அலைகள் பாறைகள் மணல்மேடுகள்

அலைகள் ஓய்கின்றன
மிகுந்த சந்தேகங்களுடன் இந்த வலைப்பதிவு தொடரை ஆரம்பித்தேன். என் மனைவியின் ஊக்கமே என்னைத் தொடர வைத்தது. கூடவே ஜோ, மஞ்சூர் ராசா, ரெஜினி ராம்கி போன்றோரின் வாழ்த்துக்கள், மற்றும் செயமோகன் அவர்களின் மின்னஞ்சல், தினமலர்வரை கொண்டுசென்றது. சில நேரங்களில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தபோதெல்லாம் யாராவது ஒருவர் ஒரு டானிக் பின்னூட்டம் போட்டுவிடுவார்.

மதி கந்தசாமியின் திறனாய்வு மறக்கமுடியாதது. அப்படிப்போடுவின் ‘இவரை நட்சத்திரமாக்குங்கள்’ எனும் கோஷம், வசந்தன், தாணு, ராகவன், கைப்புள்ள, பி.கே.எஸ், டி.பி.ஆர். ஜோசஃப், மாயவரத்தான், ஜான், கிறுக்கன், மணியன், சந்தோஷ், ராமச்சந்திரன் உஷா, காவியன், மகெஸ், தங்கமணீ, குமரன் ஆகியோரின் பின்னூட்டங்கள்… அல்ல சத்தூட்டங்கள், என்னை மேலும் எழுதத் தூண்டின. சீமாச்சு மீனே சாப்பிடாதவரானாலும் மீன் பற்றிய பதிவுக்கு பாராட்டளித்திருந்தார். எல்லோருக்கும் நன்றி.

வலைப்பதிவு எழுதுவது கடல் நடுவே தீவில் சிக்கித் தவிப்பது போன்றதொரு அனுபவம். யாராவது வந்து அங்கீகரிக்கும்வரை தனிமையும் வெறுமையும்தான். பின்னூட்டங்களின் மகிமை அதைப் பெறும்வரை புரிவதில்லை.

சில நேரங்களில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தபோதெல்லாம் யாராவது ஒருவர் ஒரு டானிக் பின்னூட்டம் போட்டுவிடுவார்.

தமிழிலில் என் முதல் முயற்சி இது. ஆங்கிலத்தில் எழுதி பழக்கப்பட்டிருந்தேன். ஆங்கிலத்தில் எப்படி எழுதுவேனோ ஓரளவு அப்படியே தமிழிலும் எழுதினேன், இதுவே என் நடை நன்றாயிருக்கிரது என்கிற பாராட்டுக்களுக்கு காரணமாகலாம் என நினைக்கிறேன். திமிழிலக்கணம் படித்து வருடங்களாயிற்று, என் பதிவில் காணக்கிடைக்கும் இலக்கண, எழுத்துப்பிழைகளுக்காய் தமிழ்த்தாயிடமும், வாசகர்களிடமும், என் தமிழாசிரியர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அலைகள் பாறைகள் மணல்மேடுகளை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன். ஒரு அத்தியாத்திற்குப்பிறகு நாவல் எழுதுவது ஒரு மிகப்பெரும் முயற்சியாகப் பட்டது. மனதிலுள்ளது அந்த எழுதப்படாத நாவலின் கதை. இன்னும் சில தகவல்கள் சேகரித்து இந்தப்பதிவை ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம்… விரைவில் இதற்கான முயற்சி துவங்கும்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா பொகிறவர்கள் முட்டத்திற்கும் போகலாம். நாகர் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து (வடசேரி அல்ல), முட்டம் மற்றும் கடியபட்டினத்திற்கு பஸ்கள் உள்ளன. கடிய பட்டினம் செல்லும் எல்ல பஸ்களும் முட்டம் செல்வதில்லை. லைட் ஹவுஸ் வந்ததும் இறங்கினால் மேற்கில் அழகிய கடற்கரை காணலாம். கோவில் லைட் ஹவுசிலிருந்து கிழக்கில் தெரியும்.

முட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம்.

என் நினைவுப் பயணங்களில் என்னோடு பயணித்தமைக்கு நன்றி.

தொடர்ந்து தேனில் பதிக்கிறேன். பைபிள் கதைகள் தொடர் விரைவில் ஆரம்பம்.

XVII. சக்கரத்தை கண்டுபிடித்தவன்
உருளும் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது மனித நாகரீகங்களின் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டது. கால்நடையாக முன்னேறிக்கொண்டிருந்த மனிதர்கள் சக்கரம் மாட்டிக்கொண்டு பறந்தனர். இன்றும் போக்குவரத்து முன்னேற முன்னேற பட்டி தொட்டிகளும் பட்டணங்களாகிவருவதை காணலாம்.

முட்டமும் வெகுவாக மாறியிருக்கிறது. என் பதிவுகளில் வந்த பல பழக்கங்களும் இப்பொது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

திருமணங்கள் அதிகமாக மண்டபங்களிலேயே நடத்தப்படுகின்றன, சைக்கிள்களுக்குப் பதில் பைக்களும், கார்களும். ஒருமணி நேரம் பஸுக்காய் காத்திருந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் ஏறி பக்கத்து ஊருக்குப்போய் பஸ் பிடித்துக் கொள்கிறார்கள். ஊருக்குள்ளே ரோடுபோட்டு பஸ் ஓட ஆரம்பித்திருக்கிறது.

