பதில்கள்

http://tamilkuruthi.blogspot.com/ ஜேபி
1. ஓப் பக்கங்களை இன்னும் வாசிக்கிறீர்களா ?

ஓ! வாசிக்கிறேனே!

ஞானியின் வெளிப்படையான விமர்சன எழுத்து எனக்கு பிடிக்கும். அவரின் ஒவ்வொரு பத்தியிலும் ஏதேனும் சிறு அளவாவது எனக்கு கருத்து வேறுபாடு இருக்கும். விமர்சனமென்றாலே அவமதிப்பு எனும் சூழல் மாறவேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஞானி போன்றோரால் உருவாகலாம். குட்டவும் செய்கிறார் பூச்செண்டும் கொடுக்கிறார். ஊடகங்கள் இதைத்தான் செய்ய வேண்டும். குட்டப்படவேண்டியவர்களைக் குட்டவும் அவர்களே பாராட்டப்படவேண்டுமானால் பூச்செண்டு வழங்கவும் நடுநிலைமையோடு செய்வது அவசியம். விகடனைத் திறந்ததும் கற்றதும் பெற்றதையும் தேடுவதைப்போல குமுதத்தை திறந்ததும் (இணையத்தில்தான்) ஓ பக்கங்களையும் ‘ஞானி பேசுகிறேனையும்’ தவறாமல் பார்த்துவிடுவேன். எதையுமே நல்லது கெட்டது, கருப்பு வெள்ளை, ரஜினி கமல், எம்ஜிஆர் சிவாஜி, விஜய் அஜித் எனத் திட்டவட்டமாக பிரித்துப் பார்ப்பதை இயன்றவரை தவிர்க்கிறேன்.

2. பத்து பதினைது பதிவு வச்சிருக்கீங்களே, பதிவர் சந்திப்பு ஒன்னுக்கவது ( டாய்லட் ல, ரோட்டு ஓரத்துல போற ஒன்னுக்கு இல்ல ) போய் வந்தீர்களா ?
பதிவர் சந்திப்புக்கும், அப்போதே ஒன்னுக்கும் போய் வந்திருக்கிறேன்.
2007 துவக்கத்தில் நடந்த மாபெரும் (40+ பதிவர்கள்) சந்திப்பில் கலந்துகொண்டு பேருரை, சிற்றுரை, கலந்துரை என கலக்கிட்டோம்ல.

3. தங்களது 251 வருட வாழ்க்கையில் நடந்த காதல் கீதல் அனுபவங்களை பதிர்ந்து கொள்ள முடியுமா ?
‘காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ?’ அதனால கல்யாணதுக்கப்புறமாத்தான் காதல் வாய்த்தது. கீதல் எல்லா விடலைங்களைப்போலவும் மீசை அரும்பினதுமே வந்திடுச்சு.

http://surveysan.blogspot.com Surveysan
ஹ்ம். சிறந்த கேள்விக்கு ஏதாச்சும் பரிசு கிரிசு கெடைக்குமா?
ஹ்ம். சிறந்த பதிலுக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்.

ஆடு, கோழியெல்லாம் அடிச்சு கொண்ணு, சமைச்சு சாப்பிடறோமே, கொடூரமில்லையா? ஒரு ஆட்டு ஃபேமிலிலேருந்து, திடீர்னு, ஒரு நாளைக்கு ஒரு மாமாவையோ, அத்தையையோ, அண்ணனையோ, புடிச்சிட்டு வந்து கசாப் பண்றது, கொடுமை இல்லியா? தனக்குன்னு வந்தாதான் வலி தெரியுமா?
மிருகாபிமானமா பதில் சொல்லணும்னா கொடூரம்தான். ஆனாலும் இயற்கையிலிருந்து உணவை உண்பதென்பதுதான் நியதியில்லையா? உணவவப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் ஒரு உள்ளுணர்வு இருக்கும். இதை உண்ணலாம் இதை உண்ணவேண்டாம். இந்த உள்ளுணர்வு பல ஆதாரங்களிலிருந்து வருகிறது. மரபணுவிலிருந்தும் சூழலிலிருந்தும் வரலாம்.

