சென்னை

செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து
சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம்
ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை.

அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20
நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக்
கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில் வண்டி ஓட்டி
வருகின்றனர். பளிச்சென்று ‘தலைப்பு விளக்கம்’ (head லைட்டை இப்படித்தன்
அரசின் தகவல் பலகை ஒன்று குறிப்பிடுகிறது) போட்டால் எங்கே வேண்டுமானாலும்
ஒட்டலாம் என்பது நம் டிராவல்ஸ் ஓட்டுநர்களின் நம்பிக்கை போலும்.

மற்றபடி சாலை மிகவும் வசதியாக உள்ளது. சுங்கம் இருவளி பயன்பாட்டுக்கு ரூ.
45. தினசரி பயன்பாட்டுக்கு மிக அதிகம்.

விலைவாசியும் கதாநாயகர்களின் மீசையைப் போலவே உயர்ந்து நின்று பயம்
காட்டுகிறது. ஒரு மாதம் குறைந்த பட்ச பெட்ரோல் செலவு ரூ. 5000.
முகப்பேரில் 900ச. அடி வீட்டு வாடகை 12ஆயிரம். ஃபோன் + இன்டர்நெட்
செலவுகள் மொத்தம் 3000 தாண்டிவிடும். 1கிலோ வவ்வால் மீன் ரூ. 130. கிலோ
அரிசி 40+. 300 ரூபாய்க்கு பழங்கள் வாங்கினால் இரண்டு நாட்களுக்குக் கூட
வராது. ஒருவேளை நான் மட்டும்தான் 100 ரூபாய்க்கு இன்னும் மதிப்புள்ளதாக
நினைக்கிறேனோ என்னவோ. பத்தாயிரம் பத்தாயிரமாக ஏ.டி.எம்மில் எடுக்க
வேண்டியுள்ளது.

ஒரு கார்பென்டரின் அரை நாள் கூலி ரூ 350.

வீட்டுக்குத் தேவையான சாமான்கள் சட்டிகளோடு செட்டிலாக ஆன செலவு இரண்டரை
லட்சத்துக்கும் மேல், கார் + அட்வான்ஸ் + பள்ளி செலவு என இன்றைக்கு ஒரு
சாதாரண இரண்டு படுக்கை அறை அடுக்கு மாடி வீட்டில் செட்டில் ஆக செலவு
மொத்தம் 8லட்சத்துக்கருகில். வாங்கும் காருக்கும் செல்லும் பள்ளிக்கும்
ஏற்ப நீட்டலாம் குறைக்கலாம்.

என்னதான் விலைவாசி எகிறினாலும் எல்லா கடைகளிலும் கூட்டம் கூட்டம் அதி
கூட்டம்.

சென்னை பண்பலையில் சில நல்ல ஜாக்கிகள் இருக்கிறார்கள். ஆனால் வெறும்
பொழுதுபோக்கு அம்சங்களே உள்ளன. உருப்படியான விஷயங்களைக்கூட கேலியாகவே
பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தொலைக்காட்சியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மெதுவாக உயர் தர தொலைக்
காட்சி சிக்னல்கள் வர ஆரம்பித்துள்ளன. நான் ஏர்டெல் டி.டி.கெச்ல்
எம்பெக்4 நுட்பத்தில் பார்க்கிறேன். என்ன இருந்தாலும் அதே சேம் ஓல்ட்
நிகழ்ச்சிகள்தான். நீயா நானா பிடித்திருக்கிறது. அங்கே நடக்கும்
விவாதங்கள் சிலசமயங்களில் சலிப்பூட்டலாம் இருப்பினும் நம்மை சிந்திக்க
வைக்கின்றன தலைப்புக்கள். இன்னும் சீராக தொ. கா பார்க்க ஆரம்பிக்கவில்லை.

குழந்தைகளுக்கென்று தமிழில் நிகழ்ச்சிகளை தயாரிக்காமல் மொழிபெயர்ப்பு
நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்புகிறார்கள். அவை சலிப்பூட்டுகின்றன. நம்
குழந்தைகளுக்கு தமிழில் நிகழ்ச்சிகள் தயாரிக்க ஆட்கள் இல்லையா? சேம் சேம்
பப்பி சேஎம். செம்மொலியான டமில் மொலியாம் என ஏன் அவன் பாடமாட்டன்?

சென்னை மேம்பாலங்கள் போக்குவரத்தை சிறிது மேம்மடுத்தியுள்ளன என்று
சொல்லலாம். இல்லையேல் இருக்கும் இத்தனை வாகனங்களும் ஒரு இடமும் போய் சேர
முடியாது.

