கடவுள் 100 கி.மீ

மதங்கள் கடவுளைக் காட்டும் ஒரு பெயர்ப் பலகையே. இதை ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். பதிவில் இடவேண்டும் எனத் தோன்றியது.

ஒரு ஊருக்குப் போகிறோம், சென்னை என வைத்துக்கொள்வோம். வழியில் சென்னை 100 கி.மீ என ஒரு பெயர்ப்பலகை வருகிறது அதுவே சென்னை என்றால் எப்படி?

மதங்களும் கடவுள் எனும் இலக்கை அடைய வழிகாட்டும் பெயர்ப் பலகைகளே. அதையே பிடித்துக்கொண்டு நிற்பது கடவுள் நோக்கிய நம் பயணம் முடிவு பெறாமல் போவதற்க்கு வழிவகுக்கும்.

மதங்களைத் தாண்டிய, தனிமனித கடவுள் அனுபவம்தான் முழுமையான கடவுள் அனுபவமாகமுடியும். இதைத்தான் சித்தர்கள் சொல்லியிருக்கவேண்டும்.

நட்டகல்லை தெய்வமென்று
நாலுபுஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று
சொல்லும் மந்திரம் ஏனடா(ஏதடா?)
நட்டகல்லும் பேசுமோ

நாதன் ‘உள்’ளிருக்கையில்
சுட்ட சட்டி தத்துவம்
கறிச்சுவை அறியுமோ.

பராசக்தி வசனத்தில் கேட்ட பாடல். கல்லை வணங்குவதை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளவேன்டும். அதை ஒரு மதம் சார்ந்த வழக்கமாக எடுத்துக்கொள்வது குறுகிய மனப்பாங்கையே காட்டும்.

நட்டகல் என்பது வெறும் போதனைகளும் மந்திரங்களும், சடங்குகளும், பூசைகளும், தொழுகையுமே ஆன்மீகம் என நினக்கும் மனப்பாங்கை குறிக்கிறது.

மதங்கள் தரும் வெறும் வெளி அடையாளங்களை கடைபிடித்துவிட்டு எனக்கும் கடவுளைத் தெரியும் நானும் அவரும் அப்பா பிள்ளை என்பது பெயர்ப்பலகையை பிடித்துக்கொண்டு நான் சென்னை வந்துவிட்டேன் என்பதற்குச் சமம்.

கடவுளைத் தேடுங்கள். மனித உறவுகளில், இயற்கையின் அளவற்ற வனப்பில், பகிர்வில், மன்னிப்பில், இம்மையில், உண்மையில், உங்களில் தேடுங்கள்.

மதங்கள் வழி காட்டட்டும், பயணம் உங்களதாய் இருக்கட்டும்.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....26 மறுமொழிகள் to “கடவுள் 100 கி.மீ”

 1. முத்து(தமிழினி) சொல்கிறார்:

  சிறில்,

  லேசாக ஜெயமோகன் பாதிப்பு தெரிகிறதே?

 2. G.Ragavan சொல்கிறார்:

  சிறில்…நீங்கள் தொட்டிருப்பது இந்த நாட்டின் வழிபாட்டு முறையின் ஆணி வேர். அதுவும் மிகச்சரியான முறையில்.

  நீங்கள் சொன்னதை நக்கீரர் தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் சொல்லிச் சொல்லி…வந்திருக்கிறார்கள். அதை பெரும்பாலும் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அதனால் அதை வைத்துப் பிழைக்கின்றவர்களும் அதை எதிர்ப்பவர்களும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் கூட வாரியார் சுவாமிகளும் புலவர் கீரனும் குன்றக்குடி அடிகளராரும் எடுத்துச் சொல்லித்தான் சென்றனர். கேட்டவர் குறைவு.

  தமிழ் இலக்கிய நூல்களில் ஒவ்வொன்றும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சமூகநீதியிலிருந்து ஆன்மீகம் வரைக்கும் எல்லாம் இருக்கிறது. இவற்றில் சொல்லாதவைகளை வேறு எங்கும் சொன்னதில்லை.

  நானும் பலமுறை சொன்னதுதான்….மூச்சுக்கு முந்நூறு முறை முருகா முருகா என்றவர்தான்….குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைப் பாடியவர்.

  நீங்கள் சொல்லும் சித்தர் பாடல் சொல்லும் விளக்கம்தான் இதற்கும்.

  மிகவும் நல்ல பதிவு.

 3. கால்கரி சிவா சொல்கிறார்:

  சிறில் சித்தர் அவர்களே,

  நானும் வருகிறேன் ஒன்றாக கைக் கோர்த்து நம் பயணங்களை தொடர்வோம்.

 4. நிலா சொல்கிறார்:

  சிறில்

  மிக நல்ல பதிவு. எளிதாக எல்லாருக்கும் புரியும் விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.

