என்ன’டா’ வின்சி கோட்?

முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்).

திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி.

பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. பலருக்கும் ஏன் கிறீத்துவர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான மேலோட்டமான காரணங்களே தெரிந்துள்ளன அவற்றில் சில.

1. இயேசு திருமணமானவர் என நாவல் கூறுகிறது.
2. அவரின் வழித்தோன்றல்கள் இன்னும் இருக்கிறார்கள் என்கிறது
3. ஒப்பஸ் டெயி (Work of God) கத்தோலிக்க இயக்கத்தை வில்லத்தனமான இயக்கமாக காண்பிக்கிறது.
4. கிறித்துவ சாமியார் ஒருவர் கொலை செய்வதாய் சொல்கிறது
5. இயேசு கடவுள் இல்லை என்றும் அவரது கடவுள் தன்மையை ரோமன் பேரரசர் காண்ஸ்டாடைன்தான் நிறுவினார் என்கிறது நாவல்.
6. உலக மதங்கள் எல்லாமே மனிதனின் கற்பனையில் உருவானவை என்கிறது நாவல்.

இவையே மேலோட்டமான சில காரணங்கள். சில நேரம் இதைப் படித்தால் பலருக்கும் அதனாலென்ன திருமணம் செய்வது குழந்தை பெறுவதும் பாவமா? என்றெல்லாம் கேட்கத்தோன்றும்.

இயேசு திருமணமானவர் என்பதை ஏற்றுக்கொள்வது அவரின் கடவுள் தன்மையை பாதிக்கிறது. யூத வழியில் வந்த இயேசு தானே கடவுளின் மகன், மீட்பர் என்கிறார். யூத கடவுளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. திருமணம் உலக வாழ்வின் முழுமையை வெளிப்படுத்துகிறது. திருமணம் ஆகாத ஆன்மீகவாதிகளுக்கு ஊரில் இருக்கும் மவுசு உங்களுக்குத் தெரிந்ததே. இயேசு திருமண பந்தத்தில் ஈடுபட்டார் என்பது அவரும் நம்மைப்போல் முழுமையாக வெறும் மனிதன் எனக் கூறுவது போலாகிறது.

இது கிறித்துவ நம்பிக்கையின் அடி வேரில் கோடாரி வைக்கிறது. இரண்டாயிரமாண்டு வரலாற்றையும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையையும் சிதறடிக்கிறது, கேலி செய்கிறது.

இயேசுவுக்கு திருமணமானதாக எந்த நற்செய்தியுமே(Gospel) கூறவில்லை. நற்செய்தி என்பது மத்தேயு, மாற்கு, லூக் மற்றும் ஜாண் எழுதிய இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி அல்லது அண்மைக்கால குறிப்புக்கள், புத்தகங்கள். இவைதான் புதிய ஏற்பாட்டின், பைபிளின், கிறித்துவ நம்பிக்கையின் அடித்தளங்கள். இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள் திருத்தப்பட்டன அல்லது உண்மையில்லாதன எனபது போலாகும். நான்கு வேதங்கலும் பொய் சொல்கின்றன எனச் சொல்வதோ அல்லது கீதை வெறும் கதை என்பதோ குர் ஆன் கடவுள் தந்ததல்ல என்பதோ எவ்வளவு வலிக்குமோ அவ்வளவு வீரியமானது இந்தக் குற்றச்சாட்டு.

ஓப்பஸ் டெயி ஒரு கான்சர்வேட்டிவ் கத்தோலிக்க குழுமம். நம்மூரில் அலகு குத்துவதையும் தீக்குள் இறங்குவதையும் ஆன்மீக வெளிப்பாடாய் காட்டுவது போல ஒப்பஸ் டெயி சில தொன்மையான உடல் வலி மூலம் இறைவனைக் காணும் வழியை பின்பற்றுகிறது. இது இவர்களில் வெகு சிலரே பழகும் ஒரு முறை. மற்றபடி ஓப்பஸ் டெயி எல்லா நிலையிலும் எப்போதும் இறைவனைக் காணத் தூண்டும் ஒரு நிறுவனம்.

வெளிப்படையாகவே நாவல் இயேசுவின் தெய்வத்தன்மை மனிதனால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு ஓட்டெடுப்பில் உருவாக்கப்பட்டது என்கிறது. இதைவிட பெரிய காரணம் தேவையில்லை என்னைக்கேட்டால். இதைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் http://www.y-zine.com/monalisa2.htm.

பலரும் கவனிக்க மறந்த அல்லது வசதியாக மறைத்துவிட்ட செய்தி என்னவென்றால் நாவலில் ஒரு பகுதியில் உலகின் எல்லா மதங்களுமே மனிதன் நிறுவியவைதான், காலத்தினால் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான் என சொல்லப்படுகிறது. கிறித்துவத்தை மட்டும் டான் பிரவுன் தாக்கவில்லை. அவருக்கு எந்தக் கடவுள் எப்படிப் போனால் என்ன நாவல் விற்று காசு கிடைத்தால் போதும்.

சரி நாவல் எப்படி இருந்தது? உண்மையில் இந்த நாவல் மிக வேகமாக நகரும் அருமையான த்ரில்லர். நம்மூரில் துப்பறியும் சாம்புவையே விழுந்து விழுந்து படிக்கிறோம் இது சாம்புவை டீ சமயத்தில் ஸ்னாக் போல சாப்பிட்டு ஏப்பம் விடும்.

Sidney Sheldon in fast forward. இதுதான் என் கருத்து. ஆனாலும் திரும்பத் திரும்ப குறியீடுகளை அவிழ்ப்பதும் உடைப்பதும் கடைசியில் புளித்துவிடுகிறது. அதுவும் என்னைப்போல பாத்ரூமில் பகுதி பகுதியாய் பதினைந்து நாள் படித்தால் புளிப்பு அதிகமாகிறது.

அதிவேக த்ரில்லருக்கான எல்லா தகுதியும் நாவலுக்கு இருக்கின்றன. அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமாதடை? இல்லை பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அமெரிக்க பிரிட்டன் போன்றவற்றை கிறித்துவ நாடு என்று சொல்லமுடியாது. அப்படி அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக ‘western thought’ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.

இந்திய கிறீத்தவர்கள் ஏன் தடை கோருகிறார்கள? பொதுவாக மேற் கூறிய காரணங்களுக்காக. உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான். இல்லை என் கடவுளை மறுப்பவனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குது என வெகுசிலராலேயே ஏற்றுக்கொள்ள முடிகிறது.

