மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்

சற்று முன் வந்த செய்தி(ஜூலை 25 2006 9:20PM). இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஐ.நா சபை பார்வையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலுமிருவர் காணாமல் போயிருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும், புஷ் பாணியில்,தீவிரவாதிகளை கொல்கிறேன் பேர்வழி என்று கொன்று குவிக்கிறது,இஸ்ரேல். இப்போது ஐ.நா சபை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பது பிரச்சனையில் இஸ்ரேலின் பக்கத்தை கொஞ்சம் வலுவிழக்கச் செய்திருக்கிறது.

கோஃபி ஆனன் இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்றிருக்கிறார்(Attack “apparently deliberate,” U.N. head says-CNN). இஸ்ரேல் இதை மறுத்துள்ளது (Israel’s U.S. envoy outraged by Annan comment – CNN).

அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேல், ஐ.நாவெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விஷயமா?

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்”

 1. எழுத்துப் பிழை சொல்கிறார்:

  கொல்லப்ப்பட்டிருப்பது : கொல்லப்பட்டிருப்பது
  பிராச்சனையில் : பிரச்சனையில்
  ஈஸ்ரேல் : இஸ்ரேல்

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தவறுகளை சரிசெய்துவிட்டேன் ..நன்றி.உங்கள் பணி தொடர்க.

 3. Venkataramani சொல்கிறார்:

  இது மிகவும் கண்டிக்கப்படவேண்டியது.

 4. ஜோ / Joe சொல்கிறார்:

  டோண்டு சாரிடம் கேட்டால் இதில் இஸ்ரேலுக்குள்ள நியாயத்தைப் பற்றி விளக்கக் கூடும்.

 5. மருதநாயகம் சொல்கிறார்:

  இஸ்ரேல் ஐ.நா.வை என்று மதித்தது இன்று மதிக்க

 6. Parama Pitha சொல்கிறார்:

  இஸ்ரேல் வெறி பிடித்த மிருகம் போல ஆகி விட்டது என தோன்றுகிறது. இதில் டோண்டு சொன்னாலும் யார் சொன்னாலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற தீவிரவாதிகள் அல்லாத மற்றவர்களுக்கு இது மிக பெரிய அநீதமே. வாயே திறக்காத ஆனால் பின்னாலிருந்து இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா தன்னுடைய வரலாற்றுப் பக்கங்களை அக்கிரமங்களை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறது. தீவிரதவாதிகளை வளர்த்ததில் முஸ்லிம்களுக்கு உள்ள அதே அளவு பங்கு, அமெரிக்காவிற்க்கும், இஸ்ரேலுக்கும் உள்ளது. போர் புகைப்படங்களை பார்க்கையில் மனம் வெம்புகிறது

 7. Vajra சொல்கிறார்:

  சிறில்,

  அது உண்மையான சிவஞாமன் ஜி இல்லை….ஒரு போலி…தயவு செய்து அவன் பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள்.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஷங்கர்,
  நன்றி…நீக்கிவிட்டேன்.
  உங்கள் கருத்தை சொல்லவில்லையே?

 9. மணியன் சொல்கிறார்:

  கொல்லப்பட்ட பார்வையாளர்களை சீக்கிய வீரர்கள் எடுத்துச் செல்லும் படம் பார்த்தேன்; கொல்லப்பட்டது இந்தியர்களோ ?

  இஸ்ரேலின் இந்த அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் பக்கம் எந்த நியாயம் இருந்தாலும், இந்த போர் ஒரு வன்முறைஅரசின் (Terrorist Govt) செயலே.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்