்கிற கிறிஸ்தவ-வெள்ளையின வாத கருத்தியல் மண்டி கிடக்கிறது. இதன் 180டிகிரி ரிவர்ஸலாக கிறிஸ்தவ அடிப்படையிலான கறுப்பு கிறிஸ்தவ விடுதலையியல் சிந்திக்கிறது. அதாவது ஆபிரகாமும் கிறிஸ்துவும் கறுப்பின மக்களாம் வெள்ளையின மக்கள் மோசக்காரர்களாம் கிரேக்கர்கள் எகிப்து கறுப்பின மக்களிடமிருந்து தத்துவங்களை திருடிக்கொண்டார்களாம். எப்படியாவது ஒரு இன மக்களை இறைவனின் பிள்ளைகள் என்றும் பிறரை சைத்தான்களின் பிள்ளைகள் என்றும் சொல்வது ஒன்று இறையியல் அடிப்படையில் இல்லையென்றால் இனவியல் அடிப்படையில் கிறிஸ்தவத்தின் நன்கொடையாக விளங்குகிறது. ஆனால் நான் இதையெல்லாம் கிறிஸ்தவத்தின் அடிப்படை என சொல்லமாட்டேன். ஆனால் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ பிரச்சாரம் மீண்டும் மீண்டும் ஏதோ சாதியமே இந்து தருமம் என சொல்லும்போது இதனை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படுகிறது.
  //அடிமைத்தன ஒழிப்பும் பைபிளால், கிறீத்துவ இறையியலால் நியாயப்படுத்தப்பட்டது. பின்னர் கிறீத்துவ/கத்தோலிக்க சட்டமாகவே இயற்றப்பட்டுவிட்டது.//
  இன்றைக்கும் தென்னமெரிக்க வாழை பண்ணைகளீல் கொழுத்த கத்தோலிக்க முதலாளிகள் கொத்தடிமை முறையை கொண்டிருப்பதால் கத்தோலிக்கம் indentured labor என்பது தவறு என அறிவிக்க முன்வரவில்லை என கேள்விப்பட்டேன். இந்த தகவல் தவறு என்றால் மகிழ்வேன். சிறில் சிறிது தகவல் தரமூடியுமா?

  நிற்க. கிறிஸ்தவத்தின் தோற்றத்துக்கு முன்னரே அடிமைகளுக்கு விடுதலை அளிப்பதைக் குறித்து மிக முக்கிய சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்கள் பல-தெய்வங்களையும் விக்கிரகங்களையும் வணங்கிய Pagan சீர்திருத்தவாதிகள் ஆவர்,

  கிமு 82 இல் கொர்னீலிய சட்டம் அடிமைகளை கொல்வது சட்டப்படி குற்றம் என அறிவித்தது.

  கிமு 30 இல் பெட்ரோனிய சட்டம் அடிமைகளை அரங்கில் மோதவிடுவது குற்றம் என அறிவித்தது.

  அடிமைகளை கொடுமைப்படுத்துவது சட்டப்படி குற்றமாக நீரோவின் காலத்தில் அறிவிக்கப்பட்டது (ஆமாம் அதே நீரோதான்) எபிகூரிய தத்துவத்தை கடைப்பிடித்த ஹர்டியன் பேரரசர் அடிமைகளை மோசமான வசிப்பிடங்களில் தங்க வைப்பதை குற்றம் என அறிவித்தார்.

  பாகன் பேரரசர் அண்டோனியஸ் பயஸ் அடிமைகள் தங்கள் எஜமானர்கள் கொடுமையாளர்களாக இருந்தால் தங்களை விடுவித்துக்கொள்வதும் தப்பிச்செல்வதும் சட்டப்படி செல்லும் என அறிவித்தார். அவர்கள் ஒரு அரச சிலையின் முன்னால் சென்று அதை கட்டி அணைத்து தங்கள் விடுதலையை பிரகடன்ப்படுத்திக்கொள்ளலாம்.