விவேக் பட்டியலிட்டவர்களை விட அதிகமான பேர் ரோட்டை தோண்டிவைத்துள்ளனர்.
தோண்டிய ரோட்டை மூடிவிடுவதோடு சரி வேலையோடு வேலையாக ரோட்டில் மீண்டும்
தார் போட்டுவிட்டால் என்ன?

பல கடைகளும் நேர்த்தியாக உள்ளன. சிப்பந்திகள் சீரான உடையில் உள்ளனர்.

ஆங்காங்கே  பூங்காக்கள் பல நிறுவப்பட்டுள்ளன. பளிச்சென்று இவை
காணப்படுகின்றன. பலரும் வாக்கிங் போக இவற்றை பயன்படுத்துகிறார்கள். நல்ல
விஷயம்.

பல மால்கள் வந்துள்ளன.

பழைய திரையரங்குகள் பலவும் புதுப்பிக்கப்பட்டு புது படங்கள்
வெளியிடப்படுகின்றன குறிப்பாக வில்லிவாக்கம் போன்ற முன்பு தூரமானவையாக
கருதப்பட்ட இடங்களில்.

ஐ.டி யில் எல்லோரையும் பென்ட் எடுக்கிறார்கள். 9மணி நேரம் கட்டாயம் வேலை
செய்ய வேண்டும் + குறைந்த பட்சம் 2மணி நேரமாவது பயணம் ஆக 11 மணி நேரம்
காலி.

எல்லாம் குறையாகவே சொல்லிட்டேனோ? இதுக்கெல்லாம் மத்தியில இன்பம் நிச்சயம்
இருக்குது. குறிப்பா வாழ்க்கை உயிரோட்டமுள்ளதா இருக்குது. சோதனைகளை,
சவால்களை சந்திக்காத வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என
உணர்ந்திருக்கிறேன். இந்த புது மாப்பிள்ள முறுக்கு தேனிலவு தாண்டியும்
நீடிக்கும் என நம்புகிறேன்.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....21 மறுமொழிகள் to “சென்னை”

 1. Vijayashankar சொல்கிறார்:

  முகப்பேரில் தங்க அவசியம் என்ன? பள்ளிகரனையிலே வீடு எடுத்திருக்கலாம் அல்லவா? அப்புறம் பள்ளிகள் அட்மிசன் பற்றி விரிவாக எழுதவும்.

  யு எச்சில் இருந்து 1999 இல் பெங்களூரு வந்து செட்டில் ஆன போது, 2007 இல் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து செட்டில் ஆன போது ( தற்காலிக செட்டில் தான் ) உங்கள் மாதிரி பிரச்சனை சந்தித்தேன். வீட்டு வாடகை மட்டும் கொஞ்சம் அதிகம், ஸ்கூல் அட்மிசன் டொனேசன் அதிகம் என போனது. எனது எஸ்டீம் காரை நிறுத்த பார்கிங் லாத் இடம் பத்தவில்லை. விற்று விட்டு சிறு புது கார் வாங்கினேன்.

  நீங்க எந்த கம்பெனி? எந்த டொமைன்? அமெரிக்காவிலேயே இருந்திருக்கலாம்,குழந்தைகள் நலன் கருதி. ( எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் செல்வேன் )

  அதிக சம்பள ஆட்களை துரத்தி அடிக்கும் வழக்கம் இந்தியாவில் அதிகம்.

  ஜால்ராக்களுக்கு தான் அதிகம் மதிப்பு எந்த கம்பெனியிலும். என் அடியில் வேலை பார்த்த ஒருவன் ( அதே மேனேஜர் லெவல் தான் – எக்ஸ்பீரியன்ஸ் என்னை விட ஐந்து வருடம் குறைவு – திடீரென்று ஒரு நாள் எனக்கு மேலே டைரக்டர் ஆன கதையும் உண்டு – இருவருக்கும் ஒரே வித்தியாசம், அவன் ஒரு சோப்பாளி – கம்பெனி தொடங்கிய காலம் முதல் இருக்கிறான்.. செல்லம் எம்.டிககு! ரிமோட் கார் பயித்தியங்கள் – சேர் செய்து கொள்வார்களாம்! )

 2. selvanayaki சொல்கிறார்:

  சிறில்,

  நீங்கள் தாய்மண்ணுக்குப் பல ஆண்டுகள் கழித்துத் திரும்பப்போய் வாழ்வைத் துவக்கியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த அனுபவப் பகிர்வுக்கு நன்றி. பல விடயங்கள் மிகுந்த தயாரிப்புகளோடு திட்டமிடவேண்டும் என உணர்த்துகின்றன.

