எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். :)

தசாவதாரம் – II
இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. பல உரையாடல்களையும் கவனிக்க முடிகிறது. முதன்முறை பார்க்கும்போது படத்தின் வேகத்தில் பல நல்ல வசனங்களையும், சிறப்பாய் எடுக்கப்பட்டிருக்கும் சாதாரணக் காட்சிகளையும் உணர முடிகிறது முடியவில்லை. பல இடங்களில் சில மணித்துளிகளே வந்து செல்லும் காட்சிகளும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன. படம் செல்லும் வேகத்தில் இவற்றை கவனிக்க மறந்துவிடுகிறோம். இந்திய சினிமாவைப் பொருத்தமட்டில் செட் ஒன்றைப் போட்டு படம் எடுப்பது எளிது அதே நேரம் மிகச் சாதாரணமாக மக்கள் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதுபோல ஒரு காட்சியை அமைப்பது மிகச் சிரமம். அதை உணர்ந்துகொண்டால் படத்தின் பல காட்சிகளையும் இன்னும் சிறப்பாக இரசிக்கலாம்.

படத்தில் உலகத்தரம் இல்லை என்பவர்கள் இந்தப் படம் உருவாக்கப்பட்ட விபரங்களைத் தெரிந்துகொள்ளவும் வேண்டும். Production வேலைகள் உலகத் தரத்தில் நடைபெற்றாலொழிய இப்படி ஒரு படத்தை தர இயலாது. மேக் அப் சில இடங்களில் உறுத்துகிறது என்பது ஏற்கத்தக்கதே.

இந்த முறை ஒன்றை கவனித்தேன் காட்சிகளில் தத்ரூபமாக கோர்கப்பட்டிருக்கும் சிறப்பு ஒலிச் சேர்க்கை. இரயில்வே நிலையத்தில் வழுக்கிச் செல்லும் பைக்கின் ஓசை பல்லைக் கூசச் செய்யும் கிரீரீச், இரும்பு கேட்டைப் பிடித்துத் தாவுகையில் எழும் சப்தம், வலையில் விழுந்த சிலையை எடுக்க நினைக்கையில் எழும் சத்தம். மிகச் சிறப்பாக இவற்றை செய்துள்ளார்கள்.

என்னுடைய முந்தைய தசாவதாரம் பதிவில் டைரக்டருக்கு ஷாட் வைப்பதுதான் வேலை எனச் சொல்லியிருந்தேன் அது எத்தனை பெரிய விஷயமாயிருந்திருக்கும் என இப்போது உணர முடிகிறது.

தசாவதாரம். கட்டாயம் இரண்டாம் முறை பாருங்கள். புதிதாய் வேறொரு படம் பார்ப்பதைப் போன்ற அனுபவம் கிடைத்தது.

இரு மரணங்கள்
எனக்குப் பிடித்த இரு அமெரிக்கர்கள் அடுத்தடுத்து மரணித்துள்ளனர். ஒருவர் அமெரிக்க ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான Tim Russert இன்னொருவர் கலகக்கார காமெடியன் George Carlin.

டிம் ரசட் மிகச் சாதாரணமான குடும்பப்பின்னணியிலிருந்து கஷ்டப்பட்டு படித்து அமெரிக்க ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் மதித்த ஒரு நேர்மையான, நடுநிலையான செய்தி, அரசியல் விமர்சகராகத் திகழ்ந்தார். டிம்மின் தந்தை ஒரு துப்புரவுத் தொழிலாளியாக இருந்தார். ஒரு கோடை விடுமுறையின்போது டிம்மும் குப்பை வண்டியில் சென்று குப்பை சேகரிக்கும் வேலையை செய்தாராம். கல்லூரி நாட்களில் படிப்பை விட்டுவிட சோதனைகள் வரும்போதெல்லாம் அந்த கடினமான நாட்களை நினைத்து மனதை மாற்றிக்கொள்வாராம்.

NBC தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் நடைபெறும் Meet the press எனும் நிகழ்ச்சியை நடத்திவந்தார். தீவிர தகவல் சேகரிப்புக்குப் பின்னரே அவரின் செவ்விகள் நடத்தப்படும். எதிரில் பேட்டி தருபவரின் பின்னணி குறித்தும் அவர் பேசப்படும் விதயம் குறித்து முன்பு என்னவெல்லாம் சொல்லியுள்ளார் செய்துள்ளார் என்பவை குறித்தும் தகவல்களை எடுத்துவைத்த பின்னரே கேள்விகளை கேட்பார் டிம்.

2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் ஜார்ஜ் புஷ் இழுபறித் தேர்தலின் போது ஒரு சாதாரண, கையடக்க வெள்ளைப் பலகையில் மார்க்கரைக் கொண்டு Florida Florida Florida என அவர் எழுதியது மிகவும் புகழ்பெற்ற ஊடக நிகழ்வாகும்.

