டி மெலோ கதைகள் – 3

டி மெலோ கதைகள் – 2  

வைரம்

 சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். ‘வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு’ என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான்.

 ‘எந்த வைரம்?’ என்றார் சன்னியாசி.

 ‘நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.’ என்றான் அவன்.

 சன்னியாசி தன் கோணிப்பைக்குள்ளிருந்து ஒரு பெரிய கல்லொன்றை எடுத்துத் தந்துவிட்டு ‘இதுதானா பார் நேற்று காட்டில் இதைக் கண்டெடுத்தேன்’ என்றார்.

 உலகிலேயே மிகப் பெரிய வைரக் கல் அது. ஒரு மனிதனின் தலை அளவு இருக்கும். அன்று இரவு முழுவதும் அவன் அந்தக் கல்லை வைத்து சிந்தித்துக்கொண்டே இருந்தான்.

 அதிகாலையில் எழுந்து அந்த சன்னியாசியிடம் சென்றான். ‘உலகிலேயே மிகப்பெரிய இந்த வைரக்கல்லை எனக்கு எடுத்துக் கொடுக்க முடிகிறதே உன்னால். அந்த செல்வத்தை எனக்குத் தருவாயா?” என்றான்.

நிலவைத் திருட முடியுமா?

 அந்த ஜென் குரு ஒரு மலையடிவாரத்தில் மிக வறிய நிலையில் வாழ்ந்திருந்தார். ஒரு நாள் ஒரு திருடன் வீட்டினுள் நுழைந்து அங்கே திருட ஒன்றுமில்லையே என்பதை உணர்ந்த நேரத்தில் குரு உள்ளே வந்தார். “நீ கஷ்டப்பட்டு என்னைக் காண வந்திருக்கிறாய். உன்னை வெறுங்கையாக திருப்பி அனுப்ப எனக்கு மனமில்லை இதோ என் ஆடைகளையும், என் போர்வையையும் பரிசாக எடுத்துக்கொள்.’ என அவனுக்களித்தார். திருடனும் அதை விருட்டெனப் பறித்துவிட்டு ஓடி மறைந்தான்.

 குரு தன் திண்ணையில் அம்மணமாக நிலவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்தார்,”பாவம். அவனுக்கு இதைக் கொடுத்திருக்க முடியாமல் போய்விட்டதே?” என வருந்தினாராம்.

மீனவன்!

 ஒரு வியாபாரி கடலோரம் நடந்துசென்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு மீனவன் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். வியாபாரி அவனிடம் கேட்டான் ‘நீ மீன் பிடிக்கப் போகவில்லையா?’ ‘காலையிலேயே போயிட்டு வந்துட்டேனே’

‘இன்னொருமுறை போகலாமே’

‘போனா?’

‘போனா இன்னும் அதிகமா பணம் வரும்.’

‘வந்தா?’

‘இன்னும் போட்டெல்லாம் வச்சு நிறைய மீன் பிடிச்சு நிறைய சம்பாதிக்கலாம்.’

‘அப்புறம்.’

‘அப்புறம் நிம்மதியா ஓய்வெடுக்கலாம்.’

‘இப்ப அதத்தான செஞ்சிட்டிருக்கேன்.’ என்றானாம் மீனவன்.

 டி.மெலோ: உங்களுக்கு என்ன வேண்டும் அளவில்லா செல்வமா? இல்லை வாழ்க்கையை அனுபவிக்கும் பக்குவமா?

உறங்குவதே மேல்

 சாத்தி(சாதி) என்கிற புகழ் பெற்ற பெர்சியப் புலவர் தன்னைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்:

நான் சிறுவனாய் இருந்தபோது நான் பக்தியான பிள்ளையாக இருந்தேன். ஒருநாள் என் தந்தையுடன் இரவு விழிப்பு செபம் செய்துகொண்டிருந்தேன், மடியில் குரானோடு.

எங்களோடு செபித்துக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராகத் தூங்க ஆரம்பித்தார்கள். விரைவில் எல்லோரும் தூங்கிவிட நான் சொன்னேன் “இவர்களைப் பாருங்கள். பார்த்தால் செத்துவிட்டதைப்போல கிடக்கிறார்கள். ஒருவன்கூட செஇப்பதற்கு இல்லையே” என்று.

என் தந்தை சொன்னார்,”மகனே, நீ இவர்களை திட்டுவதை விட தூங்கிவிட்டிருப்பாயேயானால் எனக்கு சந்தோஷமாய் இருந்திருக்கும்”.

 

சரி செய்துவிடலாம்!

 ஒருவர் ப்ளம்பிங் வேலைக்கான பட்டப்படிப்பை முடித்திருந்தார். பட்டமளிப்பு முடிந்ததும் கல்லூரியிலிருந்து குற்றால அருவிக்கு சுற்றுலா சென்றார்கள். அவர் குற்றால அருவியை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு சொன்னார் ‘கஷ்டம்தான் இருந்தாலும் இத சரி செஞ்சுடலாம்.’

Popularity: 2% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....3 மறுமொழிகள் to “டி மெலோ கதைகள் – 3”

  1. […] டி மெலோ கதைகள் – 3 […]

  2. neo சொல்கிறார்:

    ‘குற்றால அருவி’ சிறில் டி மெல்லோ சொன்னதா தோழர் ?

  3. ashmi jj சொல்கிறார்:

    super……..

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்