சற்றுபின்-தங்கிய நிலையில் சற்றுமுன்

என்னடா பதிவுகளில் சர்ச்சைகளெதுவுமில்லையே? ஞானி சொன்னதும் மக்களுக்கெல்லாம் ஞானம் வந்துவிட்டதா! என நினைத்தேன். இப்போது பிரியாணியாக இல்லையென்றாலும் பழைய சோறாகவேனும் ஒரு சின்ன சர்ச்சை வந்துள்ளது. (விவாதங்களையெல்லாமே சர்ச்சையாகத்தான் பார்க்கவேண்டும் எனும் பதிவுலக அளவையின்படி).

சற்றுமுன் தன்னார்வ சேவையா? என்கிற முக்கிய சந்தேகம் பாண்டிய மன்னனுக்கு வந்துள்ளது. அதை தீர்த்து வைக்க தருமி வரமாட்டார் அவர் சற்றுமுன்னில் இல்லை. சொக்கனும் வரமாட்டார். அவர் கிழக்கில் பிசி.

சற்றுமுன் துவங்கியதிலிருந்து ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் வந்து பங்களிக்கலாம் எனும் கொள்கையுடனேயே இருந்துவருகிறது. சற்றுமுன்னில் வந்து சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோருமே இப்படி சேர்ந்தவர்கள். சிலரை ‘சேர்கிறீர்களா’ என ஸ்பெஷலாக வேண்டுகோள் வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு முறை சற்றுமுன் குறித்த அறிவுப்புக்களை வெளியிடும்போதும் பதிவர்களுக்கு வருக வருக என இரு கரம் நீட்டி வரவேற்றுள்ளோம்(ளேன்). இதுவரை சற்றுமுன்னில் சேர விருப்பம் தெரிவித்த எவரையும் நாங்கள் வேண்டாம் எனச் சொல்லவில்லை.

இடையில் குழு உறுப்பினர்கள் யாரேனும் சற்றுமுன்னை ஒருங்கிணைக்க முன்வருகிறீர்களா எனக் கேட்டிருந்தேன். யாருக்கும் அதில் விருப்பமிருக்கவில்லை. அது ஒரு ஜு ஜு பி வேலைதான். சுழற்சி முறையில் செயல்பட வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. அது ஒரு சிறந்த அனுபவமாகவும் அமையும் என நினைத்தேன்.

செய்திகளை தெரிவிப்பது ஒரு உன்னதப் பணி என்பதை அவற்றின் மூலம் பாதிப்படைபவர்களை, பயன்பெறுபவர்களை முன்வைத்து சொல்லலாம். அப்படி ஒரு பணியை நடுநிலையோடு செய்வது அவசியம். இதனால் செய்திகளை எந்த வித கருத்துக் கலப்புமின்றி அப்படியே வெளியிட வேண்டும் என்பது ஒன்றே சற்றுமுன்னின் முக்கிய வழிகாட்டலாக இருக்கிறது. நடுநிலையான தரவுகளிலிருந்து செய்திகளை எடுப்பதும் அவசியம்.

சற்றுமுன் அதிமுக்கிய செய்திகளைப் பகிர்வதற்காகவே உருவாக்கப்பட்டது. நான் சற்றுமுன்னை அறிமுகப்படுத்தி எழுதியபோது இத்தகைய செய்தி உங்கள் பகுதியில் வருடத்துக்கு ஒன்று வரலாம் வராமலும் போகலாம் என எழுதியிருந்தேன். தினசரி செய்தியை தரும் தளமாக அது மாறியது உறுப்பினர்களின் அதீத தன்னார்வத்தாலேயே.

