நிர்வாணா

ஒருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.

புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாடமுடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது.

‘ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை’ என நினைத்தான் அந்த மனிதன். ‘நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்’ எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.

சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். ‘ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?’, என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார்,’மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற’ என்றார்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....18 மறுமொழிகள் to “நிர்வாணா”

 1. G.Ragavan சொல்கிறார்:

  சிறில்…எவ்வளவு நியாயமான கதை.

  இந்தச் சமயத்தில் வலைப்பூக்களில் சொல்லப்பட வேண்டிய கதை.

  நல்ல வழியில் நேர்மையாகச் செல் என்று ஆண்டவன் ஒவ்வொரு பொழுதும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான். ஆனாலும்…மூடத்தனமும் மூர்க்கத்தனமுமே நம்முள் நிறைய இருக்கிறது.

 2. ஸ்ருசல் சொல்கிறார்:

  அழகு!

  வெள்ளம், படகு, மனிதன், கடவுள் கதையும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.

 3. G.Ragavan சொல்கிறார்:

  அது சரி…அதென்ன நிர்வாணா?

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இந்த மாதிரி பத்து கத ப்டிச்சா நிர்வாணா பெற முடியுமா?

  என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தெரியல?

  நீங்க ஒரு தலைப்பு சொல்லுங்க பாப்போம்.

  ‘சுகர் கோட்டிங்’ தலைப்புக்கள் சில நேரம் தேவைப்படுதே?

 5. கைப்புள்ள சொல்கிறார்:

  நல்ல கதை சிறில். எதை எடுக்க வேண்டும் எதை விடுக்க வேண்டும் என்பதனையும் இக்கதை மூலம் அறிய முடிகிறது.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அட கைப்புள்ள…
  இனிமே ஊர்வம்புக்குப் போகமாட்டேங்கறீங்களா?

 7. கைப்புள்ள சொல்கிறார்:

  //இனிமே ஊர்வம்புக்குப் போகமாட்டேங்கறீங்களா?//

  ஊர் வம்புக்குப் போகலன்னாலும் உதை மட்டும் விழ வேண்டிய நேரத்துல சரியா விழுது.

  அத விடுங்க. “அன்னம் போல இரு” இந்த தலைப்பு எப்படி இருக்கு?
  பாலை விட்டுட்டு தண்ணியைக் குடிக்காதேங்கிறது உள்ளர்த்தம்.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கைப்ஸ்,
  இந்தக் கதையிலிருந்து பல கருத்துக்களை எட்க்கலாம்.

  ஆன்மீகம் வெறும் வேண்டுதல்களிலோ பூசைகளிலோ (மட்டும்) இல்ல பிரருக்கு உதவுவதிலும் எனத்துவங்கி ந்நிங்க சொன்ன மாதிரி எத எடுப்பது எத விடுப்பது வரைக்கும்.

  //”அன்னம் போல இரு”//
  ரெம்ப ஃபார்மலா இருக்குன்னு நினைக்கிரேன் Also it reduces the scope of the story.
  என்ன நினைக்கிறீங்க?

 9. கைப்புள்ள சொல்கிறார்:

  //ரெம்ப ஃபார்மலா இருக்குன்னு நினைக்கிரேன் Also it reduces the scope of the story.
  என்ன நினைக்கிறீங்க?//

  உண்மை தாங்க.

  //ஆன்மீகம் வெறும் வேண்டுதல்களிலோ பூசைகளிலோ (மட்டும்) இல்ல பிரருக்கு உதவுவதிலும் எனத்துவங்கி ந்நிங்க சொன்ன மாதிரி எத எடுப்பது எத விடுப்பது வரைக்கும்.//
  இதெல்லாம் எனக்கு தோணலைங்க. உங்க மூலமா இப்ப தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கைப்புள்ள,
  நீங்க எவ்வளவு அடக்கமானவர்னு இப்பத்தான் புரியுது..

  :)

  அனாலும் ஏனோ, நக்கல் செய்யுறமாதிரி தோணுது

 11. கைப்புள்ள சொல்கிறார்:

  //அனாலும் ஏனோ, நக்கல் செய்யுறமாதிரி தோணுது//

  மன்னிக்கனும். நக்கல் எல்லாம் இல்லீங்க. நல்ல விஷயம் சொல்றீங்க…அதை திசை திருப்பற மாதிரி எதுவும் எப்பவும் செய்யமாட்டேன். நல்ல விஷயத்தை, நமக்கு தெரியாததை யார் சொன்னாலும் கேட்டுக்கணும்ங்கறது நம்ம கொள்கை. எதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க.

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கைப்பு,
  மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாங்க. நானும் நக்கலாத்தான் கேட்டேன்.

 13. Boston Bala சொல்கிறார்:

  —-வெள்ளம், படகு, மனிதன், கடவுள் கதையும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.—-

  Ithu enna kathai?

 14. மெய்யப்பன் சொல்கிறார்:

  நல்லகதைதான் இருந்தாலும். தலைப்பை பாத்து ஏமாந்துட்டேன்.

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Nirvana – culmination of the pursuit of liberation

 16. வெற்றி சொல்கிறார்:

  சிறில்,
  நல்ல குட்டிக்கதை. ஆனால் தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு என்று கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்.

  நன்றி.

  அன்புடன்
  வெற்றி

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வெற்றி,
  நிர்வாணா = enlightenment

 18. சுந்தர் / Sundar சொல்கிறார்:

  Good one.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்