  இதே கருத்தை மிக ஆழமாக நம்புகிறேன். பேசாமல் ஒரு இயக்கம் ஆரம்பித்துவிடலாம், வாருங்கள் :-)

  எனது நிறப்பிரிகை குறும்படம் பார்த்தீர்களா தெரியவில்லை. இந்தக் கருத்தைதான் வலியுறுத்துகிறது. நேரம் கிடைக்கும்போது முடிந்தால் பாருங்கள்:

  http://nilaraj.blogspot.com/2006_02_01_nilaraj_archive.html

 5. Dharumi சொல்கிறார்:

  இதன் மறுபக்கம்தான் கடவுள் மறுப்போ என்று எனக்குத் தோன்றுகிறது.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  முத்து,
  ஜெயமோகனை அதிகம் படித்ததில்லை. அவர் எனக்கு அவர் கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார் முழுமையாக படிக்க முடியவில்லை, ஆனால் எங்கள் (குறைந்தகால) மின்னஞ்சல் தொடர்பில் நாங்கள் இருவருமே ஆண்டனி டி மெலோ என்பவரின் புத்தகங்களை படித்திருக்கிறோம் எனத் தெரியவந்தது.

  இந்தப் பதிவும்கூட ஆண்டனி டி மெலோவின் புத்தகத்திலிருந்து பெறப்பட்டதுதான். இன்றைக்கு என் ஆன்மீக நிலைப்பாடு ஆண்டனி டி மெலோவின் புத்தகங்களிலிருந்து பெறப்பட்டதுதான்.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராகவன் நன்றி,
  ஒத்த கருத்துடையவர்களை காண்பதில் மகிழ்ச்சி, அதிலும் மதம் ஆன்மீகம் கடவுள் எனும் தளத்தில்,

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சிறில் சித்தர் அவர்களே, //

  இமயம் போலாமா சிவா சித்தரே?

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நிலா,
  உங்கள் படம் பார்த்தேன். பின்னூட்டமிட்டேன் என நினைக்கிறேன்.
  ராகவனுக்குச் சொன்னதே உங்களுக்கும்

  இயக்கமா? அது வேண்டாம் என்பதுதானே நம் பதிவின் நோக்கம் – :)

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமி,
  யோசிக்கவேண்டியுள்ளது. ஆனால் என் பதிவில் சொல்லவந்தது கடவுள் மறுப்பல்ல.

  இப்படிச் சொல்லலாம்..மதங்கள் சொல்லும் கடவுளை நீங்கள் மறுக்கலாம். ஆனால் நமக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கலாம்(அது இயற்கை என்றாலும்) என்பதை மறுக்க முடியவில்லை.

 11. Dharumi சொல்கிறார்:

  நீ மனிதனாக இருந்து விடு; ( உன் அயலான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாயோ அதை அவனுக்குச் செய்து விடு) – இந்த மனித நேயம் இருந்துவிட்டால், நீ கடவுளைத் தேட வேண்டாம். கடவுள் ( அப்படி ஒன்று இருந்தால்) அது உன்னைத் தேடி வரும். – நான் நினைப்பது இதுவே.

  நீங்கள் சொல்வதும் இந்தக் கருத்தோடு கொஞ்சம் ஒட்டி வருவதாகத் தோன்றியது. அதனால்தான் ‘மறு பக்கம்’ என்றேன். வேண்டுமானால் ‘இன்னொரு பக்கம்’ என்றும் கொள்ளலாம்.

 12. Dharumi சொல்கிறார்:

  சிறில்,
  “நமக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கலாம்(அது இயற்கை என்றாலும்) என்பதை மறுக்க முடியவில்லை.” – இந்த மனநிலையில் பல ஆண்டுகள் இருந்தேன். இந்த மனக்கட்டுக்குள் இருந்து நான் வெளிவர நெடுநாளானது.

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமி,
  உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன் உங்கள் நிலைப்பாடும் சரியானதே (கடவுள் தேடி வரும்) என நினைக்கிறேன்.

  எல்லோருக்கும் இப்படி சிந்திக்கும் வாய்ப்பு இல்லை என்பதும் உண்மை. அதனாலே மதங்களின் தேவையை உணரமுடிகிறது.

 14. ஜெயஸ்ரீ சொல்கிறார்:

  //கடவுளைத் தேடுங்கள். மனித உறவுகளில், இயற்கையின் அளவற்ற வனப்பில், பகிர்வில், மன்னிப்பில், இம்மையில், உண்மையில், உங்களில் தேடுங்கள்.
  மதங்கள் வழி காட்டட்டும், பயணம் உங்களதாய் இருக்கட்டும்.//

  இன்றைய சூழ்நிலைக்கு மிக மிக அவசியமான , அர்த்தமுள்ள வார்த்தைகள். பாராட்ட எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

  பதிவுக்கு மிக்க நன்றி.

