நான் கடவுள்

“மோசமாக எழுதப்படும் விமர்சனங்கள் சரியாக எடுக்கப்படாத படங்களைவிட மோசமானவை”. சும்மா ஏதோ ஒரு பாராவில்(Paragraph) படிச்சத மாத்தி எழுதி பார்த்தா எப்படி இருக்கும்ணு ஒரு கற்பனை. நல்லாத்தான் இருக்குது. எந்த பெரிய அர்த்தமுமில்லைண்ணாலும் ஏதோ பெரிய தத்துவம் மாதிரி தெரியுதுல்ல?

ஒரு திரைப்படத்துக்கு எத்தனை விமர்சகர்கள்? எத்தனைபேர் அதை பார்க்கிறார்களோ அத்தனை விமர்சனங்கள். (படம் பார்க்காமலே விமர்சிப்பவர்களும் உண்டென்றாலும்). நான் கடவுள் விமர்சனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கருத்து முன்நிற்கிறது. ஆன்மிகமும் இதுபோலவே! உலகில் எத்தனை நம்பிக்கையாளர்கள் உண்டோ அத்தனை ஆன்மிகமும் அத்தனை கடவுளும் உண்டு. (கடவுள் இல்லாமலே ஆன்மிகம் உண்டென்றாலும்). என் கடவுளுக்கும் இன்னொருவர் நம்பும் அதே பேர்கொண்ட கடவுளுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களாவது உண்டு.

ஆன்மிகத்தின் இலக்கு இதுதான் என எப்படி வரையறுப்பது? அத்தகைய வரையறைகள் உண்டென்றால் ஆன்மிக விவாதங்களும் இத்தனை பரந்துபட்ட முற்றிலும் வேறுபட்ட ஆன்மிக தத்துவங்களுக்கும் இங்கு என்ன அவசியம்? ஆன்மிகம் வரையறைகளற்றது.

ஆத்மாவை உணர்ந்து (அல்லது உணராமலேயெ) ஒரு உள்ளார்ந்த தேடலை உருவாக்கி இவ்வுலக வாழ்கைக்கு ஏதேனும் ஒரு அர்த்தத்தை உருவாக்க முற்படும் முயற்சியை ஆன்மிகம் என சொல்லலாம். ஆனால் அப்படி பெறப்படும் வாழ்வின் அர்த்தம் இதாகத்தான் இருக்கவேண்டும் என்றொன்றில்லை. மதங்கள் அப்படி வரையறைகளை உருவாக்கியுள்ளன. ஆனால் மதம் ஆன்மிகமல்ல. இப்படிச் சொல்லலாம். மதம் மட்டுமே ஆன்மிகமல்ல.

கடவுளை முதன்மைப் படுத்தும் ஆன்மிகம் சுவர்க்க(நரக) நோக்கிலேயே இவ்வுலக வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. அதன் விளைவாக இவ்வுலகை வெறுப்பதும் ஏற்பதுவும் உண்டு.

கடவுளை கண்டுகொண்டேன் என நம்மிடையே நிலவிய ஞானிகள் முக்கியமானவர்கள் பலரும் இவ்வுலக வாழ்வை வெறுத்தவர்களாகவே ஆயினர். துறவறம் என்பது ஆன்மிகத்தின் உச்சமாகக் கருதப்படுவதும் இதனாலேயே. ’இந்திய தத்துவ ஞான மரபில்’ (உபயம்: ஜெ.மோ) உலக வாழ்கை அர்த்தமற்றது என்கிற பார்வை ஒரு முக்கிய சிந்தனை. உலகம் மாயம், பிறவி சுமை என்பவை நம் ஞான மரபில் அடிப்படைகள் என்றுகூட சொல்லலாம். ஆத்மா எனும் பரிசுத்த நிலையின் மீது அணியப்பட்ட ஒரு இடைக்கால வேடமே இவ்வுலக வாழ்கை என்பது இந்து தத்துவங்களில் ஒன்று. தேவர்களுக்கு அளிக்கப்படும் உச்ச கட்ட சாபம் மனித பிறப்பு. பிறவியை தவிர்க்க பல தேவர்களும் பல பாடு பட்டுள்ளனர்.

ஆனால் ஆன்மிகம் இவ்வுலக வாழ்வை செம்மைப்படுத்த உதவ வேண்டும் என்பதுவும் இன்னொரு கருத்து. இவ்வுலகம் வெறுமை எனும் கருத்தின்படியான ஆன்மிகவாதிகள் தாயிடம் ’காஞ்சா இருக்கா?’ எனக் கேட்பவர்கள். இவ்வுலகம் மெய் எனும் கருத்தின்படியான ஆன்மிகவாதிகள் இனிமேல் என் மகன் எனக்கு மகன் இல்லை என உணர்ந்த பின்னும் சாதாரணமாக தன் உலக வேலையை செய்துவிடும் ’ஞானம்’ கொண்டவர்கள். இரண்டுமே அபூர்வமான செயல்கள்.
(ரெம்பக் குழம்புனா கண்டுகாதீங்க ஒருவழியா கொண்டுபோய் முடிச்சிருவேண்ணு நம்பிக்கை இருக்குது)

