’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்

தமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம்.

திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் போலியை அப்போது பலரும் ஊக்குவித்தனர். நாலு பின்னூட்டம் வந்தாலே குதிக்கும் பதிவர்கள் நாம் நேரடி ஊக்குவித்தலைக் கண்டு எவ்வளவு வீரியமாகச் செயல்படுவோம்? போலி பதிவரும் தீவிரமடைந்தார்.

இணையம் கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது என்றபோதும், இணைய புழக்கங்களை கண்காணிக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாதபோதும் சில எல்லைகளைத் தாண்டியபோது போலியின் நடவடிக்கைகளை காவல் துறை தாமாகவே கண்காணிக்க ஆரம்பித்தது. கூடவே சில புகார்களும் பதியப்பட போலிஸ் ’போலி’ விவகாரத்தில் தீவிரம் காட்டியது. வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியா திரும்புகையில் காவல்துறை அவரை மடக்கி அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றியது. விடுமுறைக்கு வந்த அவர் வெளிநாட்டுக்கு திரும்ப முடியாமல், வேலை பறிக்கப்பட்டு மிக வருந்தத் தக்க நிலையில் தற்போது உள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.

பதிவர்களே, அந்த போலி பதிவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக்கேட்டுக்கொண்டபின்னும்கூட காவல்துறை அவர்மீது இரக்கம் காட்டவில்லை. அந்தப் போலி பதிவர் விளையாட்டாகவே இவை அனைத்தையும் செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார். ஒரு இளமை வேகத்தில் சிலரால் ஊக்குவிக்கப்பட்டு அவர் இதை செய்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே அவர் கெட்ட எண்ணத்திலும் போலியாக செயல்பட்டிருக்கலாம் ஆனால் அதன் விளைவு என்னவென்றால் அவரின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு கவலைக்குரிய நிலையில் அவர் உள்ளார்.

போலியாக இருக்கும்போது அவரை ஊக்கப்படுத்தியவர்கள் யாரும் அவருக்கு இப்போது எந்த உதவியும் செய்வதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க தகவல். இவையெல்லாம் நான் கேள்விப்பட்ட தகவல்களேயன்றி நேரடித் தகவல்கள் இல்லையென்றபோதும் இந்தக் கதை சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக தற்போது புதிய போலி பதிவுகள் உருவாகியிருப்பதாக அறியும்போது கவலை தருகிறது.’போலி’க்கு நிகழ்ந்த சோகத்தை பதிவுலகில் யாருமே பதியவில்லை என்றறிந்தபோது இதை எப்படியும் சொல்லியாகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எனவே இந்தப் பதிவு.

எதிர் கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்வதே வீரம். அதுவே உங்கள் தரப்பின்மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மாறாக குறுக்கு வழிகளில் சென்று எதிர்தரப்பின் கருத்தை முறியடிக்க நினைப்பது கோழைத்தனம் மட்டுமல்ல நாளடைவில் அது எதிர்தரப்புக்கு சாதகமாகவே அமைந்துவிடக் கூடும்.

போலி பதிவுகளின் மூலம் அவதூறுகளைப் பரப்புவது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது, அடுத்தவர்களை மிரட்டுவது போன்ற பழக்கங்களை இனிமேலாவது கைவிடுவோம். பதிவர்களால் தமிழுக்கு ஒரு முக்கிய கருத்துக்களத்தை உருவாக்கி வைக்க இயலும் என்பதையும், அது காலத்துக்கும் நிலைத்திருக்கும் வாய்ப்பும் உண்டு என்பதையும் நினைவில் கொள்வோம். பதிவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம்.

செந்தழல் ரவியின் பின்னூட்டம் பதிவில், கீழே சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக பதிவுசெய்யப்படவேண்டியது:

யாகூ, கூகிள், ஸ்கைப், மைக்ரோசாப்ட் உட்பட எல்லா நிறுவனங்களும் தமிழக காவல்துறையின் சைபர்க்ரைம் பிரிவின் அழைப்புக்கு இணங்கி உடனடியாக தகவல்களை வழங்குகின்றன.
இதில் சில ப்ராக்ஸி தளங்களும் கூட அடக்கம்.

ஆகவே, இணையத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு எதையும் எழுதிவிடலாம் என்பது நூறு சதவீதம் இயலாத காரியம்.

ப்லாகர் வலைப்பதிவில் அனானி கமெண்ட் போட்டவரின் தகவல்களை கூட சென்னை சைபர் கிரைம் துறை 48 மணி நேரத்தில் பெற்றுவிட்டதென்றால் பாருங்களேன் ?

ஆக தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களை கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல, தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் கட்டுப்படுத்த சென்னை சைபர் க்ரைம் பிரிவு செயல்படுகிறது என்பதை தயவு செய்து சொல்லிவிடுங்கள்.

Popularity: 11% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....17 மறுமொழிகள் to “’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்”

 1. ஜோ சொல்கிறார்:

  அவசியமான பதிவு.