பொறியியல் முதல் பொருளாதாரம்வரை படித்தவர்கள் ஏராளம். கட்டுமரங்களுக்குப்பதில் விசைப்படகுகள். இன்னும் என்னென்னவோ மாற்றங்கள்.

சுற்றுலா என்ற பெயரில் முட்டம் கடற்கரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன ஓரளவுக்கு கடற்கரையின் அழகு குறைக்கப்பட்டாலும் இவை பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் என நினைத்து சாந்தப்படவேண்டியுள்ளது.

ஊரில் சண்டை சச்சரவுகள் குறைந்திருக்கிறது. பொருளாதாரம் விளங்கியிருக்கிறது. குடிசைகள் மாறி ஓட்டுவீடுகளாகி, மாடி வீடுகளாகவும் ஆகிவிட்டிருக்கின்றன.

போக்குவரத்து அதிகமான தெருக்களில் பிள்ளைகளின் விளையாட்டு எப்படி? அவர்களும் கேபிள் டி.வியின் முன்னமர்ந்து நிழல் வாழ்க்கையில் ஐக்கியமாகிறார்கள்.

இன்னும் எத்தனையோ மாற்றங்கள். அலைகள் பாறைகள் மணல்மேடுகளை தொடர்ந்து வாசிப்பவரானால் உங்களுக்குள் ஒரு கற்பனை முட்டம் வரந்து வைத்திருப்பீர்கள். இந்தப்பதிவு அதை கலைத்திருக்கலாம். இதுதான் நிதர்சனம், வாழ்க்கையின் பேருண்மை.

அழிக்கும் கடவுள் சிவன், அவன் பெயரின் அர்த்தம் ‘மங்கலம்’. கொல்லும் கடவுளுக்கு ‘மங்கலம்’ என ஏன் பெயர். அவர் பழையதை அழிப்பதால்தான் புதியன உருவாகின்றன.

தாகூரின் கீதஞ்சலியில் வரும் பாடல் படித்திருப்பீர்கள்,

“எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,

செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,

எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்

அழைத்துச்செல்லப்படுகிறதோ..

அந்த சொர்க்கத்தில் இறைவா, என் நாட்டை எழச்செய்”

பழையன அழியும்போது சில முனகல்கள் தவிர்க்க இயலாது. நானும் என் பங்கிற்கு முனகியிருக்கிறேன். புது செருப்பு கடிக்கத்தான் செய்யும்.

புதுமை வளரட்டும். பழமை, நம் நினவுகளில், புத்தகத்தில் போட்டுவைத்த ரோஜாப்பூப்போல, வாடினாலும் வாசத்தோடு வாழட்டும்.

அந்த சக்கரத்தை காண்டுபிடித்தவனை மட்டும் அப்புறமா கவனிச்சுக்க வேண்டியதுதான்.

XVI. ஆழி என்றொரு உலகம்
பூமியின் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். கடல்தான் பூமியில் பெரும்பங்கு. பொதுவாக  இந்தக்கடலிலிருந்து மீன் மட்டும்தான் கிடைக்கிறது என நினைக்கிறோம். பள்ளிக்கூடத்தில் ‘கடல்நீர் ஆவியாகி மேகமாகி இடி இடித்து மழை பெய்யும்’ பாடம் பயின்றதை மறந்துவிடுகிறோம்.

கடலில்லாது பூமி உயிர்வாழத் தகுதியற்றதயிருந்திருக்கும். கடலில்தான் உயிர் விளைந்தது என்கிறது பரிணாம தத்துவம்.

முட்டத்தில் கடற்கரையில், பாறையொன்றில் அமர்ந்து தியானித்துப்பாருங்கள். ஆழி சென்று அறிவு பெற்றுத் திரும்பும் அந்தக் கடல் காற்று உயிரின் இரகசியங்களை உங்களுக்குச் சொல்லும். இன்னொரு விவேகானந்தனாக மாறிப்போகவும் வாய்ப்புள்ளது.

இந்தக் கடல்மேல் பயணிப்பது ஆத்மார்த்த அனுபவம்.

விசைப்படகொன்றில் ஒருநாள் கடலினுள், வெகுதூரம் பயணித்தோம். முதலில் அலைகள் படகை ஆட்டிவைக்கின்றன. இயந்திரங்கள் உயிர் பெற்றதும் இயற்கை சற்றே சிறுத்துப்போகிறது.

கடலுள்ளே செல்லச் செல்ல நிலம் மறைகிறது. சில வீடுகள் கண்ணுக்குத்தெரிகின்றன, ஒர் தெருவே தெரிகிறது, சில தெருக்கள் தெரிகின்றன, ஊரே தெரிகிறது, சில ஊர்கள் தெரிகின்றன…வெறும் கடல்தான் தெரிகிறது.