  ஆனால் கிறிஸ்தவம் அடிமை தன் எஜமானனுக்கு வெளிப்படுத்த வேண்டிய பூரண விசுவாசத்தைக் குறித்து பேசுவதை விட்டுவிடுவோம். கிறிஸ்தவ சட்டங்களில் பாகனிய சட்டங்களிலிருந்து ஒரு முக்கிய மாற்றம் தெரிகிறது. அது அடிமை ஸ்தாபனத்தில் மதத்தை புகுத்துகிறது. அதாவது ஒருவன் கிறிஸ்தவனாகவில்லை என்றால் அவன் அடிமையாகவே இருக்க வேண்டியதுதான். கிறிஸ்தவனானால் விடுதலையாவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் கிறிஸ்தவனல்லாதவன் இயல்பாகவே அடிமையாகிவிடுகிறான். கிறிஸ்தவரல்லாத நாடுகளின் குடிமக்கள் இயல்பாகவே அடிமைகளாக எடுக்கப்படவேண்டியவர்கள். கிறிஸ்தவம் அடிமை முறையில் கொண்டு வந்த இந்த மகத்தான மதப்பங்கு பின்னாளிலும் சிறப்பாக செயல்பட்டது. சிறில் நீங்கள் சொல்கிறீர்களே ‘கிறிஸ்தவ விவிலியத்தின் மூலம் அடிமை மீட்பு’ என சிறிது சிந்தியுங்கள் ஏன் ஆப்பிரிக்க மக்களின் சொந்த ஆன்மிக மரபுகளின் மூலம் அது நடக்க முடியாமல் போயிற்று என? ஆப்பிரிக்க ஆன்மிக மரபுகள் எப்படி தொடர்ந்து ஊடகங்களில் பெரிய அளவில் எதிர்மறையாகவே சித்தரிக்கப்படுகின்றன (உம் ஊடோ) இதையெல்லாம் நான் ஏன் இதற்கு முன்னரே பேசியிருக்கலாம் ஏன் பேசவில்லை என்றால் இந்த இழைக்கு அவை அவசியமில்லை என்பதால். நான் இதற்கு முன்னர் கொடுத்த பதிலில் கூட கவனமாக கிறிஸ்தவம் என்பதனை தவிர்த்து ஐரோப்பா என்றே சொல்லியிருந்தேன். பார்க்கவும்:
  //சாதீயம் இந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் வியாதி. மனித சமுதாயங்கள் அனைத்தையும் பீடித்திருக்கும் வியாதிதான் இது. ஆனால் ஐரோப்பிய சமுதாயம் தன் சமுதாய சாதிய அமைப்பை அழிக்க மாற்றினங்களை அடிமை கொண்டது ; இன அழிப்பு செய்தது. ஒவ்வொரு கண்டத்தையும் ‘இறைவன் தங்களுக்கு வாக்களித்த பூமி’ என பிரகடனப்படுத்தி அங்கு வாழ்ந்த மக்களை கனானியர் என முத்திரை குத்தி ஒன்று அடிமைப் படுத்தியது அல்லது அழித்தொழித்தது. ஆனால் இந்து தருமம் இன்றளவும் இந்த சாதிய சமுதாய தீமையை தன் ஆன்மபலத்தினால் மட்டுமே எதிர்த்து போராடி வருகிறது. எனவே சாதியம் சமுதாய பிறழ்ச்சி என்றால் இந்து தருமம் அதற்கான மருந்தாக இருக்கிறது. ஐரோப்பாவின் சாதி அமைப்பு அழிந்ததற்கு எவ்வித ஆன்மிக கருத்தியல் பங்களிப்பும் நான் அறிய இல்லை. ஐரோப்பாவில் சாதி அழிந்ததற்கு உலகம் கொடுத்த விலை மிகக் கொடுமையானது. //
  எந்த இடத்திலும் நான் கிறிஸ்தவம் என்றோ ஐரோப்பிய சாதிய முறை கிறிஸ்தவத்தால் ஏற்பட்டது என்றோ சொல்லவில்லை. ஐரோப்பிய சமுதாயம் கிறிஸ்தவ விவிலியத்தை பயன்படுத்தியதை மட்டுமே சொல்லியிருந்தேன் -அதிலும் கூட கிறிஸ்தவம் எனும் பதத்தை தவிர்த்திருந்தேன். நீங்கள் நான் அப்படி சொன்னது போல கூறியதாலேயே இந்த விளக்கம்.