 2. வடுவூர் குமார் சொல்கிறார்:

  மருபடியுமா?
  :-(

 3. குசும்பன் சொல்கிறார்:

  //பதிவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம். //

  மனசாட்சிக்கு பயப்பட்டால் போதும், மற்றவர்களை திட்டி, அசிங்கமாக பேசி என்ன சாதிக்கமுடியும்?

 4. வஜ்ரா சொல்கிறார்:

  போலியை இன்று காப்பாற்ற அன்று அவனுக்கு ஜால்ரா அடித்த அல்லக்கைகள் வரவில்லை என்பது மிகவும் சந்தோஷமான விசயம்.

  இப்படி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிவிடுவது தான் அல்லக்கைகளின் வேலை என்பதை போலிகள் தெரிந்துகொள்வது நல்லது.

 5. பாலாஜி சொல்கிறார்:

  hmm!

 6. Vasagan சொல்கிறார்:

  Hi,
  Yes, the feed backs should be decent enough, everything is right, but what about the criteria for the blog writers using words, and their cheap publicity mentality,. First correct your slf.
  I read a post where the tile was “Super star ennum kandraavi”.
  The mrddsage was talking about vatious things and he was commenting about the reporters inquiring Rajinikanth about the politics when he voted in election, he titled, so that is right. Keep your self with limits then no bad comments will come, Blog writers think they are all extra genius and who read their blogs are all fools. stop that. Give respect and then ask for respect man

 7. இதில் முக்கியமாக பதிவுசெய்யப்படவேண்டியது:

  யாகூ, கூகிள், ஸ்கைப், மைக்ரோசாப்ட் உட்பட எல்லா நிறுவனங்களும் தமிழக காவல்துறையின் சைபர்க்ரைம் பிரிவின் அழைப்புக்கு இணங்கி உடனடியாக தகவல்களை வழங்குகின்றன.
  இதில் சில ப்ராக்ஸி தளங்களும் கூட அடக்கம்.

  ஆகவே, இணையத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு எதையும் எழுதிவிடலாம் என்பது நூறு சதவீதம் இயலாத காரியம்.

  ப்லாகர் வலைப்பதிவில் அனானி கமெண்ட் போட்டவரின் தகவல்களை கூட சென்னை சைபர் கிரைம் துறை 48 மணி நேரத்தில் பெற்றுவிட்டதென்றால் பாருங்களேன் ?

  ஆக தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களை கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல, தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் கட்டுப்படுத்த சென்னை சைபர் க்ரைம் பிரிவு செயல்படுகிறது என்பதை தயவு செய்து சொல்லிவிடுங்கள்.

 8. புருனோ சொல்கிறார்:

  //எதிர் கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்வதே வீரம். அதுவே உங்கள் தரப்பின்மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மாறாக குறுக்கு வழிகளில் சென்று எதிர்தரப்பின் கருத்தை முறியடிக்க நினைப்பது கோழைத்தனம் மட்டுமல்ல நாளடைவில் அது எதிர்தரப்புக்கு சாதகமாகவே அமைந்துவிடக் கூடும்.//

  இது கூட புரியாமல் “வாசகன்”(ர்கள்) இருக்கிறார்களே என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது

  Defamation என்பதை விட impersonation என்பது பல மடங்கு தண்டனை அதிகம் உள்ள குற்றம் என்பதை பலரும் உணருவதில்லை

 9. பெரியசாமி சொல்கிறார்:

  இது போன்ற விசயங்களை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் இது போன்ற சம்பவங்களை அறிய வாய்ப்பே இல்லை. எனவே அவர்கள் தவறிழைக்கவும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தேவையில்லாமல் அனைவருக்கும் மன அழுத்தங்கள் வேறு.

  ரவிதான் அடிக்கடி இதுபற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

 10. Vaasagan,
  you have not understood the post fully I guess. This is entirely for bloggers.

 11. செந்தழலின் பின்னூட்டம் மிக முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளதால் பதிவிலேயே சேர்துவிட்டேன்.

 12. Senthil Kumaran சொல்கிறார்:

  Hi I agree with Senthazal. The issue is serious. Police are cracking cyber crimes more efficiently nowadays.

 13. Sanjai சொல்கிறார்:

  //#
  குசும்பன் சொல்கிறார்:
  August 29th, 2009 at 4:42 am

  //பதிவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம். //

  மனசாட்சிக்கு பயப்பட்டால் போதும், மற்றவர்களை திட்டி, அசிங்கமாக பேசி என்ன சாதிக்கமுடியும்?//

  கரெக்ட்.

 14. நன்றி சிரில். இதில் ஒரு காமெடியான தகவலையும் பகிர்ந்தால் நன்று.

  சைபர் கிரைமில் என்னுடைய போலி வலைப்பதிவான tvbravi.blogspot.com ஐ புகாரில் அளித்திருந்தேன் (உண்மையான வலைப்பதிவு tvpravi.blogspot.com)

  நாங்கள் புகார் கொடுத்துவிட்டோம் என்று தெரிந்ததும், இந்த வலைப்பதிவு அழிக்கப்பட்டது.

