கடவுள் நம்பிக்கை
நல்லடியாரின் பதிவு ஒன்றை வாசித்தேன் ஒரு கதை நியாபகம் வந்தது.
http://athusari.blogspot.com/2006/03/blog-post_22.html
வெள்ளம் வந்து ஒரு ஊரே அழிந்துபோனது. ஊரில் பலரும் இறந்துபோனார்கள். தப்பி ஓடிய சிலர் ஒரு குருவிடம் போய் சேர்ந்தார்கள்.
ஒருவர் குருவிடம் கேட்டார்,”ஐயா, ஏன் கடவுள் என்க ஊரை அழிச்சார்?” .
குரு சொன்னார்,”ஊரில் உள்ள கெட்டவங்களை அழிக்க”.
“எங்க ஊரிலிருந்த நல்லவங்களையும் ஏன் கொன்னார்?.”
குரு யோசித்துவிட்டு,”கெட்டவங்களுக்கெதிரா சாட்சி சொல்வதற்கு”.
‘நம்பிக்கையுள்ளவன் எல்லாத்துக்கும் விடை சொல்வான்’.
‘Gods Must be Crazy’ – அருமையான காமெடி படம். பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் கதை இதுதான்.
மேலே பறந்துகொண்டிருக்கும் விமானாம் ஒன்றிலிருந்து ஒருவன் காலியான ஒரு ‘கோக்’ பாட்டிலை வீசி எறிய, அது போய் ஆப்ரிக்க காட்டுக்குள் விழுகிறது.
காட்டுவாசி ஒருவன் அதை பயத்துடன் எடுக்கிறான். இதுவரையில் கண்ணாடி பொருட்களையே பாத்திராத காட்டுவாசிகள் இது கடவுளிடமிருந்து வந்த பொருள் என அதை பயத்துடன் பார்க்கின்றனர்.
கடைசியில் இதை பூமியின் எல்லையில் கொண்டு எறிந்துவிட்டு வருகிறேன் என அந்த காட்டுவாசி புரப்படுகின்றான்.
இதை வெறும் காமெடியாகப் ப்ஆர்க்காமல் மதங்களும் கடவுள் நம்பிக்கையும் எப்படி துவங்கியிருக்கும் என்கிற கோணத்தில் பார்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
விடை தெரியாத பல கேள்விகளுக்கு இன்று அறிவுபூர்வமான விடைகள் கிடைக்கின்றன. ‘கண்னுக்குத் தெரியாததால் இறைவன் இல்லை என்பதா?’ என சிலர் கேட்கலாம்.
இதையே ‘இயற்கையை முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அதை கடவுள் என்பதா? ‘எனவும் கேட்கலாமே?
கடவுளை நமக்கு புலப்படாத ஒரு சக்தி என ஏற்றுக்கொள்ளலாம், எனினும் அந்த சக்தி நம்மோடு தனிப்பட்ட முறையில் உறவாடுகிறதா, மதங்கள் கடவுள் பற்றி சொல்லும் கருத்துக்கள் உண்மையா என்பதெல்லாம் வாதத்திற்குட்பட்டவை.
‘கண்ணுக்குப் புலப்படாத, ஆய்வுசெய்து ஒப்புக்கொள்ளாத அறிவியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறீர்களே?’ என்பது இன்னொரு வாதம். அறிவியல் கோட்பாடுகள் எதுவும் ஒரு வரியில் சொல்லப்படவில்லை. எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஒரு தீவிர ஆய்வும் அல்லது நிரூபிக்கப்பட்ட இன்னொரு ஆய்விலிருந்து பெறப்பட்ட உண்மையும் அதானால் ஏற்படும் ஒப்பீடும்(Projection?), தர்க்கரீதியான தெரிதலும் (Logical conclusion) இருப்பதை உணரமுடிகிறது.
பரிணாம வளர்ச்சி எனும் கோட்பாட்டை பல ஒப்பீடுகள் மூலம் நிருபிக்க முடிகிறது குறைந்தபட்சம் அதிலிருக்கும் தர்க்கத்தின் நேர்மையை மதிப்பிடவாவது முடிகிறது.
அறிவியல் சொல்வதெல்லாம் உண்மையில்லை என்பதையும் அறிவியலே நிருபிக்கிறது,ஆனால் மதங்களோ தங்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. நாங்கள் சொல்வதுதான் உண்மை எனச் சொல்கின்றன.
இன்னுமொரு கோணம். இப்போதுள்ள, இயற்கை, மற்றும் சூழல் பற்றிய அறிவு, மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தால் மதங்கள் தோன்றியிருக்குமா? சந்தேகம்தான். அப்படியே தோன்றியிருப்பினும் இப்போதுள்ள கருத்தமைப்பில் இருக்க வாய்ப்பில்லை.
பேயடித்து இறந்து போனவர்கள் மாரடைப்பால் இறந்துபோனவர்களாக கருதப்பட்டிருப்பார்கள், நெருப்பை கட்டுப்படுத்தமுடியும் என அறிந்திருப்பர்கள், சுனாமி வரும் எனத் தெரிந்திருக்கும், எது எரிமலை எனத் தெரிந்திருக்கும், குழந்தை பிறப்பு பற்றிய அறிவு இருந்திருக்கும், ஹார்மோன்களின் விளைவுகளும் பயனும் தெரிந்திருக்கும், மிருகங்களுக்கும் அறிவு உள்ளது எனப் புரிந்திருக்கும்.
