அள்ளித் தந்த பூமி

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் பாடலை கேட்டது. அதற்கப்புறம் இப்போ musicindiaonline.com தளத்தில் கேட்டேன். மலேசியா வாசுதேவனின் குரல் இவ்வளவு மென்மையாய் சில பாடல்களில்தான் கேட்கமுடிகிறது.

அற்புதமான எளிய வரிகள், அமைதியான, நினைவுகளை மலரச்செய்யும் மெட்டு. ‘அதெல்லாம் ஒரு காலம்’ என நம்மை பெருமூச்சுவிடச் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று.


அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் – இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் இலாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

காவல் செய்த கோட்டை(யே) கானாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிரியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியுமில்லை.

கேட்டுப்பாருங்கள்…

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “அள்ளித் தந்த பூமி”

 1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சோதனை…

  சோதனை மேல் சோதனை

 2. G.Ragavan சொல்கிறார்:

  சிறில் மிகவும் அருமையான பாடல். நண்டு படத்தில். எனக்குப் பிடித்த இயக்குனர் மகேந்திரன் படமானாலும் படம் கடி. இதே படத்தில் ஹெய்சே கஹூன் குச் கெஹ்னான்னு ஒரு பாட்டும் உண்டு. நல்லாயிருக்கும். (இந்தி வரிகள் தப்பாயிருந்தா கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணிக்கோங்க)

 3. barathee|பாரதி சொல்கிறார்:

  மற(று)க்க முடியாத பாடல். காலத்தை வென்றது.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  உண்மை, பாரதி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்