விவசாயம் சரிந்துவருகிறது. போகிற போக்கில் எல்லோரும் வேட்டையாடி உண்ணும் நிலை வந்தாலும் வரலாம். இதை அடிப்படையாகக் கொண்டு நல்ல அறிபுனை ஒன்றை எழுதலாம்.

1) உங்க மனைவி உங்கள் பதிவுகளை வாசிப்பதுண்டா? உண்டென்றால், அவங்க உங்களப் பத்தி என்ன நெனைக்கறாங்க?
அ. அடாடா, இன்னும் இவருக்கு புலிட்ஸர் அவார்டு கிடைக்கலியே!
ஆ. வெட்டியா பொழுத கழிக்காம வேர வேலையப் பாருய்யா?

இ. புலிஸ்டர் கிடைத்த பிறகாவது வெட்டியா பொழுத கழிக்காம வேலைய பாப்பாரா?

http://govikannan.blogspot.com கோவி.கண்ணன்
1. சிறுவயதில் உங்களுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்ததா ?
இருந்திருக்கும். ஆனால் யார் யார் விரல்களை சூப்பினேன் என்பது நியாபகமில்லை.

2. ஆசிரியர் தலையில் நறுக்கென்று குட்டியதும் அவரை முறைத்துப் பார்த்து இருக்கிறீர்களா ?
ஆசிரியர்கள் எல்லோரும் என்னைவிட உயரமாயிருந்ததால் அவர்களை நறுக்கென்று குட்டியது கிடையாது. ஆனால் முறைத்து பார்த்ததுண்டு.

3. இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது உங்களுக்கு நெருங்கிய தோழிகள் இருந்தார்களா ?
ஒரு அடி தள்ளிதான் இருந்தார்கள்.

4. சிறுவயதில் பொய் சொல்லிவிட்டு அப்பாவின் கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறீர்களா ?
அடிக்கடி ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால் எப்போது பொய் சொன்னேன் சொல்லவில்லை என்பது நியாபகமில்லை. பொய் சில்லாவிட்டாலும் எங்க அப்பா ஆசீர்வதிப்பது வழக்கம்.

5. பள்ளிக்கே கட் அடித்துவிட்டு படம் போன அனுபவம் ?
அது ஒரு கனாக் காலம்.

கடைசியாக,
6. என்னது எல்லாம் சின்னப்புள்ளத்தனமான கேள்வியாக இருக்கு என்று அலுத்துக் கொள்வீர்களா ?
சின்னப்புள்ளத் தனமாகவாவது கேட்டீர்களே என சிலிர்த்துக் கொண்டேன்.

http://madippakkam.blogspot.com லக்கிலுக்
நமீதாவின் முன்னழகு, த்ரிஷாவின் முன்னழகு (?) ஒப்பிடுக!!!

பதில்1: நமீதாவின் முன், திரிஷாவின் முன் யாரும் அழகல்ல.
பதில்2: நமிதாவும் திரிஷாவும் முன்(பு) அழகு. இப்போ கொஞ்சம் கம்மிதான்.

Villavan
நான் செடி கொடி மரம் போன்ற உயிர்களை ரொம்ப நேசிப்பதால் அசைவம் மட்டுமே சாப்பிடுகிறேன். இது தவறா?

அசைவங்கள் செடி கொடி மரமெல்லாம் சாப்பிடுதே?

போன வார டைம் பத்திரிகையில் பூச்சிகளை சாப்பிடுவதன் நன்மைகளையும் சில சமையல் குறிப்புகளையும் தந்திருந்தார்கள். பூச்சிகள் உட்கொள்ளும் உணவை அதிகபட்சமாக உடலில் தக்கவைத்துக்கொள்கின்றனவாம். வருங்காலத்தில் சிலந்தி 65, கார்லிக் கரப்பான் எல்லாம் சாப்பிட நேரலாம்.

http://yosinga.blogspot.com/ யோசிப்பவர்
எந்தெந்த பதிவிலெல்லாம் உறுப்பினராக இருக்கிறீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா?

