கனி’வான’மொழி!

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே.

மார்கழியின் மடியிலே
மாடடையும் குடிலிலே
மானுடத்தின் மீட்பனாய்
அன்னை மரியின் அணைப்பினிலே
இதழில் புன்னகை பூத்திருக்க
நிலவின் கதிர்போல
கண்வளராய் அழகே.

மார்கழியின் மடியிலே
வானின் வெள்ளி
அழைக்குதந்த அழைத்து வந்த
ஞானியர் உன்னை வணங்கி நின்றார்
காலமே உறைந்ததை மறந்து நின்றார்
வேதமே மெய்ப்பொருளே
கண்வளராய் அழகே.

கால காலமாக
தடங்கள் தேடினோமே
கனவு மெய்ப்படவே
கண்ணே வந்தாயோ?

மார்கழியின் மடியிலே
வானவர்கள் பண்ணிசைக்க
அன்பில் மானுடம் நெகிழ்ந்திடவே
வான்மழையாய் வந்த இறையருளே
வான்சுடரே எழிலே
கண்வளராய் அழகே.

பாடலைக் கேட்க.

Cover

பின் குறிப்பு: ஜெயமோகனின் கிறிஸ்துமஸ் கவிதை ’கடவுளின் மைந்தன்’

——————————–o00o—————————————–

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....6 மறுமொழிகள் to “கனி’வான’மொழி!”

 1. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 2. அழகான பாடல் ..
  உங்களுக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  \\அழைத்து வந்த// ந்னு வரனுமா பாருங்க

 3. முத்துலட்சுமி,
  அழைத்து வந்ததான் சரி. மாத்திட்டேன்.
  நன்றி.

 4. ஆயில்யன் சொல்கிறார்:

  இனிய கிருஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துக்கள் பாஸ் :)

 5. சிறில்

  கனிமொழி ரொம்ப மூச்சுமுட்டி எழுதியிருப்பதாக தெரிகிறது. இதற்கு சொற்கூட்டுதல் என்று பெயர்- கவிதை என்றல்ல
  ஜெயமோகன்

 6. nanjilan சொல்கிறார்:

  ungal katturaikal okey!but kavidhaikal padikka chakikkavillaye

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்