வெற்றியின் குரல்-2

வெற்றியின் குரல்-1

ஒபாமா அடுத்த கட்டத்திற்கு நகரத் தயாரானர். அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியாக போட்டியிட்டார். படுதோல்வி அடைந்தார். தன் அரசியல் பயணம் ஒரு மகாணத்திற்குள்ளாக சுருங்கி விடும் அபாயத்தை உணர்ந்தார். மேலும் சில காலம் ஏற்கனவே இருந்த மகாண பதவியில் நீடித்திருந்தார், இடையே சிகாகோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிற்றுவித்தார். தோல்வியின் வடுக்கள் மறைந்து கொண்டிருந்தன.
2001 செப்டம்பர் மாதம் ஊடகவியலாளர் ஒருவருடன் பராக் ஹுசைன் ஒபாமா உணவருந்தச் சென்றார். அப்போது அந்த நண்பர் “அரசியல் இயங்கியல்கள் மாறிவிட்டன என்பதை உணர்ந்திருக்கிறாயா?” எனக் கேட்டார். ஒபாமா அதன் அர்தத்தை புரிந்து கொண்ட போதும் “எதைச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார். இருவர் பார்வையும் அங்கிருந்த பத்திரிகையின் மீது விழுந்தது. அதன் முகப்பில் ஒசாமா பின் லாடனின் படம். அரசியல் வாழ்கையின் முடிவை அடைந்து விட்டதாக உணரச் செய்தது அந்த நிகழ்வு. பராக் ஹுசைன் ஒபாமா எனப் பெயர் கொண்ட ஒரு கறுப்பர் தேர்தலில் வெல்வதன் அசாத்தியங்கள் அவரை ஆட்கொண்டன. தன் திறமைகள் இட்டுச் செல்லும் உச்சங்களைத் தொட்டு தன்னை தயார் செய்து கொண்ட ஒரு விளையாட்டு வீரனோ அல்லது நடிகனோ தான் இனிமேல் எதையும் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்தால் எப்படி ஆவானோ அப்படி உடைந்து போனதாக ஒபாமா அந்த நிகழ்வை குறிப்பிடுகிறார். உலக வர்த்தக மையங்கள் இடிக்கப்பட்ட பின் அமெரிக்க சமூக சிந்தனைகளில் வெளிப்படையாகவே தெரிந்த மாற்றங்களின் பின்னணியுடன் ஒபாமாவின் அதிபர் தேர்தல் வெற்றியை அலசினல் அதன் பிரம்மாண்டத்தையும் அசாத்தியத்தையும் முழுமையாக உணரலாம்.
அடுத்த செனெட்டர் தேர்தலில் இதுவே கடைசி முயற்சி’ என தன் மனைவிக்கு வாக்களித்துவிட்டு போட்டியிட்டார். மீண்டும் மக்களைத் தேடிப் பயணித்தார். பல நேரங்களில் தனியாகவே. சில கூட்டங்களில் இருவர் இருந்தனர் சில கூட்டங்களில் ஐம்பதுபேர். தான் ஏன் அரசியலில் இருக்கிறோம் என்பதை இந்த சந்திப்புக்கள் உணர்த்தியதாகக் குறிப்பிடுகிறார் ஒபாமா. நிறம், இனம், வகுப்புவாதம் தாண்டி எல்லா மக்களின் கனவுகளும் வேண்டுதல்களும் ஒன்றாகவே இருந்தன. தங்கள் நன்நிலைக்கு தாங்களே உத்தரவாதம் என்பதை உணர்ந்தவர்களாக, அரசாங்கம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யாது என்றும் ஆனல் தன் பங்களிப்பை மாற்றியமைப்பதன் மூலம் பல முன்னேற்றங்களை உருவாக்க அரசால் இயலும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாக அமெரிக்க மக்களை அவர் கண்டுகொண்டார். இந்த அனுபவங்களிலும் தெளிவுகளிலும் இருந்தும் அவரது அரசியல் வாழ்க்கை தன் வசதிக்காக மக்களை பிரித்துப் பார்ப்பதில் அல்லாமல் அவர்களை ஒன்று சேர்ப்பதிலேயே பரிமளிக்கும் என்பதை உணர்ந்தார். 2004ல் டெமெக்ராட்டிக் கட்சியின் தேசிய மாநாட்டில் முக்கிய பேச்சாளராக தேசிய அரங்குக்கு அறிமுகம் செய்யப்பட்டார். “இடது சாரி அமெரிக்காவென்றும் வலதுசாரி அமெரிக்காவென்றும் இல்லை ஒன்றுபட்ட அமெரிக்கா மட்டுமே உண்டு (மய்ண்ற்ங்க் ள்ற்ஹற்ங்ள் ர்ச் அம்ங்ழ்ண்ஹ) எனப் பேசினர். ஒபாமாவின் அரசியல் பயணம் தேசிய நெடுஞ்சாலைக்குள் இறங்கியது. செனட்டர் தேர்தலில் 70% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பிப்ரவரி 10, 2007ல் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பராக் ஒபாமா அறிவித்தார். அமெரிக்க தேசயத்தை மீட்டெடுத்த ஆபிரகாம் லிங்கன் தன் பெயர்போன உரை ஒன்றை ஆற்றிய மேடையின் மீது நின்று தன்னை ஒற்றுமையின் தூதுவனக, மாற்றத்தின் முகமாக உருவகித்துப் பேசினர் ஒபாமா. இந்த அறிவிப்பின் பின்னணியில் அவர் எழுதிய இரு புத்தகங்களின் வெற்றியும், டெமெக்ராட்டிக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்கு கிடைத்த வரவேற்பும் இருந்தன.
களப்பணி என நம்மிடம் தேர்தல் கலைச் சொல் ஒன்று உள்ளது. எழ்ர்ன்ய்க் எஹம்ங் என அமெரிக்கத் தேர்தலில் அதை குறிக்கிறார்கள். ஒபாமா தன் சமூக சேவக நாட்களிலிருந்து மக்களை சிறு குழுக்களாக ஒருங்கிணைப்பதிலிருந்த வசதியையும், பயனையும் உணர்ந்திருந்தார். மறைந்து விட்ட ஒரு தேர்தல் யுக்தியாகவே அது இருந்து வந்தது. ஹில்லரி கிளிண்டன், எட்வர்ட்ஸ் போன்ற டெமெக்ராட்ஸ் கட்சி பிரபலங்களுடனன உட்கட்சி போட்டியில் களப்பணியின் வலிமையாலேயே ஒபாமா வென்றார். இளைஞர்கள் நூற்றுக்கணக்கான பேர் ஒபாமாவின் புதிய அரசியல் கொள்கைகளால், மொழியால் ஈர்க்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
ஐயோவா மகாணத்தில் அப்படி ஒரு இளைஞனைக் குறித்து டைம் பத்திரிகை பங்களிப்பாளரும் அரசியல் பண்டிதருமான ஜோ க்ளெய்ன் குறிப்பிடுகிறார். பில் எனும் சிறுதொழிலதிபர் ஒருவரோடு உரையாடுகிறார் ஜோ க்ளெய்ன். பில் யாருக்கு வாக்களிக்கப் போகிறார் என முடிவு செய்திருக்கவில்லை “ஆனல் ஒபாமா இங்கே அனுப்பியிருக்கும் இளைஞன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.” என்கிறார் பில் “அவன் எங்கள் பகுதியில் ஒருவனகிவிட்டான். அவன் பெயர் நேட் ஹண்ட்”. பில் பேசிக் கொண்டிருக்கையிலேயே பலரும் அவர்களைச் சூழ்ந்து நேட் ஹண்ட் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கள் பகுதியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஹண்ட் ஆர்வமுடன் கலந்து கொள்கிறான்.’ என்கின்றனர். நேட் ஹண்டின் தாக்கம் எத்தகையது என்றால் அந்தப் பகுதி சமூகப் பெரியவர்கள் அவனை உள்ளூர் தேர்தலில் போட்டியிடச் சொல்லி கேட்கிறார்கள்.
நேட் ஹண்ட்டைப் போல எண்ணற்ற, உத்வேகமும் ஆரசியல் நுண்ணுணர்வுகளும், மக்களை நேரடியாக சந்திக்கும் திறனும் விருப்பமும் கொண்ட இளைஞர்களின் படை ஒன்று ஒபாமாவின் தேர்தல் வெற்றியின் பின்னணியில் இருந்தது. வெள்ளையர்கள் மிகப் பெரும் பான்மையாக வசித்த ஐயோவா மகாணத்தில் நேட் ஹண்டைப் போன்றோர்களே ஒபாமாவிற்கு வெற்றியைத் தேடித் தந்தனர். ஐயோவா வெற்றியைக் கண்ட பின்னரே ஒபாமாவை ஒரு முக்கிய போட்டியாளராக தேர்தல் களம் கண்டது. அமெரிக்க கறுப்பினத்தவர்கள் மத்தியிலுமே ஒபாமாவின் ஐயோவா மகாண உட்கட்சி தேர்தல் வெற்றி அலைகளை உருவாக்கியது. இளைஞர்கள் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி செயல்பட்டதும் இறுதுவரை சென்று வாக்களித்து வரலாறு படைத்ததும் 2008 அமெரிக்கத் தேர்தலின் அதி முக்கியமான கூறுகளில் ஒன்று.
உட்கட்சி தேர்தல்களில் ஒபாமா பல வெற்றிகளைக் கண்டபோதும் இறுதி முடிவுகள் தெளிவாகத் தெரியாத நிலை நீடித்தது. முதன் முறையாக ஒரு பெண்ணுக்கும் ஒரு கறுப்பினத்தவருக்கும் வரலாறு படைக்கும் வாய்ப்பு உருவானது. கொள்கை அடிப்படைகளில் செயல் திட்டங்களில் ஹில்லரிக்கும் ஒபாமாவுக்கும் குறைந்தபட்ச வித்தியாசங்களே இருந்ததென்றாலும் இறுதியில் ஒபாமாவின் ஆளுமை, தலைமைப் பண்புகள், எழுச்சியூட்டும் பேச்சுத் திறன், மக்களிடம் நேரடியாக ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு, உறவு அது சார்ந்த யுக்திகள் உட்கட்சி தேர்தலில் வெற்றியை தந்தன. “ஒரு நாள் என் பிள்ளைகள் தோலின் நிறத்தைக் கொண்டல்லாமல் அவர்களின் குணத்தின் (நடத்தையின்) பேரில் மதிப்பிடப்படுவார்கள்” எனக் கனவு கண்ட மார்ட்டின் லூத்தர் கிங்கின் நாற்பதாம் நினைவு நாளில் பராக் ஹுசைன் ஒபாமா எனும் கறுப்பின அமெரிக்கரை அமெரிக்காவின் மிகப் பெரிய கட்சியான டெமெக்ராட்டிக் கட்சி தன் வேட்பாளராகக் கொண்டாடியது.
பராக் ஒபாமா இந்தத் தேர்தலில் வெற்றிகரமாக பயன்படுத்திய யுக்திகளில் மிக முக்கியமானது மக்களிடமிருந்து நேரடியாக சிறு சிறு தொகைகளை நன்கொடைகளாகப் பெற்றது. இதுவரை யாரும் திரட்டியிராத அளவுக்கு தேர்தல் நிதியை அவர் திரட்டினர். ஒரு மாதத்திற்குள்ளாக சில முன்னள் வேட்பாளர்கள் ஒரு தேர்தலில் முழுக்கவும் திரட்டிய நன்கொடையை திரட்ட முடிந்தது. ஒரு பிரச்சாரமாக இல்லாமல் ஒரு இயக்கமாக, ஏதோ ஒரு கொள்கைக்காக தலைவன் பின் செல்பவர்களைப்போல’ ஒபாமாவின் பிரச்சாரக் குழு செயல்படுவதாக ஒரு ஊடகவியலாளர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
ரிபப்ளிக்கன் கட்சி ஜான் மெக்கெய்னை வேட்பாளராக அறிவித்த செய்தியை கேட்டதும் என் மனைவியிடம் நான் சொன்னது ஹில்லரியோ அல்லது ஒபாமாவோ எந்த டெமக்ராட் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவரை எதிர்த்து வெல்வது கடினம்.’ என்று. ஜான் மெக்கெய்ன் அத்தகையதொரு வரலாற்றுக்குச் சொந்தக்காரர். அவரின் அனுபவம் நெடியது. அமெரிக்காவிற்குத் தான் செய்த தியாகங்களை முகத்தில் வடுக்களாகச் சுமப்பவர். மக்கள் நலனை முன்வைத்து தன் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பல சட்ட திட்டங்களை உருவாக்கியவர். கட்சி எல்லைகளைத் தாண்டி அவருக்கென மதிப்பு இருந்தது, வாக்கு வங்கி இருந்தது. ஆனல் ஒபாமாவுக்கெதிரான அவரது பிரச்சாரம் மெக்கெய்னின் குணாதிசயங்களாகக் கருதப்பட்டவைக்கு எதிரானதாக அமைந்திருந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளால் ரிபப்ளிக்கன் கட்சி மதிப்பிழந்திருந்தது. மாகாணத் தேர்தல்களில் அதன் வேட்பாளர்கள் வியப்புக்குரிய அளவில் தோல்வியடைந்தனர். தீவிர வலதுசாரிகளை அடிப்படையாகக் கொண்ட ரிபப்ளிக்கன் கட்சி மெக்கெய்னை முதலில் வெளியாளாகக் கண்டது. கான்சர்வேட்டிவ் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கான்ஃபெரன்ஸ் எனும் வலதுசாரிகளின் கூட்டத்தில் பேசச் சென்ற மெக்கெய்னுக்கு பூ’ சொல்லி அதிருப்தி தெரிவித்தனர் வலதுசாரிகள். பிரிவுண்டு கிடந்த தன் கட்சியை ஒன்றிணைக்கும் பெரும் சோதனை மெக்கெய்னுக்கு வந்து சேர்ந்தது. தன் பிரச்சாரத்தை முழுக்க முழுக்க அதற்காகவே பயன்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் மெக்கெய்ன். சாரா பாலினை துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது துவக்கத்தில் அவருக்குத் தேவையான உந்துதலைத் தந்தாலும் சாரா பேலினின் தேசிய, சர்வதேச அரசியல் அனுபவமின்மை, தெளிவின்மை வெளிபட்டபின்பு பெரும் சுமையாக வந்து சேர்ந்தது. பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் மெக்கெய்னின் பிரச்சாரக் குழு உடைபட்டு மெக்கெய்ன் குழு, சாரா குழு என உள்ளுக்குள் பிரிந்தது. தன் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க சாரா பாலின் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தார்.
இவை எதுவும் ஒபாமாவின் வெற்றியை எளிதாக்கிவிட்டன எனச் சொல்லிவிட முடியாது. ஒபாமாவின் பிரச்சாரம் ஸ்திரத்தன்மையுடன் இயங்கியது. மாற்றம்’ எனும் ஒரே செய்தியை முன்வைத்தது. நம்மால் முடியும்’ எனும் கோஷம் மந்திரமானது. அவரது திட்டங்கள், சில காலங்களாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அமேரிக்க மத்திய வர்க்கத்தினரைக் கவர்வதாயிருந்தது. இதற்காக சோசியலிஸ்ட் என்று பட்டம் கட்டப்பட்டார் ஒபாமா. சோசியலிஸ்ட் என்பது மட்டுமல்ல அவருக்கு கிடைத்த பட்டங்கள். ரிப்பப்ளிக்கன் கூட்டங்களில் ஒபாமாவை தீவிரவாதி’ என வெளிப்படையாகக் கூறினர் மக்கள். ஒரு மூதாட்டி அவரை அராபியர்’ என வர்ணித்தார் அது ஏதோ கெட்ட வார்த்தை என்பதைப்போல, ஒரு கூட்டத்திலேனும் ஒபாமாவைக் கொல்ல வேண்டும்’ எனக் கூச்சல் எழுந்ததை ஊடகங்கள் முன்வைத்தன. ரிபப்ளிக்கன் பிரச்சார முறைகள் தன் நம்பகத்தன்மையை உருவாக்கி வளர்ப்பதை விட்டுவிட்டு ஒபாமாவின் நம்பகத்தன்மையில் சாணியடிப்பதையே முக்கிய பணியாக செய்தன.
ஒபாமா இந்த குற்றச் சாட்டுக்களை திட்டமிட்டு எதிர் கொண்டார். ஒபாமாவின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய பலரில் முக்கியமானவரான அவரது முன்னள் மதகுரு ஜெரமையா ரைட் அமெரிக்கா ஒழிக’ எனக் கூச்சலிட்ட அசைபடம் வெளியானபோது அமெரிக்காவின் இனப் பிரச்சனை குறித்து ஒரு பெரும் உரையாற்றினர் ஒபாமா. அ ம்ர்ழ்ங் ல்ங்ழ்ச்ங்ற் ன்ய்ண்ர்ய்” எனும் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் வார்த்தகளைத் தலைப்பாகக் கொண்ட அந்தப் பேருரை அமெரிக்க இனப்பிரச்சனை குறித்த மிகவும் வெளிப்படையான கருத்துக்களையும், இனத்தை கடந்து சென்று மக்கள் ஒன்றுபடும் இழைகளைத் தேடி அடைவதன் அவசியங்களையும் முன்வைத்தது. பெரும் பான்மை சிறுபான்மை இனங்கள் இரண்டு பக்கமும் இருக்கும் அதிருப்திகளை சுட்டிக் காட்டினர் ஒபாமா. அமெரிக்கா எனும் சுதந்திர தேசம் உருவானதன் அடிப்படைகளில் ஒபாமாவுக்கு இருந்த நம்பிக்கை இந்தப் பேச்சில் முக்கியமாக வெளிப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் தலைவர்கள் ஆற்றிய முக்கிய உரைகளின் வரிசையில் அது உடனடியாக இடம் பெற்றது. ஊடகங்கள் கொண்டாடின.
வேட்பாளர்களுக்கிடையே நடந்த பொது விவாதங்களின்போது (ஈங்க்ஷஹற்ங்ள்) ஒபாமாவின் ஸ்திரமான, நேர்மையான ஆளுமை வெளிப்பட்டது. அந்த நிதானமான ஆளுமையின் பின்னணியில் சில நேரங்களில் எரிச்சலுடனும், சோர்வாகவும் கிண்டலாகவும் பேசிய மெக்கெய்னின் ஆளுமை ஒரு வயதான, பழைய முறைமைகளில் ஊறிப் போன அரசியல்வாதியின் ஆளுமையாக வெளிப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தை படு வீழ்ச்சி அடைந்த பிறகு கருத்துக் கணிப்புகளில் ஒபாமாவின் முன்நிலை பெரிதானது. பலரும் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிதான் ஒபாமாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என வாதிடுகிறார்கள். ஆனல் அந்த வீழ்ச்சியை ஒபாமா எப்படி எதிர்கொண்டார் என்பதே முக்கியமானது. மீண்டும் தன் நிதானமான தலைமைக்குரிய ஆளுமையை வெளிக்காட்டினர் ஒபாமா. இந்த நேரத்தில் தன் பிரச்சாரத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்தார் மெக்கெய்ன். பின்னர் அதனல் பயன் ஏதும் இல்லை எனத் தெரிந்தபோது அவரது அறிவிப்பு மீண்டும் ஒரு மோசமான முடிவாக காணப்பட்டது.
அமெரிக்காவில் இனப் பிரிவினை எத்தனை தூரம் இருக்கிறதென்பதை ஒபாமா தேர்தல் வெற்றியை அடைய எத்தனை கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்பதை அலசினல் புரியும். ஒபாமாவின் திறமையும், ஆளுமையும் கொண்ட ஒரு வெள்ளை வேட்பாளரால் தன் வெற்றியை பல மாதங்களுக்கும் முன்னரே உறுதி செய்திருக்க முடியும் என நம்புகிறேன். தேர்தல் நாள் நெருங்கும்போது மெக்கெய்ன் கருத்துக் கணிப்புகளில் முன்னேறத் துவங்கினர். ஒபாமா வெல்வார் என யாராலும் உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

நன்றி: வடக்கு வாசல்

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்