ஒரு மாதிரியா நியாபகம் இருக்குது. நீங்க நினைக்கிறதுபோல மோசமில்ல. எப்போதும் அதிகபட்சமா ஏதேனும் இரண்டு குழுக்களில்தான் தீவிரமாயிருக்க முடியுது.

அதில் எத்தனை சொந்தப் பதிவுகள்? எத்தனை சொந்தமாக உருவாக்கி, பின்னால் தாரை வார்த்தது?
இதுவரை எதையுமே உருவாக்கி தாரை வார்க்கவில்லை. சற்றுமுன் தளத்தை நடத்த யாரேனும் முன்வந்தால் தாரை, தப்பட்டை எல்லாம் வார்க்கலாம்.

எத்தனை பதிவுகள் ஆரம்பிக்க நினைத்து டிராப் ஆனது? இன்னும் எத்தனை பதிவுகள் ஆரம்பிப்பதாக பிளான் உள்ளது(இப்போதைக்கு)?
ஆரம்பிக்க நினைத்து முடியாமல் நின்றது ஆனியன்- மன்னிக்கவும் :) – அதுமாதிரி உலகமெங்கும் இருக்கும் பதிவர்கள் தங்கள் பகுதியில், நாட்டில் இருக்கும் சாதாரண விஷயங்களை சாதாரணமாக, Casualஆக செல்ஃபோனில் அல்லது கேமிராவில் படம் பிடித்து பதிவேற்ற ஒரு குழு பதிவு செய்யலாம் என இருந்தேன். அமெரிக்காவில் பஸ் ஸ்டாண்ட் எப்படி உள்ளது, சிங்கப்பூரில் எப்படி, ஒரு பூங்கா எப்படி உள்ளது, பப்ளிக் டாய்லெட் (ஆள் இல்லாமல்), sign posts, கார் பார்க்கிங், கார்கள், பைக்குகள் ஃபாஸ்ட் ஃபுட், கடைகள் என மிகச் சாதாரணவற்றை எப்படி ஒவ்வொரு நாட்டிலும் செய்திருக்கிறார்கள் என்பதை விஷுவலாக காண்பிப்பதற்கு.

கடைசியா ஒரு ;-)

http://boochandi.blogspot.com chinnappaiyan
1. உங்களை நல்லவன்னு யாராவது சொல்லியிருக்காங்களா?

தெரியலியே (நாயகன் ஸ்டைலில் வாசிக்கவும்).

ஆனா எல்லாரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற கெட்ட குணம் எனக்குண்டு.

2. ஒரு சின்ன மச்சம் மட்டும் வைத்துக்கொண்டு மாறுவேடப்போட்டிக்கு போயிருக்கிறீர்களா?
சின்ன மச்சம் உண்டு. மாறுவேடப் போட்டிகளுக்குப் போனதில்லை.

3. மனைவிக்கும், துணைவிக்கும் வித்தியாசம் என்ன?
என் மனைவிக்கும் என் துணைவிக்கும் ஒரு வித்தியாசம்கூட இல்லை. இருவருமே ஒருவர்தான் என்பதால்.

4. சிகாகோவில் புகைவண்டி இருக்கிறதா? அதை பிடிக்க நீங்கள் பக்கத்து கட்டிடத்திலிருந்து கயிறு மூலம் தாவிப் போயிருக்கிறீர்களா?
புகை பிடிக்க இப்படித் தாவினாலும் தாவுவேனே தவிர புகைவண்டியை பிடிக்கத் தாவமாட்டேன்.

5. தமிழ் நாட்டில் மணல் கடத்தல்/கொள்ளை அடிக்க உதவும் வகையாக ஒரு வலைப்பூ துவக்கும் எண்ணம் இருக்கிறதா?
“தன்னார்வம்” இருக்கிறவங்க சொல்லுங்க செஞ்டலாம்.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....14 மறுமொழிகள் to “பதில்கள்”

 1. rapp சொல்கிறார்:

  கேள்விகளும் நல்லா இருக்கு, பதில்களும் நல்லா இருக்கு. நீங்க ஞாநியோட ஓ பக்கங்கள் பற்றி எழுதியிருப்பதால, அது தொடர்பான என் பதிவுகள் இங்கே:
  http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html
  http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html
  http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_12.html

 2. :-)

 3. கேள்வி பதில் சூப்பரா வந்துருக்கு… I liked this one .