டா வின்சி கோட் கற்பனை கதை என்பதில் ஐயமில்லை. அதில் வரும் இயேசு பற்றிய பல கருத்துக்களும் Legends எனப்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையிலான (கட்டுக்)கதைகள் மற்றும் சில Conspiracy Theoryகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை பல வரலாற்று ஆதாரங்களுடன் பலர் நிருபிக்கிறார்கள். (பார்க்க பாஸ்டன் பாலவின் பதிவு)

கீதை எனப் படப்பெயர் வைப்பதையே நம்மவர்கள் பலர் எதிர்க்கிறார்கள் எனும்போது இது போல ஒரு படத்தை நம்மவர்கள் அனுமதிப்பார்களா? கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று.

நாளைக்கே டான் பிரவுன் இந்து அல்லது முஸ்லிம் மதக் குறியீடுகள் பத்தி நாவல் எழுதலாம். ருஷ்டி போல புகழின் உச்சியை உடனே அடைய எளிய வழி வேறென்ன?

(யாரையும் குத்திக் காட்டவோ தர்க்கம் செய்யவோ இதை எழுதவில்லை – டிஸ்க்ளெய்மர் இல்லைன்னா இப்போல்லாம் சர்வைவ் பண்ண முடியாது போலிருக்கே)

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....34 மறுமொழிகள் to “என்ன’டா’ வின்சி கோட்?”

 1. G.Ragavan சொல்கிறார்:

  // முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்). //

  சிறில். படம் ஒன்னும் அவ்வளவு பிரமாதம் இல்லையாம். ஆனாலும் தடை என்று வந்து விட்டதால் அதில் என்னதான் இருக்கிறது என்று எல்லாரும் பார்க்க முயல்கிறார்கள். தடை எதிர்விளைவை உண்டாக்கியதாகவே நான் கருதுகிறேன்.

  // திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி. //

  சென்னையில் டாவின்சி கோடு விசிடி, டீவிடிகள் முப்பத்தைந்து ரூவாய்க்கே கிடைக்கின்றன.

  // பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. பலருக்கும் ஏன் கிறீத்துவர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான மேலோட்டமான காரணங்களே தெரிந்துள்ளன அவற்றில் சில. //

  இதையும் மறுக்க முடியாது. நமக்குத் தெரிந்த விஷயங்களை வைத்துதானே யாரும் எதுவும் சொல்ல முடியும். ஆகையால் அவரவர்க்குத் தெரிந்ததை வைத்துத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  // 1. இயேசு திருமணமானவர் என நாவல் கூறுகிறது.
  2. அவரின் வழித்தோன்றல்கள் இன்னும் இருக்கிறார்கள் என்கிறது
  3. ஒப்பஸ் டெயி (Work of God) கத்தோலிக்க இயக்கத்தை வில்லத்தனமான இயக்கமாக காண்பிக்கிறது.
  4. கிறித்துவ சாமியார் ஒருவர் கொலை செய்வதாய் சொல்கிறது
  5. இயேசு கடவுள் இல்லை என்றும் அவரது கடவுள் தன்மையை ரோமன் பேரரசர் காண்ஸ்டாடைன்தான் நிறுவினார் என்கிறது நாவல்.
  6. உலக மதங்கள் எல்லாமே மனிதனின் கற்பனையில் உருவானவை என்கிறது நாவல். //

  சிறில் இதில் ஆறாவது கருத்தில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு.

  // இவையே மேலோட்டமான சில காரணங்கள். சில நேரம் இதைப் படித்தால் பலருக்கும் அதனாலென்ன திருமணம் செய்வது குழந்தை பெறுவதும் பாவமா? என்றெல்லாம் கேட்கத்தோன்றும்.

  இயேசு திருமணமானவர் என்பதை ஏற்றுக்கொள்வது அவரின் கடவுள் தன்மையை பாதிக்கிறது. யூத வழியில் வந்த இயேசு தானே கடவுளின் மகன், மீட்பர் என்கிறார். யூத கடவுளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. திருமணம் உலக வாழ்வின் முழுமையை வெளிப்படுத்துகிறது. திருமணம் ஆகாத ஆன்மீகவாதிகளுக்கு ஊரில் இருக்கும் மவுசு உங்களுக்குத் தெரிந்ததே. இயேசு திருமண பந்தத்தில் ஈடுபட்டார் என்பது அவரும் நம்மைப்போல் முழுமையாக வெறும் மனிதன் எனக் கூறுவது போலாகிறது. //

  இங்கே எனது கருத்து ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இறை என்பதை ஆண் என்று பார்ப்பதால் இந்த நிலை என்று நினைக்கிறேன். எங்கள் நம்பிக்கையில் இறைவன் ஆணும் பெண்ணுமாய் அனைத்தையும் கடந்த அனாதியாய் நிற்பவன் என்று நம்புகிற பொழுது, அவன் ஆணுமாய் உடன் பெண்ணுமாய் இருப்பதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. கடவுள் திருமணம் செய்து கொள்வதைக் கூட நமக்கு வாழ வழிகாட்டும் முறைமையாகக் கொள்வதாகக் கருதப் படுகிறது. உண்மையாக சொல்கிறேன். ஏசுநாதரின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட இலக்கியத்தரமேயில்லாத இந்தப் புத்தகம் ஒரு பெரிய காரணம் என்றால் மிகையாகாது.

  // இது கிறித்துவ நம்பிக்கையின் அடி வேரில் கோடாரி வைக்கிறது. இரண்டாயிரமாண்டு வரலாற்றையும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையையும் சிதறடிக்கிறது, கேலி செய்கிறது.

  இயேசுவுக்கு திருமணமானதாக எந்த நற்செய்தியுமே(Gospel) கூறவில்லை. நற்செய்தி என்பது மத்தேயு, மாற்கு, லூக் மற்றும் ஜாண் எழுதிய இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி அல்லது அண்மைக்கால குறிப்புக்கள், புத்தகங்கள். இவைதான் புதிய ஏற்பாட்டின், பைபிளின், கிறித்துவ நம்பிக்கையின் அடித்தளங்கள். இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள் திருத்தப்பட்டன அல்லது உண்மையில்லாதன எனபது போலாகும். நான்கு வேதங்கலும் பொய் சொல்கின்றன எனச் சொல்வதோ அல்லது கீதை வெறும் கதை என்பதோ குர் ஆன் கடவுள் தந்ததல்ல என்பதோ எவ்வளவு வலிக்குமோ அவ்வளவு வீரியமானது இந்தக் குற்றச்சாட்டு. //

  நீங்கள் சொல்லும் அத்தனையையும் இந்த வலைப்பதிவிலேயே பார்க்கிறோமே சிறில். புத்தகத்திற்கும் திரைப்படத்திற்கும் ஏன் போக வேண்டும். இதே வலைப்பூக்களில்தான் முருகன் கடவுளே இல்லை என்று சொல்லவும் கண்டோம். அதுவும் நம்பிக்கையின் அடிவேரில் கோடாரி வைப்பதுதான். கீமாயணம் எழுதும் சுதந்திரம் கொடுத்தோமே சிறில்.

