பட்டியல்

மீண்டும் ஒரு ரவுடிக் கதை என்று சொல்ல முடியாத படம். காட்சியமைப்புக்கள் உண்மைக்கருகிலுள்ளன. இசை, படத்தொகுப்பு, கலை என எல்லாமே முழுமையாய் ஒன்றிணைந்திருக்கின்றன.

கதை ரெம்ப புதுசு என்றில்லை. காசுக்கு கொலை செய்யும் இரண்டு அடியாள் நண்பர்கள், அவர்களின் காதலிகள், இவர்களுக்கு ‘வேலை’ வாங்கித்தரும் ‘கொலை’த்தரகர் மற்றும் இவர்களால் கொல்லப்படுகிற சிலர் என சிறிய வட்டத்துக்குள் படமாக்கப்பட்டுள்ளது.

வெறும் திரைக்கதையையும் காட்சியமைப்பையும் நம்பி எடுக்கப்பட்ட படம். கடைசிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வி இல்லமல் ஓடுகிறது, இறுதியில் வைக்கப்படும் ஒரு சிறு முடிச்சு தவிர.

எல்லொரின் நடிப்பும் அபாரம். ஆர்யா பத்மப் பிரியா காதல் வல்லினம், பரத் பூஜா காதல் மெல்லினம்.

பரத், ஆர்யாவின் வீடு துவங்கி எக்ஸ்போர்ட் கம்பனிவரை எதார்த்தமான சூழலில் படமாக்கம் நன்றாயிருக்கிறது. தொழில் நுட்ப நேர்த்தி அசரவைக்கிறது.

ஹனிபாவிற்கு தமிழில் மீண்டும் ஒரு அருமையான பாத்திரம், அழகாய் செய்திருக்கிறார். அவரிடம் அடிக்கடி வேலை கேட்கும் பையன் நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்பிரியா கலக்கியிருக்கிறார், ‘தவமாய் தவமிருந்து’ பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமளிக்கக்கூடும். பரத் ஊமை+செவிடாய். ஆர்யா பரத்திற்கும் சேர்த்து பேசித் தீர்க்கிறார். இருவர் நடிப்பும் அருமை.

இயக்குநர் விஷ்ணுவர்த்தனுக்கு பாராட்டுக்கள். நிச்சயமாய் இது ஒரு இயக்குநரின் படம். படத்தின் முடிவை மிகவும் ரசித்தேன். ராம் கோபால் வர்மாவை ஏனோ நினைவூட்டுகிறது இந்தப் படம்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “பட்டியல்”

 1. கால்கரி சிவா சொல்கிறார்:

  சிறில், நான் பார்பதற்கு முன் முந்தி விட்டீர்களே. சரி நான் அடுத்து பார்க்கபோகும் படம் என்னுடைய அபிமான வச்சோஸ்கி ப்ரதெர்ஸின் V பார் ….

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எனக்கும் ஆசைதான். மனைவி குழந்தையை கூட்டிக்கொண்டு V பார் போகமுடியவில்லை. மின் தட்டில் வந்தபின் பார்க்கலாம்..

 3. Ram.K சொல்கிறார்:

  நான் இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் படத்தின் விளம்பரம் ஏனோ என்னை வசீகரிக்கவில்லை. உங்கள் விமரிசனம் நன்றாக இருக்கிறது.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Chameleon – Thanks
  பார்த்துவிட்டு சொல்லுங்கள்

 5. G.Ragavan சொல்கிறார்:

  சிறில்…படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகின்ற விமர்சனம். தவமாய்த் தவமிருந்திற்குப் பிறகு தமிழில் எதுவும் பார்க்கவில்லை. இதைப் பார்க்கலாம் போலத் தெரிகிறது.

 6. ஜோ / Joe சொல்கிறார்:

  பல முனைகளிலிருந்தும் வரும் விமரிசனங்கள் பார்க்கவேண்டிய படம் என்று சொல்கிறது .வியாபார ரீதியிலும் பெரிய வெற்றி எனத் தெரிகிறது .ஆர்யா இதுவரை என்னை கவர்ந்ததில்லை (குறிப்பாக ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தில் சில காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது ,அவர் சோகமாக வசனம் பேசும் போது எனக்கு சிரிப்பு வந்தது)..பார்க்கலாம் இந்த படத்தில்..விமரிசனத்துக்கு நன்றி!

 7. வசந்தன்(Vasanthan) சொல்கிறார்:

  சமீப காலமாக தமிழ்ச்சினிமாப் போக்கு திருப்தியிளிக்கிது. அண்மையில் வந்த சில படங்கள் (பட்டியல், சித்திரம் பேசுதடி, டிஷ்யூம், மெர்குரி பூக்கள், கோடம்பாக்கம் போன்றன) வித்தியாசமான முயற்சிகள் என்பதுடன் வியாபார ரீதியாகவும் ஓரளவு பெற்றிபெற்றுள்ளனவென்பது நல்ல விடயமே.
  பெரும்பாலானவை அறிமுகமற்ற புதுமுகங்களின் படங்கள். இவற்றின் வெற்றியும், முதன்மை நடிகர்களின் மலட்டுப் படங்களின் தோல்வியும் ஒரு சமநிலையைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலை தொடர்ந்தால் கொஞ்சம் முன்னேற்றம் தெரியும்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்