  சுவாமி விவேகானந்தரின் உலகப்புகழ்பெற்ற உரையிலிருந்து சில வரிகள்

  Vivekananda at World Parliament of Religion: PAPER ON HINDUISM
  Chicago, 19th September 1893

  “Man is to become divine by realizing the divine. Idols or temples or churches or books are only the supports, the helps, of his spiritual childhood; but on and on he must progress.

  He must not stop anywhere. ‘External worship, material worship’ ?,’ say the scriptures, ‘is the lowest stage,’ struggling to rise high, mental prayer is the next stage, but the highest stage is when the Lord has been realized., Mark, the same earnest man who is kneeling before the idol tells you, ‘Him the sun cannot express, nor the moon, nor the stars, the lightning cannot express Him, nor what we speak of as fire; through Him they shine.’ But he does not abuse anyone’s idol or call its worship sin. He recognizes in it a necessary stage of life. ‘The child is father of the man.’ Would it be right for an old man to say that childhood is a sin or youth a sin?

  If a man can realize his divine nature with the help of an image, would it be right to call that a sin? Nor, even when he has passed that stage, should he call it an error? “

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜெயஸ்ரீ
  பாராட்டுக்கு நன்றி. அழகான பின்னூட்டம். அருமையாய் சுவாமி சொல்லியிருப்பதை பகிர்ந்திருக்கிறீர்கள்.

  //If a man can realize his divine nature with the help of an image, would it be right to call that a sin? Nor, even when he has passed that stage, should he call it an error? ” //

  ரெம்ப அருமை. நன்றிகள்.

 16. Anonymous சொல்கிறார்:

  Cyril,
  “கடவுளைத் தேடுங்கள். மனித
  உறவுகளில், இயற்கையின் அளவற்ற வனப்பில், பகிர்வில், மன்னிப்பில், இம்மையில், உண்மையில், உங்களில் தேடுங்கள்.”
  well written….as usual coherent and a crisp post from you…way to go….i totally agree with you

  “நட்டகல் என்பது வெறும் போதனைகளும் மந்திரங்களும், சடங்குகளும், பூசைகளும், தொழுகையுமே ஆன்மீகம் என நினக்கும் மனப்பாங்கை குறிக்கிறது”

  I understand spirituality does not arise from these(above said!!)but for me personally certain rituals disciplines me…i ve read somewhere that Jiddu Krishnamurthy totally was against rituals of these kinds but Ramana was a little lenient with rituals eventhough both of them tried to lead us in the quest of “Who Am I”. Your thoughts??

  Radha

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Radha,
  please see the comment from Jayashree. She has given a quote from Swami Vivekanandha. It might answer your question.

  There certainly is spirituality in rituals. But one should not stop with that. Like I had said if religion is a sign post, we might lose track if the sign post does not exist.

 18. Thekkikattan சொல்கிறார்:

  கட(ந்துவுள்ளே)வுளை உணர்ந்தவர்க்கு எங்கும் எதிலும் கடவுளே நிரம்பியுள்ளான்.

  Don’t try to name it, let us keep it as an entity of all, even beyond the Singular momentum of the Universe whichever sets it on the move, we will call it as SOURCE (or god). Having known that, if we are all created from that very Source (god), however the gravity holds the matter invisibly by binding together from falling away into the Unknown.

  Even so, I believe the very(Source) gravity works as an invincible force deep within us, thereby creating a pull in every Individual to seek out toward that Source to go and merge in as One (there comes the theroy of evolution of re-incarnation in play__for soul growth), the more intense the pull in you the higher you are on the evolutionary scale with your individual bit of that source trying to merge in, again the Source could be anything, you name whatever you wanted. And that is my understanding about the realization of Universal Truth.

  “எங்கே மதம் முடிவுறுகிறதோ, அங்கிருந்துதான் ஆன்மீகம் தொடங்குவதாக (Where Religion Ends, the Spirituality Begins),” தன்னையுணர்ந்த ஞானி ஒருவர் கூறியதை எங்கோ படித்ததாக ஞாபகம்.

  தெகா.

 19. ஜோ / Joe சொல்கிறார்:

  Cyril,
  Excellent Post!

 20. நிலா சொல்கிறார்:

  //இயக்கமா? அது வேண்டாம் என்பதுதானே நம் பதிவின் நோக்கம் – :)

  //

  Cyril,

  It was meant to be a joke.

 21. Anonymous சொல்கிறார்:

  Cyril,

  just read Jayashree’s post. YEp Swami vivekananda has ex[lained it beautifully…..thanks Jayashree…
  for quoting it..

  thanks to you too Cyril..