  டான் பிரவுன் சொல்வதை உண்மை என்று ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அவர் சொல்வதைச் சொல்லட்டும். அவர் பொய்யர் என்று நாம் நிரூபிப்போம். அவரது புத்தகத்தில் அவர் எந்த வரலாற்று ஆதாரங்களையும் காட்டவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்தக் கருத்தைச் சொல்லும் முதல் மனிதர் டான் பிரவுன் இல்லை என்பதையும் நான் நினைவு கூற வேண்டும்.

  டான் பிரவுன் சொல்வது பொய் என்றால் அவர் எப்படியெல்லாம் பொய் சொல்கிறார் என்று அழகாக விளக்கலாம். இந்து மதம் போலில்லாமல் ஒரு பெரிய அமைப்பாக இருக்கும் கிருத்துவ மதத்திற்கு இது மிகவும் எளிது.

  // ஓப்பஸ் டெயி ஒரு கான்சர்வேட்டிவ் கத்தோலிக்க குழுமம். நம்மூரில் அலகு குத்துவதையும் தீக்குள் இறங்குவதையும் ஆன்மீக வெளிப்பாடாய் காட்டுவது போல ஒப்பஸ் டெயி சில தொன்மையான உடல் வலி மூலம் இறைவனைக் காணும் வழியை பின்பற்றுகிறது. இது இவர்களில் வெகு சிலரே பழகும் ஒரு முறை. மற்றபடி ஓப்பஸ் டெயி எல்லா நிலையிலும் எப்போதும் இறைவனைக் காணத் தூண்டும் ஒரு நிறுவனம். //

  எனக்குத் தெரிந்து ஓபஸ் டெய் மட்டுந்தான் இந்தக் குழப்பத்தை மிகவும் பாசிட்டிவ்வான முறையில் பயன்படுத்திக் கொள்கிறது என்று நினைக்கிறேன்.

  // வெளிப்படையாகவே நாவல் இயேசுவின் தெய்வத்தன்மை மனிதனால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு ஓட்டெடுப்பில் உருவாக்கப்பட்டது என்கிறது. இதைவிட பெரிய காரணம் தேவையில்லை என்னைக்கேட்டால். இதைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலத்தில் http://www.y-zine.com/monalisa2.htm.

  பலரும் கவனிக்க மறந்த அல்லது வசதியாக மறைத்துவிட்ட செய்தி என்னவென்றால் நாவலில் ஒரு பகுதியில் உலகின் எல்லா மதங்களுமே மனிதன் நிறுவியவைதான், காலத்தினால் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான் என சொல்லப்படுகிறது. கிறித்துவத்தை மட்டும் டான் பிரவுன் தாக்கவில்லை. அவருக்கு எந்தக் கடவுள் எப்படிப் போனால் என்ன நாவல் விற்று காசு கிடைத்தால் போதும். //

  இந்தக் கூற்றில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்தியாவில் மட்டுமல்ல…உலகளாவிய வகையில். Bernard Knight என்ற எழுத்தாளர் இருக்கிறார். இவர் Witch Hunter என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். பழைய கதைதான். அந்தப் புத்தகம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. எப்படியோ ஒரு காப்பி வாங்கி படித்து விட்டேன். இவருடைய மற்ற புத்தகங்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. :-(

  // சரி நாவல் எப்படி இருந்தது? உண்மையில் இந்த நாவல் மிக வேகமாக நகரும் அருமையான த்ரில்லர். நம்மூரில் துப்பறியும் சாம்புவையே விழுந்து விழுந்து படிக்கிறோம் இது சாம்புவை டீ சமயத்தில் ஸ்னாக் போல சாப்பிட்டு ஏப்பம் விடும். //

  அப்படியும் சொல்ல முடியாது சிறில். இந்த நாவல் சுமார் ரகம்தான். கொஞ்சமும் இலக்கியத்தரமில்லாத இந்தக் கதை உயிர் பிழைப்பதே அது வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படும் தகவலால்தான். இல்லையால் இந்த நாவல் டுபுக்குதான். இதை விட Angels and Demons தேவலாம். ஆனால் அதில் அளவிற்கு அதிகமான வன்முறை மட்டுமல்ல….வாடிகன் நகருக்குள்ளே…சர்ச்சுக்குள்ளே….நடப்பதாகச் சொல்லப்படும் சில நிகழ்ச்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

  // Sidney Sheldon in fast forward. இதுதான் என் கருத்து. ஆனாலும் திரும்பத் திரும்ப குறியீடுகளை அவிழ்ப்பதும் உடைப்பதும் கடைசியில் புளித்துவிடுகிறது. அதுவும் என்னைப்போல பாத்ரூமில் பகுதி பகுதியாய் பதினைந்து நாள் படித்தால் புளிப்பு அதிகமாகிறது. //

  பதினஞ்சு நாளா? வெளையாடுறீங்களா சிறில்…பதினைஞ்சு நாள் வெச்சுப் படிக்கிறதுக்கு இதுல ஒன்னுமே இல்லை. புத்தகம் படிக்கிற பழக்கம் எனக்கு உண்டுங்குறதால படமா வந்தா பாக்க விருப்பப்படுவேன். அந்த வகைதான். அப்படித்தான் Chronicles of Narniaவும். மொத்தம் ஏழு கதைகள். ஏழும் படிச்சிட்டேன். ஆனா ஒன்னுதான் படமா வந்திருக்கு. அடுத்தது எடுக்குறாங்களாம்.

  இந்தக் கதைல Aslanனு ஒரு சிங்கம் வரும். அது யேசுவின் உருவகம். Son of King of all the Kings என்றுதான் அதை எல்லாரும் சொல்வார்கள். கிடைத்தால் படித்துப் பாருங்கள். மிகவும் ரசிப்பீர்கள்.