George Carlin ஒரு அசாத்திய காமெடியன். மனித வாழ்வினை அபத்தக் குவியலாகப் பார்த்தவர். “When you’re born you get a ticket to the ‘freak show’. When you’re born in America, you get a front row seat.”நுண்ணிய அவதானிப்பகளின்மூலம் அவற்றை வெளிப்படுத்தியவர். அவற்றை அவர் சொல்லும்போது சிரிப்பு வருகிறது. ஒரு தத்துவ ஞானி சொன்னால் கூடவே சிந்தனையும் வரும். “Have you ever noticed that anybody driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac?”
கார்லினுக்கு எதுவுமே புனிதமல்ல. வன்புணர்தலைக் கூட நகைச்சுவையாக்கியவர். கடவுளை, மதங்களை இவரைப்போல பகடி செய்தவர்களைக் காண்பதரிது. இத்தகைய புனிதங்களை உடைத்தெறியும் காமெடி வகையை உருவாக்கியவரே இவர்தான் எனச் சொல்லலாம்.

வார்த்தை விளையாட்டாகட்டும் – Atheism is a non-prophet organization. – தத்துவப் பார்வைகொண்டு வாழ்வின் அபத்தங்களைக் கூறுவதாகட்டும் – I was thinking about how people seem to read the Bible a whole lot more as they get older; then it dawned on me – they’re cramming for their final exam. – சாதாரண ஜோக்குகளாகட்டும்- I went to a bookstore and asked the saleswoman, “Where’s the self-help section?” She said if she told me, it would defeat the purpose. -ஜார்ஜ் கார்லினால் எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது. அவர் பேச்சில் தென்படும் Fuckகளையும் Shitகளையும் நீக்கினால் எல்லாமே சிறந்த Quoteகளாக அமைந்துவிடும்.

உங்கள் பார்வைக்கு சில.
“I’m always relieved when someone is delivering a eulogy and I realize I’m listening to it. ”
“If God had intended us not to masturbate he would’ve made our arms shorter.”
“Fighting for peace is like screwing for virginity.”
“Inside every cynical person, there is a disappointed idealist.”
“Just cause you got the monkey off your back doesn’t mean the circus has left town.”
“People who say they don’t care what people think are usually desperate to have people think they don’t care what people think.”
“The main reason Santa is so jolly is because he knows where all the bad girls live.”
“The other night I ate at a real nice family restaurant. Every table had an argument going.”
“The reason I talk to myself is that I’m the only one whose answers I accept. ”

மேலும்- http://www.brainyquote.com/quotes/authors/g/george_carlin.html
George Carlin – Religion is bullshit.

Carlin வீடியோக்கள்

Rim Russert குறித்த Time கட்டுரைகள்
Tim from Youtube

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008”

 1. chinnappaiyan சொல்கிறார்:

  //இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில்//

  அவ்வ்வ்வ்.. நான் ஒரு தடவைகூட பாக்கமுடியாம இருக்கேன்… அனா, செலவு மட்டும் ஆயிடுச்சு… இங்கே பாருங்க: http://boochandi.blogspot.com/2008/06/blog-post_22.html

 2. chinnappaiyan சொல்கிறார்:

  கார்லின் பற்றிய செய்திக்கு நன்றி… பல Quoteகளை – இவருதுதான்னு தெரியாமல் – ஏற்கனவே கேட்டிருக்கேன்…

 3. chinnappaiyan சொல்கிறார்:

  எடுத்தேன் கொடுத்தேன் – நல்லாயிருக்கு… எடுத்தேன் கவிழ்த்தேன்னு இல்லாமே யோசிச்சி எழுதியிருக்கீங்க…. அவ்வ்வ்வ்வ்…..

 4. நன்றி சின்னப்பையன்.

  George Carlin – Rape can be Funny
  http://youtube.com/watch?v=3av_qRR_DWc&feature=related

 5. Seven words –

 6. the video is awesome :-))))))) thnx for introducing him Cyril

 7. வெயிலான் சொல்கிறார்:

  எடுத்’தேன்’ கொடுத்’தேன்’
  படித்’தேன்’ ரசித்’தேன்’

 8. George Carlin on Ten commandments

 9. வெண்பூ சொல்கிறார்:

  // மொத்த செலவு $200 க்கருகில் //

  தசாவதாரம் வசூல்ராஜான்றத ஒத்துக்கத்தான் வேண்டியிருக்கு.. பின்ன ஒருத்தரே 8600 ரூபா செலவு பண்ணா…

 10. வெண்பூ,
  அதில் கொஞ்சம் மெக்டானல்ட்ஸுக்கும், பாப்கார்னுக்கும், பெட்ரோலுக்கும் கொடுத்தது. இங்கே ஒரு டிக்கட் விலை $15 இதுவரை 9 டிக்கெட்டுகள் வாங்கியுள்ளேன்.

 11. நன்றி யாத்ரீகன். இன்னும் நிறைய இருக்குது. பாருங்க.

 12. chinnappaiyan சொல்கிறார்:

  வீடியோக்களை இப்போதுதான் பார்த்தேன். Top Class… அருமையோ அருமை… சரியான நக்கல் பார்ட்டிதான்…

 13. தசாவதாரம் படத்தை குருவி பார்ட் 2 என்று எழுதிய எழுத்தாளர் பா.ராகவனும், படம் கோயிந்தா, கோயிந்தா என்று எழுதிய பதிவர் பத்ரியும் கூட இரண்டாவது முறை பார்த்திருக்கிறார்களாம் :)

 14. :)

 15. வாசித் தேன் ரசித் தேன்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்