வெறுப்பு

என் சதையைக் கிழிக்கும் சாட்டையடி சத்தத்தில்
என் காதுகள் செவிடாயின…
‘கட்டவிழ்’ எனும் என் கூக்குரல் எனக்கே கேட்கவில்லை.
பலகாலம் பலபேரை அடித்துக்கொண்டிருக்கிறான்
இவன் காதிலா நம் முனகல்கள் விழும்?

என் உடல் துளைக்கும் தோட்டாக்களை விடவும்
அவன் இதயம் கடினமானது

என் இரத்த மை கொண்டு
என் உடலிலேயே எழுதுகிறான்
“நீ ஈனன்” என்று.

என் உடல் உழுது,
இரத்தமிறைத்து
இவன் விதைத்துச்செல்லும் தோட்டாக்கள்
விருட்சமாகும்போது,
இப்போது இயலாமல் நான் விடும்
என் மூச்சுக் காற்று
கவசமணிந்த இவன் நெஞ்சைத் துளைக்கும்,

அப்போது இவன் முனகல் கேட்காதபடி
என் புலன்கள் மரத்துப் போயிருக்கும்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “வெறுப்பு”

  1. nandhini சொல்கிறார்:

    arumai…aanal valikum unnmai

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்