குளிர்காலக் கவிதைகள்

Snow

அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம்.

அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள்.

காலநிலை

நொடிக்கு மூன்று கார்கள் செல்லும்
இந்தச் சாலையோரத்தில்
இரண்டடி பனிக்குவியலில்
கால்தடங்கள்.

நடுங்கியபடியே அங்கே
நடந்து சென்றவர் யார்?

வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா?
வீடற்ற கறுப்பரா?
வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா?

அந்த வெள்ளைத் தாளில் தெரிவது
ஏழ்மையின் காலெழுத்துதானா?

இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம்
வாங்காத இந்திய மென்பொருளாளரின்
இயலாமையா?

சற்று நேரத்தில்
அதுவும் அழிந்து போகும்
என்கிறது வானொலி.

-o0o-

பனி வீழ்ச்சி!

என்ன பாரம் தாங்காமல்
வந்து வீழ்ந்து கிடக்கிறது
மேகம்?

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “குளிர்காலக் கவிதைகள்”

 1. Sivabalan சொல்கிறார்:

  Cyril,

  Excellent!

 2. Thanks Sivabalan.

 3. முதல் கவிதையில் மற்றவர்களை எல்லாம் அவர்கள் நாட்டை குறிப்பிட்டு சொல்லிவிட்டு ‘கறுப்பர்’ என்று தனியாக சொல்வது ஒரு மாதிரி உறுத்தலாக இருக்கிறது. ஆப்பிரிக்கர் என்று சொல்லியிருக்கலாமே

 4. ////இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம்
  வாங்காத இந்திய மென்பொருளாளரின்
  இயலாமையா?//
  இருக்கலாம். நானும் அந்த வகையறா தான் :-)

 5. //பனி வீழ்ச்சி!

  என்ன பாரம் தாங்காமல்
  வந்து வீழ்ந்து கிடக்கிறது
  மேகம்?
  //
  மிகவும் ரசித்தேன் :)

 6. பிரேம்குமார் கருத்துக்களுக்கு நன்றி. கறுப்பர்களும் வெள்ளையர்களும் அமெரிக்க நாட்டவர்தானே? அதனால் அதை சொல்லாமல் விட்டுவிட்டேன்.

 7. Senthil Kumaran சொல்கிறார்:

  கவிதைகள் அமெரிக்க சூழலில் எழுதியுள்ளீர்கள் சரியா? கொஞ்சம் வானம்பாடிகள் ஸ்டைலில் வந்துள்ளது.

 8. காஸ்மிக் தூசி சொல்கிறார்:

  பாரம் தாங்காமல்
  வந்து வீழ்ந்து கிடக்கிறது
  மேகம்
  – நல்லாருக்கு…
  :)

 9. D.R.Ashok சொல்கிறார்:

  நல்லாயிருக்குங்க :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்