Flippancy என்றால் என்ன? – ஓ பக்கங்களை முன்வைத்து

வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது.

அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது மக்களிடம் ஒருவித ஆர்வத்தை தூண்டிவிடும் என்றே நினைக்கிறேன். என்னதான் எழுதுகிறார்கள் இணையத்தில் என மக்கள் தேட ஆரம்பிக்கலாம்.

ஞானி இந்த வார ஓ பக்கங்களில் இணைய எழுத்து குறித்து கீழ்கண்டவற்றை கூறியிருக்கிறார்

(இணையத்திலும்) தங்கள் போலிப் புலம்பல்களை சிலர் விற்றுக் காசாக்க முயற்சிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
இதில் என்ன சொல்லவருகிறார் எனப் புரியவில்லை. மாலன், ஜெயமோகன், சுதாங்கன், எஸ்.ரா, சாரு, பா. ராகவன் ஆகியவர்களில் யாருக்கேனும் உள்குத்து என்றே நினைக்கிறேன். :) சிலர் இணையத்தில் சிலர் குமுதத்தில் புலம்புகிறார்கள் என எடுத்துக்கொள்வோம்.

இணையத்தில் பங்கேற்போருக்கு இருக்கும் தலைமறைவு வசதி, கூடவே பொறுப்பற்ற தன்மையையும் அதிகரித்திருப்பது வருத்தமாய் இருக்கிறது.
இணையத்தில் யார் எழுதுகிறார்கள் என எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஞானி அவர்கள் அண்மையில் இந்திய காவல் துறையினர் இப்படி இணையம் வழியே மிரட்டுபவர்களையும், தீவிரவாதிகளையும் தேடிப்பிடித்ததை அறிந்திருக்கலாம்.

புனைபெயரில் எழுதுவது புதிய யுக்தி அல்ல.

பெருவாரியாக (இணைய எழுத்தாளர்களிடம்) தூக்கலாகக் காணப்படுவது _ தேசபக்தி, இளையராஜா பக்தி, பிரபாகரன் பக்தி, மனசாட்சி உறுத்தல்கள் என்று பட்டியலிடலாம்.
எதைப் படித்துவிட்டு இப்படி சொல்கிறார் என்றே தெரியவில்லை. இப்படி பொதுப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

ஒவ்வொரு இஸத்துக்கும் பத்துப்பேர் கொண்ட தீவிர குழுக்கள் இயங்குகின்றன. பெரியார் சார்பு, ஆர்.எஸ்.எஸ். சார்பு, இடதுசாரி சார்பு மூன்றும் பிரதான இஸங்கள்.
முதலில் தமிழகத்தில் இவை முக்கிய இஸங்களாக செயல்படுகின்றன இணையத்தில் ஏன் கூடாது? இரண்டாவதாக. தினம் வரும் பதிவுகளில் எத்தனை பதிவுகள் இந்த இஸங்களை முன்வைத்து வருகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் விகிதம் குறைவு என்றே தெரியும். இந்தப் பதிவுகளில் விவாதங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது உண்மை. அவை இசங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டே இருக்கும் அதுதான் இஸம். இணையத்தில் மட்டும் ஏன் விதிவிலக்கு வேண்டும்?

ஆபாசம், அவதூறு, குளோனிங், ஆள்மாறாட்டம் போன்று அச்சு ஊடக உலகில் மிகக் குறைவாக உள்ள சில அம்சங்கள், இணைய உலகில் கணிசமாக உலவுகின்றன
அச்சு ஊடகங்களிக் குறைவாகவேனும் உள்ளது என்பதைச் ஒப்புக்கொண்டதற்கு பாராட்டுக்கள்.

எனக்கு இணைய உலகில் பிடிக்காத அம்சம், அங்கு சரி பாதியாக நிலவும் அரைவேக்காட்டுத்தனம்தான். (flippancy என்ற சொல் பொருத்தமானது). பிடித்த அம்சம் இணையத்தின் சிறப்பான இண்டர் ஆக்டிவ் தன்மை எனப்படும் இருவழி உறவாடல்.அரைவேக்காட்டுத்தனம். Flipancy – சீரியஸ் விஷயங்களை இலகுவாக எடுத்துக்கொள்வது. இதைச் சொல்லும் ஞானியின் ஓ பக்கங்களில் வநத தகவல் பிழைகளை பட்டியலிட்டவர்கள் வலைப்பதிவர்கள். இங்கே இருப்பது Flipancy என்றால் எதை வைத்து இண்டெர் ஆக்ஷன் நடக்கிறது?