இப்படி ஒரு அறிவியல் சூழல் இருந்திருந்தால் மதங்கள் எப்படித் தோன்றியிருக்கும்?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களெல்லாம் அறிவாளிகளா? ஓரளவுக்கு இந்தக் கூற்று உண்மை எனத் தோன்றுகிறது. கடவுளை ‘அறிவு’பூர்வமாக தெரிந்துகொள்ளமுடியாது என்பது உண்மையானால், ‘அறிவு’பூர்வமானவற்றை மட்டுமே நம்புபவர்களை ‘அறிவாளிகள்’ எனக் கூறவது முறையாகாதா?
Popularity: 18% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....
March 30th, 2006 at 9:53 am
சிறில்,
நன்றாக அலசியுள்ளீர்கள்.நன்றி
March 30th, 2006 at 11:12 pm
மத நம்ப்பிக்கை என்பதே தான் நம்புவதை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதும் ,அடுத்தவர் நம்பிக்கை மேல் அறிவார்ந்த பார்வையே செலுத்துவது மாகத் தான் இங்கு இறை நேசர்களும் ,நல்ல்டியார்களும் இருக்கிறார்கள் .
அதற்காக எல்லா இறை நம்பிக்கை உடையவரையும் குறை சொல்வதற்கில்லை. ஆன்மிகமும் ஒரு வகையில் அறிவுப் பார்வை கொண்டதே. நல்ல ஆன்மிக வாதி அறிந்து கொள்வதில் மனத் தடைகளை கொண்டு இருக்க மாட்டான்.
அதற்கு பல சூபிக்களும் ,சித்தர்களும் நம்மிடையே வாழ்ந்த்து மறைந்துள்ளனர் .பல் பிளாக்குகளில் இருக்கும் மத நம்ப்பிக்கையாளர் களுக்கு ,தம் மதத்தை அறிவதை விட பிறரை குறை சொல்வதில் தான் ஆனந்தம்.
கடவுளும் ,மதமும் நம் சிந்தனைகளை தட்க்குமானால் நமக்கு அது தேவையில்லை தான் .
இதே “நம்ப்பிக்கயை” குறித்து பல அருமையான பதிவுகளை தந்த தருமியின் பதிவை படித்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன் .
March 31st, 2006 at 10:23 am
சிறில்…கடவுள் நம்பிக்கை என்பதற்கும் மூட நம்பிக்கை என்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. ஆனால் இன்றைக்குக் கடவுளின் பெயராலாயே உலகெங்கும் நடக்கும் மூடத்தனங்களால் கடவுள் நம்பிக்கையே மூட நம்பிக்கை என்று சொல்லும் நிலை உள்ளது.
உண்மையான ஆத்திகவாதிகள் நல்லதையே சொல்லியிருக்கிறார்கள். தமிழில் நிறைய இருக்கின்றன. மற்ற மொழிகளிலும் நாடுகளிலும் இருக்கக்கூடும். குறிப்பாகத் தமிழில் சமய நூல்களில் சமயக் கருத்துகளோடு நல்ல பல பொதுக்கருத்துகள் பொதிந்த நூல்கள் நிறைய உண்டு.
திருக்குறளே இறைவணக்கத்தோடுதானே துவங்குகிறது. ஒரு கடவுளா பல கடவுளா என்று கேள்வி வரலாம்….அரிசி ஒன்றுதான்…அதை இட்டிலியாகத் தின்பான் ஒருவன். தோசையாகத் தின்பான் ஒருத்தன். கொழுக்கட்டையாக அவிப்பான் ஒருவன். அரிசாயகவே தின்பான் ஒருவன். பலவிதங்களில் உண்ணப்படுவதால் அரிசியே மாயையாகாது.
அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்றற நின்ற பிரான் என்று தமிழ் இறைவனைக் குறிக்கிறது. அத்தோடு வெறிவென்றவரோடுரும் வேலவரே என்றும் சொல்கிறது. வேலவன் என்பது தமிழ்க்கடவுள் பெயர். ஆகையால் தமிழன் பயன்படுத்தினான். இறைவன் என்ற பொருளில் எடுத்துப் பாருங்கள். வெறி வென்றவரோடு உறும் வேலவரே (இறைவனே)…இன்னும் நிறைய சொல்லலாம்.
March 31st, 2006 at 12:42 pm
சிறில் சிந்திக்க வச்ட்டீங்க… சிறக்கட்டும்.
March 31st, 2006 at 1:19 pm
உண்மையில் இந்தப்பதிவு கடவுள் நம்பிக்கைக்கு எதிராக அல்ல. மதங்களை பற்றிய பதிவே..
அதை நான் சரியா சொல்லவில்லை என நினைக்கிறேன்.
இன்னும் சில பதிவுகள் போடும்போது என் கருத்தை தெளிவு செய்ய முடியும் என நினைக்கிறேன்.
April 1st, 2006 at 8:31 am
கலீல் ஜிப்ரானின் சாத்தானைப் பற்றிய கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு மதவாதி எப்படி உருவாகிறான், சாத்தான் எப்படி உருவானான் என்று போகும் கதை. வெகு அருமையாக இருக்கும்.
அன்புடன்
ஜீவா
April 1st, 2006 at 2:38 pm
சிறில்,
கடவுளும் காதலும் ஒன்று.
நாம் மூளையைப் பாவிக்காத வரைதான் இரண்டுமே இனிக்கும். இரண்டிலுமே அறிவுக்கு வேலையில்லை.
இதுபற்றி ஏற்கனவே (நட்சத்திரக் கிழமையில்) நானெழுதிய பதிவொன்று இது.
April 29th, 2009 at 9:21 am
கடவுள் என்பது பூமிஜில் இன்னும் மானுடத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட கருத்து
November 26th, 2011 at 4:51 pm
kadaul,no,manithasakthi,makaththanathu