- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

அறிவியல் சிறுகதைப் போட்டி

Posted By சிறில் அலெக்ஸ் On June 26, 2008 @ 9:44 pm In தேன்,பதிவர்வட்டம்,போட்டி,வலைப்பதிவுகள்,அறிவிப்பு,அறிவுப்பு | Comments Disabled

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்வேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இசங்களைப் பேசிக்கொண்டிருப்போம் இசங்கள் கூடாதென்பதற்காக அல்ல இசங்கள் கூடியிருக்க வேண்டுமென்பதற்காகத்தான்.

உனக்கேன் இந்த அக்கறை பதிவுலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். மொக்கை பதிவுகளால் பாதிக்கப்பட்டேன் (இதில் என் மொக்கைகளும் அடக்கம்). சுயநலம் என்பீர்கள்…. சரி போதும் இந்த மொக்கை. உடன்பிறப்புக்கள் கல்லெறியும் முன்பு நிறுத்திடுறேன்.

Competetionஅறிவியல் சிறுகதைப் போட்டி.

கமல் கேயாஸ் தியரி, வண்ணத்துப் பூச்சி விளைவு எல்லாம் வச்சி படமே எடுத்திருக்கார். இதுபோன்ற அறிவியல் அடிப்படைகளைக் கொண்ட புனைவுகளில் புகுந்து ஆடுங்க.

வழக்கமான ஏலியன் கதைகள் மட்டுமில்லாமல் உயிரியல், நுண்ணுயிரியல், உணவுத் தட்டுப்பாடு, பூமி மாசுபடுதல், சுற்றுச் சூழல், க்வாண்டம் இயற்பியல், நேனோ நுட்பம், இயற்கை, மொழி வளர்ச்சி இப்படி பல துறைகளிலும் அகத்தூண்டல்  பெற்று படையுங்கள்.

கடைசி நாள் ஜூலை 31 2008.

போட்டிக்கான படைப்புக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். போட்டி அறிவிப்புக்கு விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. படத்தை பக்கப் பட்டையில் போடலாம்.

இறுதியில் வெற்றி பெறும் மூன்று கதைகளுக்கு புத்தகம் பரிசு தரப்படும்.

வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க எழுத்தாளர் ஜெயமோகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

திரண்டு வாரீர்! திறந்து தாரீர்! (அறிவியல் புனைகதைகளை).

Popularity: 44% [? [1]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=440

URLs in this post:

[1] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest