வெற்றியின் குரல்-3

வெற்றியின் குரல்-1
வெற்றியின் குரல்-2

நவம்பர் 4, 2008 வழக்கம்போல எல்லா நாட்களுக்கும் உரிய எதிர்பார்ப்புக்களோடு விடிந்தது. வாக்காளர்கள் மாற்றத்திற்கான முயற்சியொன்றின் முடிவினை ஒவ்வொரு வாக்குச் சீட்டாக எழுதிக் கொண்டிருந்தனர். வரலாறு காணாத எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்றைய ஷாப்பிங் சம்பிரதாயங்களை தள்ளிவைத்து விட்டு தொலைக்காட்சியில் கண்கள் பதித்திருந்தேன். உலகெங்கிலும் முன்பில்லாதது போல பல நாடுகளிலும் என்னைப்போலவே சாதாரண மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒரு இனம் தன்னை சில கட்டுகளுக்குள்ளிருந்து விடுவித்தெழும் தருணத்தை எதிர்பார்த்து, ஒரு சாதாரண மனிதன் அவன் கனவுகளை அடைந்து பெருமிதம் கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்து, ஒரு நெடிய பயணத்தின் முடிவு தரும் சுகங்களை எதிர்பார்த்து, மாற்றத்தை எதிர்பார்த்து, நம்பிக்கையை எதிர்பார்த்து. ஒபாமா வென்றார் எனும் செய்தி கேட்டு மனதுக்குள் புது உற்சாகம் எழுந்தது. சாதாரண மனிதனின் கனவுகளுக்கு இந்த பூமியில் இன்னும் மதிப்புள்ளதைக் கண்டுகொண்டேன். “வெற்றிக்கு பல தந்தைகள். தோல்விக்கு யாருமில்லை.” எனச் சொல்வதைப் போல ஒபாமாவின் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு. ஆனல் அவற்றின் மையமாக நிற்பது பராக் ஹுசைன் ஒபாமா எனும் அசைக்க முடியாத ஆளுமை, அவரது தன்னம்பிக்கை, நல்லெண்ணம், விடா முயற்சி, தன்னைப் போன்ற சாதாரண மக்களிடம் அவர் கொண்டிருந்த ஈர்ப்பு, எல்லோரையும் உள்ளடக்கியப் பார்வை, எதிரிகளிடம் பரிவு.
ஒபாமாவின் வெற்றியோடு கறுப்பின மக்களின் விடுதலைப் பயணம் முடிந்துவிடப் போவதில்லை. அது அவர்களின் எதிர்பார்ப்புமல்ல. ஆனல் அந்தப் பயணத்தில் ஒரு சிறந்த தருணம் இது. கண்ணீருடன் அதைக் கொண்டாடினர் பல கறுப்பினத்தவரும். இனம் தாண்டி பிறர் மீது நம்பிக்கை கொள்வதன் அவசியத்தை ஒபாமா உணர்த்துகிறார். அந்த நம்பிக்கை நேர்மையானதாகவும், எல்லோரையும் உள்ளடக்கியதாகவும் இருக்குமாயின் அதன் விளைவுகள் உன்னதமாக இருக்கும், குறைந்த பட்சம் அந்த முயற்சியேனும் உன்னதமாக கருதப்படும்.
அமெரிக்க கறுப்பினத்தவர் மத்தியில் ஒபாமாவின் வெற்றி தந்திருக்கும் மிகப்பெரும் தாக்கம் ஒன்றுதான். இனிமேல் தன் மகனிடம், மகளிடம் அமெரிக்காவில் நீ எந்தக் கனவையும் அடையலாம், அதிபராகக் கூட ஆகலாம்’ என ஒரு கறுப்பினத்தவர் சொல்லும் சொல்லில் உண்மை இல்லாமல் போகலாம், ஆனல் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தமேனும் இருக்கும்.

நன்றி: வடக்கு வாசல்

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



2 மறுமொழிகள் to “வெற்றியின் குரல்-3”

  1. Reginald John சொல்கிறார்:

    Hi Cyril,

    Nice writings, especially on Muttom brings back my childhood memories. Yes, I was born and brought-up in Muttom.

    Keep up your good work,
    -regi.

  2. Thanks Regi. You could get the muttom posts as a book.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்