தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

பாரதி தமிழ் சங்கம்
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.

நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை
இடம்: Fermont Library Hall
Fremont Library
Stevenson Blvd and Paseo Padre intersection
Fremont, CA

நேரம்: மாலை 2:00 -5:00
அனுமதி: இலவசம்

நவீனத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான ஜெயமோகன் பன்முக ஆளுமை படைத்தவர். 1990 வருடம் வெளி வந்த அவரது ரப்பர் என்ற நாவல் அவர் மீது தமிழ் இலக்கிய உலகின் முழுக் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றார். தொடர்ந்து அவரது முக்கியமான நாவலாகிய விஷ்ணு புரம் மாபெரும் வரவேற்பையும், கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று தமிழின் முக்கியமான படைப்பானது. பின் தொடரும் நிழலின் குரல், காடு, கன்யாகுமரி, ஏழாவது உலகம், கொற்றவை ஆகிய பெரும் நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

ஜெயமோகன் தமிழ் திரைப்பட உலகத்திலும் முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகிறார். அவரது ஏழாவது உலகம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குனர் பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் ஜெயமோகன் அவர்களின் கூரிய வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து திரைத்துறையில் பல படங்களிலும் ஜெயமோகன் பங்களித்து வருகிறார்.

தத்துவம், வரலாறு, பயணம், நகைச்சுவை, இலக்கியம், என்று பரந்துபட்ட தலைப்புகளில் தன் சிந்தனைகளை தனது இணைய தளமான www.jeyamohan.in மூலமாக பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

வரும் சனிக்கிழமை, செப் 5ம் தேதி ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் திரு.ஜெயமோகன் தமிழ் இலக்கியத்திற்கும், இந்திய மரபுகளுக்கும் ஆற்றி வரும் தொண்டினைப் பாராட்டி வளைகுடாப் பகுதி தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கவுரவிக்க இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை”

  1. iniyan சொல்கிறார்:

    iyya, ungal “PATTAAMPOOCHIGAL ” Novel PDF format il en mail ku anuppa mudiyuma. Ungal parama visiri

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்