  // அதிவேக த்ரில்லருக்கான எல்லா தகுதியும் நாவலுக்கு இருக்கின்றன. அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

  இந்தியாவில் மட்டுமாதடை? இல்லை பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அமெரிக்க பிரிட்டன் போன்றவற்றை கிறித்துவ நாடு என்று சொல்லமுடியாது. அப்படி அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக ‘western thought’ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.

  இந்திய கிறீத்தவர்கள் ஏன் தடை கோருகிறார்கள? பொதுவாக மேற் கூறிய காரணங்களுக்காக. உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான். இல்லை என் கடவுளை மறுப்பவனுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குது என வெகுசிலராலேயே ஏற்றுக்கொள்ள முடிகிறது. //

  சிறில் இங்குதான் எந்த மதத்தின் பலவீனமும் வெளிப்பட்டு விடுகிறது. தன்னுடைய கடவுளை நம்புகிற பெரும்பான்மையானவர்கள் அடுத்த கடவுள்களை நம்பாமல்தான் இருக்கிறார்கள். அடுத்த கடவுளை நாம் நம்பாமல் இருப்பது பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் நம் கடவுளை அடுத்தவன் நம்பாதது பெரிதாகத் தெரிகிறது.

  Ten Commandments படம் பார்த்திருப்பீர்கள். அதில் எகிப்தியக் கடவுளர்களைக் கடவுள் இல்லை என்றுதானே காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு எகிப்தில் இஸ்லாமியர்கள் இருப்பதால் யாரும் கேட்கவில்லை. அப்படியில்லையென்றால் என்னவாயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? The Passion of the Christ படத்திற்கு யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொன்னீர்களே. அதுதான் நடந்திருக்கும்.

  // டா வின்சி கோட் கற்பனை கதை என்பதில் ஐயமில்லை. அதில் வரும் இயேசு பரற்றிய பல கருத்துக்களும் Legends எனப்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையிலான (கட்டுக்)கதைகள் மற்றும் சில Conspiracy Theoryகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை பல வரலாற்று ஆதாரங்களுடன் பலர் நிருபிக்கிறார்கள். (பார்க்க பாஸ்டன் பாலவின் பதிவு) //

  அந்தப் புத்தகத்தில் டான் பிரவுன் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

  // கீதை எனப் படப்பெயர் வைப்பதையே நம்மவர்கள் பலர் எதிர்க்கிறார்கள் எனும்போது இது போல ஒரு படத்தை நம்மவர்கள் அனுமதிப்பார்களா? //

  புதிய கீதை, புதிய பைபிள், புதிய குரான்….இந்தப் பெயர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லது.

  // கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று. //

  இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு மறுப்பு இல்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் திரைப்படங்களில் மட்டும் அல்ல. எல்லா வகையிலும் இதைச் செயல்படுத்தத் தாயாராக இருப்பவர்களோடு நானும் கைகோர்க்கக் காத்திருக்கிறேன்.

  // நாளைக்கெ டான் பிரவுன் இந்து அல்லது முஸ்லிம் மதக் குறியீடுகள் பத்தி நாவல் எழுதலாம். ருஷ்டி போல புகழின் உச்சியை உடனே அடைய எளிய வழி வேறென்ன? //

  நிச்சயம் எழுதுவார். ஐயமே இல்லை. வாங்கிப் படித்து விட்டு….அப்படியே அடுத்த புத்தகத்திற்குத் தாவ வேண்டியதுதான்.

  // (யாரையும் குத்திக் காட்டவோ தர்க்கம் செய்யவோ இதை எழுதவில்லை – டிஸ்க்ளெஇய்மர் இல்லைன்னா இப்போல்லாம் சர்வைவ் பண்ண முடியாது போலிருக்கே) //

  இதெதுக்கு. இதப் போட்டதுதான் எனக்குத் திக்குன்னு இருக்கு. ஏன்னா டாவின்சி படத்தைத் தடை செஞ்சத எதுத்து நானும் ஒரு பதிவு போட்டிருந்தேனே.

 2. S.L சொல்கிறார்:

  “உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான்”

  Than why christians are not demanding a ban on koran which says exactly the same thing?

 3. G.Ragavan சொல்கிறார்:

  சிறில், மொத்தக் கமெண்ட்டையும் பதிக்க விடாமல் error வந்தது. ஆகையால் துண்டு துண்டாகப் பதித்திருக்கிறேன். அதிலும் நடுநடுவே errorகள். ஆகையால் ஒன்றுக்கு அதிகமாகப் பதிந்திருந்தால் அழித்து விடுங்கள்.

 4. G.Ragavan சொல்கிறார்:

  அடடா! பிழைன்னு காமிச்சாலும் எல்லாமே பதிஞ்சிருக்கு சிறில். நல்ல வேளை எல்லாத்தையும் அழிச்சிட்டீங்க. :-) நன்றி.

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இராகவன்,
  உங்கள் கருத்துக்கலுக்கு நன்றி. உங்கள் பதிவிலிட்ட பின்னூட்டத்தை கொஞ்சம் பெரிதாக்கி இந்தப் பதிவயிட்டேன்.

  //டான் பிரவுன் சொல்வதை உண்மை என்று ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அவர் சொல்வதைச் சொல்லட்டும். அவர் பொய்யர் என்று நாம் நிரூபிப்போம். அவரது புத்தகத்தில் அவர் எந்த வரலாற்று ஆதாரங்களையும் காட்டவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்தக் கருத்தைச் சொல்லும் முதல் மனிதர் டான் பிரவுன் இல்லை என்பதையும் நான் நினைவு கூற வேண்டும்.

  டான் பிரவுன் சொல்வது பொய் என்றால் அவர் எப்படியெல்லாம் பொய் சொல்கிறார் என்று அழகாக விளக்கலாம். இந்து மதம் போலில்லாமல் ஒரு பெரிய அமைப்பாக இருக்கும் கிருத்துவ மதத்திற்கு இது மிகவும் எளிது.//

  இது நடந்து வருகிறது. இணையத்தில் தேடலாம். புத்தகங்களும் பல வந்துள்ளன.

