ஸ்ருதி ஹாசனின் பாசமிகு அங்கிள்களுக்கு…

டிஸ்கி எண் 1: அமெரிக்காவிலும் சில த்ராபை சினிமா தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் தான் அநேகம் தமிழ் படங்கள் வெளியாகின்றன.
டிஸ்கி எண் 2: நான் கமல் படங்களை விரும்பி பார்ப்பேன். கமல் படங்கள் மற்ற தமிழ் படங்களை விட பொதுவாக மேலானவை என நம்புபவன்.
டிஸ்கி எண் 3: உன்னைப்போல் ஒருவன் பார்க்கும்போது கொஞ்சம் சளியும் இருமலும் காய்ச்சலும் இருந்தது.

எவ்வளவோ முயன்றும் உன்னைப்போல் ஒருவன் படத்துடன் ஒன்ற முடியவில்லை. படத்தின் முதல் சறுக்கலே அங்கேதான் என நினைக்கிறேன். தீவிரவாதத்தின் தாக்கம் மிகக் குறைந்த தமிழ் நாட்டு மக்களுக்கு, தீவிரவாதத்தினால் நேரடியாக பாதிக்கப்படாத ஒரு ’சாதாரண மனிதன்’ தீவிரவாதியாகவே மாறி தன் அறக் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு கதையில் எத்தனை தூரம் ஈடுபாடு ஏற்படும் என்பது சந்தேகத்துக்குரியது. மீண்டும் மீண்டும் மீனம்பாக்கத்தில் குண்டு வெடித்ததை சத்தம்போட்டு தெரிவித்துக்கொண்டிருக்கிறார் ’சாதாரணர்’. நமக்குத்தான் அது நியாபகம் வரமாட்டேங்கிறது. ஆக தமிழ் நாட்டை பொருத்த மட்டில் இவர் நம்மைப்போல் ஒரு சாதாரணர் அல்ல. அசாதாரணர்.

ஆக இந்த சூப்பர் ஹீரோ படம் இந்தியன், சிவாஜி, வரிசையில் ஒரு சூப்பர்ஹீரோ படமாகவே வந்திருந்தால் போதுமானது. அதை ஒரு டாக்குமெண்டரி தரத்தில் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. படம் அதிகபட்சம் டாக்குமெண்டரி தரத்தில்தான் உள்ளது. ஒரு த்ரில்லருக்குரிய அம்சங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. டாக்குமெண்டரி என்று கூட சொல்ல முடியாது.

படத்தில் அதிகம் காண்பிக்கப்படும் அந்த ’வார் ரூம்’ எனப்படும் காவல் துறை கட்டுப்பாட்டறை டி.ஆர் போடும் செட்களை விட செயற்கையாக உள்ளது. யார் யாரோ கணினி முன் என்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். (அநேகமாக 50% ப்ளாக் படித்துக் கொண்டும் 50% ப்ளாக் எழுதிக்கொண்டும்). ஒவ்வொரு வரைபடத்தின் முன்னும் ஒரு ஆள் நின்றுகொண்டு ஏதோ 8ஆம் கிளாசில் இம்போசிஷன் வாங்கிய பையனைப்போல குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் தமிழ் நாட்டு வரைபடங்கள். மோகன்லாலைத் தவிர அங்கே வேரொரு, ஒரே ஒரு உயரதிகாரிகூட இல்லை. அவர் பேசப் பேச மற்றவர்கள் வாய்பாத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோகன்லால் திடீர் திடீரென லக்‌ஷ்மியுடன் ச்கோபித்துக்கொள்கிறார். ஒரு வேளை லக்‌ஷ்மி கேரக்டர் அவரோட மாமியார் என்பதை பூடகமாக சொல்கிரார்களோ?

