பாலபாரதி குறித்த தீர்க்கதரிசனம்!!!

“இப்படியெல்லாம் அடங்காபிடாரித்தனமா கேள்வி கேட்கற பெண்ணியவாதியா நீ? இரு இரு உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்றங்கன்னு பார்க்கறேன். அப்படி எதுனா இளிச்சவாயன் வந்து கட்டினாலும் அவன் உன்கிட்ட ரொம்ப அவஸ்தைப்படறான்னு எதுனா ஒரு தண்ணி பார்ட்டியில உளறுவான்.”

இதை எழுதியது வேற யாரும் இல்லீங்க. நம்ம தல பாலபாரதியின் துணைவியார்தான்.

பதிவர்கள் இருவர் இல்வாழ்வில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் (பலருக்கும்) நம்பிக்கையயும் அளிக்கிறது. பாலாவின் பதிவில் இனி ஒரு பின்னூட்டமாவது விழும். அம்மணி பதிவில் பல பின்னூட்டங்கள் விழ வாய்ப்புண்டு. (எல்லாம் பாலாவே பல பெயர்களில் போடுவதுதான்). ஆனாலும் திட்டி இடப்படும் அனானி பின்னூட்டங்களை இவர் போட்டிருப்பாரோ எனும் சந்தேகம் பதிவர்களின் குடும்ப வாழ்கைக்கு ஆகாது எனும் அறிவுரையை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

திரட்டிகளும் பதிவுகளும்போல, பதிவுகளும் பின்னூட்டங்களும்போல, மொக்கைகளும் ஸ்மைலிகளும்போல இணைபிரியாமல் வாழ வாழ்த்துகிறேன்.

Popularity: 12% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “பாலபாரதி குறித்த தீர்க்கதரிசனம்!!!”

 1. Balaji சொல்கிறார்:

  :) :D

 2. அத்தனையும் உண்மை:). தம்பதிகள் மனமொத்து வாழ வாழ்த்துகள்.

 3. Narain சொல்கிறார்:

  :)

 4. விரைவில் இதே போல இன்னொரு அறிவிப்பும் வரும் எதிர்ப்பார்க்கவும்.

 5. இன்னோரு அறிவிப்பா???? யாரு யாரு:0)
  சொல்லுங்க மஞ்சூராரெ.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்