ஐயா நீர் கவிஞர்


ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பாரதியைக் கண்டுபிடித்தேன்.தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரைத் தேடாதவர்களுக்கும்.

http://www.pondy.com/bharathiar/

‘அமுதூற்றினை யொத்த இதழ்களும் – நில
வூறித்தத்தும்பும் விழிழ்களும்’

‘உயிர்த்
தீயினி லேவளர்சோதியே – என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே..’

காதல் வராதவர்களுக்கு மருந்து இந்த வரிகள்.

‘மாதர் தம்மை இழிவு செய்யு
மடமை யைக்கொ ளுத்துவோம்…’

இதக் குஷ்பூ எப்படி எடுத்துக்கொண்டாரோ?அவரை சாடியவர்கள் எப்படி எடுத்துக்கொண்டனரோ?

‘உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடீ
மெச்சி யுனையூரார் – புகழ்ந்தால்
மேனி சிலிர்குதடீ’

ஒரு பெற்றவராய் இதை உணராதவர் யார்?

‘சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி – கண்ணம்மா

வானக் கருமைகொல்லோ’

பாரதியைப் படித்து மீண்டுமொருமுறை மெய் மறக்கிறேன்.

“ஐயா நீர் கவிஞர்”, தருமி இன்றிருந்தால் இந்தப்பட்டம் பாரதிக்குத்தான்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்