படத்தின் மிக முக்கியமான காட்சி கமல் தான் யார் என விளக்கும் காட்சி ‘உங்க வீட்ல கரப்பான் பூச்சி புகுந்திடுச்சுன்ணா உள்ள விட்டு சோறு போடுவீங்களா..’ எனத்துவங்கும் அந்த டயலாக். ஹிந்தியில் இந்த வசனங்கள் சிறப்பாக உல்ளது மட்டுமல்ல நஸ்ருதின் ஷாவின் முகத்தில் நிஜமாகவே கரப்பான் பூச்சி தொல்லையால் பாதிக்கப்பட்டவனின் கோபமும் எரிச்சலும் தெரியும். கமல் இதை மிகவும் டவ்ன் ப்ளே செய்துவிட்டார். சொதப்பிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ஹிந்தியில் முன்னாபாய் சூப்பர் ஹிட்ட் ஆனபின் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் சொதப்பியது. கமல் இரு பெரும் முயற்சிகளுக்கு நடுவில் அதிக முயற்சியின்றி ஏதாச்சும் செய்துவிடுகிறார். அப்படித்தான் உன்னைப்போல் ஒருவன் தெரிகிறது. குறிப்பாக கமலின் பங்களிப்பு போதுமானதாயில்லை. படத்தில் ’ஆரிஃப்’, ’சேது’ தோன்றுகிற தருணங்கள் சிறப்பாயுள்ளன. டைரக்டர் அங்கே கலக்கியிருக்கிறார். மோகன்லால் சிறப்பாக நடித்துள்ளார். இது ஒரு த்ரில்லர் என்பதை இவர்கள் மூவரும்தான் நினைவுபடுத்துகின்றார்கள்.

படம் இந்துத்துவ பிரதி என்பதெல்லாம் அதிகம். அந்த தீவிரவாதிகளை இதைவிட செயற்கையான தீவிரவாதிகளை விஜயகாந்த் படத்தில்கூட பார்க்க முடியாதுபோல. படத்தின் முக்கிய செய்தி ’தீவிரவாதத்துக்கு எதிரான சரியான ஆயுதம் தீவிரவாதமே’ என்பதே. இந்த கருத்தை சொல்லும் இரண்டுபேர் படத்தில் உள்ளார்கள். ஒருவர் ஹீரோ கமல். இன்னொருவர் பெங்களூரிலிருந்து கொண்டுவரப்படும் தீவிரவாதி. அவர் தான் தீவிரவாதியானதற்கு இந்து தீவிரவாத்த்தை (பெஸ்ட் பேக்கரி) குற்றம் சாட்டுகிறார். கமல் சொல்ல வந்த செய்தி அந்த படத்திலேயே தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

படத்தில் காண்பிக்கப்படும் நிஜ தீவிரவாதி கேரக்டர் ஹரம்சந்த்லாலேதான். மற்ற மூவருக்கும் ஏதேனும் ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த இலக்கை அடைந்துவிட்டால் அவர்கள் தீவிரவாதத்தை கைவிடக் கூடும். ஆனல் ஹரம்சந்த்லால் ஒரு தீவிரவாத மாமா. அவன் யார் வந்தாலும் அவனுக்கு ஆயுதம் விற்பான். அவந்தான் நிஜ தீவிரவாதி. அவன் இங்கே கோழைபோல காண்பிக்கப்பட்டிருந்தாலும் இவனைப்போன்றவர்களின் இயக்கத்தில்தான் தீவிரவாதம் உலகெங்கும் அரங்கேறுகிறது.

படத்தின் தீம் சாங்கை கேட்டால்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ’சம்பவாமி யுகே யுகே’ எனச் சொல்லிச் செல்லும் பாடலில் குர் ஆனின்(அதன் சொற்கள் பின்பற்றப்படுவதாக) வரிகள் எதையாச்சும் எடுத்து போட்டிருக்கலாம். அப்படி வரிகளே குர் ஆனில் இல்லையா என்ன? பாடலாசிரியர் ஹமீது ஐயாவுக்கு தோன்றாமல் போனது ஏனோ தெரியல. பெஸ்ட் பேக்கரி, கருவறுப்பது போன்ற இந்துத்துவ தீவிரவாதத்தின் முகங்களை காண்பிக்க முயன்றிருப்பதைப்போல இதையும் செய்திருக்கலாம்.

படத்தை பார்த்த பலரும் ஸ்ருதியை ஆகா ஓகோ என்று சொல்லி எரிச்சல் படுத்துகிறார்கள். பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசையில் கோட்டை விட்டுவிட்டார். ஒரு த்ரில்லரை உருவாக்குவதில் இசைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால் நான் சொன்னதைப்போல இவர்கள் திர்ல்லரை அல்லாது ஒரு டாக்குமெண்டரியை எடுக்கத்தான் எத்தனித்திருக்கிறார்கள். பாவம் ஸ்ருதி. கமலின் மகள் என்பதால் அவரின் பாசமிகு அங்கிள்கள் அள்ளி வீசும் பாராட்டுக்களை நம்பி ஏமாந்துவிடாதிருப்பாராக. இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகம்.

