நாஞ்சில் பாராட்டு விழா!

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஊட்டி இலக்கிய சந்திப்பின் போது. ‘உங்கள் முட்டம் படித்தேன்’ என்பது அவரின் முதல் வாக்கியமாயிருந்தது. அவர் எத்தகைய ஆர்வத்துடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து படித்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஆர்வத்தை ஒரு சிறு அளவேனும் நிவர்த்தி செய்ய முடிந்திருந்தால் அது ஒரு பேறுதான் என்று நினைத்திருந்தேன். அவரோ நான் எப்படியோ ஒரு விபத்தைப்போல எழுதி முடித்துவிட்ட அந்த மெலிந்த புத்தகத்தை பலருக்கும் படிக்கச் சொல்லி பரிந்துரைத்திருந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது அவரோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன்.

கோவையில் மீண்டும் சந்தித்தபோது ஒரு நெருங்கிய நண்பரை சந்திப்பது போன்றே இருந்தது. கோவை விழாவில் அவர் விருது வழங்குபவர்களை விளாசிவிட்டு பின்பு என்னிடம் ‘நான் பேசி நீங்க கேட்டதில்லையே?’ என்றபோது அவருக்கு பதில் என்ன சொல்வது? நான் படித்தவரை தன் மனதில் பட்டதை எந்த மழுப்பலும் இன்றி கொஞ்சம் தென் தமிழகக் குசும்பை மட்டுமே துணைக்கு சேர்த்துக் கொண்டு எழுதும் ஒரு நேர்மையான எழுத்தாளர் அவர். எல்லோரிடமும் பாரபட்சமின்றி சிரித்துப் பேசிப் பழகும் எளிய மனதுடையவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எளிய மனத்தோர் பேறுபெற்றோர் இல்லையா?

கோவையில் அவர் பேசிய பேச்சைக் கேட்டபின்பு இவருக்கு இனிமேல் எந்த விருதும் கிடைக்காமல் போகப் போகிறது என்றே தோன்றியது. ஆனால் மறுநாளே சாகித்திய அக்காதாமி விருதை அறிவித்து கௌரவம் தேடிக் கொண்டது.

இலையில் துவங்கிய தமிழ் இலக்கியம் இன்று இணையத்தில் அரங்கேறியிருக்கிறது. சிறந்த இளையதலைமுறை வாசகர் கூட்டம் ஒன்றை இணையம் தமிழ் இலக்கியத்துக்கு உருவாக்கிதந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. வரும் திங்கட்கிழமை சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு நடக்கவிருக்கும் பாராட்டு விழாவும் இளைய இலக்கிய வாசகர்களால் நடத்தப்படுகிற ஒன்றே. இதை நடத்துபவர்களின் சராசரி வயது 35கூட இல்லை. இளைய தலைமுறையினரோடு நெருங்கிப் பழகவும் உரையாடவும் எந்த தயக்கமும் இல்லாத மூத்த தலைமுறையினர் மிகச் சிலரே. அவர்களில் சிலரை சந்திக்கவும் உரையாடவுமான வாய்ப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. விழாவின் விபரங்கள் கீழேயுள்ளன.

நண்பர்கள் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று என் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா

நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30.

வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்

நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்

வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா

புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி

இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா

ஹோட்டல் பின்புறம்)

வாழ்த்துரை :

இயக்குனர் பாலா

எழுத்தாளர் ஞாநி

ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

எழுத்தாளார் சு.வெங்கடேசன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

எழுத்தாளர் ஜெயமோகன்

ஏற்புரை – நாஞ்சில்நாடன்

நன்றியுரை – தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com

Popularity: 2% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “நாஞ்சில் பாராட்டு விழா!”

  1. அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்

    அலெக்ஸ்… போனவருடம் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் உங்களின் முட்டம் வாங்கினேன். மெலிந்த புத்தகமாக இருந்தாலும் எழுத்தில் நல்ல கணம் இருந்தது சுவராஸ்யத்தைச் சொன்னேன் :)

