டி மெலோ கதைகள் – 2

 டி மெலோ கதைகள் – 1

வாத்து சூப்

முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது.

 விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம்.

 ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் உறவினனின் உறவினனின் நண்பன்.” என்றானாம். முல்லா அவன் முன்பு கொதிக்கும் வென்னீரை ஒரு சூப் பாத்திரத்தில் கொண்டு தந்தாராம். “என்ன இது?” என்றான் வந்தவன்.

 “அவர் கொண்டு வந்த வாத்தின் சூப்பினுடைய சூப்பினுடைய சூப்பினுடைய சூப் இது.” என்றாராம்.

 டி மெலோ: உண்மையை உணர்ந்தவனுடைய சீடனுடைய சீடனுடைய சீடனாக இருப்பவனைப் பற்றிம் நாம் கேள்விப்படுவதில்லையா?

ஒரு முத்தத்தை எப்படி இன்னொருவன் வழியாக பரிமாரிக்கொள்ள முடியும்?

 

மழைக்காக வேண்டுபவன்

 ஒரு நாள் ஒரு வயோதிகர் பால்கனியில் நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தார். ஏதோ முடி புகைவதை அறிந்து அவர் மனைவி வெளியில் வந்தாள். நினைத்ததைப் போலவே புகைப்பவரின் தாடியில் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அவள் சத்தம்போட்டாள், “உங்கள் தாடி எரிந்துகொண்டிருக்கிறது.”

 வயோதிகர் பதில் சொன்னார் “எனக்குத் தெரியும். உனக்குத் தெரியவில்லையா நான் மழைக்காக செபித்துக்கொண்டிருக்கிறேன் என்று?”

 நாம் உண்மைகளை அறிய விரும்புவதில்லை. பொய்களுக்கு மத்தியில் சுகமாக வாழ்ந்துவிடவே நினைக்கிறோம். ஏனெனில் உண்மையை அறிவது சங்கடமானது, கடினமானது. நாம் அற்புதங்களையே விரும்புகிறோம். உண்மைக்கு விலையாக நாம் நம் பாதுகாப்புணர்வை (செக்யூரிட்டி) விலையாகத் தரவேண்டும் என்கிறார் டி. மெலோ.

 

சீனாவில் நசுருதீன்

 நசுருதீன் சீனாவுக்குச் சென்று ஒர் குழுவைக் கூட்டி அவர்களுக்கு ஞானத்தை வழங்கினார். ஞானம் அடைந்த எவருமே திரும்பவந்து அவரது சொற்பொழிவுகளை கேட்க வரவில்லை. எழுந்து அடுத்த நாட்டுக்குச் சென்றார்.

 டி மெலோ: குருவின் காலடியிலேயே சீடன் விழுந்து கிடப்பது அந்த குருவுக்கு பெருமையானதல்ல.

 

தாயத்து

 ஒரு தாய் தன் மகன் இரவு வீட்டுக்கு தாமதமாக வருவதைக் கண்டு கவலையுற்றாள். அவனை ஒழுங்கு படுத்த ‘இரவில் அவன் வரும் வழியில் பூதம் உள்ளது’ எனச் சொல்லிவைத்தாள். அந்த மகன் வளர்ந்து பெரியவனானபோது அவனுக்கு அந்த பூதங்களின் மேல் மிகவும் பயமாக இருந்ததால் இரவில் எங்கும் செல்ல மறுத்தான். உடனே அந்த தாய் ஒரு தாயத்தைக் கட்டி இது அந்த பூதங்களிலிருந்து உன்னைக் காப்பாற்றும் என்றாள்.

 டி. மெலோ: பிறழ் பட்ட மதம் தாயத்தை அவனுக்கு வழங்குகிறது. நல்ல மதம் பேய்கள் இல்லை என்ற உண்மையை சொல்லித்தருகிறது.

Popularity: 2% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “டி மெலோ கதைகள் – 2”

  1. […] டி மெலோ கதைகள் – 2 […]

  2. neo சொல்கிறார்:

    எல்லா மதங்களுமே பேய்களை புனைகின்றது தாயத்துக்களின் விற்பனையின் பொருட்டு … மூன்றிற்கும் அப்பால் இருக்கக் கூடும் ஆதி வீடு ,இல்லாமலும்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்