சரி ’நான் கடவுள்’ குறித்த என் கருத்துக்களுக்கு வருவோம்…

சில கவிதைகள் நேரடியான கருத்துக்களைச் சொல்பவை. அவற்றை பலராலும் அல்லது எல்லோராலும் ஒரேமாதிரியாகப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லிவிடுபவை அவை. சில கவிதைகள் எல்லோராலும் ஒரேபோல புரிந்துகொள்ளப்படாதவை. சில நேரங்களில் அவற்றை புரிந்துகொள்வதும் கடினம். நான் கடவுள் இரண்டாம் வகை. ஆழ்ந்த அர்த்தமுள்ள பல வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட கவிதையைப் போல பல அர்த்தமுள்ள நேர்த்தியாக செதுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படம். ஒரே கருத்தை நோக்கி படம் நகரவில்லை. கவிதை கண்முன்னே இருக்கிறது அதன் அர்த்தம் நம்முள்ளே கிடக்கிறது. நம் அனுபவத்தை, அறிவைப் பொருத்து அர்த்தங்கள் விரிகின்றன. இதில் ஒன்று சரி மற்றொன்று தவறு என்பதைக் கவிஞனே கூட சொல்லிவிட முடியாது.

பிச்சைக்காரர்களை பல திரைப்படங்களிலும் காண்பித்துள்ளார்கள். நாயகர்கள் அவர்களை கட்டிப்பிடிப்பதும், அவர்களோடு பாட்டு பாடுவதும் துவங்கி அவர்களை முன்வைத்து தத்துவங்களை அல்லது அறிவுரைகளை வாரி வழங்குவதும் அல்லது அவர்களை காப்பாற்றுவதும் என பல செயற்கையான சூழல்களில் அவர்கள் வந்துபோவதுண்டு. நான் கடவுளில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை யதார்த்தமாக பதிவாகியிருக்கிறது. அவர்களிடையே இருக்கும் தோழமை ‘வெளி உலகு’ குறித்த ஏளனப் பார்வை, அவர்களைச் சார்ந்த சமூக அவலங்கள் என பல சுவாரஸ்யமானதும் சோகமானதுமான நிகழ்வுகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பல விமர்சனங்களில் படித்திருப்பீர்கள்.

படத்தின் முடிவு குறித்த பத்திக்கு ஒரு பீடிகை போட வேண்டுமென்றால் இதுதான்… “எல்லா சாமியும் வரம் கொடுக்கும். ஆனால் எல்லா வரமும் ஒரேபோல இருப்பதில்லை.” படம் பார்த்து முடிந்த பின்னர் நிகழ்ந்த ஒரு சிறிய விவாதத்தில் நாயகியின் மரணம் குறித்த கேள்விக்கு நான் அளித்த விடை இதுதான் ‘பக்தை வரம் கேட்கிறாள். சாமி வரம் தந்திடுச்சு. அவ்வளவுதான்.

இவ்வுலகில் வாழ இயலாதவர்களெல்லாம் சாகத்தான் வேண்டுமென்பது அந்நிகழ்வின் கருத்தல்ல. அப்படியானால் வில்லன்களைக் கொன்றதோடு எல்லா பிச்சைக்காரர்களையும் கொன்றுவிட்டிருக்க வேண்டும் சாமி. அது சாமிக்கும் பக்தைக்குமிடையேயான சமாச்சாரம். இந்த சாகும் வரத்தை வேண்டி பெற்றுக்கொண்ட பக்திமான்கள் பலர். நம் காப்பியங்களிலேயே இத்தகைய கதைகள் உண்டு. இவற்றை ஆழ்ந்த தத்துவ விரிவுகளோடும் பார்க்கலாம் அபத்தங்களாக ஒதுக்கவும் செய்யலாம். இரண்டுமே தமிழ்நாட்டில் பிரபலம். ’ஆன்மிக ஜிப்பா போட்ட அடிதடிப்படம்’ என நான் கடவுளை மட்டுமல்ல இந்திய இலக்கியத்தில் பலவற்றையும் இவ்வாறாக வகைப்படுத்த முடியும். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தலை சிறந்த கிரைம் நாவலாகக் கருதுபவர்களும் இங்குண்டு (நன்றி: சாரு).

’அம்சவல்லி அழகற்றவனோடு வாழ்ந்துவிட்டால்தான் என்ன?’ போன்ற கேள்விகளும் எழுகின்றன. அவளுக்கு அந்தச் சூழலை விளக்கிச் சொல்லி அவளை அனுப்பி வைக்கவில்லை யாரும். வலுக்கட்டாயமாக அவளை ஒரு விற்பனைப் பொருளாக விற்கப் பார்க்கிறார்கள். Once again a Moral delimma. வாலி வதம் போன்றதொரு விவாதத்திற்குரிய காட்சி.