  2. Anonymous சொல்கிறார்:

    • நாஞ்சில் நாடன் போன்றவர்கள் எழுதுவது… அறிவுறை சொல்வது எளிதான காரியம்.. நாஞ்சில் நாடன் வாழும் பகுதியில் அவர் மக்களால் அறியப்பட்டுள்ளாரா… அந்தப் பகுதி மக்களுடனான இவரது வாழ்க்கை தொடர்பு எப்படி உள்ளது? இவர் பரிசு பெற்றது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளதா? அப்பகுதி மக்கள் இதை கொண்டாடினார்களா?.. மக்களை தானும்.. மக்களால் தானும்.. கொண்டாடப்படாத எந்த எழுத்தாளன் ஆனாலும்… அவனும் அவன் வாங்கிய பரிசும் வீண்… நான் வாழும் திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்.. பல நூல்கள் எழுதி.. அது வேற்று மொழிக்கு கூட பெயர்ப்பு செய்யப்பட்டு.. அதற்காக இலக்கிய உலகத்தால் பாராட்டப்பட்டவர்… அவரை எழுத்தாளர் என அப்பகுதி மக்கள் அறிந்திருப்பது 3% இருக்கும்.. அவர் செய்யும் தொழிலாளால் அறிந்தோர் 10%… மற்றபடி யாருக்கும் அவரைத் தெறியாது… எழுத்தில் முற்போக்கும்.. வாழ்வில் மக்களுடன் தீண்டாமையும் கொண்டாடும் எழுத்தாளர்களால் யாருக்கு என்ன பயன் ? என்னுடன் விவாதிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள… 9489361307… 9443761307