 73. அரவிந்தன்,
  முதலில் என்னுடைய பதிவைப் பாருங்கள். அங்கே எங்கேனும் இந்து மதத்தையும் சாதியத்தையும் முடிச்சு போட்டு பேசியிருக்கிறேனா.. அல்லது குறைந்தபட்சம் இந்து மதத்தை குறையேனும் கூறியிருக்கிறேனா?

  உங்கள் முதல் பின்னூட்டத்திலிருந்தே தீவிர வெறுப்புடன் பேச ஆரம்பித்துவிடுகிறீர்கள். It brings out the worst in people.

  சரி விடுங்கள். நீண்ட விவாதங்கள் அயற்சியையே தருகின்றன. கிறீத்துவத்தின் பெயரில் எங்கேனும் அடிமைத்தனம் நடந்தால் அதை எளிதில் வெளியில் கொண்டுவந்து தீர்த்துவைக்க இயலும்.

  மேற்கே நடந்ததைப்போலவே மார்டனைசேஷன் வழியாகவே இந்தியாவில் சாதீய வேறுபாடுகள் குறைந்துவருகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில் சமூகத்தில் சாதீயப் பாகுபாடுகள்(வசதி வர வர) குறைந்துள்ளது. இதற்கும் எந்த மத நம்பிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை.

 74. dharumi சொல்கிறார்:

  எனக்கு இரண்டு விஷயம் தெரிந்தால் நன்றாக இருக்கும்:

  1. ப்ரம்மாவின் பல உறுப்புகளிலிருந்தும் மனிதன் பிறப்பிக்கப் பட்டான். அதற்கேற்ப அவனது சாதி அவனோடு பிணைக்கப் பட்டது. பிறப்பிலே கடவுளால் தரப்பட்டது தானே சாதி.

  2. மனுதர்மம் வர்ணாச்சிரமத்தைப் பற்றிப் பேசுகிறதா? அந்த மனு இந்து சமயத்தின் முக்கிய வேத புத்தகமா இல்லையா?

 75. kirumi kanda chozhan சொல்கிறார்:

  1. ப்ரம்மாவின் பல உறுப்புகளிலிருந்தும் மனிதன் பிறப்பிக்கப் பட்டான். அதற்கேற்ப அவனது சாதி அவனோடு பிணைக்கப் பட்டது. பிறப்பிலே கடவுளால் தரப்பட்டது தானே சாதி.

  Every human is born from his mother’s womb. not from Brahmma’s body parts.

  2. மனுதர்மம் வர்ணாச்சிரமத்தைப் பற்றிப் பேசுகிறதா? அந்த மனு இந்து சமயத்தின் முக்கிய வேத புத்தகமா இல்லையா?

  aravindan has already answered it. Manusmriti is just a smriti and not shruti.

  Shruti is the one that has to be upheld and remains unchanged. Smriti are man made and can be changed during the course of time.

  So, today the smriti is ambedkar smriti.

 76. இல்லை சிறில் எனக்கு அவ்வித வெறுப்பினை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏன் இந்து தருமம் இந்த மண்ணின் தருமம் அதே நேரத்தில் எந்த கூறுகள் கிறிஸ்தவத்தை இந்த மண்ணின் மனோபாவத்திலிருந்து பிரித்து காட்டுகின்றன என்பதனை காட்டவே ‘பொறாமை கொண்ட தேவன்’ குறித்து குறிப்பிட்டேன். அதே நேரத்தில் இந்தியாவில் கிறிஸ்தவம் அடைந்த உச்சங்களான குமரப்பாவையும் ஆண்டனி டி மெல்லாவையும் சுட்டிக்காட்ட தவரவில்லை. ஆனால் நிறுவன கிறிஸ்தவத்தின் மைய நீரோட்டம் இந்த மண்ணுக்கு இன்னும் சொந்தமாகவில்லை ஏனெனில் ஆண்டனி டிமெல்லாவும் குமரப்பாவும் இன்னும் கிறிஸ்தவத்துக்கு அன்னியமாகத்தான் இருக்கிறார்கள் – அதே நேரத்தில் இந்த மண்ணுக்கு சொந்தமானவர்களாக எனவே நெல்லையில் நிகழ்ந்தது தாய் தருமத்துக்கு திரும்பியதாகவே அமைகிறது. இதனை சுட்டிக்காட்டவே அந்த வேறுபாட்டினை அருகருகில் வைத்தேன். நீங்கள் அதனை புரிந்து கொள்வீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்கள் அதனை நான் தாக்குவதாக புரிந்து கொண்டீர்கள் போலும். If i have been unwittingly instrumental in bringing out the worst in you (and even that worst has been so lovingly engaging Cyril – thank you for that) i can only say sorry.