வலைப்பதிவுகள் மக்களின் தளம். இங்கே பலதரப்பட்ட எண்ணங்களும் உலவும். ஒருவருகு சீரியசாகவும் புனிதமாகவும் இருப்பதை இன்னொருவர் கேலி செய்வார். ஒருவர் விழுந்து விழுந்து ஆராதிப்பதை இன்னொருவர் நிராகரிப்பார். இது இணையத்தின் குணம் அல்ல சமூகத்தின் குணம். அதைத்தான் இணைய எழுத்துக்களும் பிரதிபலிக்கின்றன.

சுதாங்கன் தனது ‘வணக்கம்’ பதிவில் இன்றைய அச்சு ஊடகங்களின் பரிதாப நிலையையும் இணையம் தனக்குத் தரும் சுதந்திரத்தையும் நேரடியாக எழுதியுள்ளார்.

வலைப்பதிவை வெறுப்புடன் பார்ப்பவர்கள் பார்க்க மறுக்கும் சில அம்சங்கள்…

 • கிழிந்த ஜீன்சும் டி ஷர்ட்டுமாக ‘யோவ் மேன்’ என சினிமாவில் வர்ணிக்கப்படும் மென்பொருள் மக்கள் தமிழில் எழுதுவது.
 • தமிழில் மென்பொருள் உருவாக்கவும், விக்கிப்பீடியா திட்டங்கள் வெற்றிபெறவும் தன்னலம் பாராமல் தங்கள் ஓய்வு நேரங்களை செலவிடும் மக்கள்.
 • இசங்களைச் சாராத கவிதை, கதை, நகைச்சுவை பதிவுகள், செய்திகளைப் பரப்பும் தளங்கள்.
 • பெண்களின் குரல் எங்குமில்லாததுபோல ஓங்கி ஒலிக்கும் ஒரு தளம் இணையம்.
 • ஒரு பிரச்சனை குறித்து பல்வேறு கோணங்களில் ஒரே இடத்தில் அலசப்படுகிறதென்றால் அது இணையத்திலேதான்.
 • வலைப்பதிவுகள் பொதுவாக தீவிர அலசலுக்கும், ஆராய்ச்சிக்கும் பின் எழுதப்படுபவை அல்ல. மாறாக ஒருவரின் உடனடிக் கருத்தை பதிக்கும் இடம். ஒரு செய்தி குறித்து ஒருவரின் முதல், உடனடி எதிர்வினை இங்கே பதிவு செய்யப்படும். இதில் என்ன தவறுள்ளது? அப்படி கருத்துக்கள் இல்லாமல் போவதைவிட உணர்ச்சிவசப்பட்டேயிருந்தாலும் கருத்துக்கள் வெளிப்படுவது அவசியமே. தீவிரமாக எழுதப்படுபவையும் இங்கு உண்டு.

  இத்தனை வருடங்களாய் எழுதியும் ஊடகத்தில் இயங்கியும் வரும் ஞானியே சில இடங்களில் Flip ஆயிருக்கிறார் என்றால் இளைஞர்கள் எம்மாத்திரம்?

  வலைப்பதிவுகளின் சாத்தியங்களை பட்டியலிடுங்கள். குப்பைகளை அகற்ற அங்கே பூச்செடிகளை நட்டுவைப்பதும் ஒரு வழிமுறைதான். வந்து நடுங்கள். அல்லது பிறரை ஊக்குவியுங்கள்.

  கல்லூரிகள், நூலகங்கள், பள்ளிகள், அரசு அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், வியாபாரக் கூடங்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் பதிவுகள் மூலம் தங்களை வெளிப்படுத்தலாம். கருத்துக்களை பரப்பலாம். அமைச்சர் ஸ்டாலின் ஆங்கிலப் பதிவொன்றை துவங்கியுள்ளார். இந்த சாத்தியங்களை பட்டியலிட்டு காண்பிப்பது அவசியம். மாறாக வளர்நிலையில் இருக்கும் ஒரு ஊடகத்தின் சில குறைகளை மட்டும் பட்டியலிட்டு அதன் மீது வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக எழுதுவது நடுநிலையான பார்வை அல்ல.