படத்துக்கு மாற்று முடிவாக ருத்ரனைப் பார்க்க ஒரு இசையமைப்பாளர் வருவதைப்போலவும் அவள் அம்சவல்லியின் குரலைக் கேட்டு அவளை பாடகியாக்கி விடுவதாகவும் வைத்திருந்தால் அல்லது அழகற்றவனை அம்சவல்லி மணந்துவிட்டு முதலிரவில் அவன் முகமூடியை கழற்றிவிட்டு ’ஆக்சுவலி ஐ ஆம் சாஃப்ட்வேர் இஞ்சினியர்’ என அழகிய முகத்தை (சூர்யா அல்லது விக்ரம்) காட்டியிருந்தால் டவுசரைக் கிழித்தது போலிருந்திருக்கும்.(உபயம்: லக்கி)

படம் குறைகளின்றியில்லை. அழகிய கவிதையில் தெரியும் எழுத்துப் பிழைகளைப் போல சில. விளிம்புநிலை மனிதர்கள் குறித்து பல படங்கள் வெளிவரும் சூழல் ஒன்றில் இந்தப் படம் வெளிவந்திருக்குமானால் இது முக்கியமான படமாக இருந்திருகுமா எனச் சொல்ல முடியவில்லை. அப்படி அல்லாத நம் சூழலிம் மிக முக்கியமான திரைப்படம் ’நான் கடவுள்’.

Popularity: 17% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....12 மறுமொழிகள் to “நான் கடவுள்”

 1. ila சொல்கிறார்:

  நல்ல விமர்சனம்- கடேசி பாரா(paragraph) நிதர்சனம்

 2. […] http://cyrilalex.com/?p=459  கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]

 3. Surveysan சொல்கிறார்:

  too much text. என் அறிவுக்கு நிறைய white noise, ஜெயமோகனின் கடைசி பூஜா டயலாக் போல ;)

  ஒரு சாதாரண படமா நெனச்சுக்கிட்டு விமர்சனம் பண்ணுங்களேன்?
  பைத்தியகாரனின் comments in Narsimச் ப்ளாக் படிச்சீங்களா? அமக்களம்!

 4. முதல்ல நான் கடவுள் சாதரண படமாயிருந்தா சாதரணமா விமர்சிக்கலாம்.

  ரெண்டாவது சாதாரண படத்திலேயே உள்ளோட்டங்களை தேடியடைகிறவன் நான். அதனால இத சாதாரணமா விமர்சிக்க முடியவில்லை. உங்க விமர்சனம் படித்தேன் அது எத்தனை நேர்மையானதோ அதே நேர்மையானது இந்த விமர்சனமும். இன்னும் எல்லா விமர்சனங்களும் என நம்புகிறேன்.

  பைத்தியக்காரனை படிக்கல. படிச்சிட்டு அங்கேயே கமெண்ட் விடுறேன். :)

 5. Surveysan சொல்கிறார்:

  ///உங்க விமர்சனம் படித்தேன் அது எத்தனை நேர்மையானதோ அதே நேர்மையானது இந்த விமர்சனமும்.////

  :)

  பைத்தியக்காரன் மேட்டர் இங்கே
  http://www.narsim.in/2009/02/blog-post_13.html

 6. இப்பத்தான் படிச்சேன். இரண்டுபேரும் போட்டு தாக்கியிருக்காங்க. மெதுவா உக்கார்ந்து இன்னொருமுறை படிக்கணும். இவங்க ‘சாதாரண’ படமா பார்க்கல பாருங்க.

 7. Surveysan சொல்கிறார்:

  //இவங்க ‘சாதாரண’ படமா பார்க்கல பாருங்க.//

  பைத்தியக்காரன் பின்னூட்டங்கள் பாத்தா, அவர் எதையுமே ‘சாதாரணமா’ பாக்க மாட்டார் போலருக்கே :)

 8. dharumi சொல்கிறார்:

  சிலர் சொல்ல நினைக்கிறதையெல்லாம் நல்லா சொல்றாங்க ..
  ஹும் .. !!

 9. Surveysan சொல்கிறார்:

  ///dharumi சொல்கிறார்:
  February 22nd, 2009 at 6:25 am
  சிலர் சொல்ல நினைக்கிறதையெல்லாம் நல்லா சொல்றாங்க ..
  ஹும் .. !!
  ////

  என் அறிவுக்கு இதுவும் எட்டலை?
  வாட் டஸ் ஹி மீன்? :)

 10. நல்லதொரு விமர்சனம். நேற்று இப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேருடைய பேட்டியைப் பார்த்தேன். உடல்,உள ரீதியில் குறைபாடுடையவர்களாக நாம் கண்ட அனைவருமே குழந்தைகள் போலத்தான் இருக்கிறார்கள். அவர்களை நடிக்க வைக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும் பாலா? படம் வெளிவர 3 வருடங்களுக்கும் மேலானதன் காரணம் இதுதான் என்கிறார் ஒளிப்பதிவாளர்.

  இப் பொறுமைக்காகவும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், கதைக்களத்துக்காகவும் பாலா மேல் பெரும் மதிப்பு தோன்றுகிறது.

 11. esun சொல்கிறார்:

  எம்.ரிஷான் ஷெரீப் //
  u said aptly.

  cyril,
  ur last para is gud. all others are mokkai!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்