தசாவதாரமும் கமலின் சாபமும்

பழங்காலத்துக் கதைகளில் இரு சுவாரஸ்யமான விதயங்களைக் காணலாம். ஒன்று ஒருவரின் உயிர் ஏதோ ஒரு அபத்தமான பொருளில், ஆபத்தான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ‘ஏழுகடல் தாண்டி ஒரு குட்டித் தீவில் சிறு குருவிக் கூட்டீல் இருந்த சங்கினுள் வசித்து வந்த குள்ள மனிதர்களிடமிருந்த பூத்தொட்டியில் வாழ்ந்த மண்புழு ஒன்றில் மன்னனின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது…’. இன்னொன்று ஒருவரின் உருவம் மாறிவிடும்படி சாபம் கிடைக்கும். தவளையாகிவிட்ட இளவரசன், பறவையாகிவிட்ட இளவரசி, பாதி விலங்கும் பாதி மனிதனுமாக உருமாறித் திரிபவை என. கமலுக்கு இந்த சாபம் கிடைத்துள்ளது. உருமாறாமல் அவரால் எதையும் இனிமேல் செய்துவிட இயலாதோ எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு சாபத்தை தனக்குத் தானே தந்துவிட்டார் கமல்.

தசாவதாரம். வித்தியாசமான தமிழ் படம் என்பதில் சந்தேகமில்லை. பல புதிய களங்களை தொட்டுச் செல்லும் விறுவிறுப்பன திரைக்கதை. பிரம்மாண்டமான கணினி வரைகலைக் காட்சிகள். காமெடி, ஆக்ஷன், த்ரில், பீரியட் என ஒரு மசாலா கலவை. எல்லாவற்றிற்கும் மேலாக கமலின் நடிப்புத் திறமையின் மொத்த வெளிப்பாடாக 10 வேடங்கள். ஒவ்வொரு பாத்திரத்திலும் கமல் தெரிகிறார். இல்லை. கமல் தெரியவில்லை. பாத்திரங்களை தனித்தன்மைகளோடு உருவாக்கியிருப்பதால் ஒவ்வொன்றிற்கும் இருக்கும் பல நுண்ணிய வேறுபாடுகளையும் கமல் வெளிக்காட்டியுள்ளார்.

அசினுக்கு இரு குறிப்பிடத் தகுந்த வேடங்கள். மல்லிகா முதலில் வந்து கிளுகிளுப்பூட்டினாலும் கமல் சூரியனாகப் பிரகாசிப்பதில் மல்லிகா மட்டுமல்ல மற்ற நட்சத்திரங்களும் நினைவில் நிற்கமாட்டேன் என்கிறார்கள்.

வைணவ, சைவ வரலாற்றுக் குறிப்புக்களுக்கும் கதைக்கும் நேரடித் தொடர்பில்லை. காட்சிகள் பிரம்மாண்டமாய் படம்பிடிக்கப்பட்டிருந்தாலும் தத்ரூபமாகவோ இயல்பாகவோ இல்லை என்றே சொல்வேன். குறிப்பாக எல்லோரும் புத்தாடைகளுடன் வருவது கண்ணை உறுத்துகிறது. சோழ மன்னர் குவாட்டர் ‘நெப்போலியன்’ அடித்துவிட்டு பேசுவதுபோல நம்பிக்கு முன்பு தமிழை கொலை செய்கிறார். வேறு ஆள் சிறப்பாய் செய்திருக்கலாம். படத்தின் பல காட்சிகளும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளன ஆனால் தத்ரூபமாக, துல்லியமாக, யதார்த்தமாக அவற்றைக் காண்பிக்கவில்லை. ரஜினி வெள்ளைக்காரர் ஆனதற்கும் கமல் வெள்ளைக்காரர் ஆனதுக்கும் ஒரு ரப்பர் மாஸ்க் அளவுக்காவது வித்தியாசம் இருக்கிறது.

கல்லை மட்டும் கண்டால், முகுந்தா முகுந்தா பாடல்கள் சிறப்பாயுள்ளன. மற்றவை ஓ.கே ரகம்தான். டைரக்டருக்கு ஷாட் அமைக்கும் வேலை மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். படக்கலவை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் செய்திருக்கிறார்கள்.