பி.கு: இன்னும் உடம்பு சரியாகிவிடவில்லை. போய் தூங்கப் போகிறேன்.

Popularity: 11% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “ஸ்ருதி ஹாசனின் பாசமிகு அங்கிள்களுக்கு…”

 1. ஜோ சொல்கிறார்:

  சீக்கிரம் உடம்பு சரியாகி இன்னொரு முறை பாருங்க :)

 2. அமரபாரதி சொல்கிறார்:

  //படத்தை பார்த்த பலரும் ஸ்ருதியை ஆகா ஓகோ என்று சொல்லி எரிச்சல் படுத்துகிறார்கள்// சரியாகச் சொன்னீர்கள். எனக்கும் அதே போல தோன்றியது. நான் ஹிந்திப் படம் பார்க்கவில்லை. ஒரு ரீமேக் படத்தில் ஒரு இசையமைப்பாளரின் இசையைப் புகழ்வதை என்ன சொல்ல. படமே ஒரு காப்பி. நல்ல வேளை கதை சூப்பர் என்று சொல்லாமல் விட்டார்களே. சில இடங்களில் லொட்டு லொட்டென்று பின்னனி இசை கேட்கிறது. ஸ்ருதி நல்ல இசையமைப்பாளராக இருக்கலாம், ஆனால் ஒரு ரீமேக் படத்தை இசையமைத்து தொடங்க வேண்டியதில்லை.

  இதே போல போக்கிரி படம் வந்த போது, டைரக்ஷன் சூப்பர் என்று பாராட்டினார்கள். என்னத்தச் சொல்ல.

 3. ஹாய் அலெக்ஸ்,
  எப்படி இருக்கீங்க? நல்லாருக்கு விமர்சனம். கொத்து புரோட்டோ போட்டுட்டீங்க…

 4. //டிஸ்கி எண் 3: உன்னைப்போல் ஒருவன் பார்க்கும்போது கொஞ்சம் சளியும் இருமலும் காய்ச்சலும் இருந்தது. //

  அலெக்ஸ் ஜி! இருமலும் காய்ச்சலும் கூட படம் விமர்சனத்துக்கு தூண்டு கோளாக இருந்திருக்குமோ:)

  நீங்கள் குறிப்பிட்ட இறுதிக் காட்சியில் நசுருதீன் ஷா முன்னிற்கிறார் என்பதில் மட்டும் உடன்படுகிறேன்.படம் கரு மூலம்,மொழியாக்கம் இரண்டிலுமே யதார்த்தமில்லை என்பது வேறு விசயம்.ஆனால் படத்தின் மொத்தம் உன்னைப் போல் ஒருவன் சிறப்பு.

 5. உடன்பிறப்பு சொல்கிறார்:

  அங்கிள்களை பற்றி குறிப்பிட்ட நீங்கள் ஸ்ருதிஹாசனை பாராட்டிய ஜெயலலிதாவை பற்றி எதையும் சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்

 6. வடுவூர் குமார் சொல்கிறார்:

  ஹிந்தி பதிப்பை பார்த்ததால் என்னாலும் படத்தோடு ஒன்றமுடியவில்லை.

 7. உ.இயக்குனர் சொல்கிறார்:

  நீங்கள் இதைத்தான் சில்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சினிமாவில் இது மிகவும் சஜஜம். பாலச்சந்தர் எழுதி வைத்துபடிக்கிறார் தெரிகிறதா?

  http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19575.html

 8. காஸ்மிக் தூசி சொல்கிறார்:

  நல்லாத்தான் எழுதிரிக்கீங்க! எதுக்கும் உடம்பு சரியானதும் இன்னொரு முறை பாத்துடுங்க!

 9. Jeyakumar சொல்கிறார்:

  அடுத்தமுறை கமலைப்பார்க்கும் போது அடுத்த படத்தின் கதையை உங்களிடம் ஒரு முறை டிஸ்கஸ் பண்ணிட்டு எடுக்க சொல்கிறேன். அதோடு ஒவ்வொரு காட்சியையும் எடுத்த பிறகு உங்களிடம் போட்டுக் காட்டி கருத்துக் கேட்க சொல்கிறேன். ஓவர் ஆக்டிங்கை எதிர்பார்க்கும் உங்களிடம் ஒவ்வொரு காட்சியிலும் கமல் நடிப்பதற்கு முன் உங்களிடம் ஒரு முறை நடித்து காட்டி ஓகே வாங்க சொல்கிறேன்.