 77. //ப்ரம்மாவின் பல உறுப்புகளிலிருந்தும் மனிதன் பிறப்பிக்கப் பட்டான். அதற்கேற்ப அவனது சாதி அவனோடு பிணைக்கப் பட்டது. பிறப்பிலே கடவுளால் தரப்பட்டது தானே சாதி. //

  சாதி வேறு வர்ணம் வேறு. புருஷ சூக்தத்தில் பரம்பொருள் எவ்வாறு தன்னிலிருந்தே இந்த பிரபஞ்சத்தை பல தளங்களில் விரித்து கொண்டது என்பது பாடப்படுகிறது. பௌதீக பிரபஞ்சம், உயிர்கள், என தொடங்கி மானுட சமுதாயம் என நீளும் போது மானுட சமுதாயமாக பரம்பொருளே பரிணமிக்கும் போது அச்சமுதாயத்தின் தலையாக அறவோரும், கைகளாக அரசோரும், தொடைகளாக வணிகரும் பாதங்களாக ஊழியரும் தோன்றியதாக அது வர்ணிக்கிறது. இது சாதிக்கும் பிறப்புக்கும் பொருந்தாது என்பது தெளிவான கருத்து. சமுதாயத்தை முழுமையாக இறை வடிவமாக பார்ப்பது மட்டுமே இது. உதாரணமாக தாமஸ் கோப்ஸின் லெவியாதன் ஏறக்குறைய இதே விதத்தில் சமுதாயத்தை உருவகிக்கிறது. அதற்காக எவரும் தாமஸ் கோப்ஸ் ஊழியர்கள் எல்லோரும் காலிலிருந்து பிறந்ததாக சொல்வதாக கூறுவதில்லை. ஒரு உருவகத்தை இப்படி இந்து தருமம் கூறுவதாக திரிப்பது பொதுவாக நேர்மையானவர்கள் செய்வதல்ல.

 78. King... சொல்கிறார்:

  ///சீரிய ஆன்மீகத் தேடலின் வாயிலாக மக்கள் மதம் மாறுவது வரவேற்கத்தக்கதே.////

  ????????????????
  ?????????????????????
  :)))):)))):))))

 79. King... சொல்கிறார்:

  ///அதன் மதமற்ற ஆன்மீகத் தன்மையைத்தான்.///

  ஆன்மீகம் என்றால் என்ன…அண்ணன்?

 80. King... சொல்கிறார்:

  தாய்மதம் என்பதிலும் அடிப்படை மார்க்கம் என்பது பொருத்தமாக இருக்குமோ…?

 81. raghunathan சொல்கிறார்:

  ///ஆன்மீகம் என்றால் என்ன…////
  இதன் விடய் தெரியாது என்றாலும் கேள்வி எனக்கும் இதுதான். முதல் சன்தேகம் – ஆன்மீகத்தய் அறிவுத்திரட்சியால் புரின்து கொள்ளவோ பரப்பவோ முடியுமா? ஒஷோ சொன்னது போல ஆன்மீகம் தனி மனித அனுபவமில்லையா? அப்படியானால் இன்த சில நூறு மதங்கள் எப்படி போதும்-இன்னும் பல கோடி வேண்டும். மதம் ஆன்மிகத்துக்கு வழியே அன்றி அதுவே ஆன்மீகமாகுமா? பல சமயங்களில் மதங்களின் குறய்களே (சிறிலும் அரவின்தனும் ஒருவருக்கு ஒருவர் சுட்டிக்காட்டிக் கொள்வது போல) மனிதனின் ஆன்மிகதேடலை பழுதாக்கும். மதத்தின் வேலை என்ன, அதற்க்கு எவ்வளவு (மட்டும்) இடம் கொடுக்கலாம் என்று தெளிவது நல்லது. சிறிலின் மற்றும் அரவின்தனின் வயது தெரியாது. இப்படியே இவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் பல ஆயிரம் ஆதாரங்களுடன் வாதிட்டாலும் இருவரில் எவர் மற்றவரை ஒப்புக்கொள்ளப் போகிறார்? அல்லது இடய்யில் குமுறும் லெமூரியன்கள்தான் (அவர்கள் கேள்விகளில் உண்மையே இல்லயா?)சான்தியோ சமாதனமோ அடைவார்கள்? ஒரு வேளய் சிறில் இன்து மதத்திற்கும் அரவின்தன் கிறித்துவத்துக்கும் மாறலாம். இருவரும் ஒரே மதத்தய் ஒப்புக்கொள்வது குதிரைக்கொம்பு. பல வேளைகளில் உண்மை உன்னுடைய உண்மையிலும் இல்லாமல் என்னுடைய உண்மையிலும் இல்லாமல் இடையில் எங்கோ ஒளின்திருக்கலாம் இல்லயா?

  உங்களுடைய ஆன்மீகத்தை நீங்கள் மட்டுமே தேடுங்கள். ஒரு வயது குழன்தையின் திறன்த மனதுடன், விரின்த விழிகளுடன், சத்தியமான இதயத்துடன் தேடுங்கள். ஏதாவது கண்டால் அதே குழன்தையின் குதூகலத்துடன் கை கொட்டி மகிழுஙள். ஆனால் எவரையும் உங்கள் அனுபவங்களால் பிரமிக்க வைக்கவோ வழி நடத்தவோ முயலாதீர்கள். இது காதலர் அன்தரஙம் போல் உஙளுக்கு மட்டுமே ஆன அனுபவம். பல புனிதங்கள் சொல் அல்லது எழுத்து வடிவம் ஏற்றவுடனே புனிதம் தொலைக்கும். மற்றபடி என் சிறிய பார்வையில் எல்லாம் ஒன்றுதான். ஏசு உண்மை என்றால் எல்லா தெய்வங்களும் உண்மையே. கிருஷ்ணன் பொய் என்றால் மற்றவயும் பொய்யே. என்த ஆலயத்துக்கும் செல்லுங்கள். சுற்றிலும் பாருங்கள். அடடா! ஒவ்வொரு மனிதனின் பிரார்த்தனை பாவமும் ஒவ்வொரு அழகு. கண்ணாறக்கண்டு, நெஞ்சாற அனுபவியுங்கள். போன வருடம் ஒரு நாள் அதிகாலய் நடையின் போது தெருவோரம் ஒரு வழிபாடு. கட்டிடத்தொழிலாளர்கள் மூவர், சாலய் ஓர மண்ணில் கடப்பாறய்யும், மண்வெட்டியும் நட்டி வைத்து, விபூதி குங்குமம் சாத்தி, தேங்காய் உடைத்து வைத்து, தலைப்பா துண்டை இடுப்பில் கட்டி கண் மூடிவேண்டி நின்றதைக் கண்டு சிலிர்த்து நின்றேன். என் தெய்வங்கள் உண்மையோ இல்லையோ, இவர்களுடையது நித்தியம். இவர்கள் இப்படியே இருன்து விட்டு போகட்டுமே. ஆயிரக்கணக்கான வருடஙளின் வரலாற்றயும் அவற்றில் உஙள்/எங்கள்/னம் சகோதரர்கள் செய்த இமாலயத்தவறுகளையும் சொல்லி அவர்களை மிரட்ட வேண்டுமா என்ன?

