ஜார்ஜ் புஷ்ஷின் சமையல் குறிப்புக்கள்

இந்தியன் மிடில்கிளாஸ் டின்னர்:
ஒருவருக்கு ஒரு அரிசி வீதம் எடுத்துக்கொள்ளவும். அதை குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் சமையல் பாத்திரத்தில் இட்டு நன்றாக வேகவைக்கவும். அதிலிருந்து வடித்தெடுத்த கஞ்சியை ஒரு கப்பில் சேமித்து வைத்துக்கொள்ளவும். அமெரிக்க பஃபே ஒன்றின் படத்தை இணையத்திலிருந்து பதிவெடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நன்கு வெந்த அரிசியை எடுத்து அந்த பஃபே படத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடவும்.

பசி அதிகமாயிருந்தால் ஒருவருக்கு இரண்டு பருக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். வடித்த கஞ்சியுடன் முந்தநாள் மழையில் ஓட்டில் வழிந்த மழைத்தண்ணியை சேமித்து வைத்திருக்கும் பக்கெட்டில் விட்டு நன்கு கலக்கி அவ்வப்போது அருந்திவந்தால் விரைவில் உலக மக்கள்தொகை பிரச்சனை மற்றும் உணவுத் தட்டுப்பாடு தீர்ந்துவிடும்.

இந்தியன் ஏழையின் பஃபே:
இதை செய்வது மிக எளிது. வீட்டின் மூலையில் கொஞ்சம் மணலை குவித்து அதன்மீது ஒரு களிமண் பானையை வைக்கவும். அதில் நீரை முழுவதுமாக நிரப்பிவிட்டால். இரவு சாப்பிடும் நேரம் தண்ணீர் தேவையான தண்மையைப் பெற்றுவிடும். அதன்பின்னர் விதவிதமான கப்களில் அவற்றை எடுத்து அருந்தவேண்டும். பின்னர் மவுத் ஆர்கண் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு “நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்” எனப்பாடினால் பக்கத்து வீட்டிலிருந்து சாப்பாடு கிடைக்கும். இதன் மூலம் ஒருவர் சாப்பாட்டை இருவர் சாப்பிடலாம். இதில் ஒரே பிரச்சனை என்னவென்றால் அடிப்படையில் குடியிருப்பொன்றில் உங்களுக்கு வீடொன்று இருக்கவேண்டும். ஹி ஹி ஹி

சீரியசா…

உலகளாவிய உணவுத் தட்டுப்பாட்டை விடுங்கள் இந்தியாவிலேயே உணவுப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. புஷ் சொல்வதை எதிர்த்தாலும் கிண்டலடித்தாலும் இந்தியா விழித்துக்கொள்வது அவசியம். உணவு உற்பத்தியை அதிகரிப்பதும், மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். விவசாயம் நவீனப்படுத்தப்படுதலும் உணவு உற்பத்தி வகைப்படுத்தப்படுதலும் அவசியம். உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதை கட்டுப்படுத்துவது அவசியம்.

தனிநபராக உணவை வீணே கொட்டாமலிருப்பதும், தேவக்கேற்ப சமைப்பதும் தேவைக்கேற்ப உண்பதும் அவசியம்.

வெறுமனே புஷ்ஷை எதிர்ப்பதை விட்டுவிட்டு நம் அரசியல்வாதிகள் உணவுப் பிரச்சனைகுறித்து இந்தியா என்னென்ன செய்யவிருக்கிறது என்பதை தெளிவுற வகுக்கவேண்டும்.

அமெரிக்காவின் பையோ டீசல் மோகத்துக்கும் விரைவில் முடிவு வரலாம். அடுத்துவரும் அரசுகள் இதைச் செய்யலாம். பையோ டீசலின் நன்மைகள் மேலோட்டமானவை என்றும் அதுதரும் நன்மைகளைவிட அதனால் விளையும் தீங்குகளே (உலகளாவிய தாக்கம்) அதிகம் என்பதை அமெரிக்க ஊடகங்கள் வெளிச்சமிட ஆரம்பித்துள்ளன.

ஜார்ஜ் புஷ்ஷின் உளறலை விடுங்கள். நம் நாட்டில் விலைவாசி உயர்வு டிமாண்ட் சப்ளை பிரச்சனையாக பார்க்கப்பட்டு உணவுத் தட்டுப்பாட்டின் துவக்க நிலையாக அலசப்படுதல் அவசியம் என்றே நினைக்கிறேன்.

Popularity: 15% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “ஜார்ஜ் புஷ்ஷின் சமையல் குறிப்புக்கள்”

 1. தமிழ்மணத்தின் புதிய வடிவமைப்பு மிக அருமை. வாழ்த்துகள்.

 2. Oviya சொல்கிறார்:

  //பின்னர் மவுத் ஆர்கண் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு “நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்” எனப்பாடினால் பக்கத்து வீட்டிலிருந்து சாப்பாடு கிடைக்கும். இதன் மூலம் ஒருவர் சாப்பாட்டை இருவர் சாப்பிடலாம். இதில் ஒரே பிரச்சனை என்னவென்றால் அடிப்படையில் குடியிருப்பொன்றில் உங்களுக்கு வீடொன்று இருக்கவேண்டும். ஹி ஹி ஹி//

  சிரிப்பை அடக்க முடியவில்லை.. :)

 3. சுந்தரா சொல்கிறார்:

  //ஜார்ஜ் புஷ்ஷின் உளறலை விடுங்கள். நம் நாட்டில் விலைவாசி உயர்வு டிமாண்ட் சப்ளை பிரச்சனையாக பார்க்கப்பட்டு உணவுத் தட்டுப்பாட்டின் துவக்க நிலையாக அலசப்படுதல் அவசியம் என்றே நினைக்கிறேன்.//

  வாசிப்பதற்கு நகைச்சுவையாய் இருந்தாலும் பிரச்சனையின் தீவிரம் வருத்தப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறது :(

 4. Radha Sriram சொல்கிறார்:

  //தனிநபராக உணவை வீணே கொட்டாமலிருப்பதும், தேவக்கேற்ப சமைப்பதும் தேவைக்கேற்ப உண்பதும் அவசியம்.//

  எல்லாரும் யோசிக்க வேண்டிய,கடைபிடிக்க வேண்டிய விஷயம் எப்போதுமே…!

 5. நன்றி ஓவியா, சுந்தரா, ராதா.

 6. KRP சொல்கிறார்:

  சிரிப்பை அடக்க முடியவில்லை..

 7. sarav சொல்கிறார்:

  sds

 8. A.SHANTNINI சொல்கிறார்:

  SUPERA IRUKU

 9. balakrishnan சொல்கிறார்:

  very very…….super keepit up

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்