ராஜாங்கம்

July 14th, 2012 | வகைகள்: சிறுகதை | 2 மறுமொழிகள் » |

என் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது. அவ்வப்போது துண்டு துண்டுகளாக, ஒரு சிறிய படத்தின் காட்சிகளாக அவை நினைவுக்கு வந்து போகின்றன. அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று என்னால் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. அவைதான் கனவா இல்லை நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிஜம்தான் கனவா என பலமுறை தோன்றியதுண்டு. நான் தெருவில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு பைத்தியமென்றும் இந்த வாழ்க்கையும் என் பழைய வாழ்க்கை குறித்த கனவுகளுமெல்லாமும் என் கற்பனையே என்றும் நினைப்பதுண்டு. நான் கல்லூரிக்கு வெளியில் […]

முழுதும் படிக்க...


ஆக்குபை அமெரிக்கா!

March 23rd, 2012 | வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது ‘வால்’ தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. […]

முழுதும் படிக்க...


சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.

December 10th, 2011 | வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் » |

“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது […]

முழுதும் படிக்க...


ஓராயிரம் கண்கள் கொண்டு

November 11th, 2011 | வகைகள்: வகைப்படுத்தாதவை, இலக்கியம், கட்டுரை | 6 மறுமொழிகள் » |

ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாவலைப் […]

முழுதும் படிக்க...


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 | வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]

முழுதும் படிக்க...


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 | வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மறுமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2

முழுதும் படிக்க...


எவன் இவன்?

June 18th, 2011 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 5 மறுமொழிகள் » |

அமெரிக்காவிலிருந்து வரும்போது என் மகனின் கெலைடோஸ்கோப் ஒன்றையும் எடுத்து வந்தோம். வண்ணத் தகர வெளிப்புறம் கொண்டது. கெலைடோஸ்கோப்கள் முதலில் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தை தருகின்றன. வடிவங்கள் நம் கண்முன்பே உருமாறி உருமாறி ஆச்சரியமூட்டுகின்றன. உள்ளே நாம் காண்பவை கட்டுக்கோப்பான கணித வடிவங்கள், ஆனாலும் குழப்பமும் அழகும் கொண்டவை. பார்வைக்கும், அறிவுக்கும் அகத்தூண்டல்களைத் தருகிறது ஒரு கெலைடோஸ்கோப். நாட்கள் ஆக ஆக, கெலைடோஸ்கோப்பை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது வண்ண வடிவங்களைத் தாண்டி கெலைடோஸ்கோப்பின் உள்ளே கிடக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாகத் […]

முழுதும் படிக்க...


ஒரு கிறிஸ்துமஸ் கதை!

January 6th, 2011 | வகைகள்: சிறுகதை, ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, கிறீத்துவம் | 13 மறுமொழிகள் » |

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் […]

முழுதும் படிக்க...


நாஞ்சில் பாராட்டு விழா!

December 30th, 2010 | வகைகள்: அறிவிப்பு | 2 மறுமொழிகள் » |

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஊட்டி இலக்கிய சந்திப்பின் போது. ‘உங்கள் முட்டம் படித்தேன்’ என்பது அவரின் முதல் வாக்கியமாயிருந்தது. அவர் எத்தகைய ஆர்வத்துடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து படித்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஆர்வத்தை ஒரு சிறு அளவேனும் நிவர்த்தி செய்ய முடிந்திருந்தால் அது ஒரு பேறுதான் என்று நினைத்திருந்தேன். அவரோ நான் எப்படியோ ஒரு விபத்தைப்போல எழுதி முடித்துவிட்ட அந்த மெலிந்த புத்தகத்தை […]

முழுதும் படிக்க...


துளசி

November 25th, 2010 | வகைகள்: சிறுகதை | 5 மறுமொழிகள் » |

பின் முற்றத்தில் நன்றாக இருட்டியிருந்தது.  குளிர்ந்த காற்று அவன் முகத்தை வருடிச்சென்றது. கிழக்குச் சுவற்றிலிருந்த முல்லைச் செடியிலிருந்து மணம் கசிந்து காற்றில் பரவியிருந்தது. தென்னை மரங்கள் இரண்டும் தூக்கம் கலைந்தது புரளும் கிழவனைப்போல் முனகின. இலைகள் சலசலத்ததில் பூச்சிகளின் ரீங்காரம் கொஞ்சம் அடங்கியது. மீண்டும் கச்சேரி ஆரம்பிக்கையில் காற்று திரும்பியடித்தது. இப்போது மாடத்து துளசி வாசம் துல்லியமாகத் தெரிந்தது. செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அவன் மூச்சை இழுத்து விட்டான். முகத்தில் ஒரே புன்னகையுடன் கிட்டத்தட்ட ஒரு மணி […]

முழுதும் படிக்க...