அறிபுனை போட்டி முடிவுகள்

முதலில். தாமதத்திற்கு (மிக X மிக X மிக) வருந்துகிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகனின் மடல் கீழே. பரிசு அனுப்ப வேண்டிய முகவரியை மின்னஞ்சல் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புள்ள சிறில்
நான் மூன்று அளவுகோல்களைக் கைக்கொண்டேன். ஒன்று , கதைகளை வாசித்தபின் கொஞ்சநாள் கழித்து அது நினைவில் நிற்கிறதா என்பது. இரண்டு, கதைகளின் கரு வழக்கமான அறிவியல்கதைக்கருகக்ளான உலக அழிவு, அறிவியல்கண்டுபிடிப்பு தவறாகப்போவது போன்றவற்றில் இருந்து சற்றேனும் வேறுபடுகிறதா என்பது. மூன்று, என்னால நம்பவே முடியலை போன்ற தேய்வழக்குகள் இல்லாமலிருக்கிறதா என்பது.

அறிவியல்கதை என்பது வியப்பு, மர்மம் ஆகிய உணர்வுகளை மட்டும் கொண்டதாக இருக்கலாகாது என்பது என் எண்ணம். அறிவியலின் செய்திகளைக் குறியீடுகளாக ஆக்கி நாம் இன்றைய நமது வாழ்க்கையை பரிசீலனைசெய்ய முடியும்.மரணம், காலம், உறவுகள் சார்ந்த தத்துவார்த்தமான அடிபப்டைக்கேள்விகளை விசாரணைசெய்ய முடியும். அத்தகைய அறிவியல் கதைகள் தமிழில் மிகக்குறைவே.

இக்கதைகளை என் நோக்கில் வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

1. இது உங்கள் கதை
2. ரஸவாதம்
3. நவீனன்

ஜெயமோகன்

Popularity: 13% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....21 மறுமொழிகள் to “அறிபுனை போட்டி முடிவுகள்”

 1. வெண்பூ சொல்கிறார்:

  வெற்றி பெற்ற மூவருக்கும் (சிறிது பொறாமை கலந்த:)) வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

 2. சேவியர் சொல்கிறார்:

  வாவ் !!!! மெத்த மகிழ்ச்சி… இன்னும் நம்ப முடியவில்லை :)

 3. யோசிப்பவர் சொல்கிறார்:

  Sorry Cyril,
  I really felt BAD about this result!!!

 4. அன்பு சிறில்…

  மிக்க நன்றிகள் அறிவியல் பின்னணியில் போட்டி நடத்தியதற்கு! நன்றிகள் தேர்வு செய்த எழுத்தாளர் ஜெ அவர்களுக்கு! நன்றிகள், கலந்து கொண்டு பொறுமையாக இருந்த நம் மக்களுக்கு..!

 5. Sridhar Narayanan சொல்கிறார்:

  சிறில்,

  நல்லதொரு போட்டி நடத்தி கொடுத்தற்கு மிக்க நன்றி.

  ஜெயமோகன் போன்ற தேர்ந்த எழுத்தாளர்களைக் கொண்டு மிக அருமையாக நடத்தியிருக்கிறீர்கள்.

  என்னுடைய படைப்பை அங்கீகரித்ததற்கு மிக்க நன்றி. இதுதான் எனக்கு முதலும் முக்கியமுமான அங்கீகாரம்.

  அத்தனை படைப்புகளையும் வாசித்து அதனை வரிசைபடுத்தியதற்கு ஜெயமோகனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

  வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் வசந்த்குமார் மற்றும் சேவியருக்கு வாழ்த்துகள் பல :-)

  முக்கியமாக இந்த அறிபுனைக்கு இத்தனை வரவேற்பு கொடுத்து பல படைப்புகள் பகிர்ந்திட்ட சக பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகள் பல.

 6. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

 7. Sridhar Narayanan சொல்கிறார்:

  உங்களை எந்த மின்னஞ்சலில் தொடர்புகொள்வது?

 8. மிகப் பொருத்தமான கதைகளுக்கே பரிசு கிடைத்திருக்கிறது. ரசித்து ருசித்த கதைகள் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

  இத்தனை கதைகளையும் படித்து நல்லதொரு திறனாய்வு செய்து முடிவு சொன்ன ஜெயமோகனுக்கு நன்றி பல.

  எழுதுவதற்குப் பலரையும் தூண்டிச் சிறப்பான பல கதைகளைப் படிக்கத் தந்தமைக்கு சிறில் அலெக்ஸ்க்கும் நன்றி பல. சிறப்பு வாழ்த்துகள்.