சற்றுமுன் இப்போது சற்றுபின் ஆகிவிட்டிருக்கிறது. இது ஏன் என்பதே ரவிஷங்கரின் பதிவிலிருக்கும் முக்கிய கேள்வி. தன்னார்வம் என்பதற்கு இலாப நோக்கற்ற, பொது சேவை எனும் பொருளை எடுத்துக்கொண்டால் சற்றுமுன் தன்னார்வ சேவையே. சற்றுமுன் துவங்கியதால் நான் விரும்பாவிட்டாலும் எனக்கு கொஞ்சம் பெயர் கிடைத்ததே((?) சும்மா அடிச்சு விடவேண்டியதுதான்) தவிர குழுவின் உறுப்பினர்களுக்கு எந்த வித பிரதி பலனும் கிடைக்கவில்லை(அன்றுதான் நினைக்கிறேன்). இதை வெளிப்படையாக சொல்லியுமிருக்கிறேன். (பாஸ்டன் பாலாவுக்கு ஏற்கனவே நிறைய நல்ல/கெட்ட பெயர் இருந்தது)

சற்றுமுன்னில் செய்தி வெளியிடுவது அயற்சியைத் தரும் செயல். அதை இயல்பாகச் செய்யவேண்டும். அதாவது ஒரு செய்தியைப் பார்க்கிறீர்கள். அது முக்கியமெனப்படுகிறது. அதை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் உந்துதல் இயல்பாக இருக்குமானால் மட்டுமே சற்றுமுன்னில் பலன் பாராமல் இயங்க இயலும். மொத்தம் ஒரு செய்தியைப் பகிர 2 முதல் 3 நிமிடங்கள் போதும். அதை சிரத்தையுடன் வருந்திச் செய்யாமல் இயல்பாகச் செய்யவேண்டும்.

அப்படி விருப்பமுள்ள, செய்தி மீது ஆர்வமுள்ள எவரும் சற்றுமுன்னில் சேரலாம். வாங்க வந்து சேருங்க.

தொடர்புள்ள சுட்டிகளாக நான் கருதுபவை

ரவி

மோகன்தாஸ்

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “சற்றுபின்-தங்கிய நிலையில் சற்றுமுன்”

 1. //சற்றுமுன் இப்போது சற்றுபின் ஆகிவிட்டிருக்கிறது. இது ஏன் என்பதே ரவிஷங்கரின் பதிவிலிருக்கும் முக்கிய கேள்வி.//

  ஒரே ஒரு திருத்தம். எனது இடுகை சற்றுமுன்னைப் பற்றி மட்டுமல்ல. சற்றுமுன்னையே கணக்கில் எடுக்காவிட்டாலும், எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்னார்வத் தமிழ்த் திட்டம் ஏதாவது ஒன்று இருந்தாலும் அதில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன் என்பது தான். தன்னார்வத் திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக சற்றுமுன்னையும் தந்திருந்தேன். இப்போது மொத்தமா எல்லா எடுத்துக்காட்டுகளையும் நீக்கியாச்சு :)

  விளக்கி விளக்கியே வீணா போகுதடா வாழ்க்கை !! – இதன் சுருக்கமான “விவிவீபோவா” என்பதற்கான காப்புரிமையை இவ்விடம் என் பெயரில் பதிந்து கொள்கிறேன். நன்றி.

 2. பாலாஜி சொல்கிறார்:

  உலக செய்திகளை, தொழில் நுட்பத் தகவல்களை, சில விலாவாரியான அலசல்களுக்கான சிறுகுறிப்புகள் கூடியத் தொடுப்புகளை உடனுக்குடன் தருவதற்காகத்தான் நான் சற்றுமுன்னில் இணைந்தேன்.

  என்னுடைய மொழியாக்காத்தின் போதாமை (நுட்ப விஷயங்களில் பொருத்தமான கலைச்சொற்களை உருவாக்க/தெரியாத நிலையில்) #2 சிரமதசை கொடுத்தது. இதைக் கொஞ்ச நாள் சிவியார் செவ்வனே செய்து வந்தார். தொடர்ச்சியாக ஈடுபட்டால் வரும் அயர்ச்சி அவரையும் தாக்கியிருக்கணும்!?

  எகானமிஸ்ட் மாதிரி தாராளவாத ஆய்வுக் கட்டுரை கிடைத்தால், அதற்கு மாற்றான வாதங்கள் எங்கு கிடைக்கும் என்று தென்படாததால், #3 அடி வாங்கியது.