  காலையில் அலுவலகத்தில் போய் என்னுடைய போலி வலைப்பதிவை திறக்க முயல்கையில் அதிர்ச்சி. என்னடா டெலீட் செய்யப்பட்டுவிட்டதே ? புகார் வேறு கொடுத்துவிட்டோமே என்று.

  மேலும் இன்னும் ஒரு வேலை செய்தேன். என்னுடைய ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி, டெலீட் செய்யப்பட்ட என்னுடைய போலி வலைப்பதிவை பதிவு செய்துகொண்டேன்.

  அடுத்த நாள் சென்னை சைபர் கிரைம் பிரிவின் உதவி ஆய்வாளர் ஒருவர் அழைத்தார். என்ன நீங்க ? நீங்களே உங்களுக்கு போலி வலைப்பதிவு உருவாக்கினீங்களா என்ன என்றார்.

  எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இல்லையே சார். எப்படி சொல்றீங்க என்றேன்.

  கூகிள் அனுப்பியுள்ள பி.டி.எப் கோப்பில், இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்ட இடம் எல்.ஜி, அதாவது என்னுடைய அலுவலகம், என்று உள்ளதே ? என்றார்.

  அப்புறம் அவரிடம் விளக்கினேன். என்னுடைய வலைப்பதிவு அழிக்கப்பட்டதால், நான் வேறு யாரும் உருவாக்கிவிடவேண்டாம் என்று நினைபதால் அதை நான் என் பெயரில் பதிவு செய்தேன் என்று.

  மேலும், அந்த வலைப்பதிவில் அனானி கமெண்டு போட்டவர்களின் ஐ.பி முகவரிகள், எந்த கமெண்ட், எந்த தேதி, எந்த ஐபி, எந்த நாடு, எந்த அலுவலகம், என்று ஆதியோடந்தமாக இருப்பதை சைபர் க்ரைம் அலுவலகத்தில் கண்டேன்.

  இதை ஒரு எடுத்துக்காட்டாக இங்கே பதிவு செய்கிறேன். வலைப்பதிவு உருவாக்கினால் தானே பிரச்சினை, அனானி கமெண்டு போடலாமே ? டைனமிக் ஐபி உருவாக்கி அதில் இருந்து போடலாமே ? ப்ராக்ஸி தளம் மூலம் போடலாமே ? என்று எல்லா லாமும் நீங்கள் முயன்றாலும், ஒன்னும் வேலைக்காவாது.

  வலைப்பதிவை நீங்கள் திறந்த நேரம் உங்கள் கணினியில் உள்ள மற்ற Session களும் ப்ளாகரால் ரெக்கார்ட் செய்யப்படுகிறது. இது இங்கே தேவையில்லை, ஆனால் கிரிமினல்களே ஜாக்கிரதை என்ற ஒன்றைமட்டும் இங்கே சொல்கிறேன்…

 15. Prabhu Rajadurai சொல்கிறார்:

  Cyril, in their enthusiasm in fishing out the ‘Poli’, the bloggers have not realised, where this will lead them into. Once the cops enter the blog world, it will never be the same…Any one is vulnerable now. I will try to explain in my blog

 16. Lenin M சொல்கிறார்:

  intha comment-a ipathan Dondu sir pathivule poten.athai avar veliiduvarenu theriyalai..
  athanaal ingu oru murai (time spent panni adichathukaha!!!)

  aiya samigala pothum….poli dondu pathivulagathai vitu poyachi. innum en kuppaye kelarikitu irukeenga…

  ithellam padikum pothu onnu mattum puriyiuthu,ungaluku othu uthuna avnga nallavnga. namken vambunu pesama iruntha avanga en kandichi pathivu podalainu avangalyum kutravali aakiduveenga!!!!
  udaranam .. kovi kannan,tbcd

  naan entha pativum elauthurathu ille.only vaasagan mattumthan..

  chinnapullathanma adichikitu puthusa padika varavaingalum poha vechidatheenga..neengala una image-a damage pannikatheenga..

  intha vysayathule naan mathibala karuthoda muzhusa othu poren.

  http://www.mathibala.com/2009/09/blog-post_22.html

  aaha onnum maatum puriyuthu orutharaum office-la vela parkurathu ille..recession time-la irukura velaiya thakka vechikunga..

  I think Dondu is retired person.ithule samantha paturukire matha pathivarkal appadi illainu neniakuren..

  unga ponnane nerathe thevai illathe kuppaiku selavalikaatheenga..

  naanum intha kuppai-pathi comment poda konja nerathe waste panniten..

  Thanks,
  Lenin M

 17. LIFE DIRECTION NETWORK சொல்கிறார்:

  இணையம் சார்ந்த அனைத்து தவறுகளுக்கும் உடனடியான 
  சட்ட நடவடிக்கைகள் ஏற்படும் காலம் வெகு தூரமில்லை

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்