ஒரே கதை என்றில்லாமல் சில கிளைக் கதைகளையும் சேர்த்துக் கொண்டு அவற்றிற்கும் மையக்கதைக்கும் ஒரு தொடர்பை வருந்தி ஏற்படுத்திக்கொண்டு சென்றாலும் கிளைக்கதைகளிலும் கமலே நாயகனாகக் கலக்குவதால் உறுத்தவில்லை.

கமலின் நடிப்பில் உச்சமாகத் தெரிவது உச்சரிப்பு மற்றும் மேனரிசம். ரப்பர் முகமூடியை வைத்துக்கொண்டு சிறந்த முகபாவங்களைத் தர முடிவதில்லை ஆனால் பாத்திரங்களின் செய்கைப்பண்புகளை தத்ரூபமாகச் செய்துள்ளார். இதுவரை யாருமே செய்திராத கன்னியாகுமரி கேரள எல்லைத் தமிழை மிகச் சிறப்பாக உச்சரித்துள்ளார் என கன்னியாகுமரி மக்களின் சார்பில் அவருக்கு ஒரு சான்றிதழை வழங்குகிறேன். இதுபோன்ற பாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை, மன எழுச்சியூட்டும் படங்களை அவ்வப்போது கமல் தரவேண்டும்.

படத்தில் பல சிறப்புகள். மிகுந்த முயற்சியுடனும் ஈடுபாடுடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது. பரிட்சைக்கு மாங்கு மாங்கென்று படித்துவிட்டதாலேயே ஒருவருக்கு அதிக மதிப்பெண்கள் கிடைப்பதில்லை. பரிட்சை பேப்பரில் விஷயம் இருக்கவேண்டும். கமல் first class மதிப்பெண் எடுத்து தேர்ந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. [இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.]

பழங்கதைகளில் இன்னொரு கூறும் சுவாரஸ்யமானது. சில நேரங்களில் சாபங்களே வரங்களாகிவிடுவதுண்டு.

Popularity: 24% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....30 மறுமொழிகள் to “தசாவதாரமும் கமலின் சாபமும்”

 1. chinnappaiyan சொல்கிறார்:

  //கமல் first class மதிப்பெண் எடுத்து தேர்ந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. //

  இன்னொரு சூப்பர் விமர்சனம். இன்னும் ரெண்டு நாள் இருக்கே.. நான் பாக்கறதுக்கு…..:-((

 2. ஜோ சொல்கிறார்:

  சிறில்,
  கடைசியா என்ன சொல்லுறீங்க? ..மண்டை காயுது :))

  சன் டீவி மாதிரி மொத்தத்தில் தசாவதாரம் …..எதாவது சொல்லுங்க.

  (நாளைக்கு தான் நான் பார்க்க போறேன்)

 3. prakash சொல்கிறார்:

  //[இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.]//

  அதென்ன போற போக்கிலே ஒரு உள்குத்து?

  இருக்கட்டும்னேன் :-)

 4. //கடைசியா என்ன சொல்லுறீங்க? ..மண்டை காயுது :))//

  ஜோ,
  மொத்தத்தில் ‘கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.’

  நீங்க ரெண்டு முறைக்கும் மேல். :)

 5. //அதென்ன போற போக்கிலே ஒரு உள்குத்து?//
  உள்குத்தெல்லாம் இல்லைங்க. இருக்கிறதத்தானே சொல்றோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு.

 6. அட பேரா முக்கியம்? சொல்கிறார்:

  /**
  இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
  **/

  இதானே வேணாங்கறது..
  எதுக்கு சொந்த blog-லேயே சொந்த சூனியம்?

  என்னமோ போடா மாதவா.

 7. //தசவதாரமும்//

  தசாவதாரம் – அப்பாடா.. நான் பண்ண தப்பை நீங்களும் பண்ணிட்டீங்க. தலைப்பை மாத்துங்க :-)

 8. சிறில்,

  //இதுபோன்ற பாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை, மன எழுச்சியூட்டும் படங்களை அவ்வப்போது கமல் தரவேண்டும்.//

  அப்படி வரும் படங்கள் ப்ராம்ப்ட் ஆக ஊத்திக்கொள்வதால் கொஞ்சம் ஜனரஞ்சகம் சேர்க்க வேண்டியதாகிவிடுகிறது!