  //சிறில் இங்குதான் எந்த மதத்தின் பலவீனமும் வெளிப்பட்டு விடுகிறது. தன்னுடைய கடவுளை நம்புகிற பெரும்பான்மையானவர்கள் அடுத்த கடவுள்களை நம்பாமல்தான் இருக்கிறார்கள். அடுத்த கடவுளை நாம் நம்பாமல் இருப்பது பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் நம் கடவுளை அடுத்தவன் நம்பாதது பெரிதாகத் தெரிகிறது.//

  உண்மை…

  //இதெதுக்கு. இதப் போட்டதுதான் எனக்குத் திக்குன்னு இருக்கு. ஏன்னா டாவின்சி படத்தைத் தடை செஞ்சத எதுத்து நானும் ஒரு பதிவு போட்டிருந்தேனே. //

  சும்மா சாதாரணமாத்தான் டிஸ்க்ளெய்மர் போட்டேன். உங்களுக்கு ஏங்க டிஸ்க்ளெய்மர்?

 6. G.Ragavan சொல்கிறார்:

  // S.L said…
  “உண்மையில் இயேசு மனிதர்தான் கடவுளே இல்லை என்பதை எந்தக் கிறீத்தவனாலும் தாங்கிக்கொள்ள முடியாது. யாராலும் இப்படி தங்கள் கடவுளை, இல்லை பொய் என்பதை தாங்கிக்கொள்ள முடியாதுதான்” //

  இந்தப் புத்தகத்தில் ஏசு கடவுள் இல்லை என்று வெளிப்படையாகச் சொன்ன நினைவு இல்லை.

  // Than why christians are not demanding a ban on koran which says exactly the same thing?

  10:29 AM //

  இது குறித்து நானும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே குரான் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.

  சிறில், தெரிந்தால் சொல்லுங்களேன். இல்லையென்றால் இஸ்லாமிய நண்பர்கள் இதுகுறித்து விளக்கலாம். கடவுளின் தூதர் என்ற வகையில்தான் அவரைக் குரான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லப்படுவது உண்மையா?

  இன்னொரு செய்தி. சிலுவையில் இறந்தவர் யேசுவே அல்ல என்கிறதா திருக்குரான்? இதையும் எங்கோ படித்த நினைவு. தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  S.L. உங்கள் கேள்விக்குப் பதில் உங்களுக்கே தெரியும்.

 8. பிரசன்னா சொல்கிறார்:

  அது ஒரு கதைனு பாக்குற வரையில ஒரு பிரச்சினையும் இல்ல. உள்ள போனாத்தான் பிரச்சினை. சின்ன வயசுல தி.க மீட்டிங் கேட்டிருக்கேன். அதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. சில விஷயங்கள் நல்லா இருந்தது. அந்த பி.எச்.ஐ. நம்பர். முக்கியமான பல விஷயங்கள சொல்லும் இல்லையா? நமது உடம்பு முழுவதும், சரி பாதியாக வெட்டப்பட்டால், இரண்டு பகுதிகளும் ஒரே அளவு இருக்காது, இப்படி நிறைய, ஆனா கிறித்துவ சாமிகள் கொலை பண்றத விடவும் பெரிய கூத்தெல்லாம் பண்ணுவாங்க. அதுக்காக எல்லாம் தடை சொல்ல முடியுமா.
  மத்தபடி டான் பிரவுண் பத்திய எனது பதிவு விரைவில். எனக்கு ஒரு சந்தேகம். எங்கப்பா சொல்லுவார். ஏன் கிறிஸ்து அந்த காலத்துல வாழ்ந்த ஒரு பெரிய பேச்சாளரா இருக்க கூடாதுன்னு? எனக்கு இன்னுமே விவிலியத்துல கொஞ்சம் சந்தேகம் உண்டு. அதை இந்த மாதிரி பொதுவான இடத்துல விவாதிக்கறத விட தனியா பேசுனா நல்லது. யாராவது விவரமானவங்க, எனக்கு தனி மடல் அனுப்ப முடியுமா நு பணிவோட கேட்டுக்குறேன்.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஏன் கிறிஸ்து அந்த காலத்துல வாழ்ந்த ஒரு பெரிய பேச்சாளரா இருக்க கூடாதுன்னு?//

  உங்களுக்கென்ன எனக்கே அந்த சந்தேகம் உண்டு. இதுபோல இராமன் ஏன் வெறும் அரசனாக இருக்கக்கூடாது, கிருஷ்ணர் ஏன் மந்திரியாக இருக்கக்கூடாதுன்னெல்லாம் யோசிக்கலாம். இந்தமாதிரி மாற்று சிந்தனைகள் ஏற்படுத்தி விவாதித்து ஆராய்ந்தறியும் பக்குவம் எத்தனைபேருக்கு இருக்கு.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இராகவன்,
  முதலில் குர் ஆனில் இயேசுவைப்பர்றி மோசமாக எதுவும் சொல்லப்படவில்லை. அவர், முகமது நபியைப் போலவே, ஒரு இறைத்தூதர் எனவும் மக்கள் அவரை கடவுளாக்கிவிட்டனர் எனவும் கூறப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
  ஆனால் குரான் வியாபார நோக்கத்தோடு தாக்கும் தொனியில், குறைகூறும் எண்ணத்தில் எழுதப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

 11. சீனு சொல்கிறார்:

  //இதுபோல இராமன் ஏன் வெறும் அரசனாக இருக்கக்கூடாது, கிருஷ்ணர் ஏன் மந்திரியாக இருக்கக்கூடாதுன்னெல்லாம் யோசிக்கலாம். இந்தமாதிரி மாற்று சிந்தனைகள் ஏற்படுத்தி விவாதித்து ஆராய்ந்தறியும் பக்குவம் எத்தனைபேருக்கு இருக்கு. //

  நானும் இதைத்தான் நினைக்கிறேன். எல்லா கடவுள்களும் மனிதர்கள் தாம். நாம் பின் அவர்களை கடவுள்களாகவும், அவதாரங்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.

  சொல்லப்போனால், உலகில் வன்முறை தலைதூக்கும் பொழுது, இன்னும் 100 ஆண்டுகளில், நம் காந்தியையும் ஒரு அவதாரம் ஆக்கிவிடுவார்கள், அவர் அகிம்சையை போதித்ததினால்.

 12. Boston Bala சொல்கிறார்:

  Thanks for the crisp & insightful take on this issue.

  —-டிஸ்க்ளெஇய்மர் இல்லைன்னா இப்போல்லாம் சர்வைவ் பண்ண முடியாது போலிருக்கே—

  :-)))

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Bala thanks for the crisp and insightful comment :)
  நான் எழுத நினைத்த பலதையும் நீங்கள் போட்டு தாக்கிவிட்டீர்கள் I conveniently linked to your posts.
  Thanks.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  // இன்னும் 100 ஆண்டுகளில், நம் காந்தியையும் ஒரு அவதாரம் ஆக்கிவிடுவார்கள், அவர் அகிம்சையை போதித்ததினால்.//

  ம்ம்ம் மகாத்மா பரமாத்மா ஆக அதிக நேரம் எடுக்காதுதான்.

