டி மெலோ கதைகள் – 4

 டி மெலோ கதைகள் – 3

கழுகுக் குஞ்சு

 ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் ‘சகோதர’ கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது.

வருடங்கள் கழிந்தன.

 ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் குஞ்சு கேட்டது, “அது என்ன?” என்று.

 “அது கழுகு. பறவைகளுக்கெல்லாம் தலைவன். அது ஆகாயதை சொந்தமாக்கியது. நாம் இங்கே தரையில்தான் வாழவேண்டும்.” எனக் கிடைத்தது பதில்

அந்தக் கழுகுக் குஞ்சும் கோழியாகவே வாழ்ந்து மடிந்தது.

அடிமை

 அரிஸ்டாட்டிலின் சீடர்கள் இருவரில் ஒருவர் அரசனின் அன்பைப் பெற்று வசதியுடன் வாழ்ந்தார்.

இன்னொருவர் கஷ்டப்பட்டு கூழுக்கே வழியில்லாமல் இருந்தார். முன்னவர் இவரைப்பார்த்துக் கேட்டாராம்,”நீ மன்னனை அனுசரித்திருந்தால் கூழ் குடிக்கத் தேவையில்லையே’ என்று. இவர் பதிலளித்தாராம், “நீ கூழ் குடித்து வாழக் கற்றுக்கொண்டால் மன்னனை அனுசரித்திருக்கத் தேவையில்லையே.”

ஆமை

 சீனத்து மன்னன் அந்த சன்னியாசி குறித்து கேள்விப்பட்டதிலிருந்து தன் அவையில் அவருக்கு சிறப்பு செய்து அங்கேயே அவரை வைத்துக்கொள்ள விரும்பி ஒரு குழுவை அனுப்பி வைத்தான். அந்தக் குழுவும் நெடுந்தூரம் கடந்து அந்த ஞானியிடம் வந்து சேர்ந்தனர். அவர் ஆற்றின் நடுவிலிருந்த பாறையிலிருந்துகொண்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார். வந்தவர்கள் மன்னனி செய்தியைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஞானி விழுந்து விழுந்து பைத்தியம் போல சிரித்துவிட்டுச் சொன்னாராம்.

 “உங்கள் மன்னனின் வழிபாட்டிடத்தில் ஒரு ஆமை ஓடு இருப்பது உண்மையா?”

 “ஆம்.”

 “அதில் அவன் பொன்னும் வைரமும் முத்தும் பவளமும் கொட்டி வைத்து பூஜை செய்வது வழக்கமில்லையா?”

 “ஆம்.”

 “அதோ ஆற்றில் நீந்தி வருகிறதே ஒரு ஆமை. அது உன் மன்னனின் ஆமையின் இடத்தில் இருக்க விரும்புமா?”

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “டி மெலோ கதைகள் – 4”

  1. neo சொல்கிறார்:

    “நீ கூழ் குடித்து வாழக் கற்றுக்கொண்டால் மன்னனை அனுசரித்திருக்கத் தேவையில்லையே.”
    :-) :-) :-)

  2. ilavarasan சொல்கிறார்:

    ஆஹா அருமை,அருமை,அருமை கருத்துள்ள குட்டிக்கதைகள்.நன்றி

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்