எங்கு பார்த்தாலும் நீலம். வெறும் கடலும் வானமும் மட்டுமே உலகில் உள்ளதைப்போன்றதொரு மாயம்.

அலைகள் இருபுறமும் கொட்டைச் சுவர்கள் போல எழுகின்றன. நடுவில் தொலைந்துபோனவர்கள்போல நாங்கள். பின்பு அலை தாழ்ந்துபோகிறது, மீண்டும் முன்னும் பின்னும் சுவர்போலெழுகிறது.

கடல்நீரின் தெளிவு கொஞ்சம் உள்ளே போனால்தான் தெரிகிறது. நீரில் ஓடும் மீன்களை வெறும் கண்கொண்டு பார்க்கலாம். இதற்கென மீனவர்கள் ஒரு கண்ணாடியும் வைத்துள்ளனர். தெளிந்த நீல நீரில் சூரியனின் ஒளிக்கோலங்களூடே நீந்தும் மீன்கள் காணப் புதுமை. உலகின் மொத்த அழுக்கையும் தாங்கிக்கொள்ளும் புனிதம் பெற்ற இந்தக்கடல் தன்னை தூய்மையாய் வைத்திருப்பது வியப்பு.

எங்கள் பயணம் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம். முட்டத்தின் கடற்கரையிலிருந்து கடலினுள் காணக்கிடைக்கும் மேக்கால், கீக்கால் பாறைகளை சுற்றிவந்தோம். இந்தப் பாறைகளின் அருகில் வெளிர் நீல வண்ணத்தில் நீர் காணப்படுகிறது. இந்தப் பாறைகளிலிருந்து மீன் பிடித்துத் தின்னும் கடல் நாரைகளும் பார்க்கமுடிந்தது.

‘போங்கடா நீங்களும் ஒங்க ஒலகமும்’ என்று இவை நம்மை விட்டு கடலுக்குள் வெகுதூரம் வந்து வாழ்கின்றன.

கடற்கரையில் கடல்நீரின் தெளிவை காண முடிவதில்லை. அலைகள் கலங்கியபடி காணப்படுவதற்கு நீரில் மணல் சேர்ந்து கொள்வதே காரணம்.

ஊரில் இருந்தவரை வருடத்திற்கு இரண்டு முறையாவது கடலில் குளித்துவிடுவோம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நாட்களில். ஒரு பொங்கல் நாளில் ஒரு பாறையின் கீழ் பொங்கலிட்டு உண்டுவிட்டு கடல் குளித்த ஞாபகம் இருக்கிறது.

மீன் வெட்டியதில் கழித்தவற்றை எடுத்து ஒரு துணியிலோ சின்ன, கைக்குட்டையளவு வலையிலோ கட்டி கரையில் நீருக்குள் கிடக்கும் பாறைகளருகே தூண்டில்போல போட்டு நண்டு பிடித்திருக்கிறோம். நீங்களும் செய்துபார்க்கலாம்.

இந்த நண்டுகள் விரலைத் துண்டிக்குமளவுக்கு கடிக்கும் திறனுடையவையாகையால் கவனம் தேவை.

முட்டம் போன்ற அலைமிகுந்த கடலில் குளிப்பதற்கு குறைந்தபட்சம் நீச்சலாவது தெரிந்திருக்கவேண்டும். சென்னை போல கரையில் குளிக்க விரும்புபவர்கள் குளிப்பதற்கான ஒரு கடல்நீர் நீச்சல் குளம் இயற்ககயே உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதி கடற்கரையிலியங்கும் படகு கட்டும் இடத்திற்கு தெற்கேயுள்ளது.

அலைகள் அதிகமிருக்கும் நாட்களில் இங்குகூட குளிக்கமுடியாமல் போய்விடும்.

அலைகளை தவிர்க்க முடிந்தவரை கடலின் தரைப்பகுதி நோக்கி மூழ்கவேண்டும். அலைகள் கடலின் மேற்பரப்பிலேயே வேகமாய் வருகின்றன. ட்சுனாம்மி இதற்கு நேரெதிர், கடலின் மேல்மட்டம் அமைதியாக இருக்கும் ஆனால் அடிதளத்தை ஒட்டி ஆழிப்பேரலை வந்து கொண்டிருக்கும்.

அலைகளில்லாத சென்னைபோன்ற கடற்கரயில் கடல் குளிப்பது எளிதானதாகத் தோன்றும். நிஜத்தில் அமைதியான கடலுக்குள், அடியில் நீரோட்டங்கள் பல உள்ளன. இவற்றில் மாட்டுவது உயிர்மாய்க்கும் ஆபத்து.

வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தும், பூமியில் கடலைப்பார்த்தும் நம் சிறுமையை உணர்ந்துகொள்ளலாம். ஏதோ படைப்பின் சிகரெமே நாம்தான் என எண்ணிக்கொள்ளும் மனிதன் வெறும் ஒருசெல் உயிரிமுதல் குட்டிபோட்டு பால் தரும் உயிரினம் வரை வாழும் ஆழிஎன்றொரு உலகமுள்ளதை மறந்துவிட்டிருக்கிறான்.

