பரிசுகள்

சொர்க்கம் இலவசம்  

 செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். ‘சித்ரகுப்தன் காலிங்’ கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படNovember 06 Thenkoodu TamilOviam Contest First Prize Winnerத்தோடு சேதி சொன்னது செல்போன். ‘காலையிலேயா?’ பீட்டர் முணுமுணுத்தார்.

நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.

பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.  மெலும் ….

2060 தேர்தல் 

நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். worldmovies கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். தியாகராஜ பாகவதர் என்கிற April - May 06 Thenkoodu-Tamiloviam Contest Second Prize Winnerயாரோ ஒரு பழம் பெரும் நடிகர், இவனுக்கு அவர்மேல் உயிர். என் தாத்தா அவரைப்பற்றி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். இவன் நக்கலாய் பேசுகிறானா இல்லை உண்மையிலேயே புகழ்கிறானா என பலமுறை சந்தேகித்திருக்கிறேன்.அவனே என்னை அழைத்தான்,”வணக்கம் செந்தமிழ், நலமா?”.அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் ‘இன்டர்ப்ரெட்டர்-VII’.“நலம் லாங்டன், நீ எப்படி?”.“பெரிதாய் ஒன்றுமில்லை.” சலித்துக்கொண்டான்.

“2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?”

“நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஓ… ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?” மேலும்…

இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

ஆகாயம் ஒரு மாயை’Thamizsangam poetry contest 1st prize winner
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது – அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.

அன்புடன் இசை கவிதைப் போட்டி 2ம் இடம்

பூவானது மனம்

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே
மலை தரும் பாடங்கள் என்ன

மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் – பூவானது
0
துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோஷம் கொள்ளுதே

அள்ளி அள்ளி வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால் கண்ணீரைச் சிந்துதே

வன்முறைகள் தேவையில்லை சொல்லாமல் சொல்லுதே
வானத்தில் ஏறிவரும் மேகங்களும்

யாருக்கும் தடையின்றி மழை பொழியும்

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதை கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா
பூவானது மனம்

வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் – பூவானது

Popularity: 3% [?]