  வேறு எதாவது விட்டுபோயிருந்தா சொல்லுங்க அதையும் சொல்லிடுறேன்.

 10. ஜோ, காஸ்மிக் தூசி (சூப்பர் பேரு)
  இன்னொரு முறை நிச்சயம் பார்க்கவேண்டும். ஏன்னா கமல் மீது இவ்வளவு டிஸ்ஸப்பாயிண்ட் ஆகிறது ஈசி இல்ல.

 11. ராஜ நடராஜன்,
  அந்த காட்சிதான் படத்தின் அதிமுக்கிய காட்சி. அதை நோக்கிதான் படமே போகுது. எல்லோரும் கமல் அண்டர்ப்ளே பண்ணியிருக்காருண்ணு பெருமையா சொல்லுறாங்க. என்னால ஏத்துக்க முடியல. கொஞ்சம் கோபமான டயலாக் இருந்திருந்தா அவரும் அப்படி நடிச்சிருப்பாரோ என்னவோ. சட்டு சட்டுன்னு டயலாக் வந்திருக்கவேண்டிய இடத்துல ப்ரேக் விட்டு கருவறுக்கிறதையெல்லாம் எக்ஸ்ப்ளெயின் செஞ்சு.. எல்லாருக்கும் தெரிஞ்ச் அவிஷ்யந்தானே பட்டுன்னு போட்டு சொல்லலாமே.. திரும்பவும் மீனம்பக்கம் குண்டு வெடிப்ப சொல்லிக்காட்டிட்டு.. தமிழனுக்கான நியாத்த சுட்டிக்காட்டிட்டுன்னு போர் அடிக்க வச்சிட்டாரு..

 12. ஜெயக்குமார்,
  நீங்க கமல் ரசிகர்ணு நம்புறேன். அவர் அண்டர்ப்ளே நடிச்ச படங்களப் பாத்தா ரசிகரானீங்க? அவர்பாட்டுக்கு நடிக்கட்டுமே. எதார்த்த நடிப்பு ஒரு கலைப்படத்துக்கு வேணும்னா அவசிரமாயிருக்கலாம். இங்கேகூட எதார்த்தமா எரிச்சலோட கோபத்தோட அவர் பேசியிருக்கலாம். ஏதோ எனக்குத்தான் ரசன மாறிடுச்சோ என்னவோ.

 13. உ. இயக்குனர். ஆமா அதை பாத்துதான் தலைப்பு வச்சேன்.

 14. உடன்பிறப்பே,
  அம்மா பாவம் சும்மா விடாது. :)

  வடுவூர்,
  ஆமாங்க படத்டதுல நுழைய முடியல.

 15. NO சொல்கிறார்:

  அன்பான நண்பர் திரு சிறில் அலெக்ஸ்,

  குழப்பமான கருத்தாய்வு பயத்தின் வெளிப்பாடு!! சினிமாவாகவே இருந்தாலும் கூட!

  பயம் என்றால் உடலுறுப்பு சேத பயமோ, சார்ந்தவர் தீங்கிர்க்குட்ப்பட்டு விடுவார் என்ற பயமோ, சொத்துகளையும், சோற்றையும், மானத்தையும் மரியாதையையும்
  இழந்து விடுவோமோ என்ற பயமோ இல்லை இது!

  பின் என்னதான் இந்த பயம் ஏன்தான் இந்த பயம் ??????

  விடை தெரியாதவன் தான் விக்கித்து நிர்ப்பான், தெரிந்தவன் தயக்கமில்லாமல் கூறுவான்!

  நண்பர் சிறில் அவர்களுக்கு என்றும் நான் பார்த்திராத ஒரு பயம் இப்பொழுது! ஆரம்பம் தொட்டே, தமிழ் வலைத்தளங்களில் அது நன்றாக பரவி இருந்தாலும் சமீப காலமாக, உன்னை போல ஒருவன் வந்த பிறகு அது மிக தீவிரமாக, வீரியமாக உருவெடுத்து பலரை பயங்கொள்ள செய்திரிக்கிறது!!