தனித்திருந்து கடலை நோக்குவதும், இரவில் மொட்டைமாடியில் வானத்தை நோக்குவதும் ஏன் சுவைக்கிறது என்பது இப்பொது புரிகிறதா? நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் அந்தத் தருணங்கள் தத்துவார்த்தமானவை.

XV. அப்பாவா? மாமாவா?
சொந்த ஊரைவிட்டு வெளியேறிப் போவது எத்தனை சோகமான அனுபவம் என்பது நம்மில் பலருக்கும் பழக்கமானது. எத்தனை சுகங்களை இழக்க நேரிடுகிறது? எத்தனை ஞாபகங்களை களையவேண்டியுள்ளது? எத்தனை மனிதர்களை மறக்கவேண்டியுள்ளது? இதிலும் நம் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு நாம் மட்டும் போகவேண்டுமென்றால்?!

நம்மூர் மீனவர்களுக்கு மத்திய கிழக்கு (வளைகுடா) நாடுகளில் வேலை கிடைக்கிறது. செல்வம் தேடி போகும் இவர்களின் சோகங்கள் பல.

குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை 2 அல்லது 3 மாத விடுமுறை. இதில் ஊருக்கு வந்து கல்யாணம், காதுகுத்து, கருமாதி என எல்லா கடமைகளும் நிறைவேற்றிவிட்டுப் போகவேண்டும்.

இப்படி திருமணமாகி ஒரு மாதத்திலேயே மனைவியை விட்டுவிட்டுச்செல்லும் இளைஞர்கள் எத்தனையோபேர். அடுத்த மாதம் புதுப்பெண் கருத்தரித்திருப்பது கடிதம் மூலம் (முன்பெல்லாம் ஊரில் தொலைபேசி இல்லை) தெரிவிக்கப்படும். பின்பு அவர் பதில்கடிதம் வந்து சேருமுன் இந்தப்பெண் தாய் வீட்டுக்குப்போய், குழந்தையும் பெற்றெடுத்துவிடுவார்.

தந்தைமுகம் பார்க்காமலேயே இந்தக் குழந்தை வளரும். குழந்தைக்கு ஒருவயது முடிந்தபின் தந்தை வந்து பார்த்துவிட்டு, பாரின் பொம்மைகளும் இனிப்புகளும், பொம்மை படம்போட்ட பனிய்ன்களும் கொடுத்துவிட்டு திரும்பப்போய்விடுவார். அடுத்தமுறை இவர் ஊர் வரும்போது. இது அப்பாவா மாமாவா என இந்தப் பிள்ளைக்கு சந்தேகம் பிறக்கும்.

நான் சிறுவனாக இருந்தபோது முட்டத்தில் தனியாரிடத்தில் தொலைபேசி ஒன்றிரண்டுதானிருக்கும். கடிதங்கள் ஊரிலிருந்து வெளிநாடு போகிறவர்கள் எடுத்துச்செல்வதும், அங்கிருந்து வருபவர்கள் கொண்டுவருவதும் வழக்கம். அப்போது ஊரில் புகைப்படம் எடுத்துவைக்கும் பழக்கம் கூடக்குறைவு. பிஞ்சுக்குழந்தைகள் தந்த்தையின் வழிகாட்டலின்றி, தந்தையை அடையாளம் காட்டக்கூட இயலாமல் வளர்வது மாபெரும் சோகம்.

ஒன்றிரண்டு லட்சம் கடன்பட்டு விசா வாங்கி வெளிநாட்டுக்குப்போய் ஒன்றுமில்லாமல் திரும்பியவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனாளிகளாகவே வாழ்ந்த கதையும் உண்டு. இதில் முதலாளியிடம் அடி உதை வாங்கி ஓடிவந்தவர்களும் அடக்கம்.

ஃபாரின் போகிறவர்கள் எல்லோருக்கும் நல்ல வருமானம் கிட்டுவதுமில்லை. கஷ்டப்பட்டு வெறும் 5 அல்லது 7 ஆயிரம் மட்டும் ஊருக்கு அனுப்புபவர்கள் பலர். கூழோ, கஞ்சியோ ஊரிலேயே பிழைப்பு நடத்துவோம் என இருப்பவர்களும் பிறரின் செல்வச் செழிப்பான வாழ்வைக்கண்டு தூண்டப்படுகின்றனர்.

என் உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருக்கும்போது இறந்துபோனார். ஊரில் இளம் மனைவி. மிகவும் கஷ்டப்பட்டு சிலநாட்களுக்குப்பின் அவரது உடல் ஊர்வந்து சேர்ந்தது, அடைக்கப்பட்ட மருத்துவப் பெட்டியில். அதைத் திறக்கவும் அனுமதியில்லை. அவரின் முகத்தைக் கூட பார்க்கமுடியாமல் கதறியவர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்லக்கூடும்?

இதில் இன்னொரு சோகம், இறந்தவர் எப்படி இறந்தார் என்பது எப்போதும் மர்மமாகவே இருக்கும்.

நாகரீகம், வளர்ச்சி என்ற பெயரில் நம் தேவைகளை நாமே வளர்த்துக்கொள்கிறோம். இவற்றை நிவர்த்தி செய்ய நாம் இழப்பவைகள் விலைமதிப்பில்லாதவை.