  #1 செய்திகளை கொடுப்பதற்கு மணியன், துவக்கத்தில் வெரைட்டி காண்பித்து சற்றுமுன்/செய்தித் தளம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பித்த வாசகன், கொஞ்ச நாள் கழித்து முதுவை ஹிதாயத் போன்றோர் இருந்தனர்.

  தவறவிட்டிருக்கக் கூடிய நிகழ்வுகளைப் படிக்க வைப்பதற்காக, தவறவிட வேண்டிய நிகழ்வுகளைக் கொண்டு வரவழைப்பதுதான் என்னோட ஆர்வம்.

 3. மணியன் சொல்கிறார்:

  சற்றுமுன் ‘சற்றுபின்’ ஆனது மிகவும் மனவருத்தம் அளிக்கிறது. பணி/மன நெருக்கடிகளால் என்னால் தொடர்ந்து பங்களிக்க முடியாமல் போனது குற்ற உணர்ச்சியை தூண்டுகிறது. பலர்கூடி தேர் இழுக்கும்போது நானொருவன் வடத்தை விட்டால் ஊர்வலம் நிற்காது என இருந்தேன். அனைவருமே அவ்வாறு நினைத்து விட்டார்கள் போலும் :)

  செய்திகளை பகிர்வது மிக எளிய செயல்தான். நாளின் ஒருசில மணித்துளிகளை செலவிட்டாலும் போதும்.ஆனால் அந்த முனைப்பு வேண்டும். சிறில் கூறுவது போல …
  “சற்றுமுன்னில் செய்தி வெளியிடுவது அயற்சியைத் தரும் செயல். அதை இயல்பாகச் செய்யவேண்டும். அதாவது ஒரு செய்தியைப் பார்க்கிறீர்கள். அது முக்கியமெனப்படுகிறது. அதை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் உந்துதல் இயல்பாக இருக்குமானால் மட்டுமே சற்றுமுன்னில் பலன் பாராமல் இயங்க இயலும். மொத்தம் ஒரு செய்தியைப் பகிர 2 முதல் 3 நிமிடங்கள் போதும். அதை சிரத்தையுடன் வருந்திச் செய்யாமல் இயல்பாகச் செய்யவேண்டும்.”

  எனக்கிருக்கும் மனநிலையில் என்னால் அந்த முனைப்பையும் உந்துதலையும் கொள்ள முடியவில்லை. முடிந்தவர்கள் இதனில் இணைந்து இம்முயற்சி வெற்றி பெற உதவுமாறு நானும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

  இதனை சிறில்/சற்றுமுன் குழுவினரின் முயற்சியாக பார்க்காமல் ஒரு தன்னார்வ முயற்சியாகவே நானும் நோக்குகிறேன்.
  பாலா கூறும் பிரச்சினையான..
  //என்னுடைய மொழியாக்காத்தின் போதாமை (நுட்ப விஷயங்களில் பொருத்தமான கலைச்சொற்களை உருவாக்க/தெரியாத நிலையில்) #2 சிரமதசை கொடுத்தது.// சற்றுமுன் தளத்திலேயே தமிழ் அகரமுதலிகளின் சுட்டுக்களைக் கொடுத்தால், தவிர அடிக்கடி வரும் நுட்ப/சட்ட சொற்களுக்கு சீரான மொழியாக்கம் கொண்ட ஒரு பக்கத்தை இணைத்தால், புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  சற்றுமுன் சிலிர்த்தெழ வாழ்த்துக்கள் !!

 4. olerzor சொல்கிறார்:

  கேவலமான சலுகைகள்

  ஆகா, மத்திய அரசு உலகிலேயே மகாப் பெரிய புரட்சி சட்டத்தை இயற்றி விட்டது.
  ஆமாம், கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான சலுகையை அரசுப் பெண் ஊழியர்களுக்குக் கொடுத்து, ஏழைகளின் வயித்தெரிச்சலையும் பாவத்தையும் கட்டிக் கொண்டிருக்கிறது.
  பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அதுவும் முழு சம்பளத்துடன். இதைவிடக் கேவலமான சட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.
  இதை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. இனி அரசு ஊழியைகள் பணியில் சேரும் 21 வயது முதல் தாங்கள் ஓய்வு பெறும் 65 வயது வரை ஏறக்குறைய 45 ஆண்டுகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு குழந்தை வீதம் பெற்றுக் கொள்வார்கள்.
  அப்படியெனில் ஒரு அரசு ஊழியை தனக்கென 15 குழந்தைகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பெற்றுப் போட்டால் போதும், ஓய்வுபெறும் வயது வரை தொடர் விடுமுறை கிடைத்து விடும்.
  தனியார் நிறுவனங்களிலும், நாள்கூலி வேலை செய்யும் வேலை செய்பவர்களின் வரிப்பணத்தில், அரசு ஊழியைக்கு முழு ஊதியமும் கிடைத்து விடும்.
  ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் பாலையும் வைக்கும் அரசுக்கு என்னே பெரிய கருணை.
  ஜமின்தார் முறை ஒழிந்து விட்டது என எவன்டா சொன்னது? இப்போது அரசு ஊழியர்களின் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
  இதனால் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் அல்லவா? ஓய்வு வயதின் உச்சவரம்பையும் அரசு விரைவில் அதிகரிக்கப் போகிறது.
  அப்படியெனில் பெண்ணின் தாய்மைக்கு மதிப்பில்லையா என அவர்கள் கேட்பார்கள். இருக்கிறது. அதற்கு ஒரு அளவும் இருக்கிறது.
  நாட்கூலி வேலை செய்யும் அப்பாவிப் பெண்கள், பிரசவத்திற்கு முந்திய நாள் வரை உழைக்கிறார்கள். வயலில் உழைத்துக் கொண்டிருக்கும் போது பிரசவம் ஆன கூலிப் பெண்களும் உண்டு.
  கூலிப் பெண்கள் பெறுவது மனிதக் குழந்தைகள்தானே?! ஆனால் அரசு ஊழியைகளுக்குப் பிறக்கப் போவது தெய்வக் குழந்தைகள் அல்லவா? அதுங்களை வளர்க்க மூன்றாண்டுகள் கூட போதாது.
  இனி இப்படி கூட நம் மத்திய அரசு சட்டம் போடலாம். திருமணம் முடித்து முதலிரவு முடிந்தவுடன், குழந்தைகளை வளர்க்கும் விடுமுறையை இரட்டை மடங்கு சம்பளத்துடன் கொடுக்கத் தொடங்கி விடலாம்.
  அந்தக் குழந்தை பிறந்து, வளர்ந்து, பள்ளியில் படித்து, கல்லூரியில் முடித்து, வேலை கிடைத்து, திருமணம் முடிந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை, அதாவது அந்த அரசு ஊழியைக்கு பேரன் பேத்திகள் பிறக்கும் வரை இந்த ஆயுட்கால விடுமுறையை நீட்டிக்கலாம்.
  இவர்களுக்கு சம்பளமாகப் போவப் போவது, அப்பாவி கூலிக்காரர்களின் வரிப்பணம்தானே? இனி மாநில அரசுகளும் இந்த கேவலமான சட்டத்தைப் பின்பற்ற தொடங்கி விடும்.
  ஏற்கெனவே அரசு ஊழியர்கள் வேலை செய்து கிழிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீண்டகால விடுமுறை வேறு.
  இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கொடுக்கலாமே? ஆமாம், அரசு ஆண் ஊழியர்கள் செயற்கையைகக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.
  இப்படி எழுதுவதால், நான் அரசு ஊழியர்களுக்கு எதிரி என எண்ண வேண்டாம். எனக்கும் பல அரசு ஊழியர்களில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த சட்டம் அந்த நண்பர்களுக்குக் கூட பிடிக்கவில்லை.
  இந்த சட்டம் இன்னும் பலரை சோம்பேறியாக்கி விடும் என அவர்களே கவலைப்பட்டார்கள்.
  எப்படியோ, நாடு உருப்படாத பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அப்பாவி கூலித் தொழிலாளர்களே… தனியார் நிறுவன ஊழியர்களே… நீங்கள் அய்யோ, பாவம்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்