 15. Parama Pitha சொல்கிறார்:

  // கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று. //

  வாய்யா அலெக்ஸூ! இப்ப மட்டும் உமக்கு பேஜாராகிதுல்ல? சந்தைக்கடையில நின்னு அய்யா வாங்க அம்மா வாங்கனு இதுக்கு எல்லாரும் எதிர்ப்பு தெரிவிங்கனு கூப்பாடு போடுறீரே, ‘இந்து மதத்தை ஒழிப்பது எப்பிடி’னு தன்னுடைய அரிப்பிர்காக பதிவு போட்டப்ப அல்லாத்துக்கும் இதுக்கும் மேல வலிச்சிருக்குமுல்ல? அப்ப நீரு எங்க போனீரு? வந்து அத கண்டிச்சீரா? வேறு வேலை இருந்தா பாரும் அய்யா. திராவிட குடி தாங்கிகளும், மஞ்சத்துண்டு முற்போக்குகளும் இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி தொடர்ந்து நடந்து கொள்வதை கண்டித்து விட்டு பிறகு நிமிர்ந்த முதுகோடு இங்கு வந்து பேசவும்.

  அய்யா அரைடிரவிசர் ராகவன் உம்முடைய எழுத்தில், உம்முடைய சுய தம்மப்பட்டம்தானய்யா அதிகம் தெரிகிறது. நீர் என்ன சொல்ல வரீரென்றே புரியவில்லை கண்ணு. இன்னும் நீ கத்துக்க வேண்டியது நிறய உள்ளதப்பா. மஞ்சத்துண்டு முற்போக்குகளின் மனமகிழ்ச்சிக்காக இந்து என்பதற்கே உம்முடைய புதிய விளக்கம் கொடுத்த உம்மை போல ஏமாளிகள்தானய்யா போலி மதசார்பின்மையை ஊக்குவிப்பது

 16. ஜோ / Joe சொல்கிறார்:

  டாவின் சி கோட்-க்கு தமிழகத்தில் தடை விதித்ததை நானும் கண்டிருக்கிறேன் .வழக்கம் போல உங்கள் பாணியில் அருமைய்யான பதிவு .வழக்கம் போல நண்பர் ராகவனின் வெளிப்படையான கண்ணியமான கருத்துக்கள்.

  இயேசு குறித்து இஸ்லாம் சொல்வதென்ன என்ற ராகவனின் கேள்வி குறித்து சில கருத்துக்கள்

  1.இஸ்லாமின் நபிகளில் (இறை தூதர்கள்) இயேசு (ஈஸா நபி) இறுதி தூதர் முகமது நபிக்கு முந்திய முக்கியமான நபி.

  2.கிறிஸ்தவர்கள் சொல்வது போல அவர் கடவுளின் மகன் அல்ல .முகமது ,இப்ராகிம் போல ஒரு இறை தூதர்.

  3.இயேசுவை யூதர்கள் கொடுமைப்படுத்தினும் ,அவர் யூதர்களால் கொல்லப்படுவதிலிருந்து அல்லாவால் காப்பாற்றப்பட்டார்.

  4.எந்த நபிக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஈஸா நபிக்கு உண்டு .அவர் மேரி (மரியம்) -யின் வயிற்றில் கன்னி கழியாமலே அல்லாவின் அருளால் பிறந்தவர் (கிறிஸ்தவர்களுக்கும் இதே நம்பிக்கை).இவ்வுலகில் பிறந்த பரிசுத்த பெண்மணிகளில் மேரி முக்கியமானவர்.

  5.இவ்வுலகின் இறுதி நாளில் அல்லாவின் தூதராக இயேசு மீண்டும் இவ்வுலகத்துக்கு வருவார் .குரானை ஓதி இவ்வுலகை முடித்து வைப்பார் (இயேசு இறுதி நாளில் மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் கூட)

  (என்னுடைய கருத்துக்களில் தவறிருந்தால் இஸ்லாம் அன்பர்கள் சுட்டிக்காட்டவும்)

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  போய்யா பரமபிதா,
  உங்க அஜெண்டாவே வேறு என நினைக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்லத்தேவையில்லை என் பதிவுகளை முழுவதுமாக நீங்கள் படிட்த்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

  இராகவன் பத்தி நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து உங்கள் தரம் தெரிகிறது.

  மன்னிக்கவும் இனிமேல் தனிமனித தாக்குதல் கொண்டுவரும் பின்னூட்டங்கள் விலக்கப்படும்.

  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் நியாயமானவை. முறையாகக் கேட்டிருந்தால் நல்ல பதில் கிடைத்திருக்கும்.

 18. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ, ஒரு பின்னூட்டத்தை கழித்துவிட்டேன். பாராட்டுக்கு நன்றி.

 19. பிரசன்னா சொல்கிறார்:

  ///உங்களுக்கென்ன எனக்கே அந்த சந்தேகம் உண்டு. இதுபோல இராமன் ஏன் வெறும் அரசனாக இருக்கக்கூடாது, கிருஷ்ணர் ஏன் மந்திரியாக இருக்கக்கூடாதுன்னெல்லாம் யோசிக்கலாம///
  அய்யா! அப்படி எல்லாம் நினைக்காதீங்க, அது பூரா கதை தான். ஒரு அரசனும் அப்படி வாழ்ந்து இருக்க முடியாது. எந்த மனுஷனாவது 3000 வருஷம் வாழ்ந்து மரணம் வராம நதில மூழ்கி முக்தி அடைஞ்சிருக்க முடியுமா? கடவுளை இப்படி சித்தரிச்சு, இப்படி வாழலாம்னு சொல்ற கதைகள் தான் இந்து மதத்தில் அதிகம். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாம, ஒருத்திய மட்டும் நினைச்சு, நல்ல சிந்தனைகளோட வாழ்ந்தா இவ்வளவு நாள் வாழலாம்னு சும்மனாச்சும் சொல்லிபுட்டாங்க.
  மக்களை நல்வழிபடுத்த பயன்பட்ட கதைகள் தான் அதெல்லாம். இப்ப நீங்க கேக்கலாம், அப்ப கிருஷ்ணர் கத என்ன சொல்ல வருதுன்னு, அவருக்கு ராமர் மாதிரி அமைதியான சாவு கிடையாது. எவனோ ஒரு வேடன் அம்பு விட்டு கொன்னுபுடுவான். இதெல்லாம் நடந்ததுக்கு ஒரு சரித்திரக் குறிப்பும் கிடையாது. டாவின்சி கோட் கதைல ஒரு வசனம், “பைபிள் சொர்கத்துல இருந்து ஃபேக்ஸ் செய்யப்படலை” அதே மாதிரி தான், நேர்ல பாத்த மக்களோட பதிவு இல்லன்னும் போது அதெல்லாம் கதைனு தான் எடுத்துக்கணும்.
  இது என்னோட கருத்து தான். யாரையும் புண்படுத்தணும் அப்படிங்குற நோக்கத்தோட எழுதப்பட்ட பின்னூட்டம் இல்லை இது.