முன்பொரு பதிவில் கேட்டதை திரும்பக் கேட்கத்தோன்றுகிறது. ஊரில் 2000 சம்பளம் வாங்குபவருக்கும் சென்னையில் 20000 வாங்குபவருக்கும் தாங்கள் பெறும் சந்தோஷத்தில் வித்தியாசமிருக்கிறதா? இந்த சந்தோஷங்களை நாம் பெற்றுக்கொள்ளும் முறை வேண்டுமானால் வித்தியாசப்படலாம்.

பணத்திற்காக பாசத்தையும், தனத்திற்க்காக தாம்பத்யத்தையும், பொருட்செல்வத்திற்காக பிள்ளை செல்வத்தையும் தியாகம் செய்வதா?

என் உறவினர் இன்னொருவர், திருமணமாவதற்குமுன் வெளிநாடு போயிருந்தார். இப்போது அவர் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இன்றுவரை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்து போகிறார். இவர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்களின் விறுப்பு வெறுப்புகளையும், அந்தப் பெண்கள் செய்யும் தியாகத்தையும் யாரும் எண்ணுவதில்லை? இவ்வளவு வருமானம் பார்த்தவருக்கு ஊரில் வந்து என்ன செய்வது என்பதே புதிராயிருக்கிறது.

பல நேரங்களில் குடும்பத்தில் சுக துக்கங்களில் இவர்களால் பங்குகொள்ள முடியாமல் போகிறது. பலரும் குடும்ப சுமைகளை ஏற்கத் தயங்கி திரும்பிச் செல்கிறார்கள்.

‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?’

XIV. ஏட்டுச்சுறாமீன்
கடற்கரையில், நிழலில் படுத்துக்கிடக்கும் மீனவனைப் பார்த்து சுற்றிப்பார்க்க வந்த ஒரு பணக்காரர் கேட்கிறார்

“ஏம்பா, தொழிலுக்கு போகல?”

“போயிட்டு வந்துட்டேனே”, மீனவன்

“சும்மா படுத்துட்டிருக்கியே இன்னொருவாட்டி கடலுக்கு போயி மீன் பிடிச்சா என்ன?”

“அப்படி செஞ்சா?”

“அதிகமா பணம் கெடைக்கும்”

“அதிக பணம் வந்தா?”

“இன்னும் ரெண்டு மூணு போட் வாங்கலாம். தொழில பெருக்கலாம்.”

“தொழில பெருக்குனா?”

“பணக்காரனாயிடலாம்.”

“பணக்காரனாயிட்டா?”

“நல்லா படுத்து ஓய்வெடுக்கலாம்.”

“இப்ப மட்டும் என்ன செய்றேனாம்.”

இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். இதை ஏன் மீனவனை நாயகனாக வைத்துச் சொல்கிறார்கள்? மீனவர்கள் பொதுவாக செல்வம் சேர்ப்பது பற்றிய கவலையில்லாதவர்களாயிருந்தனர். நாளை பற்றிய கவலை இருந்தால் அலைக்களிக்கும் கடலலைகளினூடே தொழில் செய்யப் போகமுடியுமா?

குறைந்தபட்சத் தேவைகளே இருந்தன அவர்களுக்கு. கடற்கரைகளில் வங்கிகளே இருந்ததில்லை. சேமிப்பு? எதை நோக்கி சேமிப்பது. தொழில் செய்யக் கருவிகளிருந்தாலே போதுமானதாயிருந்தது.

சில பருவங்களில், இரால் அதிகமாகக் கிடைக்கும் போது கொஞ்சம் பணம் சேரும். மீன்பாடில்லாத அடுத்த பருவங்களில் அது கரைந்து போகும்.

வாழ்க்கையை அனுபவிக்க மறந்ததில்லை இவர்கள். மது, புகை, வெற்றிலை என ஏதாவது ஒரு பழக்கம் பலரிடமிருந்தது. மூக்குப்பொடி வைத்திருக்கும் ஒரு மாமாவிடம் அவ்வப்போது வாங்கி தும்மிக்கொள்வேன். முகுது சொறிவது, மூக்குப்பொடிபோட்டுத் தும்முவது, டவல் நுனியை சுருட்டி காது குடைவது போன்ற சிற்றின்பங்கள் நிறைந்ததுதான் சொர்க்கம் போலும்!

சினிமா முக்கியமான பொழுதுபோக்கு. கடன்வாங்கியாவது திருநாள் கொண்டாடுவதென்பது ஒரு எழுதப்படாத சட்டம். செலவு செய்யத் தயக்கமென்பதே இல்லை.

என் நண்பர் ஒருவர் எப்போதும் குறையாகச்சொல்வார்,”ஏன் இந்த சாமியார்கள்(பாதிரியார்கள்) இந்த மீனவ மக்களுக்கு சேமிக்கச் சொல்லித்த்ருவதில்லை?” என்று. முதலில் கூறிய கதைதான் பதிலாகுமென நினைக்கிறேன். பணம் சேரச் சேர நாம் மேலும் மேலும் ஆசைப்படுகிறோமென்பதுதான் உண்மை.