  இந்தப்படம், சுவாரஸ்யமான திரைக்கதை (மக்கள் பார்ப்பதற்காக) யினூடே, கொஞ்சம் மத்த மேட்டர்களையும் ஒழித்து வைத்து ஊட்டும் ஒரு முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். வாத்தியார் கிரைம் கதையினூடே நாட்டுப்பாடலை ஒழித்துவைப்பாரே அப்படி (கரையெல்லாம் செண்பகப்பூ)

  மாங்குமாங்கென்று படிக்காமலே சூப்பர் மார்க் வாங்குபவர்களும்தான் தேவைப்படுகிறார்கள்.. புல் மீல்ஸ் எப்போதுமா சாப்பிடமுடியும்? தயிர் சாதம் ஊறுகாயும்தான் ரெகுலர் :-)

 9. நன்றி வெட்டி. தலைப்ப மாத்திட்டேன். இதுக்கெல்லாமுமா ஆள் சேப்பீங்க? :)

 10. //இந்தப்படம், சுவாரஸ்யமான திரைக்கதை (மக்கள் பார்ப்பதற்காக) யினூடே, கொஞ்சம் மத்த மேட்டர்களையும் ஒழித்து வைத்து ஊட்டும் ஒரு முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். //

  இவை அதிகம் பேசப்படாது. ஷங்கர் படத்து மெசேஜ்களை விட இதில் அதிக லைட்டாக சொல்லப்படுகிற விஷயங்கள் பெரிய அலைகளை ஏற்படுத்தாதுண்ணு நினைக்கிறேன்.

  //மாங்குமாங்கென்று படிக்காமலே சூப்பர் மார்க் வாங்குபவர்களும்தான் தேவைப்படுகிறார்கள்போல் //
  நிச்சயமா. அந்த வரி அப்படி வாங்குவது மோசம் என்று சொல்லி எழுதவில்லை. அதற்கு முந்தி சொன்னதுபோல விடைத்தாளில் மேட்டர் இருக்கணும். கூடவே திருத்தும் வாத்தியாரை கன்வின்ஸ் பண்ணணும்.

 11. ///**
  இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
  **/

  இதானே வேணாங்கறது..
  எதுக்கு சொந்த blog-லேயே சொந்த சூனியம்?

  என்னமோ போடா மாதவா.
  //

  விமர்சகர விமர்சனம் செய்யக் கூடாது ஆமா! :)

  படிக்காம இருக்கோமேண்ணு வருத்தப்படுறதா? மார்க் வாங்கிட்டோமேன்னு பெருமைப்படுறதா தெரியலியே? :)

 12. //இதுக்கெல்லாமுமா ஆள் சேப்பீங்க?//
  அப்ப தானே ‘நான் தனி ஆள் இல்ல’னு ஒரு பில்ட் அப் கொடுக்கலாம் ;)

 13. […] 5. தசாவதாரமும் கமலின் சாபமும் […]

 14. சுந்தர் சொல்கிறார்:

  சிறில்

  பதிவுக்கு நன்றி. மன எழுச்சியூட்டும் படங்களைத் தந்து ஏற்கனவே அவர் மனம் நொந்தது போதாதா? தருவார். பத்து மசாலாக்களுக்கு நடுவே ஒரு நல்ல படம் – அவ்வளவுதான் நமக்கு வாய்த்தது! :(

  தமிழ்ச் சினிமாக்களைத் திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால் ஞாயிறன்று இப்படத்திற்குச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். படம் பற்றி எவ்வித எதிர்பார்ப்புகளையும் வைத்துக்கொள்ளவில்லை.

  பார்க்கலாம்.

  நன்றி்.

 15. கிரி சொல்கிறார்:

  //இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்//

  சிறில் படம் விறுவிறுப்பாக பார்க்க வேண்டும் என்பதற்காக உங்கள் விமர்சனம் முழுவதும் படிக்க வில்லை. ஆனால் உங்கள் கடைசி வரிகள் சிலதை படித்தேன். நான் உங்களுக்கு கேட்க விரும்புவது, ஒருத்தரை பாராட்டும் போது அவரின் முழு திறமையை மட்டுமே கூறி பாராட்ட முடியாதா? அடுத்தவரை தாழ்த்தியோ அல்லது சம்பந்தமே இல்லாமல் ஒருவரை இழுத்தோ தான் கூற வேண்டுமா?