  குழந்தைகள் பள்ளியை எப்படி எடுத்துக்கொண்டார்கள்? அவர்களின் பிரச்சினைகள் (ஏதும் அப்படி அவர்கள் ச்ந்தித்திருந்தால்) அவற்றைச் சரியாக்கும் முறைகள் என உங்களின் அத்தகைய அனுபவங்களையும் பகிருங்களேன்.

 3. //விலைவாசியும் கதாநாயகர்களின் மீசையைப் போலவே உயர்ந்து நின்று பயம் காட்டுகிறது.//

  ஹஹஹ .நல்லாச்சொன்னீங்க…. இப்போ சென்னை வந்துவிட்டீர்களா??? அப்போ நீங்களும் இனி சென்னைவாசியாயிட்டீங்க… முட்டத்தை மறந்துடாதீங்க அலெகஸ் :))

 4. சிறில்,
  சென்னை வாழ்வதற்கு அருமையான நகரம். விலைவாசியெல்லாம் குறைவுதான்.(பெங்களூரோடு ஒப்பிட்டால்) ஆனால் மழைக்காலத்தில் சாக்கடையில் தெருக்கள் மூழ்கி வெனிஸ் எபெக்ட் கொடுக்கும். :p

 5. soundr சொல்கிறார்:

  //இந்த புது மாப்பிள்ள முறுக்கு தேனிலவு தாண்டியும்
  நீடிக்கும் என நம்புகிறேன்//

  :)

 6. SIVABALAN சொல்கிறார்:

  சிறில்,

  மீன்டும் உங்கள் எழுத்துக்களை வாசிக்க கிடைத்தமைக்கு நன்றி. நல்லா எழுதியுள்ளீர்கள்.
  முகப்பேறு டூ பள்ளிக்கரணை – வெகு தொலைவு சென்னையை பொருத்த வரை.. ம்ம்.. விடுங்க வாழ்க்கை வாழ்வதற்கே..

  – சிவபாலன்.

 7. Rishaban சொல்கிறார்:

  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!!

  வெளிநாட்டில் இருந்து விட்டு இந்தியா வந்து தங்கும் போது நாம் வெகு விரைவில் சகஜ நிலைக்கு வந்துவிட முடியும். ஆனால் இந்தியாவில் பிறந்து வளராத குழந்தைகள், இங்க இடம் பெயரும் போது எப்படி எடுத்துக் கொள்ளுவார்களோ தெரியவில்லை.

  இந்த பொருளாதார மந்த நிலையிலும் தம் இருப்பை தக்க வைக்க பல இந்தியர்கள் போராடுவது அதனால் தானோ.

 8. Haranprasanna சொல்கிறார்:

  முகப்பேரிலிருந்து பள்ளிக்கரணைக்குச் செல்வதற்குப் பதிலாக, திருநெல்வேலிக்கே எளிதாகப் போய் வரலாம். :)

  இதுதான் இந்தியா, ரண பூமி, ரத்தகளம்!

 9. ramji_yahoo சொல்கிறார்:

  வீட மாத்துங்க,

  மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி , மேடவாக்கம் பக்கம் வந்து விடுங்கள்

  பள்ளிக்கரணையில் எங்கே டாட கன்சல்டன்சி அல்லது காக்னிசன்ட்

 10. Annakannan சொல்கிறார்:

  சென்னை மாநகரம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் முக்கிய பாடம், TAKE IT EASY.

 11. Good one. I guess it’ll help me in the future:)

 12. ramji_yahoo சொல்கிறார்:

  நான் உங்களை புண்படுத்த எழுத வில்லை, பொது கருத்தாக எழுதுகிறேன்.

  உங்களது இந்த பதிவும், எண்ணமும் அப்படியே பொது புத்தியாக உள்ளது. அமெரிக்க, அரபு நாடுகளில் இருந்து வந்து நம் நாட்டில் வந்து வாழும் எவரும்
  புலம்பும் அதே வார்த்தைகள்.

  ஜெமோ வின் எல்லா இணைய படைப்புகளையும் நீங்கள் படித்து இருப்பீர்கள், பதிவேற்றம் செய்து இருக்கிறீர்கள். அவரின் எழுத்துக்கள் உங்கள் பொது புத்தியில் (பொது புத்தி சார்ந்த எண்ணங்களில்) எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை யோ.