    • கீற்றுவில் வந்துள்ள நாஞ்சில் நாடன் பற்றிய நேர்காணலுக்கு என் பின்னூட்டம் என்பது ஏதோ நானும் அவரும் பகையாளீ போலவும் என் பகையை வெளிக்காட்ட எனக்கு கிடைத்த ஒரு தருணமாக அதை பயன்படுத்திக் கொண்டதுபோலவும் பலர் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள்….. ஒருபடி மேலேபோய் பாரதி என்ற பெண் எழுத்தாளர்.. எழுதும் கடமை கொண்ட எழுத்தாளர்களை அறிந்துகொள்ளாத மக்கள் முட்டாள்கள் போன்றவர்கள் என்றும் கூறினார்.. (இலக்கியம் மக்களுக்காக என்ற நிலை மாறி.. இலக்கியம் இலக்கியவாதிகளுக்கே.. அவர்களின் பணம் புகழுக்காக மட்டுமே அது என்ற நிலை வந்துவிட்டது) பாரதியாரின் பாட்டு விடுதலை உணர்வை உயர்த்தியது.. வ.உ.சி.யின் பேச்சு எழுச்சியை உருவாக்கியது.. 94 வயது வரை சமூக நீதிக்கான பெரியாரின் உரையை விட மக்களை தட்டியெழுப்பிய இலக்கியம் எதுவும் இன்னும் தமிழில் வரவில்லை.. உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்த வாழ்க்கையில் போராடிய தத்துவமேதை மார்க்சின் எழுத்துகள் இன்றும் கூட பணமுதலைகளை பயப்படுத்திக் கொண்டுள்ளது.. ஆனால்.. நாஞ்சில் நாட‌னுடைய‌ எழுத்துக்க‌ளோ.. ஜெய‌காந்த‌னின் எழுத்துக்க‌ளோ ஒரு க‌ல்லைக்கூட‌ புர‌ட்டிப் போட‌வில்லை இந்த‌ ச‌மூக‌த்தில்.. எந்த‌ மாறுத‌லையும் தோற்றுவிக்காம‌ல்… இல‌க்கிய‌வாதிக‌ளுக்குள்ளேயே ப‌டிக்க‌ப்ப‌ட்டு.. அவ‌ர்க‌ளுக்குள்ளேயே பாராட்ட‌ப்ப‌ட்டு.. ப‌ரிசுக‌ள் பெற‌ப்ப‌ட்டு.. அதுவும் வாழ்த்த‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ ச‌மூக‌த்திற்கு என்ன‌ ப‌ய‌ன்…. ந‌டு வீட்டில் கிட‌த்த‌ப்ப‌ட்டிருக்கும் பிண‌த்துக்கும் இவ‌ர்க‌ளின் எழுத்துக்கும் என்ன‌ வேறுபாடு உள்ள‌து ந‌ண்ப‌ர்க‌ளே….. ச‌க‌ த‌மிழ‌ன் ஈழ‌த்தில் சாக‌டிக்கும்போது கூட‌ இணைந்து குர‌ல் கொடுக்காம‌ல்… த‌ங்க‌ளுக்குள் ப‌ல‌ பிரிவுக‌ளாக‌ இருந்துகொண்டு.. பாராட்ட‌வும்.. விம‌ர்சிக்கும்.. ம‌டைய‌ர்க‌ளாக‌வே த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள் இருந்தார்க‌ள் என்ப‌தை ம‌றுக்க‌ முடியுமா? கடவுள் என்பதே கூட விமர்சனத்திற்கு உட்பட்டதுதான் எனும்போது எந்த ஒரு படைப்பும், படைப்பாளியும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே.. என்கிற நிதர்சனத்தை உணரவேண்டும்.. அப்போதுதான் படைப்பையும் படைப்பாளியையும் முன்னேற்றத்தை நோக்கி இட்டுச்செல்ல முடியும்.. நாஞ்சில் நாடனோ.. ஜெயகாந்தனோ… அவர்கள் பற்றிய எனது விமர்சன பார்வை,,,, அவர்கள் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என அறியப்பட்டவர்களிடமிருந்து.. மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான படைப்புகள் இனியாவது வராதா? சக மனிதர்கள் என்று சொல்லப்படும் தாய் தந்தை.. தாத்தா பாட்டி மற்ற உறவுகளிடமும்.. பக்கத்துவீடு.. எதிர்வீடூ,, வீதியிலுள்ள வீடுகளில் வாழும் மக்களைப் படித்துவிட்டு அவர்களின் வாழ்வு மாற்றத்திற்கான படைப்புகள் இனியாவது வராதா? என்ற ஏக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது.. உணர்வீர்களாக‌ என்னுடன் விவாதிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள… 9489361307… 9443761307
    • தமிழ் நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் 42%.. படிக்க வாய்ப்பு இல்லாத மக்கள் 18%… 10 வரை படிக்க இயலாமல் உள்ளவர்கள் 10%… …..12 முடித்து மேலே படிக்க இயலாதவர்கள் 10%… …மீதி உள்ள 20% மக்களே மேல்தட்டு என்றும்… அதற்கு அடுத்த நிலை என்றும் வாழ்கிறார்கள்… முதல் இரண்டு நிலை தவிர மீதமுள்ளவர்களில் 5% பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கை நிலைக்கு போக காசுகொடுத்து வாங்கி படிக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள்.. அதிலும் 5% உள்ள இவர்களில் நாளிதழ் வார இதழ் வாங்கிப்படிக்கும் நபர்கள் போக…. புத்தக எழுத்தாளர்களீன் படைப்புகளை வாங்கிப்படிப்பவர்கள் 40% மட்டுமே.. ஆக 6 கோடி தமிழ் மக்களில் 4.80 லட்சம் மக்கள் மட்டுமே எழுத்தாளர்களின் தனிப் புத்தகங்களை வாசிக்கிறார்கள். இதில் ராஜேஸ்குமார்.. தபு சங்கர் போன்றோர்களின் குப்பைகளை தவிர்த்துவிட்டு 0.85% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், பாரதி