 9. ILA சொல்கிறார்:

  வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

 10. chinnappaiyan சொல்கிறார்:

  வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

 11. வெற்றிக் கனியைத் தட்டிச் சென்ற
  வசந்தகுமார்
  ஸ்ரீதர் அண்ணாச்சி
  சேவியர்
  மூவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  பல பதிவர்களின் அறிவியல் முகங்களை அரங்கில் அறியத் தூண்டுகோலானது சிறில் அண்ணாச்சியின் முயற்சி!
  இது போன்ற பதிவுலக முயற்சிகள் தொடரணும் என்பதே என் ஆசை!

  @ஜெயமோகன்:
  //அறிவியல்கதை என்பது வியப்பு, மர்மம் ஆகிய உணர்வுகளை மட்டும் கொண்டதாக இருக்கலாகாது என்பது என் எண்ணம்.//

  அருமையான உள்ளடக்கச் சிந்தனை.

  //அறிவியலின் செய்திகளைக் குறியீடுகளாக ஆக்கி நாம் இன்றைய நமது வாழ்க்கையை பரிசீலனைசெய்ய முடியும்//

  மிகவும் உண்மை! இப்படிச் செய்யச் செய்ய, பல அக மேம்பாடுகள் கிட்டும்.
  சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
  நன்றின் பால் உய்ப்பது அறிவு(இயல்).

  //மரணம், காலம், உறவுகள் சார்ந்த தத்துவார்த்தமான அடிபப்டைக்கேள்விகளை விசாரணைசெய்ய முடியும்//

  சூப்பர்! ஆன்மிக அறிவியல்-ன்னா இது தான்! :)

 12. பரிசு பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்.

  //ஒன்று , கதைகளை வாசித்தபின் கொஞ்சநாள் கழித்து அது நினைவில் நிற்கிறதா என்பது. இரண்டு, கதைகளின் கரு வழக்கமான அறிவியல்கதைக்கருகக்ளான உலக அழிவு, அறிவியல்கண்டுபிடிப்பு தவறாகப்போவது போன்றவற்றில் இருந்து சற்றேனும் வேறுபடுகிறதா என்பது.// இதுல, ஒன்றாவது அளவுகோல், இருக்கறதைத் தான் அளக்கப் போவுது; அளப்பவர் பற்றியது; பொதுவில் கதைப் போட்டிகளுக்கான அளவுகோலும் அதுவே. இரண்டாவது அளவுகோல் பத்திச் சொல்லியிருந்திருக்கலாம்:-( (மீசை இல்லை. மண் ஒட்டலை).

 13. Durai சொல்கிறார்:

  super congratulations everyone

 14. Josh Alexander சொல்கிறார்:

  பரிசு பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 15. Josh Alexander சொல்கிறார்:

  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அவர்கள் கால யந்திரத்தில் வந்துதான் வாங்க வேண்டுமா?

 16. Boopathi சொல்கிறார்:

  Vasanth…Congrats…

 17. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  – சத்யராஜ்குமார்.

 18. அன்பு மக்களே…

  இங்கு வந்து காண்பீர் எவராயினும், இப்பதிவுக்குச் சென்று தங்களது கருத்துக்களையும் பதிவிட்டுச் செல்லுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

  க்ளிக்குங்கள்.

  நன்றி.

  பின்குறிப்பு :: அன்பு யோசிப்பவர், மன்னிக்கவும். நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்த விரும்பாவிட்டாலும், நானும் இதில் கொஞ்சம் தொடர்புற்றிருப்பதால், மக்களின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மீண்டும் மன்னிக்க!

 19. Eugene சொல்கிறார்:

  Nice article. Thanks. :) Eugene

 20. Osai Chella சொல்கிறார்:

  Wneth through the results and really got disappointed by the selection! Cant you get a better person with scientific thinking to Choose the best?! Dear syril I wrote the above lines with so much of confidence cause i know the genre of writing and its style of themes from the days of Clarke to the contemporary writers. The first prize is a blunder! So better luck next time!

 21. செந்தழல் ரவி சொல்கிறார்:

  சிரில்…

  சிரில்…

  கதைகள் மூன்றும் படித்தேன்…

  ஜெயமோகன் சாருக்கு அனுப்புறதுக்கு முன்னாடி அறிவியல் புனைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கலாமே ?

  அறிவியல் புனைக்கதைக்கு எந்த இலக்கணமும் இல்லாத கதைக்கு எப்படி முதல் பரிசு ?

  போங்க இது சுத்த போங்கு ஆட்டம்…!!!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்