மீனவர்களை படிக்காதவர்கள் என எடைபோடும் பலர் உண்டு. இது முற்றிலும் பொய். குறைந்தபட்சம் எழுத படிக்கத்தெரிந்தவர்கள் மீனவர்கள். ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு வரை படித்தவர்கள் அதிகம். பெண்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது படிக்கிறார்கள். படிப்பறிவு கன்னியா குமரி மாவட்டத்தில் அதிகம். கேரளாவின் தாக்கமோ என்னவோ?

மேல் படிப்புக்கு வெளியூர் போகத்தான் வேண்டும். பலர் நாகர்கோவிலில் சென்று படிப்பதுண்டு. நான் நாகர்கோவிலில் ‘கார்மல் மெனிலைப் பள்ளியில்’.

பஸ்ஸில் பள்ளி செல்வது தனி அனுபவம். எங்களோடே மீன் வியாபாரத்துக்குச் செல்லும் பெண்களும் பஸ்ஸில் பயணிப்பதுண்டு. பஸ்ஸே மண மணக்கும். யாராவது குறைசொன்னால், “இவரு பெரிய பிராமணரு” என்ற பதில்தான் கிடைக்கும்.

இந்த பஸ் பயணங்களில் பேசப்படும் காதல் கோர்ப்புக் கதைகளும், விழி சம்பாஷணைகளும், “நான் அந்த பொண்ண சைடடடிக்கிறேன். ஒன் ஆளு யாருடா?” போன்ற வினவல்களும் ஒரு தனி ஆட்டொகிரஃப் அனுபவம்.

கார்மல் பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் தரும் ‘அடி’க்குப் பேர் போனது. அடி கொடுத்தே படிக்கவைக்கும் ஆசிரியர்கள் பலர். மாணவர்கள் சும்மாவா? கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுக்கும், சகிக்கவே முடியாத, பட்டப்பெயர்கள்.

குண்டான மொழு மொழு வாத்தியாருக்கு பெயர் ‘தக்காளி’

எப்போதும் நேர்த்தியாய் ஆடை அணிந்து, ஒல்லியானவர் ‘பொம்மை’

கறுப்பாய் ஒருவர் ‘நீக்ரோ’

தத்துவமாய் பேசும் ‘சாக்ரட்டீஸ்’

குனியவிட்டு பிடரியில் அடிக்கும் ‘பண்ணி மேய்ச்சான்’

வேட்டிமட்டுமே கட்டிக்கொள்ளும் ‘கொத்தனார்’

குள்ளமாய் ஒரு ‘கட்டபொம்மன்’. எனப் பட்டப் பெயர்கள் பலவிதம். சைக்கிளில் போகும் வாத்தியாரின் பட்டப்பெயரை கூவிவிட்டு ஓடும் மாணவர்களை துரத்தும் காட்சி காணக்கண்கோடி வேண்டும்.

பட்டப்பெயர் இல்லாத வாத்தியாரே இல்லை கார்மலில். வரலாற்று சிரப்புள்ள ஒரு பள்ளி. கடலோர மாணவர்கள் பலர் இங்கு படிப்பது வழக்கம்.

என்ன படித்தாலும் கடல் தொழில் செய்யவேண்டிய கட்டாயம் பலருக்கும் இருந்தது, இதனாலேயே பலர் பாதியில் படிப்பை நிறுத்தினர். கஷ்டப்பட்டு ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் வரை படித்தவர்களும் உண்டு. இருந்தும் படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதுதான்.

கிராமத்து இளைஞர்களின் சோகமே இதுதான். படி.. படி என விளம்பரங்களும் வற்புறுத்தல்களும், பிறகு வேலையில்லாமல் திண்டாடும்போது, ‘தம்பி, விவசாயம் மோசமானதுன்னு ஏன் நினைக்கிறீங்க?’ என்ற கேள்வி.

பெண்கள் படித்து ஆசிரியராகவோ, கிறித்துவ கன்னியராகவோ மாறுவதுண்டு. கல்லூரிவரை படித்துவிட்டு கருவாடு காயப்போடும் பெண்களும் உண்டு.

படிக்க ஆசையிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக மீன்பிடிக்கப் போன நண்பர்கள் சிலரோடு நான் படித்திருக்கிறேன். இவர்கள் ஏக்கமாக, கனவுகளை களைந்துவிட்டு விடைபெறுவது ஒரு மாபெரும் சோகம். மாறாக பள்ளிக்குப் போகமாட்டேன் என அடம்பிடித்து கடல்தொழிலுக்கு, சிறுவயதுமுதலே செல்லும் மாணவமணிகளும் உண்டு.

ஏட்டுச் சுறாமீன் புட்டுக்குதவாது என்பது இவர்களின் வாதம்.

XIII. அழைக்கப்பட்ட நண்பர்கள்
முன்பெல்லாம் முட்டத்தில் திருமணங்கள் வீட்டிலேயே நடத்தப்பட்டன. நாகர்கோவிலில்தான் மண்டப வசதி இருந்தது, அந்தச் செலவுகளும் அலைச்சலும் எல்லோருக்கும் சாத்தியமாகாததால் ஊரிலேயே திருமணம்.