 82. அரவிந்தன்,
  வருத்தப்பட ஒன்றுமில்லை. எனக்கும் இது தேடல் அனுபவமாகவே அமைந்தது. அதில் மிகுந்த சந்தோஷமே.

  கிறீத்துவம் எந்த மண்ணுக்கும் சொந்தமான கோட்பாடல்ல. அப்படி இந்த மண்ணுக்குச் சொந்தமான கோட்பாடு, மதம் எனும் கருத்துக்கள் மனித இனம் கலாச்சார எல்லைகளைக் கடந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் செல்லுபடியாகாது என்றே நினைக்கிறேன். இந்த மண்ணில் ஆன்மீகத் தேடல் வேறெட்தையும் விட அதிகமாகவும், ஆழமாகவும் நடந்திருக்கிறது. அவற்றை விட்டுவிட்டு மேலோட்டமானவற்றை பிடித்துக்கொண்டு சடங்குகளிலும், ஆதாயம்தரும் சமூகக் கூறுகளிலும் கவனம் செலுத்தியதுபோலவே இப்போது “தாய்மதம் திருப்புவதிலும்” கவனம் சென்றுள்ளது என நினைக்கிறேன்.

  கிறீத்துவம் தெளித்த தண்ணீருக்கும் மேலே தண்ணீரைத் தெளித்துவிடுவது மட்டுமே இதன் நோக்கமென்றால் அது வருந்தத்தக்கது. உண்மையில் கிறீத்துவமானாலும் எந்தமதமானாலும் வெறும் சடங்குகளை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்களுக்கு எந்தமதமும் ஒன்றுதான்.

  //மண்ணின் தர்மம்//
  இந்தியா பரந்த, வேறுபட்ட கலாச்சாரங்களால் ஆனது. அது முழுமைக்குமான கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை என எந்த ‘ஒன்றும்’ இல்லை என்பதுதான் உண்மை. ஒன்றின் மேல் ஒன்றாய் வேற்றுக் கலாச்சாரங்களின் தாக்கங்கள் இந்தியாவுக்குள்ளேயே ஒரு மண்ணை விட்டு இன்னொரு மண்ணைச் சென்றடைந்தன, சென்றடைந்துகொண்டிருக்கின்றன. ஆக மண்ணின் தர்மம் என்பது இன்றைய அமைப்பை வைத்து சொல்லமுடியுமே தவிர இந்தியாவின் வரலாற்றை முன்வைத்து சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன்.

 83. ரகுநாதன்,
  அருமையான பின்னூட்டம். நன்றி. உங்கள் கருத்துக்கு எந்த எதிர்கருத்தும் என்னிடம் இல்லை.

 84. //இந்த மண்ணில் ஆன்மீகத் தேடல் வேறெட்தையும் விட அதிகமாகவும், ஆழமாகவும் நடந்திருக்கிறது.//

  //இந்தியா பரந்த, வேறுபட்ட கலாச்சாரங்களால் ஆனது. அது முழுமைக்குமான கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை என எந்த ‘ஒன்றும்’ இல்லை என்பதுதான் உண்மை.//