  குமுதம்.காம் சிறப்புடன் செயல்படுகிறது. குறிப்பாக அதன் வீடியோ சேவை. இதுபோல மற்ற பத்திரிகைகள், நாளிதள்களுக்கும் இணையத்தில் இடமிருக்கிறது. ஜெயமோகன் முன்பு இணையத்தில் சீரியஸ் வாசகர்கள் இல்லை எனக் கூறியிருந்தார். இன்று ஜெயமோகனின் தளத்திற்கு தினசரி 2000 முதல் 4000 ஹிட்கள் கிடைக்கின்றன. உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டீர்களா எனக் கேட்டேன். ஆம் என்றார்.சில இணைய பத்திரிகைகளுக்கே இந்த ஹிட் கிடைக்காது. இங்கே ஆர்வமுடன் படிப்பவர்கள் இருக்கின்றனர். Flippancy இல்லாத கட்டுரைகள் ஏராளம். இசங்களைப் பேசுபவர்கள் தீவிரமாகப் பேசுவார்கள். இசங்களைப் பேசும் எவரானாலும், பதிவானாலும், பத்திரிகையானாலும் இது அப்படியே.

  இன்றைய நாளைய எழுத்தாளர்களுக்கு இங்கே இடமிருக்கிறது. உங்கள் படைப்புக்கென நீங்களே ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது போன்ற சேவைதான் வலைப்பதிவு. கட்டற்ற ஒரு வசதி என்பதில் பலதும் சாத்தியம். தமிழக ஊடகங்கள் அனைத்திலும் இருக்கும் நல்லவையும் குப்பையும் இங்கேயும் இருக்கிறது என்பதுதான் உண்மை. அதில் இசங்களை எழுதக்கூடாது என யார் சொல்ல முடியும்? இசங்கள் பெயரில் குழு சேரக் கூடாதென யார் சொல்ல முடியும்? வாங்க வந்து கும்முங்க, இல்ல குமுறுங்க என பதிவர் பாஷையில் வரவேற்று அமைகிறேன்.

  Popularity: 11% [?]

  Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


  RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

  

  22 மறுமொழிகள் to “Flippancy என்றால் என்ன? – ஓ பக்கங்களை முன்வைத்து”

  1. கையேடு சொல்கிறார்:

   நல்ல எதிர்வினை திரு. சிறில்

  2. லதானந்த் சொல்கிறார்:

   ரொம்ப் நல்லா எளுதியிருக்கிங்கண்ணா

  3. யெஸ்.பா சொல்கிறார்:

   :))

  4. சயந்தன் சொல்கிறார்:

   புலம் பெயர்ந்த இந்திய + ஈழ மக்களில் இணையத்தில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் ஐடி மக்களே என்பதை எப்படி பார்க்கிறீர்கள்.
   ஈழ மக்கள் என்பதை இந்த வகைப்படுத்தலுக்குள் எப்படி சேர்த்தார் என தெரியவில்லை

  5. சென்ஷி சொல்கிறார்:

   நல்ல பதில்… :))

   இதன் மூலம் மிகச்சீக்கிரத்திலேயே ஞானியும் இணையத்தில் இணைய வாய்ப்பு அதிகம் :))

  6. //இதன் மூலம் மிகச்சீக்கிரத்திலேயே ஞானியும் இணையத்தில் இணைய வாய்ப்பு அதிகம் :))//

   உண்மை. அவர் பத்திரிகையின் அரசியல் அழுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர். இணையத்தில் எந்த அழுத்தமுமின்றி செயல்பட இயலும். ஞானி போன்றோருக்கான சரியான தளம் இணையம்.

  7. Balaji சொல்கிறார்:

   ஞாநிக்கு குமுதத்தில் பணம் கிடைக்கிறது, சினிமாவில் பணம் கிடைத்தது. டிவியும் துட்டு தந்தது. வலையில் காசு வரவில்லை. அதான் கோபம் ;)
   ————–

   —பெருவாரியாக (இணைய எழுத்தாளர்களிடம்) தூக்கலாகக் காணப்படுவது _ தேசபக்தி, இளையராஜா பக்தி, பிரபாகரன் பக்தி, மனசாட்சி உறுத்தல்கள் என்று பட்டியலிடலாம்.—

   ஞானி பொதுவாக திட்டுவது கலைஞர், திமுக, சுபவீ என்று பட்டியலிடலாம் ;)
   அவருடைய இணைய வாசிப்பு இன்னும் பரந்துபட நேரமும் முனைப்பும் கிடைக்க வேண்டும்

