நட்சத்திரங்கள்

பெரும் கடல் அலை ஒன்று ஆயிரக்கணக்கில் நட்சத்திர மீன்களை கரையில் அடித்துப் போட்டுவிட்டுப் போகிறது. தரையில் நடக்க இயலாத நட்சத்திரமீன்கள் விரைவில் இறந்துபோகும் நிலையில், சிறுமி ஒருத்தி ஒவ்வொன்றாய் அந்த நடத்திர மீன்களை எடுத்து கடலில் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

இதப் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்,”ஏம்மா, எல்லா மீன்களையும் உன்னால காப்பத்த முடியுமா? உன் முயற்சி வீண்தானே?” என்றார்.

அதற்கு அந்தப் பெண். “எல்லா மீன்களையும் பார்க்கும்போது என் முயற்சி வீண்தான். ஆனா இதோ இந்த மீனப் பொறுத்தவரைக்கும்…அது முழுவெற்றி. இல்லையா?” என்றாள்.


(The old man said,” You cannot save them all. Does it
matter?”, the girl replied,”To this fish it does.”
)


- From the movie “The Holy Man”

பெரிதாய் சிந்திப்போம். சிறிதாய் செயல்படுவோம். எடுத்தவுடன் உலகை மாத்தமுடியுமா?

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “நட்சத்திரங்கள்”

 1. Boston Bala சொல்கிறார்:

  நல்ல எடுத்துக்காட்டு. நன்றி.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாலா..உங்க பாணியில சொன்னா

  _/\_

 3. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  எங்கயோ படிச்சிருக்கேன்.. ஆனா இந்த வரிகள் வேற விதமா

  “This doesnt make a difference (in the life of Star fishes)”
  “To this one, it makes a difference”
  — இப்படி வரும்

  முழுவெற்றி என்பதை விட “ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறது” அப்படின்னு சொல்வது சரியா இருக்காது?

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ‘தாக்கம்’ ம்ம்ம் அதுதான் சரியான வார்த்தை ம்ம்ம் once again I stand corrected.

 5. G.Ragavan சொல்கிறார்:

  நல்ல எடுத்துக்காட்டு சிறில். முன்பே படித்ததுதான் என்றாலும் சிறப்பானது.

  இயற்கைச் சீற்றங்களினால் அழிவு உண்டாகும் பொழுது உதவிகளைச் செய்தால்…அதாவது அலுவலகத்தில் பணம் கொடுப்பதோ…பொருட்களைக் கொடுப்பதோ…செய்தால்…அந்த உதவி அவர்களைச் சேருமா என்று நண்பர்கள் கேட்டார்கள்.

  “I dont know. If I give more at least something will reach them. If not nothing will reach them.” இதுதான் நான் சொல்வது. பாதி தின்னு மீதியாவது போனாச் சரீன்னு குடுக்குறதுதான.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்