  மேலே கூறிய உங்கள் இரண்டு வாக்கியங்களுக்குமான முரண் உங்களுக்கே தெரிகிறதா? இந்த தேசத்துக்கு என்று ஒரு ஆன்மிக பண்பாடு இருக்கிறது. எந்த ஒரு ஒற்றை மதமும் அனைத்தை வேறுபாடுகளையும் அழித்து தன்னை இங்கே நிறுவிட முயல்வதை எதிர்த்து வந்துள்ளது. எனவேதான் காஷ்மிர் பண்டிதர்களுக்காக அவுரங்கசீப்பின் அரசவையில் சீக்கிய குரு தன் தலையை தியாகம் செய்தார். கோவாவில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான புனித விசாரணையை எதிர்த்து இன்றும் கோவில்கள் நிற்கின்றன. அருணாச்சல பிரதேசத்தின் தோனிபோலோவினர் அஸ்ஸாமின் வைணவர்களுடன் இணைந்து நின்று கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளை எதிர்ப்பதன் பின்னணியும் இதுதான். இந்த அடிப்படை ஒற்றுமை உணர்வையே விடுதலைப் போராட்டத்தின் அடிகல்லாக மகாத்மா காந்தியும் (ஐயமிருந்தால் அவரது ஹிந்த் சுவராஜ்ஜியத்தை படியுங்கள்) இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் அடிப்படையாக அண்ணல் அம்பேத்கரும் பயன்படுத்தினர். பாரதத்தின் ஒருமைப்பாட்டின் அடிப்படைத்தன்மையின் இயற்கை என்ன ? சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார், ‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘ டாக்டர் அம்பேத்கரும் தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா எனும் கேள்விக்கு பின்வருமாறு பதிலுரைக்கிறார், ‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால்
  மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே.” அரசியல் நிர்ணய சட்டத்தினை இயற்றிய போது அம்பேத்கர் இந்திய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் அன்னியர்களை இந்த தேசத்தின் சொந்த பண்பாட்டினரையும் பிரித்து காட்டியுள்ளார். அதனை படித்துப் பாருங்கள். இந்த இந்தியாவுக்கென்று ஒரு பண்பாடு கிடையாது என்பது காலனியவாதிகளாலும் மெக்காலேயிஸ்டுகளாலும் முன்வைக்கப்படும் உளுத்து போன வாதம். ஒவ்வொரு முறையும் அது பாரதத்தின் சுயதன்மை வலியுறுத்தப்படும் போது (தர்மமாகட்டும் விடுதலையாகட்டும்) எதிரணியினரால் வலியுறுத்தப்படும் வாதம். ஒவ்வொரு முறையும் அது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான் சுவாமி விவேகானந்தர் இந்த தேசம் முழுமைக்குமான ஒரு ஆதர்சமாக திகழ்கிறார். எனவேதான் கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் மறுதலித்து அம்பேத்கர் பௌத்தத்தை தேர்ந்தெடுத்தார்.

 85. PARAMA PITHA சொல்கிறார்:

  ///ஒரு வேளய் சிறில் இன்து மதத்திற்கும் அரவின்தன் கிறித்துவத்துக்கும் மாறலாம்/////

  extreme !!!!

 86. raghunathan சொல்கிறார்:

  //extreme///
  அன்பு பரமபிதா. அதீதம் என்றல்ல-யதார்த்தம் என்று தோன்றியதை பதித்தேன். அவரவர் மதங்களில் இவ்வளவு தெளிந்த இவர்கள் ஒருவர் மற்றவரை மதம்/மனம் மாற்றி ஒரே பகுதியில் இணைவது நடக்குமா? ஒற்றை கொள்கை (மதமோ, அரசியலோ, பொருளாதாரமோ, நாகரீகமோ) உலகம் ஏற்காது என்று நினைக்கிறேன். கத்தரிக்காயிலியே பல வகை- மதம் எப்படி ஒன்று மட்டும்? அறிவிலும், தெளிவிலும் சிறந்த பல அன்பர்கள் இப்படி யதார்த்தக்கு எதிரான முயற்சிகளில் நேரமும் சக்தியும் செலவழிக்கிறார்களோ என்று தோன்றியது. இயல்பாகவே சுயனலமும், தனி மனித உடமை வேட்கையும் நிறைந்த மனிதர்களிடையே கம்யூனிசம் தன்னை நிலை நிறுத்தப் படும் பாடுதான் என்ன. ஒற்றை மதம் இலட்சியம் ஆகலாம் எவெரெஸ்ட் ஏற நினைப்பது போல். ஆனால் உடனடியாக ஏறி முடிக்க வேண்டிய பறங்கி/பழனி மலைகளான மத நல்லிணக்கம், மூட நம்பிக்கை ஒழிப்பு, சமதர்ம சகோதரத்துவம், ஜீவகாருண்யம், இறைனெறி நிற்றல் (முக்கியமாக மத குருமார்களும், போதனையாளர்களும், ஆர்வலர்களும்)இவைகளை ஏறத்தொடங்கினோமென்றால் மனிதகுலம் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக கவுரவமாக வாழ முடியும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்