  இவ்வளவு நீங்க சிறப்பாக எழுதினாலும், கடைசியில் நீங்கள் கூறும் வார்த்தை அது வரை எனக்கு இருந்த உங்கள் ஒட்டு மொத்த விமர்சனத்தையே திரும்ப யோசிக்க வைக்கிறது.

  எதுவாகினும் தசாவதாரம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

 16. Giri,
  Sorry for English. This syetem does not have font installed.

  I have complemented Sivaji earlier in case you have not read. Considering that if you re-read the line about people getting great marks without studying so hard.. you would realize if getting goood marks is the most important thing then it hardly matters how you studied. Whether you studied for nights together or you just paid attention during class or you were just brilliant.

  So. Kamal is like the student that really works hard to get some resuls that are easily gotten by others.

  It is not a harsh criticism on anyone. Rather a compliment if you will. :)

 17. தலை,

  உண்மையிலேயே நீங்க தசாவதாரம் பார்த்திட்டு தான் விமர்ச்சனம் எழுதீநீங்களா ?

  தசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும்

  தலைவா, நம்மளும் ஒரு விமர்ச்சனம் எழுதி இருக்கோம்ல …

  நேரம் இருந்தா வந்தா பாருங்க ..

  http://manvettiyan.blogspot.com/2008/06/2.html

 18. […] இவரு மிகுந்த முயற்சியுடனும் ஈடுபாடுடனும் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லுரார்.கமல் கேரள எல்லைத்தமிழை மிகச் சிறப்பாக உச்சரித்தற்காக கன்னியாகுமரி மக்களின் சார்பில் அவருக்கு ஒரு சான்றிதழை வழங்குகிறேன் என்று சொல்லுராரு. http://cyrilalex.com/?p=438 […]

 19. நீங்களும் பாத்தாச்சா… நானுந்தான். ஹி ஹி

  http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

  நீங்க சொன்னாப்புல மாறாம நடிக்க மாட்டாரோன்னு பயம் வருது. நானும் அதைக் கோடிகாட்டீருக்கேன்.

  மத்தபடி படம் கண்டிப்பா பாக்கனும். I agree with you.

 20. ஜினியஸ் சொல்கிறார்:

  மாங்கு மாங்கென்று படிக்காமல் ஒருதரம் நல்ல “மார்க்ஸ்” எடுத்தால் அது “புளூக்” ஆனா ஒவ்வொரு தரமும் எடுத்தா அவன் “ஜினியஸ்” புரிஞ்சுதா மக்களே

 21. parthiban சொல்கிறார்:

  I want Dhasavatharam feedbacks

 22. parthiban சொல்கிறார்:

  Website yeppadi open seiya yentru idea kodungal.
  sarva soukiam undagattum.

  Nantri!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 23. parthiban சொல்கிறார்:

  thamil keypad pattium idea thevai

 24. raghunathan சொல்கிறார்:

  //மாங்கு மாங்கென்று படிக்காமலே//…..
  பழைய கதை. பள்ளிப்பருவத்தில் தீவிர சிவாஜி ரசிகர்களாய் ஒரு பொங்கல் ரிலீசாய் “எங்க மாமா” வுக்கு அத்தனை எதிர்பார்ப்பு. அத்தனை பில்ட் அப். முதல் ஷோ பார்த்து சிவாஜி அண்ணனின் ஒவ்வொரு நரம்பும் நடிப்பதை வியந்து….அடடா. அத்தனை கித்தாய்ப்பும் இரண்டு நாளில் புஸ்….. அடுத்த ஏரியாவில் ரிலீஸ் எம்ஜியார் அண்ணனின் “மாட்டுக்கார வேலன்”. வெகுஜனப்பார்வையில் வேலன் மடமடவென ஓடி ரேசில் முதல் வந்தான். பெரிய அறிவுஜீவிப்போர்வைகள் எதுவும் இல்லாமல் வெறும் சுவையோ சுவை அவ்வளவுதான். திரு வேறு தெள்ளியராவது வேறு போல், திறமை வேறு, ஜனங்களின் இதயத்தில், உணர்வில் சிம்மாசனமிட்டு அமர்வது வேறு. இரண்டுக்குமான வெள்ளாமை என்ன என்பதை சிவாஜி, எம்ஜியார் இவர்கள் பொது வாழ்வில் அடைந்த வெற்றி, தோல்விகள் மூலம் காலம் காட்டியது.