வீட்டிற்குமுன், தெருவை அடைத்துக்கொண்டு பந்தல் போடப்படும். ஒரு வாரத்திற்கு, தெருவில் போக்குவரத்து அடைபடும். கடல் மணல், பந்தலின் உள் பரப்பட்டிருக்கும். இந்தப் பந்தல்களுக்குள் ஒரு மணம் பரவும். திருமணம் முடிந்ததும் காணாமல் போய்விடும் அந்த மணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பே பந்தலில் மின்விளக்கு அலங்காரம் ஒளிரும். கொண்டை வைத்த ஒலிபரப்பி (குழல் ஒலிப்பான்) கட்டப்பட்டு முதலில் கிறித்துவப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ‘விண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகின்றார்’, புனித அந்தோனியார் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்தான் பொதுவாக முதற் பாடல்.

இசைத்தட்டுகள்தான் அப்போது. சின்னதாகவும் பெரியதாகவும் கறுப்புத் தட்டுகள், சில சிவப்புதட்டுகளும் உண்டு. தட்டுக்கள் சுழலும்போது தூசியிலோ கீறலிலோ சிக்கித் தவிக்கும் பாடல்கள் பல. இப்படி சிக்கிய ஒலியுணர் முள்ளைத்தூக்கி அடுத்த வரியில் போடுவது ஒரு கலை. கொஞ்சம் தவறினாலும் பாடல் பல வரிகள் கடந்துவிடும்.

குர்பானி முதல் குடியிருந்த கோவில் வரை பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எம். ஜி. ஆர் ரசிகர்கள் அதிகமாயிருந்ததால் வாத்தியார் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் திருமணங்களும் உண்டு. சிலநேரம் மலையாளப் பாடல்கள் ஒலிப்பதும் உண்டு. செம்மீனின், ‘பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே கண்ணாளே’ மனதில் ஒலிக்கிறது.

கல்யாணப்பந்தலருகே சிறுவர்கள் விளையாட்டு எப்போதும் நடக்கும். பாடல்களுக்கு நளினம் பிடிப்பது இவர்களின் இரவுநேரத்துப் பொழுதுபோக்கு.

உயிரைப்பணயம் வைத்து, மின்சாரக் கம்பியில் கொக்கி போட்டு மின்னிணைப்பு பெறுவதில் இந்த ரேடியோ செட்காரர்கள் நிபுணர்கள். சில திருமணங்களுக்கும் அப்படியே மின்சாரம் பெறப்படும்.

இந்தப் பந்தல்களில் சீட்டாடுவது ஆண்களுக்கு பொழுது போக்கு. சிலநேரங்களில் இந்த விளையாட்டுக்களில் எழும் சண்டைகளில் கல்யாணங்களே நின்றுபோகும்போலத் தோன்றும்.

சினிமாவில் வருவதுபோல மணப்பெண் கவுனெல்லாம் உடுப்பதில்லை. பட்டுச் சேலை காற்றாடத்தான் கல்யாணம். தலையில் ‘ரீத்’ எனப்படும் ஒரு அலங்காரமும், தலை துவங்கி பின்புறம் கீழாக வலைபோன்ற துணியில் ஒரு அலங்காரமும் செய்யப்படும். இந்த நீளமான ‘நெட்’ துணி கீழே விழாமல் பிடிக்க ஒரு வாண்டு நியமிக்கப்படும்.

மாப்பிள்ளை கோட் சூட், அல்லது பட்டு வேட்டி பட்டு சட்டை. பெண்ணின் சகோதரர் மாப்பிள்ளைக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.

தங்கத்தில்தான் தாலி. பொதுவாக கன்னியாகுமரி கடரற்கரைகலில் தங்கத்தை கயிறுபோல முறுக்கி செய்யப்பட்டிருக்கும் தாலிச்செயின் பிரபலம். இந்தத் தங்கத்தாலியின் திருகாணியையோ அல்லது கொக்கியையோ மாட்டுவதற்கு ஒரு நாடகமே நடக்கும்.

திருமணத்தின்போது மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவர் மற்றவர் பேரைச்சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

“ஜோசப் ஆகிய நான் மேரியாகிய உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும், நோயிலும் …உனக்கு பிரமாணிக்கமாயிருப்பேன் என வாக்குறுதியளிக்கிறேன்” எனும் பொருள்பட ஒரு ஒப்பந்தம் வாசிக்கப்படுகிறது.

மாப்பிள்ளையும் பெண்ணும், இரு சாட்சிகளும், திருமணம் செய்து வைத்த பாதிரியாரும் கையொப்பமிட்டு திருமணங்கள் கோவில்களில் பதிவு செய்யப்படுகின்றன.

திருமண பூசை முடிந்தபின் ‘பேண்ட் வாத்திய’க் குழு இசை ஆரவாரங்களோடு பெண்ணும் மாப்பிள்ளையும் ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்கள். புதிதாய் வரும் மணப்பெண்ணை வரவேர்க்க ‘மணமகளே மருமகளே வா வா’ பாடல் போடப்படும்.