   ——தமிழகத்தில் இவை முக்கிய இஸங்களாக செயல்படுகின்றன —

   ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்

  8. முத்துக்குமார் சொல்கிறார்:

   இணையம் மாதிரியான கட்டற்ற சுதந்தரம் உள்ள ஒரு வெளியில் சாதக பாதகங்கள் உண்டு. அதுவும், தணிக்கைக்குட்படுத்தப்படாத மனித மனதின் உடனடி வினை/எதிர்வினை என்ற அளவில் சற்று அதிகமாகவே ! ஆனால் இது வேகமாய் சுழித்தோடும் நதியொத்ததாகவே நான் கருதுகிறேன். ஆகவே இங்கே வளைவுகள், நெளிவுகள், சுழிப்புகள் எல்லாமே உண்டு. கூடவே அழுக்குகளும். ஓட்டத்தில் அவை ஒதுக்கப்பட்டு சாதகங்களே நிலைத்து நிற்கும்.

   வல்லவன் வாழ்வான் தானே ?

   ஆக, இந்த ஊடகத்தை எவ்வாறு இன்னும் சிறப்பாகவும் பலன் விளைக்கும் வகையிலும் பயன்படுத்திக்கொள்ள இயலும் என்பதை புது நுட்பங்களை பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வமுள்ள பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர் என்ற தகுதியில் அக்கறையோடு விளக்கியிருக்கலாம். அல்லது வேறு பொருளைபற்றி எழுதியிருக்கலாம்.

   விளக்கமாய் வெறுமனே குறை சொல்ல ஓ பக்கங்களா வேண்டும் ?

   அன்புடன்
   முத்துக்குமார்

  9. //ஆக, இந்த ஊடகத்தை எவ்வாறு இன்னும் சிறப்பாகவும் பலன் விளைக்கும் வகையிலும் பயன்படுத்திக்கொள்ள இயலும் என்பதை புது நுட்பங்களை பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வமுள்ள பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர் என்ற தகுதியில் அக்கறையோடு விளக்கியிருக்கலாம். அல்லது வேறு பொருளைபற்றி எழுதியிருக்கலாம்.//

   சரியாகச் சொன்னீர்கள் முத்துக்குமார்

  10. தங்களை சாதாரணமாக வெளிக் காட்டாதவர்களுக்குத் தளமமைத்துத் தருகிறது வலையுலகம். இதைப்பற்றி ஒரு வார்த்தையேனும் சொல்லியிருக்கலாம்.

  11. பிரேம்ஜி சொல்கிறார்:

   நல்ல எதிர்வினை பதிவு.நல்ல எழுத்தாக்கம்.

  12. //ஞாநிக்கு குமுதத்தில் பணம் கிடைக்கிறது, சினிமாவில் பணம் கிடைத்தது. டிவியும் துட்டு தந்தது. வலையில் காசு வரவில்லை. அதான் கோபம் //

   பதிவில் எந்த ஆதாயமும் பார்க்காமல் எழுதுபவர்கள்தான் அதிகம். உங்கள் பாயிண்ட் இதுதான் என நினைக்கிறேன்.

  13. பதிவுகள் மூலம் பெரும் பணம் பார்த்தவர்கள் என்று யாரேனும் உண்டா?

   பதிவுகள் மூலம் சிறு குழுக்களின் கருத்தை மற்றவர்களுக்கு திணித்து வெற்றிபெற்றவர் யாரேனும் உண்டா? அச்சூடகத்தில் குழுக்கள் இல்லையா?

   அவர் குறிப்பிட்டுள்ள பத்து பக்தி தாண்டியும் பொதுவாக எழுதுபவர்களை ஞாநி படித்தது உண்டா? அச்சூடகத்தில் பக்திகளே இல்லையா?

   அரைவேக்காட்டுத்தனம், அரை வேலையாகப் பதிவிடுபவர்களுக்கு இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் முழு வேலையாக பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்களின் அரைவேக்காட்டுத்தனத்துக்கு என்ன சால்ஜாப்பு?

   அட விடுங்க சிறில்.. இந்த வெத்துப் புலம்பலுக்கெல்லாம் நம்ம நேரத்தை செலவழிக்க வேணாம்..

   இணைய உலகில் கணிசமாக உலவும் ஆபாசம் என்பதற்கு என்ன வரையறை? கூகிளில் சேப்சர்ச் ஐ ஆப் செய்துவிட்டு பார்த்தால் குப்பைதான் கொட்டும்!