  Radha

 22. G.Ragavan சொல்கிறார்:

  // இதன் மறுபக்கம்தான் கடவுள் மறுப்போ என்று எனக்குத் தோன்றுகிறது. //

  நிச்சயமாக இல்லை தருமி. இதுதான் உணரத் தொடங்குவது. இங்கு முழுக்க முழுக்க விருப்புதான். மறுப்பு இல்லை.

  // ராகவன் நன்றி,
  ஒத்த கருத்துடையவர்களை காண்பதில் மகிழ்ச்சி, அதிலும் மதம் ஆன்மீகம் கடவுள் எனும் தளத்தில், //

  உண்மைதான் சிறில்..இதை வைத்துக் கொண்டு எல்லாரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில்…இதை வைத்துக் கொண்டே ஒற்றுமையை வளர்ப்போம்.

 23. சம்மட்டி சொல்கிறார்:

  நாத்திகம் ?

  இறைவனின் படைப்பை,
  உயர்ந்தவன் என்றும்
  தாழ்ந்தவன் என்றும்,
  சூத்திரர்களுக்கு சொர்கம் இல்லை என்றும்,
  தீண்டத்தகாதவன் என்றும்,
  திட்டியும், பழித்தும்,
  ஒடுக்கியும், ஒதுக்கியும்
  வைக்கும் போதும்,

  ஆன்மிக உணர்வுகள் மழுங்கி,
  சோதிடம் பரிகாரம் என மாறி,
  கால்வயிற்றுக்கு கஞ்சி இல்லாத
  ஏழைகள் இருக்கும் போது,
  கன்றுக்கு மறுத்து கரந்த பாலை
  கற்சிலைகளை கழுவி
  புண்ணியம் தேடும் போதும்,
  மூட நம்பிக்கைகளில்
  உழன்று மூடர்களாய், வேதங்களை
  துணைக்கழைத்து வரட்டு
  வேதாந்தம் பேசும் போதும்,

  உண்ண உணவில்லாது,
  ஒட்டிய வயிருடன் கோவணமுடன்,
  ஓடி உழைத்திடும் ஏழைகள்
  இருப்பதை பார்க்காமல்,
  எரியும் தீயில் பட்டும்,
  நவதானியங்கள்,
  பட்டு வேள்வித் தீக்கள்
  கொழுந்து விட்டு
  எறியும் போதும்
  இறைவனின் தூதுவர்களென
  இவர்கள் பிறக்கிறார்கள்,
  புத்தராக, சமணராக,
  வள்ளலாராக, பெரியார்களாக !

 24. SUNDARARAJ சொல்கிறார்:

  உங்கள் கருத்து மிக எளிமையான அதே நேரத்தில் மிக உண்மையான கருத்து. உண்மையில் எந்த மதமும் நம்மை கடவுளிடம் கொண்டு சேர்ப்பது இல்லை இது முற்றிலும் உண்மை. அதற்காக நமக்கு தெரிந்த நியாயத்தின்படி நடந்துகொண்டு இதுதான் இறைவனின் நியாயம் என்று சொல்வதும் தவறு. இறைவன் ஜீவனுள்ளவர் அவரிடம் வாஞ்சையுடனும் தாகத்துடனும் யார் கேட்டாலும் அவர் அவர் வழியை தெரிவிக்க தயாராக உள்ளார் அது ஒன்றே நம்மை அவரிடம் கொண்டு சேர்க்க முடியுமே. தவிர. நான் செய்யும் நல்ல செயல்கள் கூட நம்மை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தான் கொண்டு போக முடியும். நாம் நல்லது என்று நினைத்து செய்யும் பல செயல்கள் பின்னாளில் கேட்ட செயல்களாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணமாக ஒரு மனிதனை இன்னொருவன் கொலைசெய்ய துரத்தி வருகிறான். அவன் நம்மிடம் வந்து அடைக்கலம் கேட்கிறான். நாமும் இரக்கப்பட்டு நல்ல மனதுடன் அவனுக்கு நன்மை செய்து காப்பாற்றி விட்டோம் நாளை அதே மனிதன் ஒரு ரவுடி கும்பலுடன் பொய் தன்னை கொல்லவந்தவனின் குடும்பத்தையே அழித்துவிட்டால் அவ்வளவு பெரிய குற்றம் நடைபெற நாமே காரணமாக இருப்போம். அகவே நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்க அவர் ஒருவராலேயே முடியும். ஆகையால் இறைவனின் வழி எதுவென்று கண்டுபிடித்து அதில் நடக்க வேண்டியது நமது பொறுப்பு.

 25. […] ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும் கடவுள் 100 கி.மீ […]

 26. suresh சொல்கிறார்:

  I belive the only one god that’s great human think the powerfull god in the world.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்