 13. //முகப்பேரில் தங்க அவசியம் என்ன? பள்ளிகரனையிலே வீடு எடுத்திருக்கலாம் அல்லவா? அப்புறம் பள்ளிகள் அட்மிசன் பற்றி விரிவாக எழுதவும்.//
  மாமனார் வீடு வில்லிவாக்கத்தில் இருப்பதாலும் பள்ளி வசதிகள் கருதியும் அங்கே தங்க முடிவெடுத்தோம். செட்டில் ஆகும்போது பல உதவிகளும் தேவைப்படும். அதற்கு அவர்கள் அருகில் இருந்தால் வசதி.

  பள்ளி அட்மிஷன் நிச்சயம் கிடைக்கிறது. ரெக்கமென்டேஷன் அல்லது டொனேஷன் எதிர்பார்க்கலாம். பையனுக்கு ரெக்கமெண்டேஷனில் வீட்டுக்கு அருகிலேயே ஒரு பெயர்போன பள்ளியில் இடம் கிடைத்தது ஆனால் அங்கே 51 மணவர்கள். பிறகு டொனேஷன் ரெக்கமென்டேஷன் இல்லாமல் ஒரு நடுத்தரப் பள்ளியில் என் பையனை சேர்த்தோம். 30 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் இவன் இன்னும் சிறப்பாக ஷைன் செய்வான் எனும் எண்ணம் காரணம்.

 14. //குழந்தைகள் பள்ளியை எப்படி எடுத்துக்கொண்டார்கள்? //
  என் பையனுக்கு அமெரிக்காவிலேயே பல பள்ளிகளில் ப்டித்த அனுபவம் உண்டு. இரண்டரை வருடங்களுக்குள் அவன் நான்கு பள்ளிகளில் சேர்ந்து படித்தான். அதனால் அவனால் இங்கேயும் ஓரளவுக்கு எளிதாக அடாப்ட் ஆக முடிந்தது என நினைக்கிறேன்.

  குழந்தைகள் இங்கே வரும்போது எளிதில் உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். வயிற்றுப்போக்கு காய்ச்சல், தோல் நோய்கள் எளிதில் வந்துவிடுகின்றன.

 15. மதி.இண்டியா சொல்கிறார்:

  சிறில் ,

  இந்த ராம்ஜி யாஹீ பின்னூட்டம் போட்டே காமடியன் என்று பேர் வாங்கியவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை , ஜெவிடம் அவ்வப்போது ஏதாவது சொல்லி பேக் பய்ர் ஆவார்.

 16. புருனோ சொல்கிறார்:

  எழுத்து நடை (வழக்கம் போலவே) நன்றாக உள்ளது

  சென்னைவாசி ஆகிவிட்டீர்கள்

  ஒரு ஆறு மாதம் கஷ்டமாக இருக்கும்

  அப்புறம் : பழகிப்போய்விடும் :) :)

 17. ஆமா டாக்டர்..
  பல விஷயங்களுக்குப் பழகவேண்டியுள்ளது… வீட்டுக்கு லேட்டாக வருவதற்கு.. சீக்கிரம் கிளம்புவதற்கு, குறைந்த நேரம் உறங்குவதற்கு, வழிப்போகரை திட்டுவதற்கு, வழிப்போக்கரிடம் திட்டு வாங்குவதற்கு, சொந்தக்காரர்களை அட்ஜஸ்ட் செய்வதற்கு, மேனேஜரை சந்தோஷப்படுத்துவதற்கு …

  என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான் :)

 18. ramji_yahoo சொல்கிறார்:

  மதி இந்தியா

  பதிவின் விசயத்தை விட்டு விட்டு நாம் இருவரும் சண்டை இடுவது சரி அல்ல, இருந்தாலும் சொல்கிறேன்.

  நிஜ வாழ்வின் இறுக்கத்தை தணிக்கவே வலை பதிவில் காமெடியன் ரோல்களும், காமேடிய எழுத்துக்களும் எனக்கு ரசிப்பவையாக உள்ளனன.
  காமெடியை தான் வலைப் பதிவுகளிலும், இணைய அரட்டை அரங்குகளிலும், முக புத்தகத்திலும் விரும்புகிறேன்.