  14. இன்றைக்கு இணையத்தில் காணக் கிடைக்கும் பதிவுகளின் வகைகள்.

   1.இணைய/தகவல் தொழில் நுட்பக் கட்டுரைகள்.
   2. இலக்கணம்/மொழி
   3. இலக்கியம் – கதை, கவிதை, கட்டுரைகள்
   4. புத்தக விமர்சனம்
   5. ஊடக விமர்சனம்
   6. சினிமா: அலசல்/விமர்சனம்/செய்திகள்
   7. செய்திகள்
   9. செய்தி அலசல்
   10. ஆன்மிகம்
   11. நகைச்சுவை
   13. அனுபவம் நிகழ்வுகள்
   14. வணிகம்/பொருளாதாரம்/பங்கு வர்த்தகம்
   15. அரசியல்
   16. சமூகம்
   17. விளையாட்டு அலசல்
   18. ஈழம்
   19. சமையல்
   20. பயணக் கட்டுரைகள்
   21. நிகழ்வுகளின் தொகுப்புக்கள்/நேரடி ரிப்போர்ட்
   22. சட்டம்

   இவற்றிற்கு உட்பிரிவுகளும் எத்தனையோ உண்டு. அமெரிக்க அரசியல் துவங்கி அல்வாவின் ருசி வரைக்கும் எல்லாவற்றையும் எழுதுகிறார்கள் பதிவர்கள். இவற்றை விட்டுவிட்டு பக்திகளை வரிசைப்படுத்துகிறார். கவலைதான்.

   ஞானி பேசுகிறேன் நல்லா இருக்குது. அதுக்காக இணையத்துல வேறெதுவும் உருப்படியா இல்லைங்கிறது சரியானதாயில்லை.

  15. aathirai சொல்கிறார்:

   gnani was also writing on thinnai.com. now he became big guy. so he is denigrating online publishing.

   print media has abdulkalam bakthi , barathiyar bakthi ippadi varikku vari badhil kudukkalam.

   aabasam is there in print media since long time in specific magazines in the past. now the mainsteam print media is doing that job too. kumudham is an example :)

   kumudam video is no big deal. the best thing about internet publishing is the freedom which does not exist in print media . (eg. vikatan refused to publish him)

  16. Prabhu Rajadurai சொல்கிறார்:

   “இன்றைக்கு இணையத்தில் காணக் கிடைக்கும் பதிவுகளின் வகைகள்”

   வேலையை எல்லாம் கெடுத்துக்கிட்டு கூட சில சமயம் எழுதியிருக்கேனே…கண்ணுல படலயா?

   சரி, இணையம்தான் அரைவேக்காடுகள். தமிழ் அச்சு ஊடகங்களில் எப்பொழுதாவது, வழக்குரைஞர் ஆலோசனையை தவிர சட்டம் சம்பந்தமாக முழுவேக்காடு கட்டுரை/ பத்தி எழுதப்பட்டதுண்டா?

  17. மன்னிக்கணும். எப்படி விட்டேன்ன்னு தெரியல. :(

   சேர்த்துட்டேன்.

  18. […] வக்கீலய்யாவின் குறையைப் போக்குகிறது. நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் – முருகபூபதி […]

  19. எந்த இஸத்தையும் சேராமல் தமிழில் அசத்தும் ஒளிப்பட போட்டிகளெல்லாம் ஞானியின் கண்ணில் காட்டுங்களேன்.

  20. //எந்த இஸத்தையும் சேராமல் தமிழில் அசத்தும் ஒளிப்பட போட்டிகளெல்லாம் ஞானியின் கண்ணில் காட்டுங்களேன்.//

   இதெல்லாம் அவருக்கு தெரியாதென்று நான் நினைக்கவில்லை.

  21. //எந்த இஸத்தையும் சேராமல் தமிழில் அசத்தும் ஒளிப்பட போட்டிகளெல்லாம் ஞானியின் கண்ணில் காட்டுங்களேன்.//

   இதெல்லாம் அவருக்கு தெரியாதென்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை Photographism என நினைத்திருப்பாரோ?

  22. Kana Praba சொல்கிறார்:

   முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்களே, நீங்கள் மேற்சொன்னவாறு எல்லாவற்றையும் சொல்லிவிட்டு குமுதம் டாட் காம் சிறந்தது என்று போட்டாரே ஒரு போடு, ஜீப்பர் ;-)

  உங்கள் கருத்தை தெரிவிக்கவும்