என்று தங்களை முன்னணி எழுத்தாளர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் எழுத்தாளர்களைப் படிக்கிறார்கள் (இது 2008 வருடத்தில் வெளியான…. ப‌திப்ப‌க‌ங்க‌ளால் வெளியிட‌ப்ப‌ட்ட‌ விற்க‌ப்ப‌ட்ட‌ புத்தகங்களின் ஒரு மாதிரி ஆய்வின் முடிவு… இந்தக் கணக்கில் சிற்றிதழ்கள் அது சார்ந்த தனி வெளியீடுகள் சேராது..) இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் இவ‌ர்க‌ள் எல்லோருக்கும் அறிவுரை கூறுகிறார்க‌ள்… ச‌க‌ ம‌க்க‌ளை ப‌டியுங்க‌ள் என்று… இவ‌ர்க‌ள் வாழும் வீதியில் ம‌க்க‌ளுட‌ன் தீண்டாமையை க‌டைப்பிடிப்பார்க‌ள்… இவ‌ர்க‌ளை அறியாத‌வ‌ர்க‌ளை..”********” என்றும் சொல்வார்க‌ள்… நாஞ்சில்நாட‌னோ,ஜெய‌காந்த‌னோ இன்ன‌பிற‌ரோ த‌ங்க‌ள் வீதி.. ஊர்… ம‌க்க‌ளுட‌ன் ப‌ழ‌க‌மாட்டார்க‌ள்.. அவ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளீல் ப‌ங்கெடுக்க‌ மாட்டார்க‌ள்.. அவ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ளை அறிமுக‌ம் செய்துகொள்ள‌ மாட்டார்க‌ள்.. புனைபெய‌ரிலும் ஒழிந்துகொள்வார்க‌ள்… இவ‌ர்க‌ளை அறிந்துகொள்ளாத‌து ம‌க்க‌ள் குற்ற‌ம் என்பார்க‌ள்… ச‌மூக‌த்திற்கு அறிவுரை சொல்லி க‌தையில் செய்தியைச் சொல்லும் எழுத்தாள‌ன் ஒன்று தான் முன் உதார‌மாக‌ ம‌க்க‌ளிட‌ம் வாழ்ந்து கொண்டிருக்க‌ வேண்டும்.. அல்ல‌து கவிஞர் க‌ண்ண‌தாச‌ன் போல் க‌டைசி நேர‌ அறிவு வ‌ந்த‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும்.. இன்றைய‌ எழுத்தாள‌ர்க‌ள் இர‌ண்டுக்கும் பொருந்தாத‌.. ஒரு த‌னி நிலையில் வாழ்கிறார்க‌ள்… த‌ங்க‌ளுக்கென்று நிர‌ந்த‌ர‌ ச‌ம்ப‌ள‌ம் வ‌ர‌க்கூடிய‌ அர‌சுப் ப‌த‌வி.. அல்ல‌து பெரிய‌ த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளீல் வேலை… யாருட‌னும் ஒட்டாத‌ ஒரு சொகுசு வாழ்க்கை.. ப‌திப்ப‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ சொந்த‌ச் செல‌விலோ.. நாஞ்சில்நாட‌னோ,ஜெய‌காந்த‌னோ இன்ன‌பிற‌ரோ என்றால் ப‌திப்ப‌க‌ங்க‌ள் செல‌விலோ புத்த‌க‌ம் வெளியிடுவ‌து.. த‌குதிக்கேற்ப‌ அதில் ச‌ம்பாரிப்ப‌து.. விற்காத‌ புத்த‌க‌ங்க‌ளை அல‌மாரியிலோ. க‌ட்டிலுக்கு அடியிலோ போட்டுவைப்ப‌து.. ம்ம்… விடுத‌லை பெறுவ‌த‌ற்கு முன் த‌மிழ‌க‌ம் ச‌ந்தித்த‌ பிர‌ச்ச‌னைக‌ளை விட‌ இன்று த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பிர‌ச்ச‌னைக‌ள் அதிக‌ம்… ம‌க்க‌ள் ச‌ந்திக்கும் பிர‌ச்ச‌னைக‌ள் ப‌ற்றி ம‌வுன‌ம் சாதிப்ப‌து… பிர‌ச்ச‌னைக‌ள் எழுதினால் யார் ந‌ம் மீது சின‌ம் கொள்வார்க‌ள்.. அர‌சு ந‌ம்மீது தீவிர‌வாத‌ முத்திரை குத்திவிடுமோ என்று அஞ்சுவ‌து… இந்த‌ அள‌வில்தான் வீர‌ம‌ற்ற‌ கோழைக‌ளாக‌ ந‌ம‌து எழுத்தாள‌ர்க‌ள் உள்ள‌ன‌ர்…. பார‌தியார்.. பார‌திதாச‌ன் போன்றோரின் வீர‌ முழ‌க்க‌ங்க‌ளை எடுத்துக்காட்டுக்காக ப‌ய‌ன்ப‌டுத்துவார்க‌ள்.. சுய‌மாக‌ எழுதுவ‌தில் வீர‌ம் இருக்காது.. இவ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள‌து வ‌ருமான‌ம் புக‌ழ் இர‌ண்டின் எதிர்பார்ப்பிலேதான் எழுதுகிறார்க‌ள்… எழுதுபவனுக்கும்,,, எழுதுவதற்கும்,, வாழ்க்கைக்கும் ஒரு சொந்தம் இருக்க வேண்டும்,, இல்லை எனும்போது,, அவன் அல்லது அவள் எழுதும் புததகங்களால் அவர்களுக்கு கிடைக்கும் பணம் புகழைத்தவிர சமுதாயத்திற்கு பயன் இல்லை… படிப்பறிவு குறைந்துள்ள தமிழகத்தில் ஒரு நூற்றுச் சொச்சம் படைபாளிகள் உள்ளனர்.. சாதாரண மனிதனுக்கு புரியாதவகையில்.. மெட்டாலிசம்.. நவீனத்துவம்.. பின் நவீனத்துவம்.. வெங்காயம்,, புடலங்காய் என்ற போக்கில் எழுதி படிக்கும் மக்களின் ஆர்வத்தையும் கெடுக்கிறார்கள்.. இப்படி புரியாமல் எழுதும் முட்டாள்களால் புத்தக கண்காட்சியில் சமையல்கலை,, ஜோதிடம் போன்ற புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்றே கருதத் தோன்றுகிற்து… கண்காட்சியில் கவனித்துப் பாருங்கள் இளைய தலைமுறை படிப்பாளிகள் இவர்களின் புத்தகங்களை தொட்டுக்கூட பார்ப்பதில்லை… வேறு என்ன செய்வது.. இப்படி முரணான உண்மைகளைச் சொன்னால் குறுக்கே பேசி பெயர் வாங்கப் பார்க்கிறான் என்று குற்றம் சுமத்துகிறார்கள் இந்த நவீன அறிவாளிகள்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்