  அதான் சார், ” பிற்போக்கிஸ்ட்” என்று முற்போக்கோ phobia பிடித்தவர்கள் முத்திரை
  குத்தி விடுவார்களோ என்ற பயம் பயம் பயம்………….

  நன்றி

  நோ

 16. vannai rajan சொல்கிறார்:

  maple,
  ennadhan irundhalum kamal, kamaldhan.
  avan panna mumabi xpressa vida idhu evvalavoe mael.
  this indeed reminds me of kurudhi punal.
  but i still feel kamal, must be original as he mostly is.

  hope the cough is better now.

 17. அன்பு நண்பர் நோ. நீங்க உங்களை யாருண்ணு காட்டிக்கலியே? ஆனா அடுத்தவர் பயத்தை சுட்டுவதில் என்ன நியாயம்? கலக்குறீங்க நண்பரே.

 18. vannai rajan சொல்கிறார்:

  adiyaen poorvikam chennai palaya vannarapaetai! engo kaetta kural madhiri iruka? andha kalathula enna friends ‘film news anandhan’u koopuduvanga, including the great ‘rose cottage’ technocrat

 19. Vanni Raja,
  i know who you are man. Thanks for visiting the blog. read more articles and let me know your feedback.

 20. அதிமேதாவித்தனம் என்னும் எண்ணத்தில் உருவான உங்கள் அதிகப்பிரசங்கித்தன விமர்சனத்தை ரசிக்க முடியாதது மட்டுமல்ல, சகிக்கவே முடியவில்லை.

 21. AVINASH சொல்கிறார்:

  kuraiye illaamal ungalal koda padam eduka mudiyathu…kurai solluvathu romba easy…cinemavai enjoy pannunga athula ph.d seiythu kurai kaanathir. sruthiyin pinnai isai sumar thaan but namaku appadi koda isaiamaika theriyalaye….so in cinema dont search for mistakes try to appreciate the good points……….avinash.m

 22. bala சொல்கிறார்:

  அன்புள்ள சிறில், படம் பாத்துட்டு, புதன் கிழமையையும் பார்த்தேன். drooping shoulders உடன், நஸ்ருதீன் ஷா பையைச் சுமந்து ரயில் நிலையம் செல்லும் காட்சியிலேயே அந்தக் கதாபாத்திரம் யார் என்று புரியவைக்கப் படுகிறது. அவர் கமிஷனரிடம் பேசும் முதல் டயலாக்கில், “ராத்தோட் ஸாப்..” என்ற விளிப்பிலும், ஷா நம் மனத்தில் உருவாக்கும் நபர் வேறு. நம்மாள் படம் ஆரம்பிக்கும் போதே கன்னா பின்னா என்ற ஒயர்களை ஸால்டர் செய்யும் டெக்னீசியனாக, கமிஷனரை அதட்டும் (மிஸ்டர் அய்.ஜி.ஆர். மாரார்?) ஹீரோவாக வருகிறார். ஒவ்வொரு காட்சியிலும் கமல் நம்மோடு உரையாடுகிறார். நான் கமலஹாஸன் சொல்வதென்னவென்றால்னு.. வானம்பாடிக் கவிஞர்களின் மொழியைத்த தாண்டி கமல் தேவதேவனை நோக்கிப் பயணித்தால் ரொம்ப நல்லா இருக்கும். கமலுக்கு அதற்கான உழைப்பு சாத்தியம்..

 23. அன்புள்ள பாலா.
  கருத்துக்கு நன்றி. படம் பார்த்து இத்தன நாளுக்குப்பிறகும் மனசில் அந்த ஏமாற்றம் இருக்குது. அண்மையில் பசங்க படம் பார்த்தேன் அதில் நடித்த சில உதிரி நடிகர்கள் மிகத் திறமையாக செய்திருந்ததுபோல தோன்றியது. ஒருவேளை கதையும் வசனமும்தான் கமலின் நடிப்புக்கு இணையா இல்லையோன்னு தோணுது.

  ஒண்ணு ரெம்ப கஷ்டப்பட்டு ஏதாவது செய்யுறார் இல்லை மீடியாக்கரா ஏதாச்சும் செய்யுறார். உங்க பாஷையில சொல்லப்போனா ‘நெம்பக் கஷ்டம்’.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்