கல்யாணப்பந்தலில், கீழே பெஞ்களைப் பரப்பி, சேலைகளைத் தொடுத்து மேடை அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேசையில் சர்கரை அலங்காரத்தில் கல்யாண கேக் ஜொலிக்கும். கீழே பெரிதாய் துவங்கி மேலே சிறித்தாய் மூன்று முதல் நான்கு தட்டுகளில் கேக் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதில் மேலுள்ள சின்ன வட்டம் மட்டும்தான் கேக் என்பதை பின்னொருநாள் ஏமாற்றத்தோடு தெரிந்துகொண்டேன்.

கேக்கை மந்திரித்து பாதிரியார் புதுத்தம்பதியரை வாழ்த்துவது முடிந்ததும் தம்பதிகள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டுவது வழக்கம். கேக் வெட்டியதும் பந்தலில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேக்கும் பழரசமும் வழங்கப்படும்.

ஊர் பெருசுகள் சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்தி பேச விளைவார்கள். நண்பர்களின் வாழ்த்து மடல் சட்டம்(Frame) போடப்பட்டு வாசிக்கப்படும். இது துண்டுப் பிரசுரமக வினியோகிக்கப்படுவதும் ஊண்டு. தோழிகளின் பாட்டு, குழந்தைகளின் ஆட்டம் என திருமண வரவெற்பு நடந்துகொண்டிருக்கும்போதே முதல் பந்தி துவங்கும்.

பிரியாணி பிரபலாமவதற்குமுன்பு சாப்பாடுதான் விளம்ப்பப்பட்டது. கேரள மணம் வீசும் கல்யாணச்சாப்பாடு.

தேங்காய் போட்ட பருப்புக்குளம்போடு துவங்கும் பந்தி. இதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு உண்பதுமுண்டு. அடுத்து சாம்பார், ரசம் மோர் எனத் தொடரும். பருப்பும், பயறும் போட்ட பாயாசம் அல்லது சேமியா அல்லது அடை பாயாசம். பாயாசத்தில் பழத்தைப்பிழிந்து இலையை வழித்து நக்கினால்தான் திருமணச்சாப்பாடு நிறைவுபெறும். மணக்கும் மலையாள அவியல் இல்லாமல் இருக்காது இந்த சாப்பட்டில். தேங்காயில்லாத பதார்த்தம் ஊறுகாய் மட்டும்தான்.

திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைக்கு முகச்சவரம் செய்யும் சடங்கு நடைபெறும். மாப்பிள்ளை வீட்டுச்சாப்பாடு போடப்படும். ஏற்கனவே சவரம் செய்யப்பட்ட மணமகன் முகத்தில் பால் தடவி சவரம் செய்வது போல நடக்கும் ஒரு சடங்கு. ‘முகத்துவலை’ (முகத்து வேலை மறுவியிருக்கிறது) என அழைக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வழக்கம் என்றே நினைக்கிறேன்.

இந்தச்சடங்கு துவங்குவதை ஒருவர் மைக் செட்டில் ஒலிபரப்புவார். கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் இதே அறிவுப்புத்தான், ‘மாப்பிளைக்கு முகத்துவேலை ஆரம்பிக்க இருப்பதால்… அழைக்கப்பட்ட நண்பர்களும் உற்றார் உறவினர்களும் உடனடியாக மணமகன் வீட்டிற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’.

இன்னும் சில திருமணங்கள் இப்படி தெருமணக்க, ஊர்மணக்க நடைபெறுகின்றன.

முட்டம் புகைப்படங்கள் - மணல்மேடுகள் - II
இந்த நிழற்பட இடைவெளிக்குப்பிறகு ‘அலைகள் பாறைகள் மணல்மேடுகள்’   மீண்டும் தொடரும்.

முட்டம் புகைப்படங்கள் - மணல்மேடுகள் - I
சிவந்தமண் இன்றைய படங்கள் முன்பு இந்த பள்ளங்களில் மிருதுவான மணல் நிரம்பியிருந்தது. கீழே S வடிவ ஓடையில் இருப்பது போல.

இவை ஒரு சின்ன பகுதியின் படங்கள். ஊரச்சுற்றி இன்னும் அகன்ற பள்ளங்கள் உண்டு.

முட்டம் புகைப்படங்கள் - பாறைகள்
தவளைப் பாறை

கலங்கரை விளக்கம்

இந்தப் புகைப்படங்களுக்கு கவிதயோ, ஹைக்கூவோ, தலைப்போ, ஜோக்கோ எழுதுங்ககள் பார்க்கலாம்.

முட்டம் புகைப்படங்கள் - அலைகள்
என்னிடமிருக்கும் சில முட்டம் புகைப்படங்கள்.  அவசரத்தில் பதித்தவை.

‘கோட்டாமடை’ எனப்படும் இடம், இங்கு பல திரைப்படங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பசங்க ஏதோ விளையாடிக்கிட்டிருகாங்க.
இங்குதான் கபடி ஆடுவது வழக்கம். கடல் குளிக்க நல்ல இடம்.

இந்தப் புகைப்படங்களுக்கு கவிதயோ, ஹைக்கூவோ, தலைப்போ, ஜோக்கோ எழுதுங்ககள் பார்க்கலாம்.