 20. G.Ragavan சொல்கிறார்:

  // //இதெதுக்கு. இதப் போட்டதுதான் எனக்குத் திக்குன்னு இருக்கு. ஏன்னா டாவின்சி படத்தைத் தடை செஞ்சத எதுத்து நானும் ஒரு பதிவு போட்டிருந்தேனே. //

  சும்மா சாதாரணமாத்தான் டிஸ்க்ளெய்மர் போட்டேன். உங்களுக்கு ஏங்க டிஸ்க்ளெய்மர்? //

  அதான பாத்தேன். :-)

 21. G.Ragavan சொல்கிறார்:

  // திராவிட குடி தாங்கிகளும், மஞ்சத்துண்டு முற்போக்குகளும் இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி தொடர்ந்து நடந்து கொள்வதை கண்டித்து விட்டு பிறகு நிமிர்ந்த முதுகோடு இங்கு வந்து பேசவும். //

  பரமபிதா, உங்கள் கருத்துதான் என்னுடையதும். நான் சொல்லியிருக்கும் முறை வேறு மாதிரி இருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்னதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். நான் மேலே சொல்லியிருப்பதைக் கீழே சொல்லியிருக்கிறேன். அதுக்கு என்ன பொருள் என்று யோசித்துப் பாருங்கள்.

  சிறில் : // கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு மத நம்பிக்கையை, கடவுளை அவமதிப்பது கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லோரும் கவனிக்கவேண்டிய ஒன்று. //

  நான் : இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு மறுப்பு இல்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் திரைப்படங்களில் மட்டும் அல்ல. எல்லா வகையிலும் இதைச் செயல்படுத்தத் தாயாராக இருப்பவர்களோடு நானும் கைகோர்க்கக் காத்திருக்கிறேன்.

  யேசுகிருஸ்துவைக் கடவுள் இல்லை என்று சொன்னதும் ஆத்திரம் கொள்கிற கிருஸ்துவர்களில் பலர் மற்ற மதக் கடவுள்களை (குறிப்பாக இந்து மத) கடவுள் இல்லை என்று சொல்லும் பொழுது நினைத்துப் பார்க்க வேண்டும் என்று டாவின்சி படத்திற்கான தடையை எதிர்த்துப் நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

 22. G.Ragavan சொல்கிறார்:

  புதிய தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஜோ, சிறில்.

  நான் சொல்ல வந்ததை ஏற்கனவே சொல்லியாகி விட்டது. ஆகையால் இந்தக் கலந்துரையாடலில் என்னுடைய முடிவுக் கருத்தைச் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன்.

  நாம் அடுத்தவரை என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்பதும் அடுத்தவன் நம்மை ஒன்றும் சொல்லக் கூடாது என்பதும் பெருகி விட்டது. அதேபோல சகிப்புத்தன்மையும் நாகரீகமும் நேர்மையும் மிகவும் கீழே போய்க் கொண்டிருக்கின்றன. பக்கத்து மாநிலத்தவருக்கு இருக்கும் பண்பிலும் பண்பாட்டிலும் நாம் கொஞ்சம் கூடப் பெறவில்லை என்பதும் தெளிவாகிறது. ஆகையால் இந்தப் படத்தைத் தடை செய்திருப்பது தார்மீகப் படி மிகத் தவறு. இந்தப் படம் மனம் புண்படுத்தல் என்ற காரணத்திற்காகத் தடை செய்யப்பட வேண்டுமென்றால் இந்த மனப் புண்படுத்தல் எல்லா மட்டங்களிலும் நிற்க வேண்டும். அப்படியில்லையென்றால் உலகில் முன்னிலை நிற்பது போலி மதச்சார்பின்மையே.

 23. Vajra சொல்கிறார்:

  சிறில்,

  படம் பார்த்தேன்…இதைவைத்து கிறுத்துவத்தை அசைக்க முடியும் என்கிற நம்பிக்கை எல்லாம் எனகில்லை. :))

  ஓ. சி. பப்ளிசிட்டி தவிர இந்த எதிர்ப்புக்கள் எதையும் உருவாக்காது…

  படத்தில் வரும் சில எனக்குப்பிடித்த வசனங்கள்…

  Robert Langdon: Why is it divine or human? Can’t human be divine?

  Robert Langdon: What really matters is what you believe.

  Sir Leigh Teabing: As long as there has been one true God, there has been killing in his name.

  இதற்கு பதிலாக

  Robert Langdon: We can’t be sure who began the atrocities

  கூறுவார்.

  //
  மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக ‘western thought’ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.
  //

  Western thoughts தான் “முற்போக்கு” என்பது உங்கள் கருத்தா? I beg to differ.

  //
  கருத்து ரீதியில் எல்லோருமே இந்தப்படத்தை எதிர்க்கவேண்டும்
  //

  கருத்து ரீதியில் இந்தப் படத்தை நீங்கள் எதிர்க்கலாம், ஆனால் எல்லோரும் எதிர்க்கவேண்டும் என்று சொல்வது ஞாயமல்ல.

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //
  மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக ‘western thought’ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.
  //

  Western thoughts தான் “முற்போக்கு” என்பது உங்கள் கருத்தா? I beg to differ.
  < <<<<<<<<<
  ஷங்கர்.. நான் Western thught முற்போக்கு என எழுதவில்லை. அப்படி தங்களை அவர்கள் காட்டிக்கொள்கிறார்கள் அப்டீன்னு எழுதியிருக்கிறேன்.