 25. :-)
  //அசினுக்கு இரு குறிப்பிடத் தகுந்த வேடங்கள்//
  அசின் தேவையே இல்லை என நினைக்கிறேன். :-)

  இதையும் கொஞ்சம் பாருங்க: http://manathinoosai.blogspot.com/2008/06/blog-post.html

  //இப்படி மாங்கு மாங்கென்று படிக்காமலே ‘சூப்பர்’ மார்க் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்//

  இதனை தவிர்த்து இருக்கலாம்.. தேவையே இல்லாத வரிகள். இகழ்ச்சியாக சொல்லவில்லை என நம்புகிறேன்.. ஆனால் படிப்பவர்களுக்கு அது வஞ்சப்புகழ்ச்சியாக்கவே இருக்கிறது. தேவை இல்லாத விவாதங்களை ஆரம்பித்து வைக்கிறது.

 26. vijay சொல்கிறார்:

  ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

  “கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
  போராளியின் வெற்றிப்பேரிகை”

  http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

  அன்புடன்,
  விஜய்
  கோவை

 27. not a kamal veriyan சொல்கிறார்:

  //தலை,
  உண்மையிலேயே நீங்க தசாவதாரம் பார்த்திட்டு தான் விமர்ச்சனம் எழுதீநீங்களா ?
  தசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும்
  தலைவா, நம்மளும் ஒரு விமர்ச்சனம் எழுதி இருக்கோம்ல …
  நேரம் இருந்தா வந்தா பாருங்க ..//

  yes unnai seruppaala adikkanum, irrespective of U seein that film..

 28. vijay சொல்கிறார்:

  தமிழ் வலைப் பதிவுலக

  சான்றோர்களுக்கும்,
  பெரியோர்களுக்கும்,
  அறிஞர்களுக்கும்,
  சகோதரர்களுக்கும்,
  சகோதரிகளுக்கும்,
  நண்பர்களுக்கும்,
  தோழர்களுக்கு,
  தோழியர்களுக்கும்

  என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

  புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

  டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

  எனது அன்பு அழைப்பை ஏற்று
  வருகை புரிந்து
  வாழ்த்துரை வழங்கியும்,
  மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
  பேருதவி புரிந்திட்ட

  அன்புகளுமிய அன்பர்கள்

  திருநெல்வேலி கார்த்திக்
  அதிஷா
  VSK
  dondu(#11168674346665545885)
  லக்கிலுக்
  ajay
  துளசி கோபால்
  உண்மைத் தமிழன்(15270788164745573644
  VIKNESHWARAN
  சின்ன அம்மிணி
  VIKNESHWARAN
  ஜமாலன்
  உறையூர்காரன்
  மதுரையம்பதி
  கிரி
  ambi
  ஜீவி
  வடுவூர் குமார்
  செந்தில்
  SP.VR. SUBBIAH
  தமிழரசன்
  cheena (சீனா)
  சிறில் அலெக்ஸ்
  வால்பையன்
  வெட்டிப்பயல்
  பினாத்தல் சுரேஷ்
  இலவசக்கொத்தனார்
  அகரம்.அமுதா
  குசும்பன்
  கயல்விழி முத்துலெட்சுமி
  சென்ஷி
  தருமி
  தமிழன்
  செந்தில்
  மனதின் ஓசை
  கானா பிரபா
  Kailashi
  மாதங்கி
  முகவை மைந்தன்

  அனைவருக்கும்
  நெஞ்சுநிறை
  நன்றிகள்
  கோடான கோடி

  என்றும் உங்கள்
  விஜய்
  கோவை.

  http://pugaippezhai.blogspot.com

 29. ஸ்ரீ சொல்கிறார்:

  நல்ல ஒரு அலசல் சிறில். வாழ்த்துக்கள். கமலால் உருமாறாமலும், அதிகம் கஷ்டப்படாமல் ‘சூப்பர்’ மார்க் வாங்கி வர்த்தகரீதியாகவும் ஜெயிக்க முடியும் என அவ்வப்போது “வேட்டையாடு விளையாடு” போன்ற படங்கள் மூலமாக உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறார்.

 30. ashok சொல்கிறார்:

  hey i saw this movie,,
  have to approeciate the characters fletcher and naidu..watta accent, body language, mannerisms..kamal rocks..even the jap character, he has done to excellence..the way he walks everything..he is ultimate..

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்