  சிரில் அலெக்ஸ் ஜெயமோகனின் எல்லா இணைய எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பு இருந்ததால்/இருப்பதால், அவரின் சிந்தனை போக்கில், உணர்ச்சி மேலாண்மையில் மாற்றம் இருக்கும் என நான் அனுமானம் செய்து இருந்தேன். ஆனால் அவரும் வழக்கம் போல நங்கநல்லூர் வாசிகள் அமெரிக்காவை விட்டு தமிழ்நாட்டில் வந்தவுடன் புலம்பும் அதே பழைய புலம்பல்களையே புலம்பியதால் தான் எனது ஆதங்கம், வருத்தம்

  சுஜாதா எழுதி இருக்கிறார்- அமெரிக்கா, சிங்கபூர் பயணம் முடித்து காரில் வரும் பொழுது அவரின் புலம்பல் கிண்டி மேம்பாலம் வரும் வரை இருந்தது. அவர் மனைவி பரங்கிமலை கண்டோன்மென்ட் அருகிலேயே சகஜ நிலைக்கு வந்து விட்டார் என்று.

  மற்ற படி ஜெயமோஹனிடம் இது வரை பேக் பைர் ஆனது இல்லை. இப்போதும் ஜெமோ விடம் எனது பின்வரும் கேள்விகள், கருத்து முரண்பாடுகள் அப்படியேதான் உள்ளன.

  அங்காடி தெருவில் கதாநாயகனும், கதா நாயகியும் பயன்படுத்தும் வட்டார மொழி நாஞ்சில் மாவட்ட மொழியே.
  திருச்செந்தூர் உடன்குடி ஒன்றிய வட்டார மொழிகள் அல்ல அவை. அனுபவி ராஜ அனுபவி படத்தில் நாகேஷ் பேசி இருப்பார் முத்து நகர் மொழி. தசாவதாரத்தில் பூவராகவன் பேசி இருப்பார் மார்த்தாண்டம், வில்லுக்குறி மொழி.

  த்யானமும், மூச்சு பயிற்சியும் , யோகாவும் சொல்லி கொடுக்கும் ஒரு யோகா குரு என்ற நிலையில் மட்டும் நித்தியானன்தவை (ராஜசேகர்) கருதினால் , அவர் காமத்தை துறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சந்நியாசி மட்டுமே காமத்தை துறக்க வேண்டுமே அன்றி யோகா, குண்டலினி குரு க்கள் காமத்தை துறக்க வேண்டாம்.

  பாட பேதம்- என்னும் வார்த்தை தொகுப்பு.

 19. இராம.கி. சொல்கிறார்:

  வெளிவலயச் சாலை (outer ring road) இன்னும் உருவாகவேயில்லை. இப்பொழுதுதான் ஒப்பந்தப் புள்ளி கேட்டிருக்கிறார்கள். அது முடிவதற்கு இன்னும் ஒரு 10 ஆண்டுகள் ஆகலாம். முகப்பேரில் இருந்து தாம்பரத்திற்கு அப்பால் இரும்புலியூர் போய்ச்சேரும் சாலையைக் குறுக்கடவுச் சாலை (GNT-GST bypass road. குறுக்கே கடக்கும் சாலை) என்று சொல்லுவார்கள். முகப்பேரில் இருந்து, திருமங்கலம் வந்து, உள்வலயச் சாலை (inner ring road) வழியாக, கிண்டி தொழிற்பேட்டை வந்து, வேளச்சேரி போய் பள்ளிகரணை அடைவது நெரிசல் இல்லாத நேரங்களில் 1 1/2 மணி நேரத்திற் கொண்டு சேர்க்கும்.

  இருந்தாலும் இடம் மாறி வீடு பிடிப்பது வசதியாக இருக்கும்.

  அன்புடன்,
  இராம.கி. .

 20. நான் நீங்கள் சொல்லும் பாதையில்தான் செல்கிறேன் இராம.கி ஐயா. நெரிசல் இல்லாத நேரம் ஒரு மணி நேரத்திலேயே செல்ல முடிந்தது. ஆனால் நான்கு சக்கர வாகனத்தை இரு சக்கர வாகனம்போல ஓட்ட வேண்டியிருந்தது. :) தற்போது நிதானமாக பண்பலை கேட்டவாறே ஓட்டுகின்றேன்.

 21. ராம்ஜி,
  உங்களுக்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியவில்லை. இணையக் கட்டுரைகளை அவரே பதிவேற்றுகிறார். நான் ஜெ எழுதிய இணையக் கட்டுரைகளில் 90% படித்திருப்பேன் என கணிக்கிறேன்.

  பொதுப்புத்தி என நீங்கள் வர்ணிப்பதால் மனதில் தோன்றியதை சொல்லாமல் விட முடியுமா? சும்மாவா செலவு செய்து வலைப்பதிவு வைத்திருக்கிறோம் :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்