  //இதைவைத்து கிறுத்துவத்தை அசைக்க முடியும் என்கிற நம்பிக்கை எல்லாம் எனகில்லை//

  எந்த மதமானாலும் சரி..இந்த மாதிரி எழுத்துக்களால் ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பிரசன்னா உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்புங்கள் முடிந்தவரை பதிலளிக்கிறேன்,

 26. ஜோ / Joe சொல்கிறார்:

  //யேசுகிருஸ்துவைக் கடவுள் இல்லை என்று சொன்னதும் ஆத்திரம் கொள்கிற கிருஸ்துவர்களில் பலர்//
  ராகவன்,
  திரும்பத்திரும்ப நீங்கள் இதுபோலவே கருத்தை சொல்லி வருகிறீர்கள் .கிறிஸ்துவர்களில் பலர் யேசுகிறிஸ்து கடவுள் இல்லை என்று சொன்னால் ஆத்திரப்படுவதாக நீங்கள் சொல்வது உங்கள் தனிப்பட்ட அனுபவமா? அல்லது ஒரு அனுமானமா ?எனக்கு தெரிந்து கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் யேசு இறை மகன் என்று நம்பினாலும் ,மற்றவர் மறுக்கும் போது ஆத்திரம் கொள்வதாக தெரியவில்லை .அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்களே தவிர உடனே ஆத்திரம் கொள்ள மாட்டார்கள் .அது மற்றவரின் நம்பிக்கை என்று எடுத்துக்க்கொள்வார்கள் என்பது தான் நிஜம் .தீவிரமாக எதிர் வினை செய்பவர்கள் சிலர் இருப்பர் .இந்து மததில் மட்டும் இல்லையா? .இங்கே வலைப்பதிவுகளில் கூட எத்தனை பேர் டாவின்சி கோட் தடையை ஆதரிக்கிறார்கள் ? தடையை கண்டித்த சிறில் ,ஜோ போன்றவர்கள் உங்களுக்கு கிறிஸ்தவர்களாக தெரியவில்லையா?

 27. Vajra சொல்கிறார்:

  //எந்த மதமானாலும் சரி..இந்த மாதிரி எழுத்துக்களால் ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.//

  மதமாற்றம்?

 28. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இந்தியாவில் முதல் நூற்றாண்டு முதல் கிறித்துவம் இருக்கிறது. இடையில் சமணமும் பௌத்தமும் பெருகி அழிந்தன/அழிக்கப்பட்டன, ஆனாலும் இந்து மதம் அழிந்து விட்டதா? மதமாற்றம் நிச்சயமா ஒருவரின் சொந்த விஷயம். எப்படி ஹிந்தி எதிர்ப்பு சிலருக்கு அபத்தமா தெரியுதோ அதே பொலத்தான் மத மாற்றத்தை எதிர்ப்பதும்.

  ஒரு பதிவு போடனும்னு இருந்தேன். பார்ப்போம்.

 29. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  இராகவன் பொதுவாக சொல்கிறாரார் என நினைக்கிறேன்.

 30. G.Ragavan சொல்கிறார்:

  நன்றி சிறில்.

  ஜோ, நான் சொன்னது பொதுவில். எங்குமே நடுநிலையானவர்களும் இருப்பார்கள். உங்களையும் சிறிலையும் சுட்டிக்காட்டியே நானும் பதிந்திருக்கிறேன் அல்லவா. மறந்து விட்டீர்களா. :-)

 31. Vajra சொல்கிறார்:

  //
  இந்தியாவில் முதல் நூற்றாண்டு முதல் கிறித்துவம் இருக்கிறது. இடையில் சமணமும் பௌத்தமும் பெருகி அழிந்தன/அழிக்கப்பட்டன, ஆனாலும் இந்து மதம் அழிந்து விட்டதா? மதமாற்றம் நிச்சயமா ஒருவரின் சொந்த விஷயம். எப்படி ஹிந்தி எதிர்ப்பு சிலருக்கு அபத்தமா தெரியுதோ அதே பொலத்தான் மத மாற்றத்தை எதிர்ப்பதும்.
  //

  Cyril,

  Everyword here is disputable by me. But as you see, i believe in certain things as you do. I geuss it will be inapropriate to further continue this discussion as it is way too far away from the topic.

  I will welcome any blog from you that deals with conversion. And may be we can continue the discussion there.

  ராகவன் அவர்கள் சொன்னது தான் என் கருத்தும்.

  //
  இந்த மனப் புண்படுத்தல் எல்லா மட்டங்களிலும் நிற்க வேண்டும். அப்படியில்லையென்றால் உலகில் முன்னிலை நிற்பது போலி மதச்சார்பின்மையே.
  //

  நன்றி,
  சிறில் மற்றும் ராகவன்.

 32. […] தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி […]

 33. […] தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி […]

 34. Kumaran சொல்கிறார்:

  உங்களையோ, உலகையோ காப்பற்ற கடவுள் வரமாட்டார். உங்களுக்குள் உள்ள கடவுள் தன்மைகளான இரக்கம், அன்பு, உதவும் மனப்பாங்கு போன்றவற்றை காப்பதன் மூலம் உங்களையும், உலகையும் காப்பாற்றிக் கொள்ளலாம்,
  இதை தவிர்த்து யார் மதம் பெரியது, சிறந்தது, வலுவானது என தொடர்ந்து வாதம் செய்வது நல்லதல்ல….. ஒரு மதம் தொடர்பான எதிர்மறை கருத்துக்கள் வரும்போது அதை கண்மூடித்தனமாக மறுப்பதும் அல்லது ஏற்றுக்கொள்வதும் நல்லதல்ல…… மதம் ஒரு தூய நீரை போன்றது…. அது சேரும் இடத்தின் தன்மையை பொறுத்து அதன் நிறம்,குணம் ஆகியவை மாறும்… அவ்வாறே இந்தியாவுக்கு வந்த க்ரிஸ்துவமும் தனது நிலையில் பல மாற்றங்கள் அடைந்திருக்கின்றது…. அவற்றிக்கான சான்றுகள் தமிழ் நாட்டின் தென் மாவட்ட கடலோறங்களில் காண முடியும்…. அங்கு கிரிஸ்தவ மதத்தின் பல பிரிவுகள் தங்களுக்குள் சண்டை இட்டு கொள்கின்றன……. தங்கள் மதத்திற்குள்ளேயே புரிதலுக்கான பிரச்சனைகள் இருக்கும் போது அது பற்றிய மறு மதிப்பீடுகளை எவ்வாறு இவர்களால் புரிந்து கொள்ள முடியும்… இது இங்கே காணப்படும் எல்லா மதங்களுக்கும் பொருந்தும்……. ௦௦

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்