  //ஆசிரியர் தலையில் நறுக்கென்று குட்டியதும் அவரை முறைத்துப் பார்த்து இருக்கிறீர்களா ?
  ஆசிரியர்கள் எல்லோரும் என்னைவிட உயரமாயிருந்ததால் அவர்களை நறுக்கென்று குட்டியது கிடையாது. ஆனால் முறைத்து பார்த்ததுண்டு.//

 4. ஜேபி சொல்கிறார்:

  பல கேள்விகளுக்கு சுவையாகவும் சில கேள்விகளுக்கு மொக்கயாகவும் பதிலளித்தர்க்கு நன்றி .

  //அதனால கல்யாணதுக்கப்புறமாத்தான் காதல் வாய்த்தது. //
  என்ன வீட்டுக்காரம்மா வீட்ல ரெம்ப கண்டிப்போ ? பக்கத்துல இருக்காங்க போல.

  //1) உங்க மனைவி உங்கள் பதிவுகளை வாசிப்பதுண்டா? உண்டென்றால், அவங்க உங்களப் பத்தி என்ன நெனைக்கறாங்க?//
  “உங்களுக்கு சமைக்குரதுக்கும், துவைக்குரதுக்கும் மட்டும் நேரம் இருக்க மாட்டேங்குது… ஆன்னா பதிவு போட – அதுவும் மொக்கை பதிவுக்கு பின்னூட்டம் போட மட்டும் நேரம் இருக்குதாக்கும்… ஒழுங்கு மரியாதையா இப்ப சமைக்க போறிங்களா இல்ல இன்டர்நெட் கனச்சன கட் பன்னட்டா “

 5. கேள்விகளை படித்தபோது உங்கள் பதில் எப்படியோ என்று நினைத்தேன். ஆனால் பதில்கள் அசத்தல்

 6. chinnappaiyan சொல்கிறார்:

  சூப்பர் பதில்கள்… நன்றி…

  நீங்களும் வாரத்தில் ஒரு நாள் குறிச்சி வெச்சிக்கிட்டு பதில்கள் சொல்லப்போறீங்களா?… அடுத்த செட் கேள்விகள் கேக்கலாமா?

 7. பதில்கள் அட்டகாசமாக இருக்கின்றன…. இதை இப்படியே வாரவாரம் தொடரலாமே.
  :)

 8. Surveysan சொல்கிறார்:

  //பதில்கள் அட்டகாசமாக இருக்கின்றன…. இதை இப்படியே வாரவாரம் தொடரலாமே.//

  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான், ரணகளமாயிடுது :)

 9. ஜோ சொல்கிறார்:

  நல்லா இருக்கு மக்கா!

 10. Seemachu சொல்கிறார்:

  நல்ல சுவையான பதில்கள்.. சில பதில்களில் நேர்மை தெரிகிறது.. சிலதில் உங்கள் புத்திசாலித்தனமும் குறும்பும் பளிச்சிடுகிறது..

  அன்புடன்
  சீமாச்சு

 11. // நீங்களும் வாரத்தில் ஒரு நாள் குறிச்சி வெச்சிக்கிட்டு பதில்கள் சொல்லப்போறீங்களா?… அடுத்த செட் கேள்விகள் கேக்கலாமா?//

  பின்னூட்டங்களுக்கு நன்றி. தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம். இன்ன நாளில்தான் பதில் வரும் எனச் சொல்ல முடியாது.

  சீரியஸ் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

 12. பேசாமா எனக்கு வந்த கேள்விகள்ல சிலதை உங்களுக்கு அனுப்பிடட்டா? ‘தாய் மதம்’, ‘கத்தோலிகத்தில் பெண்ணடிமை’ மாதிரி அந்தக் கேள்விகளையும் ஒரு வழி பண்ணிடலாம். என்ன சொல்றீங்க? :-)

 13. குமரன் அனுப்புங்க பின்னிடலாம்.

 14. Balaji சொல்கிறார்:

  கலக்கல் பதில்கள்!!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்