அமைதியான நதியினிலே…!

November 4th, 2010 | வகைகள்: பயணம், இந்தியா, இயற்கை | 15 மறுமொழிகள் » |

‘பரபரப்பான இந்த வாழ்க்கையில…’ என்று துவங்குகிறது ஒரு பண்பலை வானொலி விளம்பரம். நம் வாழ்க்கை மிகவும் பரபரப்பாகிவிட்டது. காலை எட்டு மணிக்கு சென்னையின் சாலைகள் பிதுங்கி வழிகின்றன. மாலை ஆறு மணி துவங்கி இரவு எட்டரை வரைக்கும் உக்கிரமான டிராஃபிக். நாள் ஒன்றின் அதிக செயலூக்கமுள்ள  பகுதியை மாதச் சம்பளத்துக்கு விற்றுவிட்டு வெறும் சக்கையான உடம்புடனும் மனதுடனும் வீடு வந்து சேர்கிறோம். வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறோம். சென்னையில் எந்த வீட்டிலுமே வெளியே அமர்ந்திருக்க இடம் ஒதுக்கப்படவில்லை! வார […]

முழுதும் படிக்க...


இதயம் தொடாத இரும்பு!

October 8th, 2010 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 9 மறுமொழிகள் » |

எட்டு மணி நேரம் கொட்டோ கொட்டென்று கணிணியை கொட்டிவிட்டு அதற்குப் பின்னும் ஒரு சொலூஷன் கிட்டாத ஒரு சோர்வான மாலையில் போய் சேர வேண்டிய இடம் வீடு அல்லது ஒரு மதுவிடுதி. எந்திரன் டிக்கட் இலவசமாகக் கிடைக்கிறதே என்று தேவிக்குப் போய் உட்கார்ந்தேன்.  ‘பரப்புக்’ கலைகளைக் குறித்து கருத்து சொல்வதில் மிகக் கவனம் தேவை என்கிறன தற்போதைய நிகழ்வுகள். கோட்பாட்டாளர்களும் விற்பன்னர்களும் நுண்ரசனையாளர்களும் வந்து முதுகுப் பரப்பை ஒரு பரப்பு பரப்பிவிடுவார்களென்கிற பயம்தான். இதையே ஒரு டிஸ்கிளெய்மராக […]

முழுதும் படிக்க...


ஷாஜியின் காதலி!

September 20th, 2010 | வகைகள்: நிகழ்வு, ஆளுமை, இசை | 7 மறுமொழிகள் » |

மற்ற கலைகளுக்கும் இசைக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. பிற கலைகள் நம் வாழும் உலகின் புற அடையாளங்களை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. அவற்றை விவரிப்பதன் வழியாக உணர்வுகளை கடத்துகின்றன. வெறும் தத்துவத்தையோ, கோட்பாடையோ அல்லது சிந்தனையையோ மட்டுமே சொல்லும் இயல் படைப்புக்களும்கூட நம் வாழ்விலிருந்தே அவற்றை வளர்த்தெடுத்துள்ளன. ஆனால் இசைக்கு எந்த வித புற நிகழ்வும் சிந்தனையும் தேவையில்லை. அது புற வாழ்வை, அதன் நிகழ்வுகளை பிரதிபலிக்கத் தேவையில்லை. ஏனெனில் அது அறிவின் கலை அல்ல ஆன்மாவின் […]

முழுதும் படிக்க...


விபத்து

September 9th, 2010 | வகைகள்: சிறுகதை | 8 மறுமொழிகள் » |

70 கி.மி என டிஜிட்டலில் சொன்னது வேகம் காட்டும் கருவி. சாலையில் யாருமில்லை ஒரே ஒரு நாயைத் தவிர. இரண்டு கிலோமீட்டர்களுக்குள் ஒரு  வீட்டைக்கூட நான் காணவில்லை. அந்த நாய் சாலைக்குள் வரவா வேண்டாமா என ஆலோசித்துக்கொண்டிருந்தது. என் பைக்கின் சப்தம் அதை பயமுறுத்திவிடும் எனும் நம்பிக்கையில் க்ளட்சை பிடித்து ஆக்சிலேட்டரை திருப்பினேன்.  வ்ர்ர்ரூரூம் என்று அலறியது எஞ்சின். நாய் என்ன நினைத்ததோ தடாரெனக் குதித்து சாலைக்குள்வந்தது. மறுகணம் வண்டி சரிந்து சாலையில் தீப்பொபொறிபறக்க சறுக்கிக்கொண்டிருந்தது. நான்? […]

முழுதும் படிக்க...


டி மெலோ கதைகள் – 4

September 4th, 2010 | வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம் | 2 மறுமொழிகள் » |

 டி மெலோ கதைகள் – 3 கழுகுக் குஞ்சு  ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் ‘சகோதர’ கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது. வருடங்கள் கழிந்தன.  ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் […]

முழுதும் படிக்க...


டி மெலோ கதைகள் – 3

September 4th, 2010 | வகைகள்: நிகழ்வு, மதம், ஆன்மீகம், கடவுள், கதை, கிறீத்துவம் | 3 மறுமொழிகள் » |

டி மெலோ கதைகள் – 2   வைரம்  சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். ‘வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு’ என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான்.  ‘எந்த வைரம்?’ என்றார் சன்னியாசி.  ‘நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.’ என்றான் அவன்.  சன்னியாசி தன் […]

முழுதும் படிக்க...


டி மெலோ கதைகள் – 2

September 3rd, 2010 | வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம் | 2 மறுமொழிகள் » |

 டி மெலோ கதைகள் – 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது.  விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம்.  ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் […]

முழுதும் படிக்க...


டி மெலோ கதைகள் – 1

September 2nd, 2010 | வகைகள்: நிகழ்வு, ஆன்மீகம், ஆளுமை, கதை, கிறீத்துவம் | ஒரு மறுமொழி » |

ஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள். பயணி  ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே?  அவன் சொன்னான்”நீங்களே போய் பாருங்கள்” என்று. அவர்களுக்கு  வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான்.  எல்லோரும் அந்த […]

முழுதும் படிக்க...


‘கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்’ – ஊட்டி சந்திப்பு

August 31st, 2010 | வகைகள்: இலக்கியம், அனுபவம் | 13 மறுமொழிகள் » |

மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் […]

முழுதும் படிக்க...


கனவுக் களவாணி ~ Inception

July 27th, 2010 | வகைகள்: சினிமா, திரை விமர்சனம் | 10 மறுமொழிகள் » |

உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன. இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் ‘தகவல்’. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை […]

முழுதும் படிக்க...